search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம்: மதுரை ஆதீனம் மகிழ்ச்சி
    X

    பா.சிவந்தி ஆதித்தனாருக்கு மணிமண்டபம்: மதுரை ஆதீனம் மகிழ்ச்சி

    டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாருக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என்ற செய்தி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது என்று மதுரை ஆதீனம் கூறினார்.

    மதுரை:

    மதுரை ஆதீனம் விடுத்துள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ் பத்திரிகை உலகில் மாறாத சிறப்பு முத்திரை பதித்துள்ள டாக்டர் பா. சிவந்தி ஆதித்தனாருக்கு மணி மண்டபம் அமைக்கப்படும் என்ற செய்தி எங்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

    இந்த பணியை 2018-2019 ஆண்டுகளில் தொடங்கி சிறப்பாக நிறைவேற்றுவோம் என அறிவித்துள்ள முதல்வர் எடப்பாடி பழனிசாமியை பாராட்டி ஆசிர்வதிக்கிறோம்.

    சிவந்தி ஆதித்தனாருடன் 50 ஆண்டு காலமாக நட்புடன் பழகிய எங்களுக்கு இந்த செய்தி மிகுந்த மன நிறைவை தருகிறது.

    மணிமண்டபம் கட்டுவது தமிழக அரசுக்கும், தமிழக மக்களுக்கும், பத்திரிகை உலகுக்கும், ஆதித்தனார் குடும்பத்து உறுப்பினர் பெருமக்களுக்கும் பெருமை தரக்கூடியதாக அமைந்துள்ளது. மணிமண்டபம் கட்டும் பணி சிறப்புடன் நடக்கட்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×