என் மலர்

  செய்திகள்

  அ.தி.மு.க இணைப்பு: ஓ. பன்னீர்செல்வம் திடீர் ஆலோசனை
  X

  அ.தி.மு.க இணைப்பு: ஓ. பன்னீர்செல்வம் திடீர் ஆலோசனை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சென்னை கிரீன்வேஸ் இல்லத்தில் ஓ. பன்னீர்செல்வம் இன்று மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். இதில் அ.தி.மு.க அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
  சென்னை:

  அ.தி..மு.க பிளவுக்குப்பின் அ.தி.மு.க அம்மா அணி என்றும் புரட்சித்தலைவி அம்மா அணி என்றும் செயல்பட்டு வருகிறது. இரு அணிகளையும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது.

  இதற்காக இருஅணியிலும் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஆனால் இணைப்பு முயற்சி தோல்வி அடைந்ததால் குழுக்கள் கலைக்கப்பட்டன.

  சசிகலா சிறைக்கு சென்று விட்டதாலும் டி.டி.வி தினகரன் வழக்குகளில் சிக்கி இருப்பதாலும் கட்சியிலும் ஆட்சியிலும் எடப்பாடி பழனிசாமி கை ஓங்கியுள்ளது. இதனால் ஓ. பன்னீர்செல்வம் அணியினர் அதிருப்தி அடைந்துள்ளனர்.

  ஆரம்பத்தில் சேர்ந்த எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள் தவிர புதிதாக யாரும் ஓ.பி.ஸ். அணியில் சேரவில்லை. இதனால் ஓ.பி.எஸ் அணிக்கு நாளுக்கு நாள் செல்வாக்கு குறைந்து வருவதாக கருத்து நிலவுகிறது. ஓ.பி.எஸ். அணியில் இருப்பவர்கள் அ.தி.மு.க ஒன்றாக இணைய வேண்டும் என்று விரும்புகிறார்கள். ஆனால் அதற்கான முயற்சி மேற்கொள்ளப்பட வேண்டும் என்று கூறி வருகிறார்கள்.

  எனவேதான் மீண்டும் இணைப்பு பேச்சுவார்த்தைக்கு ஓ.பி.எஸ். அணி முன் வந்துள்ளது. சமீபத்தில் ஓ.பி.எஸ். அணியைச் சேர்ந்த முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை திடீர் என்று சந்தித்துப் பேசினார்.

  இவர்தான் தேர்தல் கமி‌ஷனில் சசிகலா மீது புகார் மனு அளித்தவர். அவர் சந்தித்து பேசியது திருப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. அ.தி.மு.க அணிகள் இணைப்பு தொடர்பாக பேசியதாக கே.சி.பழனிசாமி பின்னர் கூறினார்.

  கே.சி. பழனிசாமி சந்திப்புக்குப்பின்பும் மீண்டும் ஓ.பி.எஸ். அணியில் பேச்சு வார்த்தையை தொடங்குவதற்கான முயற்சி மேற்கொள்ளப்படவில்லை. இந்த நிலையில் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ ஓ.பி.எஸ். அணியில் இருந்து விலகி எடப்பாடி பழனிசாமி அணியில் இணைந்து விட்டார். இணைப்பு முயற்சி நடக்காததால் அணி மாறும் முடிவுக்கு வந்ததாக ஆறுக்குட்டி எம்.எல்.ஏ தெரிவித்தார்.

  இதைத் தொடர்ந்து ஓ. பன்னீர் செல்வம் இன்று தனது கிரீன்வேஸ் இல்லத்தில் மூத்த நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார். மைத்ரேயன் எம்.பி. கே.பி. முனுசாமி, ராஜகண்ணப்பன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  இதில் ஆறுக்குட்டி எம்.எல்.ஏ. விலகல் மற்றும் அ.தி.மு.க அணிகள் இணைப்பு பேச்சுவார்த்தை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது.
  Next Story
  ×