search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Madurai Aadheenam"

    • மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு ஆடி வீதியில் திருஞான சம்பந்தர் மண்டபம் உள்ளது.
    • மதுரை ஆதீனம் பாடசாலை நடத்த இடமளிக்க வேண்டும்.

    மதுரை:

    மதுரை ஆதீனம் சார்பாக அதன் மேலாளர், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

    மதுரை மீனாட்சி அம்மன் கோவில் தெற்கு ஆடி வீதியில் திருஞான சம்பந்தர் மண்டபம் உள்ளது. அதில் ஆதீனத்தின் சார்பாக கோவிலுக்கு வரும் பக்தர்கள், மாணவர்களுக்கு தேவாரம், திருவாசகம் உள்ளிட்ட சைவ சித்தாந்த பாடல்கள் ஓதுவார்கள் மூலமாக நடத்தப்பட்டு வந்தது.

    மேலும் ஆனி மாத உற்சவத்தின் 6 ஆம் நாள் மண்டகப்படியில் இந்த மண்டபத்தில் இருந்துதான் சுவாமி, அம்மன் புறப்பட்டு திருவீதி உலா நடைபெறும். அப்போது திருஞான சம்பந்தர் மதுரையில் நடத்திய அதிசயம் குறித்து மக்களுக்கும், பக்தர்களுக்கும் வரலாறு கூறப்படும் நிகழ்ச்சி நடைபெற்று வந்தது.

    291-வது ஆதீனம் இருக்கும் வரை இவை அனைத்தும் தொடர்ந்து நடைபெற்றன. ஆனால், 292-வது அருணகிரி நாதர் ஆதீனம் சன்னிதானமாக இருந்த காலத்தில் இவை நிறுத்தப்பட்டன. இந்த கால கட்டத்தில் இந்த இடம் எந்த நிகழ்வு நடைபெறவில்லை. இந்நிலையில் கடந்த சில வருடங்களாக கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு லட்டு தயார் செய்யும் இடமாக இந்த மண்டபம் மாற்றபட்டுள்ளது.

    தற்போது 293-வது மதுரை ஆதீனம் பொறுப்பேற்று இருக்கும் ஞானசம்பந்த தேசிகர் மேற்படி தேவார பாடசாலை, 6-ம் மண்டகப்படியை மேற்படி மண்டபத்தில் மீண்டும் நடத்த ஏதுவாக தற்போது லட்டு தயாரிக்கும் இடத்தை வேறு இடத்துக்கு மாற்ற வேண்டும்.

    இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

    இந்த மனு நீதிபதி ஸ்ரீமதி முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது கோவில் சார்பாக ஆஜரான வக்கீல், இந்த மண்டபத்தில் மனுதாரர் கூறுவது போல எவ்வித தேவார வகுப்பும் நடைபெறவில்லை. எனவே தற்போது பக்தர்களுக்கு வழங்கும் லட்டு பிரசாதம் செய்து வருவதாக தெரிவித்தார்.

    மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் அருண் சுவாமிநாதன், இந்த மண்டபத்தில் 1939, 1963, 1985 ஆம் ஆண்டின் கோவில் வரலாறு, மீனாட்சி கோவில் கும்பாபிஷேக மலர் ஆகிய புத்தகங்கள் சமர்ப்பிக்கப்பட்டது. அதில் திருஞான சம்பந்த மண்டபம் இருந்ததற்கான சான்றுகள், குறிப்புகள் இருந்தது என்பதற்கான அனைத்தும் ஆவணங்கள் அறிக்கையாக தாக்கல் செய்தார்.

    இதனை பதிவு செய்த நீதிபதி, சைவ சமயத்தை பரப்பிய நால்வர்களில் திருஞானசம்பந்தர் முக்கியமானவர் என்றும், இக்கால கட்டத்தில் அனைவரும் தேவாரம், திருவாசகத்தை தெரிந்து கொள்ள வேண்டும் குறிப்பாக இளைஞர்கள் கற்றுக்கொள்ள வேண்டும் என நீதிபதி கருத்து தெரிவித்தார்.

