என் மலர்
தெலுங்கானா
- 8 மற்றும் 6 வயதுடைய இரண்டு மகள்கள் மற்றும் 4 வயது மகன் ஆகியோரின் உடல்கள் பாதி எரிந்த மற்றும் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
- பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
தெலங்கானாவின் நாகர்கர்னூல் மாவட்டத்தில் 36 வயது தந்தை தனது மூன்று குழந்தைகளைக் கொன்றுவிட்டு டதற்கொலை செய்துகொண்ட சம்பவம் நிகழ்ந்துள்ளது.
வேல்டண்டா காவல் நிலையத்திற்குட்பட்ட பகுதியில் அடையாளம் தெரியாத ஒருவரின் உடல் கிடப்பதாக கடந்த புதன்கிழமை உள்ளூர்வாசிகள் சிலர் காவல்துறைக்கு தகவல் அளித்தனர்.
அதைத் தொடர்ந்து, காவல்துறை மேற்கொண்ட விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் நேற்று (வியாழக்கிழமை) நாகர்கர்னூல் மாவட்டத்தின் வெவ்வேறு இடங்களில், அவரது 8 மற்றும் 6 வயதுடைய இரண்டு மகள்கள் மற்றும் 4 வயது மகன் ஆகியோரின் உடல்கள் பாதி எரிந்த மற்றும் அழுகிய நிலையில் கண்டெடுக்கப்பட்டன.
ஆந்திராவின் பிரகாசம் மாவட்டத்தை சேர்ந்த அந்த நபர் குடும்பப் பிரச்சனைகள் காரணமாக தனது மனைவியுடன் சண்டையிட்டு, ஆகஸ்ட் 30 அன்று தனது மூன்று குழந்தைகளுடன் நாகர்கர்னூலுக்கு வந்ததாகக் கூறப்படுகிறது.
முதற்கட்ட விசாரணையின்படி, அவர் தனது மூன்று குழந்தைகளையும் கொன்று பெட்ரோல் ஊற்றி எரித்துவிட்டு, பின்னர் பூச்சிக்கொல்லி மருந்தை அருந்தி தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்ட்டுள்ளது.
- சுமார் 60 வகையான மருத்துவ பரிசோதனைகளை செய்து சில நிமிடங்களில் அறிக்கையை வழங்கக்கூடிய எந்திரத்தை உருவாக்கியுள்ளது.
- எந்திரத்தில் நின்றுகொண்டு ஈசிஜி, ஹெச்பிஏசி, இருதய மதிப்பீடு, டெங்கு, மலேரியா போன்ற பல நோயறிதல் சோதனைகளைச் செய்யலாம்.
திருப்பதி:
மருத்துவ பரிசோதனைகளைச் செய்ய ஒரு நாள் முழுவதும் அர்ப்பணிக்க வேண்டும். நிறைய ரத்த தானம் செய்ய வேண்டும். வரிசையில் காத்திருக்க வேண்டும்.
அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இதற்கு நிறைய நேரம் எடுக்கும் புதிய தொழில்நுட்பங்களும் கண்டுபிடிப்புகளும் இந்தப் பிரச்சனைக்குத் தீர்வை வழங்குகின்றன.
டெல்லியைச் சேர்ந்த தனியார் நிறுவனம் ஒரே சாதனத்தைப் பயன்படுத்தி சுமார் 60 வகையான மருத்துவ பரிசோதனைகளைச் செய்து சில நிமிடங்களில் அறிக்கையை வழங்கக்கூடிய ஒரு சுகாதார எந்திரத்தை உருவாக்கியுள்ளது.
தெலுங்கானா மாநிலம் கிங்கோத்தியில் உள்ள மாவட்ட மருத்துவமனை மற்றும் மலக்பேட்டை பகுதி மருத்துவமனை ஆகியவற்றில் ஒரு முன்னோடி திட்டமாக இந்த எந்திரம் மாநில அரசு அமைத்துள்ளது
எந்திரத்தில் நின்றுகொண்டு ஈசிஜி, ஹெச்பிஏசி, லிப்பிட் ஹீமோகுளோபின், நீரிழிவு, ரத்த அழுத்தம், நுரையீரல் செயல்பாடு, இருதய மதிப்பீடு, டெங்கு, மலேரியா போன்ற பல நோயறிதல் சோதனைகளைச் செய்யலாம்.
சில ரத்த பரிசோதனைகளுக்கு ரத்த மாதிரி எடுக்க வேண்டும். காது, தொண்டை மற்றும் மூக்கு பாகங்களை பரிசோதிக்கலாம். கண் பரிசோதனைகள் செய்யலாம்.
