search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    விதிமுறைகளை மீறும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை
    X

    விதிமுறைகளை மீறும் மருத்துவமனைகள் மீது நடவடிக்கை - கலெக்டர் எச்சரிக்கை

    மருத்துவமனைகளில் விதிமுறைகளை மீறி உடல் உறுப்பு தானம் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கலெக்டர் தெரிவித்துள்ளார்.
    சேலம்:

    சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் உடல் உறுப்புகளுக்கு பேரம் பேசப்படுவதாக எழுந்த புகார் குறித்து சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணியிடம் இன்று நிருபர்கள் கேட்டனர். அதற்கு பதிலளித்து அவர் கூறியதாவது:

    நடைமுறை விதிமுறைகளுக்கு உட்பட்டு பொதுமக்கள் உடல் உறுப்பு தானம் செய்யலாம். உடல் உறுப்புகள் பேரம் பேசப்படுவதாக எழுந்த புகார் குறித்து விரிவான விசாரணை நடைபெற்று வருகிறது. மருத்துவமனைகளில் விதிமுறைகளை மீறி உடல்உறுப்பு தானம் நடைபெறுவது கண்டுபிடிக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×