என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
சேலம் ரெயிலில் 11 கிலோ கஞ்சா பறிமுதல்; மோப்பநாய் ஆகாஷ் கண்டுபிடித்தது
- ஆந்திரா மற்றும் வட மாநிலங்களிலிருந்து ரெயிலில் அடிக்கடி கஞ்சா கடத்தி கொண்டு வரப்படுகிறது.
- மோப்ப நாய் ஆகாஷ் மூலம் ரெயில்களில் கஞ்சா கடத்தப்படுகிறதா? என சோதனை செய்து வந்தனர்.
சேலம்:
ஆந்திரா மற்றும் வட மாநிலங்களிலிருந்து ரெயிலில் அடிக்கடி கஞ்சா கடத்தி கொண்டு வரப்படுகிறது. இதனால் போலீசார் சோதனை நடத்தி கஞ்சாவை பறிமுதல் செய்து வந்தனர்.
இந்த நிலையில் கஞ்சா கடத்தலை தடுக்கும் வகையில் புதிதாக வாங்கப்பட்ட ஆகாஷ் என்ற மோப்பநாய்-க்கு பயிற்சி அளிக்கப்பட்டது. இதையடுத்து ரெயில்வே போலீசார் சத்தியமூர்த்தி, முத்துவேல், சக்திவேல் ஆகியோர் இன்று காலை மோப்ப நாய் ஆகாஷ் மூலம் ெரயில்களில் கஞ்சா கடத்தப்படுகிறதா? என சோதனை செய்து வந்தனர்.
அப்போது யஷ்வந்பூர் ரெயலில் மோப்பநாய் மூலம் சோதனை செய்யப்பட்டது. அப்போது பொதுெபட்டியில் கேட்பாரற்று ஒரு பை கிடந்தது. அந்த பையை மோப்பநாய் கவ்வி பிடித்து போலீசாரிடம் ஒப்படைத்தது.
இந்த பையில் சுமார் 5 கிலோ கஞ்சா மற்றும் 3 பண்டல்களில் 6 கிலோ என மொத்தம் 11 கிலோ கஞ்சா இருந்தது. அவற்றை போலீசார் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த மோப்பநாய் கஞ்சா பிடிப்பதற்கு மட்டுமே பயிற்சி அளிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.