என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இந்து விரோதிகள்.
    • தி.மு.க. ஆட்சிக்கு வருவது அடுத்த தலைமுறைக்கு ஆபத்து.

    சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் பா.ஜ.க. மூத்த தலைவர் எச்.ராஜா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * 1300 ஆண்டுகளுக்கு முன்பு ஆதித்த கரிகாலன் கட்டிய சந்திர சுவாமிகள் கோவில் வக்பு வாரியத்திற்கு சொந்தம் என கூறுவது வேடிக்கையாக உள்ளது.

    * வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவிப்பவர்கள் இந்து விரோதிகள்.

    * மு.க.ஸ்டாலின் தலைமையிலான திராவிட முன்னேற்ற கழக கூட்டணி ஆட்சிக்கு வருவது அடுத்த தலைமுறைக்கு ஆபத்து.

    * வரும் சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை வீழ்த்த எது வேண்டுமானாலும் செய்வோம் என்று கூறினார்.

    • வக்பு அமைப்புக்கு சொந்தமான பணம் ஏழை முஸ்லிம்களை சென்றடையும், இடைத்தரகர்களால் கொள்ளயைடிக்கப்பட்டது.
    • வக்பு சொத்துகளை முறையாக பராமரித்து சட்டப்பூர்வமாக பயன்படுத்துவதை உறுதி செய்வது அவசியம்.

    வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதா மக்களவையில் நேற்று நிறைவேற்றப்பட்டது. மசோதாவுக்கு ஆதரவாக 288 வாக்கும் , எதிராக 232 வாக்கும் பதிவாகின.

    இதைதொடர்ந்து, மாநிலங்களவையிலும் வக்பு வாரிய திருத்த மசோதா நேற்று தாக்கல் செய்யப்பட்டது. அதன் மீதான விவாதம் நள்ளிரவு வரை நடைபெற்றது. இந்த மசோதா மீது எதிர்க்கட்சி எம்.பி.க்கள் உள்பட பலர் தங்கள் கருத்துக்களை முன்வைத்தனர்.

    இதன்பிறகு, வக்பு வாரிய சட்டத்திருத்த மசோதாவை நிறைவேற்ற வாக்கெடுப்பு நடத்தப்பட்டு, பின்னர் நிறைவேற்றப்பட்டது.

    இந்நிலையில், பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு செய்துள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    பிரதமர் மோடி தலைமையிலான பாஜக அரசு வக்பு சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றி வரலாறு படைத்துள்ளது.

    வக்பு சட்டத் திருத்த மசோதா சிறுபான்மை சமூகத்தின் வளர்ச்சிக்கும் வக்பு சொத்துகளின் பாதுகாப்புக்கும் உதவும்.

    வக்பு அமைப்புக்கு சொந்தமான பணம் ஏழை முஸ்லிம்களை சென்றடையும், இடைத்தரகர்களால் கொள்ளயைடிக்கப்பட்டது.

    வக்பு சொத்துகளை முறையாக பராமரித்து சட்டப்பூர்வமாக பயன்படுத்துவதை உறுதி செய்வது அவசியம்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • நேற்று தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.
    • வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது.

    சென்னை:

    தங்கம் விலை தொடர்ந்து உச்சத்திலேயே இருக்கிறது. கடந்த மாதம் (மார்ச்) 25-ந்தேதியில் இருந்து தாறுமாறாக அதன் விலை எகிறி வருகிறது. கடந்த 25-ந்தேதி ஒரு சவரன் ரூ.65 ஆயிரத்து 480 ஆக இருந்த நிலையில், கடந்த மாதம் 28-ந்தேதி ஒரு சவரன் ரூ.66 ஆயிரத்தையும், 31-ந்தேதி ரூ.67 ஆயிரத்தையும் தாண்டியது.

    அதன் தொடர்ச்சியாக மேலும் விலை உயர்ந்து, கடந்த 1-ந்தேதி ஒரு சவரன் ரூ.68 ஆயிரம் என்ற புதிய உச்சத்தையும் கடந்தது. நேற்று முன்தினம் விலை மாற்றம் இல்லாமல் சற்று ஆறுதலை கொடுத்த நிலையில், நேற்று மீண்டும் விலை உயர்ந்து அதிர்ச்சியை கொடுத்தது.

    நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 510-க்கும், ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்து 80-க்கும் விற்பனை ஆனது. நேற்றைய நிலவரப்படி, கிராமுக்கு ரூ.50-ம், சவரனுக்கு ரூ.400-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.8 ஆயிரத்து 560-க்கும், ஒரு சவரன் ரூ.68 ஆயிரத்து 480-க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதன் மூலம் மீண்டும் தங்கம் விலை இதுவரை இல்லாத வரலாறு காணாத உச்சத்தை தொட்டது.

    இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 160 ரூபாய் குறைந்து ஒரு கிராம் தங்கம் ரூ.8,400-க்கும் சவரனுக்கு ரூ.1,280 குறைந்து ஒரு சவரன் ரூ.67,200-க்கும் விற்பனையாகிறது.

    வெள்ளி விலையும் அதிரடியாக குறைந்துள்ளது. கிராமுக்கு 4 ரூபாய் குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.108-க்கும், கிலோவுக்கு நான்காயிரம் ரூபாய் குறைந்து ஒரு கிலோ ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்துக்கும் விற்பனையானது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    03-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,480

    02-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,080

    01-04-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.68,080

    31-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.67,600

    30-03-2025- ஒரு பவுன் (22 காரட்) ரூ.66,880

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    03-04-2025- ஒரு கிராம் ரூ.112

    02-04-2025- ஒரு கிராம் ரூ.114

    01-04-2025- ஒரு கிராம் ரூ.114

    31-03-2025- ஒரு கிராம் ரூ.113

    30-03-2025- ஒரு கிராம் ரூ.113

    • பள்ளிகளில் திரைப்பட படங்கள் ஒளிபரப்புவது, சாதி ரீதியிலான சின்னங்களை வைத்துக் கொள்வது போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும் எனவும் புகார் மனு அலுவலகத்துக்கு வந்தது.
    • பள்ளி ஆண்டு விழாவில் இதுபோன்ற புகார் தவிர்க்கப்பட வேண்டும்.

    சென்னை:

    பள்ளிக்கல்வித்துறை சார்பில் அனைத்து பள்ளிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டிருக்கிறது.

    அதில், 'கிருஷ்ணகிரி மாவட்டம், பர்கூர் அருகே சோப்பனூர் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ஆண்டு விழாவில் திரைப்பட பாடலுக்கு 5 மாணவர்கள் நடனம் ஆடியும், ஒரு மாணவர் வீரப்பன் படம் பொறிக்கப்பட்ட டி-ஷர்ட்டை கையில் பிடித்து காட்டியதோடு, 2 மாணவர்கள் கட்சித் துண்டுகளை அணிந்து நடனம் ஆடியுள்ளதாகவும், அரசு பள்ளிகளில் இத்தகைய திரைப்பட படங்கள் ஒளிபரப்புவது, சாதி ரீதியிலான சின்னங்களை வைத்துக் கொள்வது போன்றவற்றை கட்டாயம் தவிர்க்க வேண்டும் எனவும் புகார் மனு அலுவலகத்துக்கு வந்தது.

    எனவே பள்ளி ஆண்டு விழாவில் இதுபோன்ற புகார் தவிர்க்கப்பட வேண்டும். அப்படி நடந்தால், தலைமை ஆசிரியர் மற்றும் ஆசிரியர்கள் மீது தமிழ்நாடு குடிமைப்பணிகள் விதியின்கீழ் நடவடிக்கை மேற்கொள்ள நேரிடும்' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • ராமேசுவரம்- தாம்பரம் இடையே புதிய ரெயில் சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.
    • ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது.

    புதிய பாம்பன் ரெயில் பாலம் ரூ.550 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி வருகிற 6-ந்தேதி திறந்து வைக்கிறார். அன்றைய தினம் மதியம் 12.45 மணிக்கு ராமேசுவரம் ஆலயம் மைதானத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் ரெயில் பாலத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார். அப்போது ராமேசுவரம்- தாம்பரம் இடையே புதிய ரெயில் சேவையையும் பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைக்க உள்ளார்.