    பின்னர் நீதிபதி பிறப்பித்த உத்தரவில், கோவில் நிர்வாகம் லட்டு தயார் செய்யும் இடத்தை வேறு இடத்துக்கு 4 மாதத்தில் இடமாற்றம் செய்ய வேண்டும். இந்த இடத்தை மதுரை ஆதீனம் பாடசாலை நடத்த இடமளிக்க வேண்டும். வழக்கம் போல மாசி திருவிழாவின் 6-ம் நாள் மண்டகப்படியை அதே மண்டபத்தில் செய்ய வேண்டும்.

    இவ்வாறு நீதிபதி என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

    • 99 வருட ஒப்பந்தத்தை வைத்து 2018 ஆம் ஆண்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது.
    • சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்தவர்கள் வெளியேற மறுப்பதாக அறிக்கை தாக்கல்

    மதுரை:

    சென்னையைச் சேர்ந்த ராதாகிருஷ்ணன் என்பவர் உயர் நீதிமன்ற மதுரை கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அவர் தனது மனுவில், 'மதுரை ஆதினம் மடம் மிகவும் பிரசித்தி பெற்றது. இந்த மடத்திற்கு சொந்தமான தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் சொத்துக்கள் இருக்கிறது. இதன் தற்போதைய மதிப்பு பல 100 கோடி ரூபாய் ஆகும். இந்நிலையில் 2008 ஆம் ஆண்டு இருந்த மதுரை ஆதினம் அருணகிரிநாதர் தரப்பில் சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் தாலுகா மற்றும் மதுரை விமான நிலையம் அருகில் உள்ள 1191 ஏக்கர் நிலங்களை புதுச்சேரியை சார்ந்த தனியார் நிறுவனத்திற்கு 99 வருட ஒப்பந்தம் செய்யப்பட்டிருக்கிறது.

    கோயில் நிலங்களை எல்லாம் 99 வருட ஒப்பந்தம் தான் செய்யமுடியும். இதை வைத்து 2018 ஆம் ஆண்டு பத்திரப்பதிவு செய்யப்பட்டிருக்கிறது. அதாவது அந்த ஒப்பந்ததை காண்பித்து போலியாக பத்திரப்பதிவு செய்திருக்கிறார்கள். இது சட்ட விரோதமானது. ஆதின மடங்களுக்கு சொந்தமான சொத்தை தனியாருக்கு விற்பனை செய்ய முடியாது என்ற சட்டம் இருக்கிறது. மேலும் நீதிமன்ற தீர்ப்புகளும் இருக்கிறது. ஆகவே உரிய நடவடிக்கை எடுத்து இந்த ஒப்பந்தங்களை எல்லாம் ரத்து செய்து ஆதின மடத்திற்கு சொந்தமான சொத்துக்களை எல்லாம் மீட்க வேண்டும்' என்று கூறியிருந்தார்.

    இந்த மனுவானது நீதிபதிகள் மகாதேவன் சத்திய நாராயண பிரசாத் கொண்ட அமர்வு முன் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது, தற்போதைய 293வது ஆதினமான ஞானசம்பந்தர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் அருண் சாமிநாதன், அறிக்கை ஒன்றை தாக்கல் செய்தார். அதில் 'மறைந்த 292வது ஆதினம் இருந்தபோது இந்த ஒப்பந்தம் போடப்பட்டிருக்கிறது. தற்போது இந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பட்டிருக்கிறது. ஆனால் சட்டவிரோதமாக பத்திரப்பதிவு செய்தவர்கள் வெளியேற மறுக்கிறார்கள். அவர்கள் பணபலம் மிக்கவர்கள். எனவே நீதிமன்றம் உரிய உத்தரவு பிறப்பிக்க வேண்டும்' என கேட்டிருந்தார்.

