என் மலர்
இந்தியா

VIDEO: கியாஸ் சிலிண்டர் வெடித்து சிதறிய கட்டிடம்- சாலையில் நடந்து சென்றவர் பலி
- கட்டிடத்தில் இருந்த கியாஸ் சிலிண்டர் ஒன்று திடீரென அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது.
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தெலுங்கானா மாநிலம் மேட்சல் சந்தை மேடு பகுதியை சேர்ந்தவர் முரளி. அதே பகுதியில் இவருக்கு சொந்தமான கட்டிடம் உள்ளது. இவரது கட்டிடத்தில் செல்போன் கடை மற்றும் 2 பூக்கடைகள் உள்ளன.
நேற்று இரவு கட்டிடத்தில் இருந்த கியாஸ் சிலிண்டர் ஒன்று திடீரென அதிக சத்தத்துடன் வெடித்து சிதறியது. இதனால் கட்டிடம் முழுவதும் இடிந்து விழுந்தது.
அப்போது சாலையில் நடந்து சென்ற ஒருவர் கட்டிடத்தில் இடிபாடுகளில் சிக்கி உயிரிழந்தார். மேலும் திருப்பாத்தா என்ற மூதாட்டியும், ரபிக், தினேஷ் என்ற 2 வாலிபர்களும் படுகாயம் அடைந்தனர்.
இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story