    இந்த நிலையில், இந்த புதிய ரெயில் சேவைக்கான நேர அட்டவணையை தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ளது. அதன்படி, ராமேசுவரத்தில் இருந்து வரும் 6-ந்தேதி மாலை 4 மணிக்கு புறப்பட்டு தாம்பரம் வரும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16104), ராமநாதபுரம், பரமக்குடி, மானாமதுரை, சிவகங்கை, காரைக்குடி, அறந்தாங்கி, பட்டுக்கோட்டை, திருத்துறைப்பூண்டி, திருவாரூர், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்புரம், செங்கல்பட்டு வழியாக மறுநாள் அதிகாலை 3.45 மணிக்கு தாம்பரம் வந்தடையும்.

    மறுமார்க்கமாக, தாம்பரத்தில் இருந்து அதே தேதியில் (6-ந்தேதி) மாலை 6.10 மணிக்கு புறப்பட்டு ராமேசுவரம் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (16103), அதே வழித்தடம் வழியாக மறுநாள் காலை 5.40 மணிக்கு ராமேசுவரம் சென்றடையும். இந்த ரெயில்கள் தினசரி ரெயில்களாக இயக்கப்பட உள்ளது. இந்த ரெயில்களுக்கான முன்பதிவு தொடங்கியது.

    • 2.64 மில்லி கிராம் எடை கொண்ட செம்பினால் செய்யப்பட்ட "அஞ்சன கோல்" கிடைக்கப்பெற்றுள்ளது.
    • அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    விருதுநகர் மாவட்டத்தில் செம்பினால் செய்யப்பட்ட அஞ்சன கோல் கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அமைச்சர் தங்கம் தென்னரசு தனது எக்ஸ் தளத்தில் பதிவு வெளியிட்டுள்ளார்.

    அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:-

    விருதுநகர் மாவட்டம் வெம்பக்கோட்டையில் நடைபெற்று வரும் மூன்றாம்கட்ட அகழாய்வில், 13 சென்டிமீட்டர் ஆழத்தில் 29.5 மில்லி மீட்டர் நீளமும், 6.6 மில்லி மீட்டர் சுற்றளவும், 2.64 மில்லி கிராம் எடையும் கொண்ட செம்பினால் செய்யப்பட்ட "அஞ்சன கோல்" கிடைக்கப்பெற்றுள்ளது.

    பண்டையத் தமிழரின் செழிப்பான வாழ்க்கை முறையையும், அவர்கள் அன்றாடம் வேலைப்பாடுகளுடன் கூடிய பொருட்களைப் பயன்படுத்தியதையும் இக்கண்டுபிடிப்புகள் உலகிற்குப் பறைசாற்றுகின்றன.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • புதுச்சேரியில் இருந்து 9, 16 ஆகிய தேதிகளில் மாலை புறப்பட்டு திருப்பதி செல்லும் பயணிகள் ரெயில், அதற்கு மாற்றாக முண்டியம்பாக்கத்தில் இருந்து மாலை 3.55 மணிக்கு புறப்படும்.
    • எழும்பூரில் இருந்து வரும் 9, 16 ஆகிய தேதிகளில் காலை புறப்பட்டு புதுச்சேரி செல்லும் பயணிகள் ரெயில் விழுப்புரம்-புதுச்சேரி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, விழுப்புரத்தில் நிறுத்தப்படும்.

    சென்னை:

    திருச்சி கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் சில ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * தாம்பரத்தில் இருந்து வரும் 9, 16 ஆகிய தேதிகளில் காலை 9.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயில் விக்கிரவாண்டி-விழுப்புரம் இடையே பகுதி நேர ரத்துசெய்யப்பட்டு, விக்கிரவாண்டியில் நிறுத்தப்படும்.

    * சென்னை எழும்பூரில் இருந்து வரும் 9, 16 ஆகிய தேதிகளில் காலை 6.35 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி செல்லும் பயணிகள் ரெயில் விழுப்புரம்-புதுச்சேரி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, விழுப்புரத்தில் நிறுத்தப்படும்.

