என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தங்கராஜை அதியமான்கோட்டை போலீசார் கைது செய்தனர்.
    • கைதான தங்கராஜ் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    தருமபுரி:

    தருமபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அருகே சேசம்பட்டி கிராமத்தில் உள்ளது பெரியாண்டிச்சி அம்மன் கோவில். இந்த கோவிலில் நேற்று முன்தினம் இரவு உண்டியலை உடைத்து பணத்தை திருட ஒரு திருடன் வந்தான்.

    அப்போது அவன் உண்டியலின் உள்ளே கையை நுழைத்து பணம் எடுக்க முயற்சித்தான். அதில், அவனுடைய கை உண்டியலில் சிக்கி கொண்டது. பின்னர் கையை வெளியே எடுக்க முடியாமல் அவன் விடிய, விடிய கோவில் வளாகத்திலேயே இருந்தான். நேற்று காலை அந்த வழியாக கிராம மக்கள் சென்றனர்.

    அப்போது கோவில் உண்டியலில் திருட முயன்ற திருடனின் கை சிக்கி கொண்டதை பார்த்தனர். இதுகுறித்து அவர்கள் அதியமான்கோட்டை போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீசார் வந்து அந்த ஆசாமியிடம் விசாரணை நடத்தினர்.

    அதில் அவன், சேசம்பட்டி அருகே உள்ள சவுளூர் கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் (வயது42) எனவும், உண்டியலில் பணத்தை திருட முயற்சித்து கை சிக்கி கொண்டதும் தெரியவந்தது.

    தீயணைப்பு துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து, உண்டியலை உடைத்து திருடனின் கை எடுத்தனர். இதையடுத்து தங்கராஜை அதியமான்கோட்டை போலீசார் கைது செய்தனர். கைதான அவரை நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி தருமபுரி சிறையில் அடைத்த னர்.

    கைதான தங்கராஜ் மீது பல்வேறு திருட்டு வழக்குகள் இருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.

    கோவிலில் உண்டியலில் பணத்தை திருட முயன்றபோது கை சிக்கி கொண்டதால் விடிய, விடிய தவித்த திருடன் பரிதாபமாக சிக்கி தவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • திண்ணை பிரசாரத்தின் மூலமாக 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியடையும்.
    • 234 தொகுதிகளிலும் வெல்வதுதான் அ.தி.மு.க.வின் லட்சியம்.

    சென்னை:

    சென்னை வியாசர்பாடி பகுதியில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் திண்ணை பிரசாரத்தில் ஈடுபட்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    அ.தி.மு.க. சார்பில் வாரம்தோறும் திண்ணை பிரசாரத்தின் மூலமாக துண்டு பிரசுரங்களை வழங்கி வருகிறோம். 11-வது வாரமாக திண்ணை பிரசாரம் தொடர்ந்து வருகிறது.

    இன்று விண்ணை முட்டுகின்ற அளவுக்கு விலைவாசி, மின்சார கட்டணம், சொத்து வரி உயர்ந்துள்ளது. போதைப்பொருள் நடமாட்டம், பாலியல் வன்கொடுமைகள் என்பது போன்ற அவலங்களில் இருந்து தமிழக மக்களை மீட்டெடுப்பதற்காக உரிமைகளை காப்பாற்றுவதற்காக திண்ணை பிரசாரம் நடத்துகிறோம்.

    இந்த திண்ணை பிரசாரத்தின் மூலமாக 2026 சட்டசபை தேர்தலில் அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணி மாபெரும் வெற்றியடையும். 234 தொகுதிகளிலும் வெல்வதுதான் அ.தி.மு.க.வின் லட்சியம். 200 தொகுதிகளில் அ.தி.மு.க. வெல்வது நிச்சயம். சட்டசபையில் ஆளும் கட்சியினர் நேரலையில் பேசினால் தொழில்நுட்ப கோளாறு வருவதில்லை. எடப்பாடி பழனிசாமி பேசினால் உடனே தொழில்நுட்ப கோளாறு வருகிறது. இது பாரபட்சமான நடவடிக்கை.

    எடப்பாடி பழனிசாமி என்ன கேள்வி கேட்கிறார், என்ன மக்கள் பிரச்சனைகளை பேசுகிறார் என்று மக்களுக்கு தெரிந்தால்தான் அதற்கு முதலமைச்சர் என்ன பதில் சொல்கிறார் என்பது மக்களுக்கு புரியும்.

    ஊமை படம் போன்று அவர்கள் பேசுவதை மட்டும் காட்டுகிறார்கள். வடக்கு எது, கிழக்கு எது, தெற்கு என்று தெரியாத நிலைதான் சட்டசபையில் நிலவுகிறது. எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார். அப்போது சட்டசபை ஜனநாயகம் காப்பாற்றப்படும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    அப்போது அவரிடம் அ.தி.மு.க. கூட்டணியில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் இணைய வாய்ப்பு இருக்கிறதா என்று நிருபர்கள் கேள்வி எழுப்பினார்கள்.

    அதற்கு பதில் அளித்த ஆர்.பி.உதயகுமார், 'உங்கள் எண்ணம் நல்ல எண்ணம். நல்ல எண்ணத்தோடு கேட்கிறீர்கள். நல்லதாகவே நடக்கட்டும்' என்றார்.

