என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
கே.கே.நகர் அருகே வாலிபர் படுகொலை
சென்னை:
கே.கே.நகர் அண்ணா மெயின் ரோட்டில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் அருகில் இன்று காலை தலை நசுங்கிய நிலையில் வாலிபர் ஒருவர் பிணமாக கிடந்தார்.
பேண்ட், சர்ட் அணிந்திருந்த அவரது உடல் அருகில் ரத்தக்கறை படிந்த கல் ஒன்று காணப்பட்டது. நேற்று இரவு மர்மநபர்கள் யாரோ, வாலிபரின் தலையில் கல்லை தூக்கி போட்டு கொலை செய்திருப்பது தெரியவந்தது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் கே.கே.நகர் போலீசார் விரைந்து சென்று கொலையுண்ட வாலிபரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
பின்னர் கொலை செய்யப்பட்ட வாலிபர் யார்? என்பது பற்றி விசாரணை நடத்தினர்.
அப்போது கொலை செய்யப்பட்ட வாலிபரின் பெயர் அழுக்கு குமார் என்கிற ஜெயக்குமார் (45) என்பது தெரியவந்தது.
அந்த பகுதியில் குப்பை பொறுக்கும் பணியில் ஈடுபட்டு வந்த இவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது தெரியவில்லை. கொலையாளிகளை பிடிக்க போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
கொலை நடந்த இடம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் கண்காணிப்பு கேமராக்கள் எதுவும் பொறுத்தப்பட்டுள்ளதா? என்பது பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள். முன்விரோதம் காரணமாக குமார் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.