என் மலர்

  செய்திகள்

  பெரியகுளம் அருகே பைக் மீது கார் மோதியதில் 3 பேர் படுகாயம்
  X

  பெரியகுளம் அருகே பைக் மீது கார் மோதியதில் 3 பேர் படுகாயம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பெரியகுளம் அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 3 பேர் படுகாயமடைந்தனர். இச்சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  பெரியகுளம்:

  தேனியைச் சேர்ந்த வக்கீல்கள் கிருஷ்ணகுமார், பாண்டியராஜன் ஆகிய 2 பேரும் ஒரு காரில் பெரியகுளம் நோக்கி வந்து கொண்டு இருந்தனர். அப்போது மதுராபுரியைச் சேர்ந்த வாலிபர் மோட்டார் சைக்கிளில் எதிர்திசையில் வந்து கொண்டு இருந்தார்.

  தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டு இருந்தபோது பைக் மீது கார் பயங்கரமாக மோதியது. மோதிய வேகத்தில் அருகில் இருந்த பள்ளத்தில் கார் கவிழ்ந்தது. இதில் பைக்கை ஓட்டி வந்த வாலிபரும், காரில் வந்த வக்கீல்களும் படுகாயமடைந்தனர்.

  காயமடைந்தவர்கள் தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டனர். இந்த விபத்து குறித்து அல்லிநகரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×