    இதனை தொடர்ந்து வழக்கில் நீதிபதிகள் தீர்ப்பு வழங்கி இருக்கிறார்கள். மதுரை ஆதின மடத்திற்கு சொந்தமான 1191 ஏக்கர் நிலத்தை மீட்க இந்து சமய அறநிலையத்துறைக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். நிலத்தை மீட்பதற்கு காவல் துறையினர் போதிய பாதுகாப்பை வழங்கவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அ.தி.மு.கவும்., அ.ம.மு.கவும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதால் விரைவில் எடப்பாடி பழனிசாமியும், டி.டி.வி தினகரனும் இணைவது உறுதி என்று மதுரை ஆதீனம் தெரிவித்தார். #MaduraiAadheenam #TTVDhinakaran #ADMK
    சுவாமிமலை:

    பங்குனி உத்திரத்தையொட்டி கும்பகோணம் அருகே உள்ள திரும்புறம்பியம் சாட்சிநாதர் கோவிலில் மதுரை ஆதீனம் சாமி தரிசனம் செய்தார்.

    பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தமிழகத்தில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க., பா.ஜனதா கூட்டணி வெற்றி பெறும். அ.தி.மு.க. பா.ஜனதா கூட்டணி என்னை தேர்தல் பிரசாரத்திற்கு அழைத்தால் நான் பிரசாரம் செய்வேன். நரேந்திரமோடி 2-வது முறையாக பிரதமராக பதவி ஏற்பார்.

    டி.டி.வி தினகரன் பொறுமைசாலி. அமைதியானவர். அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் எனும் கட்சியை தொடங்கி இளைஞர் படையுடன் வலுவாக கட்சியை நடத்தி வருகிறார்.


    அ.தி.மு.கவும்., அ.ம.மு.கவும் இணைவதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. விரைவில் எடப்பாடி பழனிசாமியும், டி.டி.வி தினகரனும் இணைவது உறுதி.

    இவ்வாறு அவர் கூறினார். #MaduraiAadheenam #TTVDhinakaran #ADMK
    மனிதனாக வாழ்வோம்; ஒளிமிக்க வாழ்வைப் பெறுவோம் என்று தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை ஆதீனம் வாழ்த்து தெரிவித்துள்ளார். #MaduraiAadheenam #Diwali
    மதுரை:

    தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மதுரை ஆதீனம் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறியிருப்பதாவது:-

    மனித வாழ்க்கை என்பது ஒரே ஒரு முறைதான் வரும். நிலையாமை என்ற இவ்வுலகில் அன்புடன், பண்புடன் வாழ வேண்டும்.

    மனித வாழ்க்கை ஒரு பெரிய மலையை போன்று, உயரமான, நிறைய படிக்கட்டுகளைக் கொண்டது. இப்படிப்பட்ட படிக்கட்டுகளை மிகவும் கஷ்டப்பட்டு, நிதானத்துடனும், பொறுமையுடனும் ஏறினால் அங்கே ஜோதியை- தீப ஒளியை காணலாம். ஒளிமயமான வாழ்வை பெற முடியும்.

    பதவி வரும்போது, பணம் வரும்போது நாம் இதற்கு முன்னால் எப்படி இருந்தோம்? என்னென்ன கஷ்டங்களை அனுபவித்தோம்? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். அப்போதுதான் நம்மிடம் பணிவும், பண்பும் மலரும். எவருக்கும் தீங்கு செய்தல் கூடாது. நன்மையே செய்ய வேண்டும். நன்மை செய்ய இயலாவிட்டால் தீமை செய்யாமலாவது இருக்க வேண்டும். அது நன்மை செய்வதற்கு சமம்.

    எந்த துறையானாலும் அங்கே உழைப்புக்கும், தொண்டுக்கும், தியாகத்திற்கும் உரிய மரியாதையை, சிறப்பை வழங்கிட வேண்டும். அப்படி வழங்காவிட்டால் உழைப்பு, தியாகம், தொண்டு இந்த வாசல்கள் அடைக்கப்பெற்றுவிடும். இதுவே இயற்கை நியதி. தினசரி தியானம் செய்ய வேண்டும். இறை பிரார்த்தனை என்பது ஒவ்வொருவருக்கும் மிக மிக அவசியமானது. மனிதனாக வாழ்வோம். ஒளிமிக்க வாழ்வை பெறுவோம்.