இது வெற்றி பெற்றால், மேலும் பல அரசு மருத்துவமனைகளில் இந்த எந்திரங்கள் கூடுதலாக அமைக்கப்படும் என தெரிவித்தனர்.
- பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
- தனது சகோதரர் கே.டி.ராமாராவை கவிதா எச்சரித்தார்.
பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவுக்கும், அவரது மகள் கவிதாவுக்கும் இடையே சமீப காலமாக மோதல் வெடித்தது. சகோதரர் ராமா ராவுடனும் மோதல் வெடித்தது.
இதற்கிடையே, கட்சியின் நிர்வாகிகளை வெளிப்படையாக விமர்சித்து பேசினார் கவிதா. மேலும், கட்சி தலைவர்கள் ஊழலில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
இதனால், பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து கவிதாவை சஸ்பெண்ட் செய்து அவரது தந்தையும், கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் உத்தரவிட்டார்.
இந்நிலையில், சஸ்பெண்ட் நடவடிக்கையை தொடர்ந்து பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து விலகுவதாக கவிதா அறிவித்துள்ளார்.
மேலும், உறவினர்களான ஹரிஷ் மற்றும் சந்தோஷ் ராவ் ஆகியோர் நமது குடும்பத்தை அழிக்க திட்டமிட்டுள்ளனர் என்று தனது சகோதரர் கே.டி.ராமாராவை கவிதா எச்சரித்தாக தகவல் வெளியாகியுள்ளது.
தெலுங்கானா சட்டமன்றத் தேர்தலில் தனது தந்தை மற்றும் சகோதரரை தோற்கடிக்க ஹரிஷ் ராவ் பிரச்சாரத்திற்கு நிதியளித்ததாகவும் கவிதா குற்றம் சாட்டினார்.
- கட்சியின் நிர்வாகிகளை கவிதா வெளிப்படையாக விமர்சித்து பேசினார்.
- பி.ஆர்.எஸ். கட்சி தலைவர் சந்திரசேகர ராவ் மகள் கவிதா, கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
ஐதராபாத்:
பாரத் ராஷ்ட்ர சமிதி கட்சியின் தலைவரான சந்திரசேகர ராவுக்கும், அவரது மகள் கவிதாவுக்கும் இடையே சமீப காலமாக மோதல் வெடித்தது. சகோதரர் ராமா ராவுடனும் மோதல் வெடித்தது.
இதற்கிடையே, கட்சியின் நிர்வாகிகளை வெளிப்படையாக விமர்சித்து பேசினார் கவிதா. மேலும், கட்சி தலைவர்கள் ஊழலில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டினார்.
இந்நிலையில், பி.ஆர்.எஸ். கட்சியில் இருந்து கவிதாவை சஸ்பெண்ட் செய்து அவரது தந்தையும், கட்சி தலைவருமான சந்திரசேகர ராவ் உத்தரவிட்டுள்ளார்.
தெலுங்கானாவில் காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்ட முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தும்படி சி.பி.ஐ.க்கு முதல் மந்திரி ரேவந்த் ரெட்டி பரிந்துரை செய்துள்ள நிலையில், கவிதா கட்சியில் இருந்து சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- நாய் கடித்தபோது சிறுவன் கழிவுநீர்க் கால்வாயில் விழுந்து காயமடைந்துள்ளான்.
- ரேபிஸ் தடுப்பூசி போடாததால் சிறுவனின் உடலில் ரேபிஸ் நோய்த்தொற்று படிப்படியாக பரவியது.
தெலுங்கானாவில் 4 வயது சிறுவன் ரக்ஷித்தை வெறிநாய் கடித்ததில் ரேபிஸ் நோய்த்தொற்றுக்கு ஆளாகி உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
தெலுங்கானா மாநிலம் துங்கூரு கிராமத்தை சேர்ந்த சிறுவன் ரக்ஷித்தை 2 மாதங்களுக்கு முன்பு, வெறிநாய் கடித்தது. நாய் கடித்தபோது சிறுவன் கழிவுநீர்க் கால்வாயில் விழுந்து காயமடைந்துள்ளான். அவனது காயங்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டபோதும், நாய் கடித்ததற்கான ரேபிஸ் தடுப்பூசி போடப்படவில்லை என்று தெரிகிறது.
ரேபிஸ் தடுப்பூசி போடாததால் சிறுவனின் உடலில் ரேபிஸ் நோய்த்தொற்று படிப்படியாக பரவி, உடல்நலக் குறைபாடுகள் ஏற்பட்டுள்ளது. பின்னர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட சிறுவன், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தான்.
