தெலுங்கானாவில் 11 வயதில் 22 புத்தகங்கள் எழுதிய சிறுவன்

5-ம் வகுப்பு படிக்கும் போது 2 நண்பர்களிடையே உள்ள ஒழுக்கத்தை விளக்கும் புத்தகத்தை எழுதினார்.விஷ்வ தேஜா எழுதிய 3 புத்தகங்கள் பள்ளிப் பாடங்களாக சேர்க்கப்பட்டு உள்ளது.
தெலுங்கானாவில் 11 வயதில் 22 புத்தகங்கள் எழுதிய சிறுவன்
Published on

தெலுங்கானா மாநிலம் சித்திபேட்டை மாவட்டம் சின்னகோடு அடுத்த அனந்தசகரை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி சந்தியா. தம்பதியின் மகன் விஸ்வ தேஜா (வயது 11). இவர் அதே கிராமத்தில் உள்ள அரசு பள்ளியில் 7-ம் வகுப்பு படித்து வருகிறார்.

விஸ்வ தேஜா 4-ம் வகுப்பு படிக்கும் போது நூலகத்திற்கு சென்று புத்தகங்கள் படிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொண்டார்.

5-ம் வகுப்பு படிக்கும் போது 2 நண்பர்களிடையே உள்ள ஒழுக்கத்தை விளக்கும் புத்தகத்தை எழுதினார்.

கடந்த ஆண்டு 18 புத்தகங்களை எழுதினார். இதுவரை 22 புத்தகங்கள் எழுதியுள்ளார்.

விஷ்வ தேஜா எழுதிய 3 புத்தகங்கள் பள்ளிப் பாடங்களாக சேர்க்கப்பட்டு உள்ளது. விளையாட்டின் போது பார்வை இழந்த ஒரு சிறுவனின் கதை, கனிம வளங்கள் முக்கியத்துவம் மற்றும் பல தகவல் தரும் கதைகளை எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

X

Maalai Malar
www.maalaimalar.com