    மேற்கண்டவாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. #MaduraiAadheenam #Diwali
    ஸ்டாலின், அழகிரி பழைய கசப்புகளை மறந்து இணைந்து செயல்பட்டால் தி.மு.க. மேலும் வலுப்பெறும் என்று மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
    வடவள்ளி:

    மதுரை ஆதீனம் கோவையில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது,

    நடைபெற்று வரும் குட்கா பிரச்சினை பூதாகரமாகியுள்ளது. இதில் சி.பி.ஐ., தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுப்பார்கள். சி.பி.ஐ. மத்திய அரசின் கைபொம்மையாக இருப்பதாக கூறுகிறார்கள். அது தவறு. சி.பி.ஐ. தன்னிச்சையாக இயங்கும் அதிகாரம் பெற்றது. அதற்கு என்று கட்டுப்பாடுகள் உள்ளது. அதில் யாரும் தலையிட முடியாது. சி.பி.ஐ. தனது பணியை சிறப்பாக செய்கிறது.

    தமிழகத்தில் ஈ.பி.எஸ்- ஓ.பி.எஸ். ஆட்சி சிறப்பாக உள்ளது. அதேபோன்று மத்தியில் மோடி தலைமையிலான ஆட்சியும் சிறப்பாக உள்ளது.

    ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று வரும் 7 பேரின் விடுதலைக்காக தமிழக அரசு ஆளுனருக்கு பரிந்துரை செய்துள்ளது.

    கடந்த 2014-ம் ஆண்டு ஜெயலலிதா சட்டசபையில் இது குறித்து ஏற்கனவே தீர்மானம் நிறைவேற்றினார். நிச்சயம் 7 பேரும் விடுதலை ஆவார்கள். நித்யானந்தரால் எனக்கு அச்சுறுத்தல் உள்ளது. ஆனால் மறுபடியும் அவர் மதுரை ஆதீனமாக உள்ளே நுழைய முடியாது. ஆன்மீகத்தில் உள்ளவர்களுக்கு நேர்மை, கண்ணியம் இருக்க வேண்டும்.

    தி.மு.க.வில் மு.க. ஸ்டாலின், மு.க. அழகிரிக்கு இடையே ஏற்பட்ட பழைய கசப்புகளை மறந்து இணைய வேண்டும். இணைந்து செயல்பட்டால் தி.மு.க. மேலும் வலுப்பெறும்.

    ரஜினி தனது அரசியல் பிரவேசம் குறித்து இன்னும் அறிவிக்கவில்லை. கமல் கட்சி, கொடி எல்லாம் அறிவித்து விட்டு செயல்படவில்லை. நடிகர்கள் அரசியல் வெற்றி பெறுவது எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா ஆகியோரால் மட்டுமே முடிந்தது. மற்ற நடிகர்கள் அரசியலில் வெற்றி பெற முடியாது.

    தமிழிசை சவுந்திரராஜன் விமான பயணத்தின்போது சோபியா எழுப்பிய கோ‌ஷத்திற்கு வழக்கு, கைது அளவுக்கு சென்றிருக்க வேண்டாம். தமிழிசையும், போலீசாரும் சோபியாவுக்கு தகுந்த அறிவுரை வழங்கி சென்றிருக்கலாம்.

    பா.ஜனதா விலைவாசி உயர்வை விரைவில் கட்டுப்படுத்தும். வரும் தேர்தலில் பா.ஜனதா அமோக வெற்றி பெறும். தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்குபவர்களை உன்னிப்பாக கவனித்து வருகிறார். வரும் தேர்தலில் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கியவர்களுக்கு தேர்தலில் போட்டியிட வாய்ப்பு தரமாட்டார்.

    தமிழகத்தில் 36 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கோவில்கள் உள்ளன. எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் கோவிலில் நடைபெறும் சிலை திருட்டை தடுக்க முடியாது. சாமிக்கு சக்தி இல்லை என்று பொருள் அல்ல. மனிதர்களுக்கு பக்தி குறைந்து விட்டது என்பதுதான் சரி.

    இவ்வாறு அவர் கூறினார்.
    ×