search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    எடப்பாடி பழனிசாமி
    X
    எடப்பாடி பழனிசாமி

    சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கின்ற அரசு அ.தி.மு.க. - எடப்பாடி பழனிசாமி பேச்சு

    234 தொகுதியில் அ.தி.மு.க. அரசு நாட்டு மக்களுக்கு வைத்த கோரிக்கையை பெரும்பாலும் நிறைவேற்றி இருக்கிறது என்பதை ஸ்டாலினுக்கு சொல்லிக்கொள்கிறேன் என எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம் பாலகோடு பகுதியில் இன்று காலை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது:-

    சிறுபான்மை மக்களுக்கு அ.தி.மு.க. ஆட்சியில் பாதுகாப்பு இல்லை என ஒரு தவறான செய்தியை மு.க.ஸ்டாலின் தேர்தல் பிரசாரத்தில் குறிப்பிட்டு இருக்கிறார். உண்மைக்கு புறம்பான செய்தியை சொல்கிறார். எம்.ஜி.ஆர், ஜெயலலிதா மறைவுக்கு பிறகு என் தலைமையிலே இப்போது ஆட்சி நடந்து கொண்டு இருக்கிறது. ஆகவே 30 ஆண்டு காலம் தமிழகத்தில் அ.தி.மு.க. ஆட்சி அதிகாரத்தில் இருந்து நாட்டு மக்களுக்கு ஏராளமாள திட்டங்கள் செயல்படுத்தியன் விளைவு தமிழ்நாட்டு ஏற்றம் பெற்று இருக்கிறது. இந்த கால கட்டத்தில் சாதி சண்டை கிடையாது. மத சண்டை கிடையாது. அமைதி பூங்காவாக மிளிர்கின்ற மாநிலம் தமிழ்நாடு என்பதை ஸ்டாலினுக்கு சொல்லிக் கொள்கிறேன்.

    எங்கள் அரசின் 30 ஆண்டு காலத்தில் சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்டு இருக்கின்றார்களா? இல்லை.

    ஓட்டு வாங்குவதற்காக ஸ்டாலின் பொய் பிரசாரம் செய்கிறார். எப்படியாவது ஜெயிக்க வேண்டும். சிறுபான்மை மக்களை ஆதாயமாக வைத்து, சிறுபான்மை மக்களுக்கு இந்த அரசு ஒன்றுமே செய்யவில்லை என்று பொய்யான பிரசாரத்தை இன்றைக்கு உருவாக்கி அதன் மூலமாக தேர்தலில் வெற்றி பெறலாம் என ஸ்டாலின் நினைக்கிறார். என்றைக்கும் சிறுபான்மை மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்கின்ற அரசு அ.தி.மு.க. அரசு மற்றும் பாதுகாப்பு கொடுக்கின்ற கட்சி அ.தி.மு.க.

    சிறுபான்மை மக்களுக்கு ஏராளமான திட்டங்களை கொடுத்துள்ளோம். அதுமட்டுமின்றி 234 தொகுதியில் அ.தி.மு.க. அரசு நாட்டு மக்களுக்கு வைத்த கோரிக்கையை பெரும்பாலும் நிறைவேற்றி இருக்கிறது என்பதை ஸ்டாலினுக்கு சொல்லிக்கொள்கிறேன்.

    2017-18-ல் பாலக்கோடு பகுதியில் எம்.ஜி.ஆர். பெயரில் கலை மற்றும் அறிவியல் கல்லூரி கொடுத்து இருக்கிறோம். குறைந்த கட்டணத்தில் இங்கு நம்முடைய குழந்தைகள் உயர்கல்வி படித்து வருகிறார்கள். கூட்டுறவு சர்க்கரை பாலிடெக்னிக் கல்லூரியை அரசு கல்லூரியாக மாற்றி கொடுத்துள்ளோம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    Next Story
    ×