- 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை துர்கா பவானி விழாக்கள் நடத்தப்படுகின்றன.
- திருவிழாவிற்கு முந்தைய நாள் சீதம்மா வணங்கப்படுகிறார்.
தெலுங்கானா மாநிலம் விகாராபாத் மாவட்டம் வால்யநாயக் தண்டா என்ற கிராமத்தில் ஒரு விசித்திரமான வழக்கம் உள்ளது.
ஒரு பெண் திருமணம் செய்து கொண்டு மருமகளாக மாறினால் அவள் வாழ்நாள் முழுவதும் இறைச்சி சாப்பிட தடை விதிக்கப்பட்டுள்ளது.
பல ஆண்டுகளுக்கு முன்பு காலரா பரவிய போது கிராமத் தலைவர் சீதம்மா மற்றும் மாரியம்மாவை வணங்கினார்.
கிராமத்தில் மருமகள்கள் காலரா வராவிட்டால் இறைச்சியைத் தொட மாட்டோம் என்று அப்போது சத்தியம் செய்தனர். இந்த கிராமத்தில் காலரா வராததால் இது தெய்வங்களின் அருள் என்று நம்பி இந்த வழக்கத்தைத் தொடர்கிறார்கள்.
2 ஆண்டுகளுக்கு ஒருமுறை துர்கா பவானி விழாக்கள் நடத்தப்படுகின்றன. திருவிழாவிற்கு முந்தைய நாள் சீதம்மா வணங்கப்படுகிறார். வெள்ளி அம்மனின் சிலைகள் தயாரிக்கப்பட்டு ஒவ்வொரு வீட்டிலும் ஒரு பெட்டியில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள் செய்யப்படுகின்றன.
கிராமத்து குழந்தைகள் அல்லது ஆண்கள் யாராவது இறைச்சி சாப்பிட வேண்டியிருந்தால் அவர்கள் கிராமத்திற்கு வெளியே வெவ்வேறு சமையல் பாத்திரங்களில் சமைத்து, சாப்பிட்டு குளித்துவிட்டு பின்னர் வீட்டிற்கு வருவார்கள் என்று கிராம மக்கள் கூறினர்.
- 21 வயதான இந்திய மக்கள் ஐ.ஏ.எஸ். ஆகலாம். ஐ.பி.எஸ். ஆகலாம். மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகிகளாகவும் பணியாற்றலாம்.
- வாக்குரிமைக்கான வயது வரம்பு 21-ல் இருந்து 18ஆக குறைக்கப்பட்டது.
இந்தியாவில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். ஆக 21 வயது போதுமானதாக இருக்கும் நிலையில், அரசியலில் போட்டியிடுவதற்கான வயது வரம்பை 21 ஆக குறைக்கலாம் என தெலுங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
ஓஸ்மானியா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கலந்து கொண்டார். அப்போது அவர் பேசும்போது கூறியதாவது:-
21 வயதான இந்திய மக்கள் ஐ.ஏ.எஸ். ஆகலாம். ஐ.பி.எஸ். ஆகலாம். மாவட்ட அலுவலகத்தில் நிர்வாகிகளாக பணியாற்றலாம். 21 வயது நிரம்பினால்தான் அப்பேத்கர் அரசியலமைப்பு நமக்கு வாக்களிக்கும உரிமை வழங்கியது.
ராஜிவ்காந்தி பிரதமராக இருந்தபோது, வாக்குரிமைக்கான வயது வரம்பு 21-ல் இருந்து 18ஆக குறைக்கப்பட்டது. 21 வயதில் ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ். அதிகாரிகளாகும்போது, 21 வயதில் ஏன் சட்டமன்ற தேர்தில் போட்டியிட்,டு வெற்றிபெற முடியாது?. சிந்தித்து இதை ஒரு திட்டமாக எடுத்துச் செல்லுங்கள் என வேண்டுகோள் விடுக்கிறேன்.
இவ்வாறு ரேவந்த் ரெட்டி தெரிவித்துள்ளார்.
- வாதி (25 வயது) மற்றும் மகேந்தர் ரெட்டி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டு பாலாஜி ஹில்ஸில் வசித்து வந்தனர்.
- உடல் பாகங்களை ஒரு பிளாஸ்டிக் கவரில் அடைத்து வெளியே எடுத்துச் செல்ல ஆயத்தமானார்.
தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் கர்ப்பிணி மனைவியை கணவன் துண்டுதுண்டாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் அரங்கேறி உள்ளது.
