என் மலர்
தெலுங்கானா
- 10 ஆம் வகுப்பு மாணவரான விஜய் கார்த்திக், தனது உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார்.
- விஜய் கார்த்திக் ஜாலியாக பேட்மிண்டன் விளையாடியுள்ளார்.
தெலுங்கானா மாநில தலைநகர் ஐதராபாத்தில் உறவினர் வீட்டில் பேட்மிண்டன் விளையாடி கொண்டிருக்கும் போது, டிரான்ஸ்ஃபார்மரின் மீது விழுந்த ஷட்டில் கார்க்கை எடுக்க முயற்சித்த போது 14 வயது சிறுவன் மின்சாரம் தாக்கி உயிரிழந்தான்.
இது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
ஆந்திராவின் பாபட்லா மாவட்டத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு மாணவரான விஜய் கார்த்திக், தனது பெற்றோர் உடன் ஐதராபாத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளார். அப்போது தான் இந்த துயர சம்பவம் நடந்துள்ளது.
- முன்னால் அமர்ந்திருந்த ஒருவர் உடனடியாக நீதிமன்ற ஊழியர்களுக்குத் தெரிவித்தார்.
- ஊழியர்கள் அவரை நாற்காலிகளில் படுக்க வைத்து முதலுதவி செய்தனர்.
தெலுங்கானாவின் ஐதராபாத் உயர்நீதிமன்ற வளாகத்தில் 45 வயதான நாகேஸ்வர ராவ் என்ற வழக்கறிஞர் மாரடைப்பால் இறந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
நேற்று (வியாழக்கிழமை) பிற்பகல் நடந்த இந்த சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளும் வெளியாகியுள்ளன.
நாகேஸ்வர ராவ் காத்திருப்போர் அறையில் அமர்ந்திருந்தபோது திடீரென மார்பில் வலி ஏற்பட்டது. அவரது அசௌகரியத்தைக் கண்டதும், முன்னால் அமர்ந்திருந்த ஒருவர் உடனடியாக நீதிமன்ற ஊழியர்களுக்குத் தெரிவித்தார்.
இதன் பின்னர், ஊழியர்கள் அவரை நாற்காலிகளில் படுக்க வைத்து முதலுதவி செய்தனர். ஆனால் அவரது நிலை மிகவும் மோசமாகியது.
அவர் உடனடியாக அருகிலுள்ள மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதனைக்குப் பிறகு அவர் இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.
முதற்கட்ட விசாரணையில் அவரது மரணத்திற்கு மாரடைப்புதான் காரணம் என்று தெரியவந்துள்ளது.
- ஆத்திரம் அடைந்த மாமியார் அருகில் இருந்த கட்டையை எடுத்து மருமகன் தலையில் பலமாக தாக்கினார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து மாமியாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
மகாராஷ்டிரா மாநிலம், ஹிமாயத் நகரை சேர்ந்தவர் ஷேக் நஜீம் (வயது 45). கூலி தொழிலாளி. இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மனைவி, மகன் மற்றும் மாமியாருடன் தெலுங்கானா மாநிலம் நிர்மல் மாவட்டம், தரோடா கிராமத்திற்கு வந்தார்.
ஷேக் நஜீம் கூலி வேலை செய்து வந்தார். அவரது மனைவி கட்டிட வேலைகளுக்கு சென்று வந்தார்.
இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு நஜீமின் மனைவி தனது மகனுடன் மகாராஷ்டிரா மாநிலம், ஷிவானிக்கு சென்றார். இதனால் அவரது மாமியார் வீட்டில் தனியாக இருந்தார்.
கடந்த வாரம் மது போதையில் வீட்டிற்கு வந்த ஷேக் நஜீம் தூங்கிக் கொண்டிருந்த 60 வயது மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்தார்.
இதனால் அவரது மாமியாரின் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.
நேற்று முன்தினம் இரவு மது போதையில் வீட்டிற்கு வந்த ஷேக் நஜீம் மீண்டும் மாமியாரை பாலியல் வன்கொடுமை செய்ய முயன்றார்.
இதனைக் கண்டு ஆத்திரம் அடைந்த மாமியார் அருகில் இருந்த கட்டையை எடுத்து மருமகன் தலையில் பலமாக தாக்கினார். இதில் ஷேக் நஜீம் மயக்கம் அடைந்தார். அவரது கழுத்தை நெரித்து மாமியார் கொலை செய்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஷேக் நஜீமின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மாமியாரை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்.
- கட்டிடத்தில் இருந்த கியாஸ் சிலிண்டர் ஒன்று திடீரென அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் மேட்சல் சந்தை மேடு பகுதியை சேர்ந்தவர் முரளி. அதே பகுதியில் இவருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இவரது கட்டிடத்தில் செல்போன் கடை மற்றும் 2 பூக்கடைகள் உள்ளன.
