என் மலர்

  செய்திகள்

  அதிமுகவில் கட்சி வேறு, ஆட்சி வேறாக உள்ளது - தினகரனை சந்திந்த பின் அன்வர் ராஜா பேட்டி
  X

  அதிமுகவில் கட்சி வேறு, ஆட்சி வேறாக உள்ளது - தினகரனை சந்திந்த பின் அன்வர் ராஜா பேட்டி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அதிமுகவில் தற்போது கட்சி வேறு, ஆட்சி வேறாக உள்ளது என்று தினகரனை சந்தித்த பின் அக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
  சென்னை:

  அதிமுக நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா, கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டிடிவி.தினகரனை இன்று சந்தித்துள்ளார். 

  சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அன்வர் ராஜா, தற்போது கட்சி வேறு, ஆட்சி வேறாக உள்ளது என்று கூறினார்.

  மேலும், தினகரனை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். ஜனாதிபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்பதை கட்சி உயர்மட்ட நிர்வாகிகள் முடிவு செய்வார்கள்” என்று தெரிவித்தார்.

  அதிமுக சார்பில் இன்று இஃப்தார் நோன்பு நிகழ்ச்சி நடைபெறும் நிலையில், தினகரனை அன்வர் ராஜா சந்தித்து பேசியுள்ளார். அதிமுகவின் சிறுபான்மை பிரிவு தலைவராகவும் அன்வர் ராஜா உள்ளார்.

  ராமநாதபுரம் மக்களவை தொகுதி உறுப்பினரான அன்வர் ராஜா திமுக அம்மா அணியில் உள்ளார். முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு ஆதரவாக குரல் கொடுத்து வருகிறார். 

  அதிமுக எம்.எல்.ஏ.க்கள் பலரும் தினகரனை சந்தித்து வரும் நிலையில், தற்போது அதிமுக அம்மா அணியைச் சேர்ந்த அன்வர் ராஜா சந்தித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
  Next Story
  ×