என் மலர்tooltip icon

    இந்தியா

    கடவுளிடம் செல்வதாக கூறி 5-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை
    X

    கடவுளிடம் செல்வதாக கூறி 5-வது மாடியில் இருந்து குதித்து பெண் தற்கொலை

    • பூஜா ஜெயினை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
    • சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தெலுங்கானா மாநிலம் ஐதராபாத் ஹிமாயத் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தவர் அருண்குமார் ஜெயின். தொழிலதிபர்.

    இவரது மனைவி பூஜா ஜெயின் (வயது 43). தம்பதிக்கு ஒரு மகன், மகள் உள்ளனர். இவர்கள் குடும்பத்துடன் 5-வது மாடியில் வசித்து வருகின்றனர்.

    நேற்று காலை அருண்குமார் ஜெயின் அலுவலகத்திற்கு சென்றார். அப்போது வீட்டில் பூஜா ஜெயின் அவரது பிள்ளைகள் மற்றும் வேலைக்கார பெண் வீட்டில் இருந்தனர். பூஜா ஜெயில் நீண்ட நேரம் தன்னுடைய அறையில் தனியாக இருந்தார்.

    மதியம் 2 மணி அளவில் அறையில் இருந்து வெளியே வந்த பூஜா ஜெயின் தான் கடவுளிடம் செல்வதாக கூறியபடி 5-வது மாடியில் இருந்து கீழே குதித்தார்.

    இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக ஹைதர் குடாவில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பூஜா ஜெயினை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்த போலீசார் பூஜா ஜெயின் அறையை சோதனை செய்தனர். அப்போது அவரது அறையில் கடிதம் ஒன்று இருந்தது.

    அதில் நாம் தொடர்ந்து கடவுளை பற்றி தியானித்து அவருக்கு நம்மை அர்ப்பணித்தால் நாம் கடவுளிடம் நெருக்கமாகி சொர்க்கத்தை அடைவோம் என்ற சமண குருக்களின் பொன்மொழியை எழுதி வைத்திருந்தார்.

    இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×