நேற்று இரவு கட்டிடத்தில் இருந்த கியாஸ் சிலிண்டர் ஒன்று திடீரென அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்தது.
அப்போது சாலையில் நடந்து சென்ற ஒருவர் கட்டிடத்தில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். மேலும் திருப்பாத்தா என்ற மூதாட்டியும், ரபிக், தினேஷ் என்ற 2 வாலிபர்களும் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பூஜா ஜெயினை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
- சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஹிமாயத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் அருண்குமார் ஜெயின். தொழிலதிபர்.
இவரது மனைவி பூஜா ஜெயின் (வயது 43). தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் 5-வது மாடியில் வசித்து வருகின்றனர்.
நேற்று காலை அருண்குமார் ஜெயின் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது வீட்டில் பூஜா ஜெயின் அவரது பிள்ளைகள் மற்றும் வேலைக்கார பெண் வீட்டில் இருந்தனர். பூஜா ஜெயில் நீண்ட நேரம் தன்னுடைய அறையில் தனியாக இருந்தார்.
மதியம் 2 மணி அளவில் அறையில் இருந்து வெளியே வந்த பூஜா ஜெயின் தான் கடவுளிடம் செல்வதாக கூறியபடி 5-வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.
இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஹைதர் குடாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பூஜா ஜெயினை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பூஜா ஜெயின் அறையை சோதனை செய்தனர். அப்போது அவரது அறையில் கடிதம் ஒன்று இருந்தது.
அதில் நாம் தொடர்ந்து கடவுளை பற்றி தியானித்து அவருக்கு நம்மை அர்ப்பணித்தால் நாம் கடவுளிடம் நெருக்கமாகி சொர்க்கத்தை அடைவோம் என்ற சமண குருக்களின் பொன்மொழியை எழுதி வைத்திருந்தார்.
இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- பட்டாசு வெடிக்க கூடாது என சினிமா தியேட்டர் வளாகங்களில் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
- மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள சினிமா தியேட்டர்களில் பட்டாசு வெடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 4-ந்தேதி ஜூனியர் என்.டி.ஆர். நடித்த தேவரா படம் வெளியானது.
அவரது ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர். அப்போது சினிமா தியேட்டர் வளாகத்தில் வைக்கப்பட்டு இருந்த பிரமாண்ட கட்டவுட்டில் தீப்பிடித்து எரிந்தது. இதன் காரணமாக பிரபல திரைப்பட நடிகர்களின் படங்கள் வெளியாகும் போது பட்டாசு வெடிக்க கூடாது என சினிமா தியேட்டர் வளாகங்களில் போஸ்டர்கள் மற்றும் பேனர்கள் வைக்கப்பட்டுள்ளது.
மீறி பட்டாசு வெடிப்பவர்கள் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என போஸ்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் பவன் கல்யாண் நடித்த ஹரிஹர வீர மல்லலு திரைப்படம் வெளியானது. அப்போது அசம்பாவித சம்பவங்களை தவிர்க்க சினிமா தியேட்டர்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
- போராட்டத்தை கைவிட மறுப்பு தெரிவித்ததால் போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர்.
- சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
தெலுங்கானா மாநிலம் பூபால பள்ளி சிங்கரேணி குரகுலாவை சேர்ந்தவர் ஓடேலு. இவரது மனைவி லலிதா. தம்பதியினர் சிங்கரேணி அரசு ஆஸ்பத்திரி அருகே குடும்பத்தினருடன் வசித்து வருகின்றனர். தங்களது வீட்டை ஒட்டி கொட்டகை அமைத்து ஏராளமான எருமை மாடுகளை வளர்த்து வருகின்றனர்.
இந்த நிலையில் சாலை விரிவாக்கம் செய்ய மாட்டுக்கொட்டகையை இடிக்கப்படும் என அதிகாரிகள் நோட்டீஸ் அனுப்பினர். அதிகாரிகளின் நோட்டீசுக்கு ஓடேலு எந்த பதிலும் அளிக்கவில்லை.
நேற்று ஓடேலுவின் வீட்டிற்கு வந்த அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் மாட்டு கொட்டகையை இடித்து தள்ளினர். இதனைக் கண்ட தம்பதியினர் அதிர்ச்சி அடைந்தனர்.
நேற்று மாலை ஓடேலு தனது மனைவி மற்றும் உறவினர் ரமேஷ் என்பவருடன் அவருடைய எருமை மாடுகளை அங்குள்ள எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்திற்கு கொண்டு வந்தார்.
எருமை மாடுகளை எம்.எல்.ஏ. அலுவலக வளாகத்தில் கட்டி வைத்து எம்.எல்.ஏ. தூண்டுதலின் பேரில் சட்ட விரோதமாக தனது மாட்டு கொட்டையை இடித்து விட்டதாக போராட்டம் நடத்தினார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து போராட்டம் நடத்திய ஓடேலுவிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.