    * விழுப்புரத்தில் இருந்து வரும் 9, 16 ஆகிய தேதிகளில் மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் பயணிகள் ரெயில், அதற்கு மாற்றாக விக்கிரவாண்டியில் இருந்து மதியம் 1.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும்.

    * விழுப்புரத்தில் இருந்து 9, 16 ஆகிய தேதிகளில் மதியம் 2.35 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரெயில், அதற்கு மாற்றாக சேர்ந்தனூர் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.48 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும்.

    * புதுச்சேரியில் இருந்து 9, 16 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் பயணிகள் ரெயில், அதற்கு மாற்றாக முண்டியம்பாக்கத்தில் இருந்து மாலை 3.55 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும்.

    * சென்னை எழும்பூரில் இருந்து 9, 16 ஆகிய தேதிகளில் காலை 10.20 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16127), அதற்கு மாற்றாக எழும்பூரில் இருந்து காலை 11.50 மணிக்கு (1 மணி நேரம் 30 நிமிடம் தாமதம்) புறப்பட்டு குருவாயூர் செல்லும்.

    * திருச்சியில் இருந்து 9, 16 ஆகிய தேதிகளில் காலை 11 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் (22676), அதற்கு மாற்றாக திருச்சியில் இருந்து மதியம் 12 மணிக்கு (1 மணி நேரம் தாமதம்) புறப்பட்டு எழும்பூர் வரும்.

    * புதுச்சேரியில் இருந்து 9, 16 ஆகிய தேதிகளில் மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும் அதிவிரைவு ரெயில் (12868), அதற்கு மாற்றாக புதுச்சேரியில் இருந்து மாலை 3.05 மணிக்கு (50 நிமிடம் தாமதம்) புறப்பட்டு ஹவுரா செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • பிளஸ்-2 தேர்வை சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதி இருந்தனர்.
    • மே 19-ந்தேதி தேர்வு முடிவை வெளியிடும் வகையில் திட்டமிட்டு பணிகள் நடக்கின்றன.

    சென்னை:

    பிளஸ்-2, பிளஸ்-1 வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கி நிறைவு பெற்ற நிலையில், தற்போது எஸ்.எஸ்.எல்.சி. வகுப்புக்கான பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் பிளஸ்-2 பொதுத்தேர்வு கடந்த மாதம் (மார்ச்) 3-ந்தேதி ஆரம்பித்து 25-ந்தேதியுடன் முடிவடைந்தது. அந்த தேர்வை சுமார் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் எழுதி இருந்தனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) முதல் பிளஸ்-2 பொதுத் தேர்வு விடைத்தாள் திருத்தும் பணிகள் தொடங்க இருக்கின்றன. 

    இதற்காக மாநிலம் முழுவதும் 83 முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சுமார் 46 ஆயிரம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஈடுபட இருப்பதாகவும், ஏற்கனவே திட்டமிட்டபடி, மே 19-ந்தேதி தேர்வு முடிவை வெளியிடும் வகையில் திட்டமிட்டு பணிகள் நடக்கின்றன.

    • மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களை காரணமேயின்றி மத்திய அரசு கிடப்பில் போடுவது ஜனநாயக விரோதமானது.
    • நாட்டின் அரசியல் ஒற்றை தலைமையை நோக்கி செல்கிறது.

    மதுரை தமுக்கம் மைதானத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மாநில மாநாட்டு கருத்தரங்கில் கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் பங்கேற்று உரையாற்றினார்.

    அப்போது அவர் பேசியதாவது:-

    மாநில அரசுகள், மத்திய அரசின் பிரச்சார வாகனங்கள் போல நடத்தப்படுகின்றன.

    மத்திய அரசின் நடவடிக்கைகளுக்கு எதிராக நமது குரலை உயர்த்த வேண்டும்.

    மாநில அரசுகளின் ஆலோசனையின்றி தொகுதி மறுசீரமைப்பு நடைபெறுவதால் தென் மாநிலங்களின் பிரதிநிதித்துவம் குறையும்.