ஐதராபாத் புறநகரில் உள்ள மேட்சல், மெடிபள்ளியில் பாலாஜி ஹில்ஸில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது.
விகாராபாத் மாவட்டம், காமரெட்டிகுடாவைச் சேர்ந்த ஸ்வாதி (22 வயது) மற்றும் மகேந்தர் ரெட்டி இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
வேலை தேடி வந்த மகேந்தர் கர்ப்பமாக இருந்த மனைவி ஸ்வாதியை அழைத்துக்கொண்டு 28 நாட்களுக்கு முன்பு பாலாஜி ஹில்ஸில் குடியேறி உள்ளார்.
இந்நிலையில் மனைவி ஸ்வாதியை கணவர் மகேந்தர் நேற்று வீட்டில் வைத்து கொலை செய்துள்ளார்.
ஸ்வாதியின் உடலை துண்டு துண்டாக வெட்டி உடல் பாகங்களை ஒரு பிளாஸ்டிக் கவரில் அடைத்து முசி நதியில் வீசியுள்ளார். ஸ்வாதியின் தலை, கைகள் மற்றும் கால்கள் வெட்டப்பட்டுள்ளன.
இதைத்தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் தகவலின்பேரில் சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார் அங்கு ஸ்வாதியின் தலை, கைகள் மற்றும் கால்கள் அற்ற உடலை கண்டு அதிர்ச்சி அடைத்தனர்.
இதைத்தொடர்ந்து மகேந்தரை கைது செய்த போலீசார் கொலைக்கான காரணங்கள் குறித்து அவரிடம் விசாரணை நடத்தி வருக்கின்றனர்.
- வீட்டில் சிறுமி தனியாக இருந்தபோது கொலை நடந்துள்ளது.
- கிரிக்கெட் பேட் திருட விரும்பினால், கத்தி எதற்கு? என போலீசார் விசாரணை.
ஐதராபாத்தில் கிரிக்கெட் பேட்டை திருட விரும்பிய 14 வயது சிறுவன், 10 வயது சிறுமியை கத்தியால் 21 முறை குத்திக் கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஐதராபாத்தில் பைக் மெக்கானிக் தொழில் செய்து வருபவரின் மகள் சஹாஸ்ரா. இவர் 6ஆம் வகுப்பு படித்து வந்தார். இவருக்கு 6 வயது தம்பி உள்ளான்.
சம்பவத்தன்று சஹாஸ்ரா வீட்டில் தனியாக இருந்துள்ளார். சிறுமியின் தந்தை வேலைக்கு சென்று, வீடு திரும்பியபோது, மகள் ரத்த வெள்ளத்தில் சடலமாக கிடந்தது கண்டு துடிதுடித்து போனார். இது தொடர்பாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை கைப்பற்றினர். அப்போது சிறுமியின் உடலில் 21 கத்துக்குத்து இருந்தது போலீசார் கண்டறிந்தனர்.
கொலையாளியை பிடிக்க காவல்துறை பல தனிப்படைகள் அமைத்து விசாரணை மேற்கொண்டது. நான்கு நாட்கள் கழித்து பக்கத்து வீட்டு 14 வயது சிறுவனை பிடித்து விசாரணை நடத்தினர். அப்போது, சிறுமியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். அவன் சொன்ன காரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சிறுமியின் வீட்டில் கிரிக்கெட் பேட் இருந்தது. அதை திருட விரும்பினேன். பேட் திருடுவதற்காக வீட்டிற்கு சென்றபோது குத்திக் கொலை செய்தேன் எனத் தெரிவித்துள்ளார்.
கிரிக்கெட் பேட்டை திருடச் சென்ற சிறுவன், கத்தியுடன் ஏன் சென்றான் என்ற தெரிந்து கொள்ள போலீசார் முயற்சி மேற்கொண்டு வருகின்றனர்.
- விளையாட போதுமான நேரம் இல்லாததால் பள்ளிக்குச் செல்வதை கூட நிறுத்தியுள்ளான்.
- மனநல மருத்துவரிடம் ஆலோசனைக்காக அழைத்துச் சென்றனர்.
தெலுங்கானாவில் ஆன்லைன் விளையாட்டுக்கு அடிமையாகி 10 ஆம் வகுப்பு மாணவர் தற்கொலை செய்து கொண்ட துயர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
நிர்மல் மாவட்டத்தை சேர்ந்த 10 ஆம் வகுப்பு படிக்கும் பேத்தி ரிஷேந்திரா, ரிஷேந்திரா ஒரு நாளைக்கு 10 மணி நேரத்திற்கும் மேலாக PUBG விளையாட்டில் மூழ்கியுள்ளான்.
