search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    திண்டுக்கல் காப்பகத்தில் அதிகாரிகள் மீண்டும் ஆய்வு
    X

    திண்டுக்கல் காப்பகத்தில் அதிகாரிகள் மீண்டும் ஆய்வு

    திண்டுக்கல் அருகே செயல்படும் முதியோர் காப்பகத்தில் அதிகாரிகள் இன்று 2-வது நாளாக அதிரடி சோதனை நடத்தினர்.
    திண்டுக்கல்:

    காஞ்சிபுரம் அருகே பாலேஸ்வரம் பகுதியில் செயல்பட்டு வந்த முதியோர் காப்பகத்தில் முறைகேடு நடப்பதாக வந்த புகாரின் பேரில் அதிகாரிகள் அங்கு சோதனை நடத்தினர். மேலும் அங்கு இருந்த முதியவர்கள் வேறு இடத்துக்கு மாற்றப்பட்டனர்.

    திண்டுக்கல் அருகே உள்ள மெட்டூர் பிரிவு பகுதியிலும் முதியோர் காப்பகம் உள்ளது. இதில் 234 முதியவர்கள் மற்றும் மன வளர்ச்சிகுன்றியவர்கள் தங்கவைக்கப்பட்டு பராமரிக்கப்படுகிறார்கள். மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு வருவாய் துறை அலுவலர்கள் ஆய்வு நடத்தி சென்றனர்.

    அவர்கள் அளித்த அறிக்கையின் அடிப்படையில் இன்று 2-வது நாளாக சோதனை நடத்தப்பட்டது. தனி மாவட்ட வருவாய் அலுவலர் (தேசிய நெடுஞ்சாலை) லதா தலைமையில் சமூக நலத்துறை அலுவலர் சாந்தி, குழந்தைகள் நல அலுவலர் மீனாட்சி, வட்டார மருத்துவ அலுவலர் டாக்டர் தினேஷ், நிலக்கோட்டை டி.எஸ்.பி. கார்த்திகேயன், தாசில்தார்கள் கேசவன், நிர்மலா கிரேஸ் ஆகியோர் ஆய்வு மேற்கொண்டனர்.

    முதியவர்கள் தங்க வைக்கப்பட்டுள்ள இடத்தில் சுகாதார வசதிகள் முற்றிலும் இல்லை என்பது இந்த ஆய்வில் தெரிய வந்தது. மேலும் அவர்களுக்கு உணவு சமைக்கப்படும் இடம், தூங்கும் இடம், இறந்த உடன் அவர்கள் உடலை அடக்கம் செய்யும் அடுக்குமாடி கல்லறை ஆகியவற்றையும் அதிகாரிகள் பார்வையிட்டனர்.

    காப்பகத்துக்கு கொண்டு வரப்படும் முதியவர்களின் விபரங்கள் குறித்து பராமரிக்கப்படுகிறதா? என்று பதிவேடுகளையும் ஆய்வு செய்தனர். அதிலும் திருப்தி இலலாத நிலையே உள்ளது என அவர்கள் தெரிவித்தனர். காப்பகம் முழுவதையும் சோதனையிட்ட அதிகாரிகள் இது குறித்து மாவட்ட கலெக்டருக்கு தகவல் தெரிவிக்கப்படும் என்றும் அதன் பிறகு இங்குள்ள முதியவர்கள் வேறு இடத்துக்கு மாற்றப்படுவார்களா? என்பது குறித்து தெரிய வரும் என்று கூறினர்.

    அதிகாரிகள் தனியார் காப்பகத்தில் 2-வது முறையாக சோதனை நடத்தி சென்றுள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    Next Story
    ×