அவர் போராட்டத்தை கைவிட மறுப்பு தெரிவித்ததால் போலீசார் அவரை கைது செய்ய முயன்றனர். அப்போது தன்னிடம் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்தார். போலீசார் அவரை மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
மேலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட லலிதா மற்றும் அவரது உறவினர் ரமேஷ் ஆகியோரை போலீஸ் நிலையம் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
ரஜினி நடித்த அண்ணாமலை சினிமா பாணியில் நடந்த இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
- அந்த நபரின் தற்போதைய மனைவி என்று நம்பப்படும் ஒரு பெண் மற்றும் ஒரு பூசாரியும் அந்தப் படத்தில் உள்ளனர்.
- குழந்தை திருமணத் தடைச் சட்டம், 2006, பெண்களுக்கு 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் அருகே உள்ள நந்திகாமாவில், 40 வயது பள்ளி ஆசிரியர் ஒருவர், 8 ஆம் வகுப்பு படித்து வந்த 13 வயது மாணவியைத் திருமணம் செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இந்தத் திருமணம் குறித்த புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலானதைத் தொடர்ந்துதான் இந்தச் சம்பவம் வெளிச்சத்துக்கு வந்தது. அந்த நபரின் தற்போதைய மனைவி என்று நம்பப்படும் ஒரு பெண் மற்றும் ஒரு பூசாரியும் அந்தப் படத்தில் உள்ளனர்.
இது தொடர்பான புகாரில் ஆசிரியர் மற்றும் திருமணத்தை நடத்தி வைத்த பூசாரி ஆகியோர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.
குழந்தை திருமணத் தடைச் சட்டம், 2006, பெண்களுக்கு 18 வயதும், ஆண்களுக்கு 21 வயதும் திருமணத்திற்கான சட்டப்பூர்வ வயது என்று தெளிவாகக் குறிப்பிடுகிறது.
இருப்பினும், இதுபோன்ற சம்பவங்கள், குறிப்பாக கிராமப்புறங்களில் தொடர்ந்து நிகழ்ந்து வருகின்றன.
- தாய் இல்லாமல் குழந்தை அழுது கொண்டிருந்ததை பேருந்து நிலைய ஊழியர்கள் பார்த்துள்ளனர்.
- இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விரைந்து விசாரணை நடத்தினர்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் தனது 2 வயது மகனை பேருந்து நிலையத்தில் தனியாக தவிக்கவிட்டு, ஆண் நண்பருடன் தாய் பைக்கில் சென்ற சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தனது 2 வயது மகனை பேருந்து நிலையத்தில் விட்டுவிட்டு இன்ஸ்டாவில் பழக்கமான ஆண் நண்பருடன் தாய் சென்றுள்ளார். தாய் இல்லாமல் குழந்தை அழுது கொண்டிருந்ததை பார்த்த பேருந்து நிலைய ஊழியர்கள் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விரைந்து விசாரணை நடத்தி, சில மணி நேரங்களுக்குள் அந்தப் பெண்ணையும் அவரது ஆண் நண்பரையும் கண்டுபிடித்தனர்.
அதைத் தொடர்ந்து போலீசார் அவரது கணவரைத் தொடர்பு கொண்டு குழந்தையை தந்தையிடம் ஒப்படைத்தனர்.இந்த விவகாரம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கணவர் சுரேஷ் உடன் ஏற்பட்ட பிரச்னையில் மனைவி லாவண்யா தனது பெற்றோர் வீட்டுக்கு வந்துள்ளார்.
- வரதட்சணையாக வழங்கப்பட்ட பணம், நகையை கொடுக்கக் கோரி உறவினர்கள் போராட்டம்
தெலங்கானா மாநிலத்தில் திருமணமான 3 ஆண்டுகளில் பெண் உயிரிழந்ததால் வரதட்சணையாக வழங்கப்பட்ட ரூ.50 லட்சம் பணம், 35 சவரன் தங்க நகையை திருப்பிக் கொடுக்கக் கோரி பெண்ணின் உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்டது பரபரப்பை ஏற்படுத்தியது.
கணவர் சுரேஷ் உடன் ஏற்பட்ட பிரச்னையில் மனைவி லாவண்யா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று வசித்து வந்துள்ளார்.
இந்நிலையில், லாவண்யா தனது தந்தையுடன் பைக்கில் சென்றபோது ஏற்பட்ட விபத்தில் இருவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.
