search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தஞ்சை மாநகராட்சியுடன் 13 ஊராட்சிகள் இணைக்கப்படும்- கூட்டத்தில் மேயர் பேச்சு
    X

    தஞ்சை மாநகராட்சி மாமன்ற கூட்டம் மேயர் சண் ராமநாதன் தலைமையில் நடந்தது.

    தஞ்சை மாநகராட்சியுடன் 13 ஊராட்சிகள் இணைக்கப்படும்- கூட்டத்தில் மேயர் பேச்சு

    • நீலகண்டன் : திருவையாறு பஸ் நிலைய ஆக்கிரமிப்பு எப்போது அகற்றப்படும்.
    • தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் தற்காலிக கழிவறைகள் அதிகளவில் ஏற்படுத்த வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாநகராட்சி அலுவலகத்தில் இன்று மாமன்ற கூட்டம் நடைபெற்றது.

    மேயர் சண் ராமநாதன் தலைமை தாங்கினார். துணை மேயர் அஞ்சுகம்பூபதி, ஆணையர் சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கூட்டத்தில் , தஞ்சை மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புனரமைக்கப்பட்ட அய்யன்குளத்துக்கு மத்திய அரசால் 3-வது இடத்திற்கான விருது தேர்வு செய்யப்பட்டுள்ளது.

    இந்த விருதை அடுத்த மாதம் 27 மற்றும் 28 தேதியில் நடைபெறும் விழாவில் குடியரசுத் தலைவர் விருது வழங்க உள்ளார் என்பதை மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதற்காக மத்திய அரசு, தமிழ்நாடு முதலமைச்சர், இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் , நகர்ப்புற வளர்ச்சி துறை அமைச்சர் மற்றும் அனைவருக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.

    இதனை தொடர்ந்து நடந்த கூட்டத்தில் நடந்த கவுன்சிலர்கள் பேசிய விவரமும் , அதற்கு பதில் அளித்து மேயர் , ஆணையர் பேசிய விவரமும் வருமாறு:-

    மண்டல குழு தலைவர் மேத்தா: அய்யன் குளம், அழகியகுலத்திற்கு தண்ணீர் கொண்டு வந்து சேர்த்ததற்கு நன்றி.

    ரம்யா சரவணன்: அய்யன் குளத்திற்கு தேசிய விருது கிடைத்திருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது.

    காந்திமதி : கடந்த 2016-ம் ஆண்டு ஜெயலலிதா முதலமைச்சராக இருந்தபோது அவரது ஆட்சியில் நகராட்சியாக இருந்த தஞ்சாவூர் மாநகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது.

    தஞ்சை தற்காலிக மீன் மார்க்கெட் இடமாற்றம் எப்போது ? தஞ்சாவூர் மாநகராட்சியுடன் 13 ஊராட்சிகள் எப்போது இணைக்கப்படும்.

    ஜெய் சதீஷ்: தஞ்சை செண்பகவல்லி நகரில் பாதாள சாக்கடை இணைப்பு பணி ஒரு மாதமாக நடந்து வருகிறது.

    அந்தப் பணியை துரித படுத்த வேண்டும். வானக்கார தெருவில் பைப் லைன் அமைக்கும் பணியையும் துரிதப்படுத்த வேண்டும். சிவகங்கை பூங்கா குளத்தில் தண்ணீர் நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    கேசவன் : எனது வார்டில் வாய்க்கால் தூர்வார வேண்டும். சாலைப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும்.

    தூய்மை பணியாளர்கள் குப்பை அள்ள வராத சமயத்தில் அதற்கு மாற்று ஏற்பாடு செய்து குப்பைகளை உடனுக்குடன் அள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    எதிர்க்கட்சித் தலைவர் மணிகண்டன்: நிலவின் தென் துருவத்தில் சந்திராயன் 3 விண்கலத்தை ஏவி நமது விஞ்ஞானிகள் மாபெரும் உலக சாதனை படைத்துள்ளனர். இந்த சாதனையில் தமிழ்நாட்டை சேர்ந்த வீர முத்துவேல் முக்கிய பங்காற்றினார். எனவே தஞ்சை மாநகராட்சி பள்ளிகளில் ஏதாவது ஒரு பள்ளி ஆய்வகத்துக்கு வீர முத்துவேல் பெயர் சூட்ட வேண்டும். அருளானந்தநகர் 4, 5-வது தெருவில் பேவர் பிளாக் அமைக்கும் பணியை தொடங்கி உடனே முடிக்க வேண்டும். தினமும் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஏராளமானோர் வெளியூர்களுக்கு செல்வதால் அவர்களின் வசதிக்காக இலவச கழிவறையை அமைக்க வேண்டும். பெத்தண்ணன் கலையரங்கம் பணிகள் உரிய அனுமதி பெற்று நடைபெற்றதா ? என்பதை தெளிவு படுத்த வேண்டும்.

    நீலகண்டன் : திருவையாறு பஸ் நிலைய ஆக்கிரமிப்பு அகற்றப்படுவது எப்போது ?

    துணை மேயர் அஞ்சுகம் பூபதி:

    தஞ்சை புதிய பஸ் நிலையத்தில் தற்காலிக கழிவறைகள் அதிகளவில் ஏற்படுத்த வேண்டும். மாநகராட்சியில் உள்ள அனைத்து வார்டு மக்களுக்கும் சுகாதார அட்டை வழங்க வேண்டும். ஆணையர் சரவணகுமார் :

    தஞ்சை மாநகராட்சியில் சாலை விரிவாக்க பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது. இதற்கு முன்னர் இருந்ததை விட தற்போது சாலைகள் அனைத்தும் புதுப்பொலிவு பெற்றுள்ளன. இதனை வெளியூர் மக்கள் அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

    மேயர் சண். ராமநாதன்:

    தஞ்சை மாநகராட்சியுடன் 13 ஊராட்சிகள் அடுத்த ஆண்டு அக்டோபர் மாதத்தி ற்குள் இணைக்கப்படும். பெத்தண்ணன் கலையரங்கம் பணிகள் உரிய வழிகாட்டு முறைகளை பின்பற்றி உடன் அனுமதி பெற்று தான் நடந்தது .

    தஞ்சாவூர் காந்திஜி சாலையில் ராசா மிராசுதார் மருத்துவமனை வரை உள்ள இடங்கள் மாநகராட்சிக்கு சொந்தமான இடம் என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த இடத்தின் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு மீட்கப்படும். தற்காலிக மீன் சந்தை அருகே உள்ள இடத்திற்கு மாற்றும் பணி விரைவில் தொடங்கும். தஞ்சை மாநகராட்சி கல்லு குளம் சுகாதார நிலையம் தர வரிசையில் மாநில அளவில் 2-வது இரண்டாம் இடமும் , கரந்தை சுகாதார நிலையம் 5-வது இடமும் பிடித்துள்ளதற்கு பாராட்டு க்கள். செயற்பொறியாளர் நாளையுடன் பணி ஓய்வு பெற உள்ளார். அவருக்கு நாளை பணி ஓய்வு பாராட்டு விழா நடைபெற உள்ளது. அவர் மாநகராட்சியில் பல்வேறு வளர்ச்சிப் பணியில் தன்னை அர்ப்பணித்துக் கொண்டார். அவருக்கு வாழ்த்துக்கள். கவுன்சிலர்கள் கோரிக்கைகள் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×