விளையாட போதுமான நேரம் இல்லாததால் பள்ளிக்குச் செல்வதை கூட நிறுத்தியுள்ளான். தனது மகனின் எதிர்காலம் குறித்து கவலைப்பட்ட சிறுவனின் பெற்றோர், அவனை மனநல மருத்துவரிடம் ஆலோசனைக்காக அழைத்துச் சென்றனர்.
இருப்பினும், ரிஷேந்திராவின் நடத்தையில் எந்த மாற்றமும் இல்லை. ரிஷேந்திரா மருத்துவரை மிரட்டியதாகவும் பெற்றோர் தெரிவிக்கின்றனர்.
விரக்தியடைந்த பெற்றோர், மூன்று நாட்களுக்கு முன்பு ரிஷேந்திராவின் தொலைபேசியை வலுக்கட்டாயமாக பறித்து வைத்துள்ளனர்.
PUBG விளையாட முடியாத விரக்தியில் இருந்த ரிஷேந்திரா நேற்று யாரும் இல்லாதபோது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டான். இந்த சம்பவம் குறித்து போலீசா விசாரணை நடத்தி வருகின்றனர்.
PUBG விளையாட்டுக்கு 2022 இல் மத்திய அரசு தடை விதித்தது. இருப்பினும் 2023 மே மாதத்தில் இந்த தடை நீக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
- 5-ம் வகுப்பு படிக்கும் போது 2 நண்பர்களிடையே உள்ள ஒழுக்கத்தை விளக்கும் புத்தகத்தை எழுதினார்.
- விஷ்வ தேஜா எழுதிய 3 புத்தகங்கள் பள்ளிப் பாடங்களாக சேர்க்கப்பட்டு உள்ளது.
தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் சின்னகோடு அடுத்த அனந்தசகரை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி சந்தியா. தம்பதியின் மகன் விஸ்வ தேஜா (வயது 11). இவர் அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.
விஸ்வ தேஜா 4-ம் வகுப்பு படிக்கும் போது நூலகத்திற்கு சென்று புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.
5-ம் வகுப்பு படிக்கும் போது 2 நண்பர்களிடையே உள்ள ஒழுக்கத்தை விளக்கும் புத்தகத்தை எழுதினார்.
கடந்த ஆண்டு 18 புத்தகங்களை எழுதினார். இதுவரை 22 புத்தகங்கள் எழுதியுள்ளார்.
விஷ்வ தேஜா எழுதிய 3 புத்தகங்கள் பள்ளிப் பாடங்களாக சேர்க்கப்பட்டு உள்ளது. விளையாட்டின் போது பார்வை இழந்த ஒரு சிறுவனின் கதை, கனிம வளங்கள் முக்கியத்துவம் மற்றும் பல தகவல் தரும் கதைகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
- தனது குழந்தைகளுக்காக ஒரு முட்டை பப்ஸ் மற்றும் ஒரு சிக்கன் பப்ஸ் வாங்கி சென்றார்.
- ஆனால் பேக்கரி உரிமையாளர்கள் அலட்சியமாக பதில் அளித்ததாக தெரிகிறது.
தெலுங்கானாவில் பேக்கரி ஒன்றில் சிக்கன் பப்ஸ் -இல் இறந்த பாம்பு கிடந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
தெலுங்கானா மஹபூப்நகர் மாவட்டம் ஜட்சர்லாவில் உள்ளூர் பேக்கரியில் இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. ஸ்ரீசைலா என்ற பெண் நேற்று அங்கு, தனது குழந்தைகளுக்காக ஒரு முட்டை பப்ஸ் மற்றும் ஒரு சிக்கன் பப்ஸ் வாங்கி சென்றார்.
வீட்டில் சிக்கன் பப்ஸ் பார்சலை திறந்தபோது உள்ளே இறந்த குழந்தை பாம்பைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். உடனடியாக அதை எடுத்துக்கொண்டு நேராக பேக்கரிக்குச் சென்று கேட்டுள்ளார். ஆனால் பேக்கரி உரிமையாளர்கள் அலட்சியமாக பதில் அளித்ததாக தெரிகிறது.
உரிமையாளரின் நடத்தையால் கடும் கோபமடைந்த ஸ்ரீசைலா காவல் நிலையத்தி புகார் அளித்தார்.
போலீசார் வழக்குப் பதிவு செய்து சம்பவம் குறித்து விசாரித்து வருகின்றனர்.






