என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    குருவாயூர், சோழன், ஹவுரா எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் மாற்றம்- தெற்கு ரெயில்வே
    X

    குருவாயூர், சோழன், ஹவுரா எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரம் மாற்றம்- தெற்கு ரெயில்வே

    • புதுச்சேரியில் இருந்து 9, 16 ஆகிய தேதிகளில் மாலை புறப்பட்டு திருப்பதி செல்லும் பயணிகள் ரெயில், அதற்கு மாற்றாக முண்டியம்பாக்கத்தில் இருந்து மாலை 3.55 மணிக்கு புறப்படும்.
    • எழும்பூரில் இருந்து வரும் 9, 16 ஆகிய தேதிகளில் காலை புறப்பட்டு புதுச்சேரி செல்லும் பயணிகள் ரெயில் விழுப்புரம்-புதுச்சேரி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, விழுப்புரத்தில் நிறுத்தப்படும்.

    சென்னை:

    திருச்சி கோட்டத்தில் பல்வேறு பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதால் சில ரெயில் சேவையில் மாற்றம் செய்யப்பட்டு இருப்பதாக தெற்கு ரெயில்வே தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து, தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    * தாம்பரத்தில் இருந்து வரும் 9, 16 ஆகிய தேதிகளில் காலை 9.45 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம் செல்லும் பயணிகள் ரெயில் விக்கிரவாண்டி-விழுப்புரம் இடையே பகுதி நேர ரத்துசெய்யப்பட்டு, விக்கிரவாண்டியில் நிறுத்தப்படும்.

    * சென்னை எழும்பூரில் இருந்து வரும் 9, 16 ஆகிய தேதிகளில் காலை 6.35 மணிக்கு புறப்பட்டு புதுச்சேரி செல்லும் பயணிகள் ரெயில் விழுப்புரம்-புதுச்சேரி இடையே பகுதி நேர ரத்து செய்யப்பட்டு, விழுப்புரத்தில் நிறுத்தப்படும்.

    * விழுப்புரத்தில் இருந்து வரும் 9, 16 ஆகிய தேதிகளில் மதியம் 1.40 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும் பயணிகள் ரெயில், அதற்கு மாற்றாக விக்கிரவாண்டியில் இருந்து மதியம் 1.55 மணிக்கு புறப்பட்டு சென்னை கடற்கரை செல்லும்.

    * விழுப்புரத்தில் இருந்து 9, 16 ஆகிய தேதிகளில் மதியம் 2.35 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும் பயணிகள் ரெயில், அதற்கு மாற்றாக சேர்ந்தனூர் ரெயில் நிலையத்தில் இருந்து மதியம் 2.48 மணிக்கு புறப்பட்டு மயிலாடுதுறை செல்லும்.

    * புதுச்சேரியில் இருந்து 9, 16 ஆகிய தேதிகளில் மாலை 3 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும் பயணிகள் ரெயில், அதற்கு மாற்றாக முண்டியம்பாக்கத்தில் இருந்து மாலை 3.55 மணிக்கு புறப்பட்டு திருப்பதி செல்லும்.

    * சென்னை எழும்பூரில் இருந்து 9, 16 ஆகிய தேதிகளில் காலை 10.20 மணிக்கு புறப்பட்டு குருவாயூர் செல்லும் எக்ஸ்பிரஸ் ரெயில் (வண்டி எண்.16127), அதற்கு மாற்றாக எழும்பூரில் இருந்து காலை 11.50 மணிக்கு (1 மணி நேரம் 30 நிமிடம் தாமதம்) புறப்பட்டு குருவாயூர் செல்லும்.

    * திருச்சியில் இருந்து 9, 16 ஆகிய தேதிகளில் காலை 11 மணிக்கு புறப்பட்டு சென்னை எழும்பூர் வரும் சோழன் எக்ஸ்பிரஸ் ரெயில் (22676), அதற்கு மாற்றாக திருச்சியில் இருந்து மதியம் 12 மணிக்கு (1 மணி நேரம் தாமதம்) புறப்பட்டு எழும்பூர் வரும்.

    * புதுச்சேரியில் இருந்து 9, 16 ஆகிய தேதிகளில் மதியம் 2.15 மணிக்கு புறப்பட்டு ஹவுரா செல்லும் அதிவிரைவு ரெயில் (12868), அதற்கு மாற்றாக புதுச்சேரியில் இருந்து மாலை 3.05 மணிக்கு (50 நிமிடம் தாமதம்) புறப்பட்டு ஹவுரா செல்லும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×