search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அதிமுக
    X
    அதிமுக

    அதிமுக சார்பில் வாய்ப்பு கிடைத்தால் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிடுவேன்- எம்ஜிஆர் பேரன்

    எம்.ஜி.ஆரின் பேரன் என்பதால் தங்கள் கட்சியில் இணையுமாறு பல்வேறு கட்சியினரும் எனக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் நான் எப்போதும் அ.தி.மு.க.வில் தான் இருப்பேன்.

    சென்னை:

    சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டி யிட 8,241 விருப்பமனுக்கள் பெறப்பட்டன. விருப்ப மனு அளித்தவர்களிடம் மாவட்டம் வாரியாக சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று நேர் காணல் நடைபெற்றது.

    முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் நேர் காணல் நடத்தினார்கள். இந்த நேர்காணலில் மறைந்த முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மாளின் பேரனான ராமச்சந்திரன் பங்கேற்றார்.

    நேர்காணலில் பங்கேற்றது தொடர்பாக ராமச்சந்திரன் கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் நான் கடந்த 2005-ம் ஆண்டு இணைந்தேன். சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட ஆண்டிப்பட்டி, ஆலந்தூர், பல்லாவரம் ஆகிய 3 தொகுதிகளுக்கு விருப்ப மனு அளித்துள்ளேன். அதன் அடிப்படையில் நேர்காணல் நடத்தப்பட்டது.

    கொரோனா பரவலின் போது ஆண்டிப்பட்டி தொகுதியில் 60 ஆயிரம் பேருக்கு உணவு உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளேன்.

    பரங்கிமலை தொகுதியில் தான் எம்.ஜி.ஆர். முதன்முதலில் வேட்பாளராக போட்டியிட்டார். அது தற்போது ஆலந்தூர் தொகுதியாக மாற்றப்பட்டுள்ளது. அதனால் தான் ஆலந்தூர் தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து இருந்தேன்.

    எம்.ஜி.ஆரின் பேரன் என்பதால் தங்கள் கட்சியில் இணையுமாறு பல்வேறு கட்சியினரும் எனக்கு அழைப்பு விடுத்தனர். ஆனால் நான் எப்போதும் அ.தி.மு.க.வில் தான் இருப்பேன்.

    3 தொகுதிகளில் ஏதாவது ஒரு தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிட வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகிறேன். எனக்கு நிச்சயம் அங்கீகாரம் கிடைக்கும்.

    ஒருவேளை கிடைக்காமல் போனாலும் அ.தி.மு.க.வை விட்டு வேறு கட்சிக்கு போக மாட்டேன். தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு வெற்றி வாய்ப்பு பிரகாசமாக இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×