search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    காயல்பட்டினத்தில் கட்டிட தொழிலாளி மீது தாக்குதல்: வாலிபர் கைது
    X

    காயல்பட்டினத்தில் கட்டிட தொழிலாளி மீது தாக்குதல்: வாலிபர் கைது

    கட்டிட தொழிலாளி மீது தாக்குதல் நடத்திய வாலிபரை போலீசார் கைது செய்து திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

    ஆறுமுகநேரி:

    காயல்பட்டினம் ஐநூற்று நங்கை அம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் மாயாண்டி (வயது 52). கட்டிடத் தொழிலாளி. இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு நின்றுக் கொண்டிருந்தார். அப்போது அதே பகுதியை சேர்ந்த செல்லப்பா (36) என்பவர் அங்கு வருவோரை ஆபாசமாக பேசி திட்டினாராம். இதனை மாயாண்டி கண்டித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த செல்லப்பா அருகில் கிடந்த கம்பால் மாயாண்டியை சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் காயம் அடைந்த மாயாண்டி காயல்பட்டினம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இது குறித்து ஆறுமுகநேரி போலீசில் புகார் செய்யப்பட்டது. புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த போலீசார் செல்லப்பாவை கைது செய்து திருச்செந்தூர் கோர்ட்டில் ஆஜர் படுத்தினர்.

    Next Story
    ×