search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    ஆட்சிக்கட்டிலில் அமர வி‌ஷமத்தனம் செய்கிறார் மு.க.ஸ்டாலின்- தமிழிசை குற்றச்சாட்டு
    X

    ஆட்சிக்கட்டிலில் அமர வி‌ஷமத்தனம் செய்கிறார் மு.க.ஸ்டாலின்- தமிழிசை குற்றச்சாட்டு

    தமிழகத்தில் ஆட்சியைப் பிடிப்பதற்காக தி.மு.க. செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் விஷமத்தனம் செய்வதாக தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் குற்றம்சாட்டியுள்ளார். #BJP #Tamilisaisoundararajan #MKStalin
    அவனியாபுரம்:

    தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் மதுரை விமான நிலையத்தில் இன்று நிருபர்களிடம் கூறியதாவது:-

    தூத்துக்குடி துப்பாக்கி சூடு நடந்த அன்றைய சூழ்நிலையில் தமிழக அமைச்சர்கள் போகவில்லை என்பது தவறுதான். ஆனால் இப்போது செல்வதை விமர்சிப்பது மிகப்பெரிய தவறு.

    மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் இதனை ஊதிப் பெரிதாக்குவது தவறு. அங்கு பொதுமக்களை சுட்டுக்கொல்ல வேண்டும் என்பது நோக்கமல்ல. யார் சுடக்கூடிய சூழ்நிலையை உருவாக்கி கொடுத்தது? என்பதை மு.க.ஸ்டாலின் போன்றவர்கள் சுட்டிக்காட்டினாலே போதும்.

    மீண்டும், மீண்டும் தமிழகத்தை போராட்டம் என்ற பெயரில் சுடுகாடாக சீமான் மற்றும் மு.க.ஸ்டாலின் மாற்றுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்.

    ஸ்டெர்லைட் ஆலைக்கு இப்போது போராடக்கூடிய தி.மு.க. அப்போது என்ன செய்து கொண்டிருந்தது?


    முந்தைய ஐக்கிய முன்னணி அரசுக்கு இந்த ஸ்டெர்லைட் ஆலையின் பாதிப்பு தெரியாதா? குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கப்பார்க்கிறார், மு.க.ஸ்டாலின். அவர் ஆட்சிக் கட்டிலில் அமர இது போன்ற வி‌ஷம செயல்களில் ஈடுபடுகிறார்.

    பயங்கரவாத நிகழ்வு எங்கே நடந்தாலும் அதை கட்டுப்படுத்த வேண்டும். 40 ஆயிரம் பேர் ஒரு இடத்தில் ஒன்று கூடுகிறார்கள் என்றால் அதுவரை உளவுத்துறை என்ன செய்தது?

    மக்கள் போராட்டங்களை மக்களே நடத்த வேண்டுமே தவிர இடையில் வேறு யாரும் புகுந்து விடக்கூடாது.

    இவ்வாறு அவர் கூறினார். #BJP #Tamilisaisoundararajan #MKStalin
    Next Story
    ×