இதனால் கோபமடைந்த லாவண்யா உறவினர்கள் சுரேஷ் வீட்டின் முன்பு இருவரது உடல்களை வைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் தலையிட்டு இருதரப்பினருக்கும் இடையே
பேச்சுவார்த்தை நடத்தினர். உயிரிழந்த பெண்ணின் குடும்பத்திற்கு கணவரது குடும்பம் ரூ.20 லட்சம் கொடுக்க முன்வந்ததை அடுத்து பெண்ணுக்கு இறுதி சடங்குகள் நடத்தப்பட்டது.
- பிறந்தநாள் விழாவில் சிறுமி கேக் வெட்டும் நிகழ்ச்சிகளை சமக்கா செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டு இருந்தார்.
- போலீசார் வழக்கு பதிவு செய்து ஹயாத் நகரில் பதுங்கி இருந்த ஸ்ரீனுவை கைது செய்தனர்.
தெலுங்கானா மாநிலம் அப்துல்லாபூர் மெட் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீனு (வயது 50). இவரது முதல் மனைவிக்கு குழந்தைகள் இல்லை. இதனால் சமக்கா (35) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
கணவன், மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக திருமணமான சில ஆண்டுகளில் இருவரும் பிரிந்தனர். சமக்கா சூர்யா பேட்டையில் தனியாக வசித்து வந்தார். அவருக்கு வேறு ஒருவருடன் கள்ளத்தொடர்பு இருந்து வருவதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் ஸ்ரீனுவின் சகோதரி மகள் ராஜேஸ்வரியின் 14 வயது சிறுமிக்கு நேற்று முன்தினம் பிறந்தநாள் விழா நடந்தது. விழாவில் கலந்து கொள்ள ஸ்ரீனு மற்றும் அவரது 2-வது மனைவி சமக்காவுக்கு அழைப்பு விடுத்து இருந்தனர்.
பிறந்தநாள் விழாவில் சிறுமி கேக் வெட்டும் நிகழ்ச்சிகளை சமக்கா செல்போனில் வீடியோவாக பதிவு செய்து கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த ஸ்ரீனு தன்னிடமிருந்த கத்தியை எடுத்து சமக்கா கழுத்தில் 3 இடங்களில் சரமாரியாக குத்தினார். அவரது கழுத்தில் இருந்து ரத்தம் பீறிட்டு கொட்டியது. பிறந்தநாள் விழாவில் இருந்தவர்கள் இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்து அலறி கூச்சலிட்டனர்.
பின்னர் ஸ்ரீனு அங்கிருந்து தப்பி சென்றார். ரத்த வெள்ளத்தில் மயங்கி கீழே விழுந்த சமக்கா சிறிது நேரத்தில் உயிரிழந்தார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். சமக்கா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உஸ்மானியா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து ஹயாத் நகரில் பதுங்கி இருந்த ஸ்ரீனுவை கைது செய்தனர்.
- காலேஷ்வரம் லிஃப்ட் பாசன திட்ட முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தப்படவில்லை என விமர்சனம்.
- விசாரணை நடைபெற்று வருகிறது என ரேவந்த் ரெட்டி சினிமாவை சுட்டிக்காட்டி விளக்கம்.
தெலுங்கானா மாநிலத்தில் சந்திரகேர ராவ் முதல்வராக இருந்தபோது, காலேஷ்வரம் லிஃப்ட் பாசன திட்டத்தில் முறைகேடு நடைபெற்றதாக குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பான விசாரணையில் சின்ன மீன்கள் (கீழ்மட்ட அதிகாரிகள்) மட்டுமே பிடிபட்டுள்ளன என விமர்சனம் எழுந்துள்ளது.
இதற்கு ரேவந்த் ரெட்டி பதில் அளிக்கையில் "சினிமாவில் வில்லன் முதலில் சாகமாட்டான். நீங்கள் படங்கள் பார்த்திருக்கிறீர்களா?. டெல்லியில் மதுபான கொள்கை மோசடியில் நீண்ட நாட்கள் கழித்துதான் அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டார்.
காலேஷ்வரம் லிஃப்ட் பாசன திட்டம் தொடர்பாக விசாரணை நடைபெற்றுதான் வருகிறது. இது தொடர்பாக விசாரணை நடத்தப்பட்ட அதிகாரிகள் வீட்டில் அளவுக்கு அதிகமான சொத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக நீதிபதி கோஷ் தலைமையிலான கமிஷன் விசாரணை நடத்தி வருகிறது. உயர்மட்ட விசாரணை நடத்தி, இறுதி அறிக்கை தாக்கல் செய்ய வருகிற 31ஆம் தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது" என்றார்.
காலேஷ்வரம் பாசன திட்டம் தொடர்பாக சந்திரசேகர ராவ் கோஷ் கமிஷன் முன் கடந்த 11ஆம் தேதி ஆஜரானார். முன்னாள் பாசன அமைச்சர் டி. ஹாரிஸ் ராவ் பலமுறை ஆஜராகி விளக்கம் அளித்துள்ளார்.