    மாநில அரசுகள் நிறைவேற்றி அனுப்பும் சட்டங்களை காரணமேயின்றி மத்திய அரசு கிடப்பில் போடுவது ஜனநாயக விரோதமானது.

    நாட்டின் அரசியல் ஒற்றை தலைமையை நோக்கி செல்கிறது. கூட்டாட்சி தத்துவத்தை நிலை நாட்டுவதற்காக ஜனநாயக ரீதியில் போராட்டம் நடத்த வேண்டியுள்ளது.

    சர்க்காரியா கமிஷன் அளித்த நல்ல பரிந்துரைகள் அமல்படுத்தப்படவில்லை.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
    • விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வரும் 10ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக அறிவிப்பு.

    ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நாளை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஜித் சிங் காலோன் அறிவித்துள்ளார்.

    அதன்படி, ராமநாதபுரம் மாவட்டம் உத்திரகோசமங்கை அருள்மிகு ஸ்ரீமங்களநாதசுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு மாவட்டம் முழுவதும் அனைத்து அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கு நாளை (04.04.2025) உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், நாளைய விடுமுறையை ஈடு செய்யும் பொருட்டு வரும் 10ம் தேதி சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    • கூட்டணியில் விரிசல் ஏற்படுமா என நினைப்பவர்களின் எண்ணம் ஈடேறாது.
    • மாநிலங்களை அழிக்கும் பாசிச பாஜக ஆட்சியை ஒழித்தாக வேண்டும்.

    திமுக கூட்டணியில் பிளவு ஏற்படாதா என நினைத்து கொண்டிருப்பவர்களின் எண்ணம் ஈடேறாது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

    மதுரையில் நடைபெறும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 24வது அகில இந்திய மாநாட்நடில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

    அப்போது அவர் மேலும் கூறியதாவது:-

    மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டின் காரணமாக தூங்கா நகரமான மதுரை சிவப்பு நகரமாக மாறியுள்ளது.

    கூட்டணியில் விரிசல் ஏற்படுமா என நினைப்பவர்களின் எண்ணம் ஈடேறாது.

    கூட்டாட்சி என்ற சொல்லே மத்திய ஆட்சியாளர்களுக்கு அலர்ஜி ஆகிவிட்டது. மத்திய அரசால் அதிக பாதிப்பு அடைவது நானும், கேரள முதல்வரும்தான். எங்கள் பேச்சுக்களை வாக்குமூலமாக எடுத்துக் கொள்ளலாம்.

    மாநிலங்களை அழிக்கும் பாசிச பாஜக ஆட்சியை ஒழித்தாக வேண்டும்.

    எதிர்கட்சிகள் ஆளும் மாநிலங்களில் ஆளுநர்கள் முழுநேர அரசியல் வாதியாக செயல்பட வைக்கிறார்கள். மாநிலங்களே இருக்க கூடாது என நினைக்கிறார்கள். வக்ஃப் சட்டத்தை நள்ளிரவில் நிறைவேற்றி உள்ளார்கள்.

    கூட்டாட்சி தத்துவத்தை தொகுதி மறுசீரமைப்பு மூலம் சிதைக்க நினைக்கிறார்கள். மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மட்டும்தான் இந்தியாவில் சுயாட்சி காப்பாற்றப்படும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார்களின் மீது ஆரம்ப விசாரணையை நடத்தி முடிப்பதற்கு காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும்.
    • சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்.

    அதிமுக சின்னம் மற்றும் உட்கட்சி விவகாரம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்துள்ளார். அதில் "அதிமுக சின்னம் மற்றும் உட்கட்சி தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் அளிக்கப்பட்ட புகார்களின் மீது ஆரம்ப விசாரணையை நடத்தி முடிப்பதற்கு காலக்கெடுவை நிர்ணயிக்க வேண்டும். சட்டமன்ற தேர்தலுக்கான ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டியுள்ளதால் காலக்கெடு நிர்ணயிக்க வேண்டும்" எனக் குறிப்பிட்டுள்ளார். 

    ×