    • ஜி.முத்து இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.
    • திருப்போரூர் பேரூராட்சிக் கழகம் பேரூராட்சி செயலாளராக கே.சிவராமன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    சென்னை:

    அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறி இருப்பதாவது:-

    செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவுத் தலைவர் பொறுப்பில் இருக்கும் கே. சிவ ராமன், மாவட்ட மருத்துவ அணித் தலைவர் பொறுப்பில் இருக்கும் கே. பிரிதிவிராஜன். திருப்போரூர் பேரூராட்சி கழகச் செயலாளர் பொறுப்பில் இருக்கும் ஜி.முத்து இன்று முதல் அவரவர் வகித்து வரும் பொறுப்புகளில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள்.

    செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட சார்பு அணிகளின் நிர்வாகிகளாகவும், திருப்போரூர் பேரூராட்சிக் கழகச் செயலாளர்களாகவும் கீழ்க்கண்டவர்கள் கீழ்க் காணும் பொறுப்புகளுக்கு இன்று முதல் நியமிக்கப்படுகிறார்கள்.

    செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட எம்.ஜி.ஆர். மன்றம் மாவட்ட துணைச் செயலாளராக ஜி.முத்து, செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு மாவட்டத் தலைவராக கே. துரைமுருகன், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட சிறுபான்மையினர் நலப் பிரிவு மாவட்டச் செயலாளராக பி.ஏ.யாசர் அராபத், செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மருத்துவ அணிக்கு மாவட்டத் தலைவராக டி.ராகுல், மாவட்டச் செயலாளராக டாக்டர் கே.பிரிதிவிராஜன், திருப்போரூர் பேரூராட்சிக் கழகம் பேரூராட்சி செயலாளராக கே.சிவராமன் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • விஜயை வரவேற்க ஏராளமான த.வெ.க.வினர் குவிந்ததால் விமான நிலையமே ஸ்தம்பித்தது.
    • பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் வாக்குச்சாவடி முகவர்களுக்கான கருத்தரங்கு நடத்தும் பணியில் அக்கட்சியின் தலைவர் விஜய் ஈடுபட்டு வருகிறார். முதல்கட்டமாக கோவை, நீலகிரி, திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், சேலம் ஆகிய 7 மாவட்டங்களை சேர்ந்த முகவர்களுக்கான கருத்தரங்கு நடத்த முடிவு செய்யப்பட்டது.

    அதன்படி கோவை மண்டல அளவிலான வாக்குச்சாவடி முகவர்களுக்கான 2 நாள் கருத்தரங்கு நேற்று கோவை அருகே குரும்பபாளையத்தில் உள்ள தனியார் கல்லூரி அரங்கில் தொடங்கியது. கருத்தரங்கில் கட்சியின் தலைவர் விஜய் பங்கேற்றார்.

    முன்னதாக, கருத்தரங்கில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து தனி விமானம் மூலம் கோவைக்கு வருகை தந்தார். அப்போது விஜயை வரவேற்க ஏராளமான த.வெ.க.வினர் குவிந்ததால் விமான நிலையமே ஸ்தம்பித்தது. இதனால் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டது.

    இந்த நிலையில், கோவை விமான நிலையத்தில் டிராலிகள் உள்ளிட்டவற்றை சேதப்படுத்தியதாக த.வெ.க.வினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பயணிகளுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • சிஎஸ்கே-பஞ்சாப் கிங்ஸ் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது.
    • ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என சி.எஸ்.கே. நிர்வாகம் அறிவித்துள்ளது.

    சென்னை:

    நடப்பு ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் மோதும் லீக் ஆட்டம் சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ. சிதம்பரம் ஸ்டேடியத்தில் வரும் 30-ம் தேதி இரவு 7.30 மணிக்கு நடக்கிறது.

    சேப்பாக்கத்தில் நடக்கும் 6-வது ஆட்டம் இதுவாகும். இந்தப் போட்டிக்கான டிக்கெட் விற்பனை ஆன்லைன் மூலம் இன்று தொடங்குகிறது.

    இன்று காலை 10.15 மணியில் இருந்து www.chennaisuperkings.com என்ற இணைய தளத்தின் வாயிலாக டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து பெற்றுக் கொள்ளலாம். ரூ.1,700, ரூ.2,500, ரூ.3,500, ரூ.4,000, ரூ.7,500 ஆகிய விலைகளில் டிக்கெட் விற்கப்படுகிறது.

    ஒரு நபருக்கு 2 டிக்கெட் மட்டுமே வழங்கப்படும் என சென்னை சூப்பர் கிங்ஸ் நிர்வாகம் அறிவித்துள்ளது.

    நடப்பு ஐ.பி.எல். தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி பங்கேற்ற 9 போட்டிகளில் 2 வெற்றி, 7 தோல்வி பெற்று புள்ளிப்பட்டியலில் கடைசி இடத்தில் உள்ளது.

    • விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் ஓடுதளத்திலேயே அதன் டயர் வெடித்தது.
    • பயணிகளை இறக்கிவிடப்பட்டு பழுதடைந்த டயர் மாற்றப்பட்டது.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து இன்று மாலை 166 பயணிகளுடன் மும்பைக்கு இண்டிகோ விமானம் ஒன்று புறப்பட்டது.

    விமானம் புறப்பட்ட சில வினாடிகளில் ஓடுதளத்திலேயே அதன் டயர் வெடித்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இதுகுறித்து சுதாரித்துக் கொண்ட விமானி ஓடுதளத்தில் பயங்கரமாக குலுங்கியபடி ஓடிய விமானத்தை, சாமர்த்தியமாக இயக்கி நிறுத்தினார்.

    பின்னர், பயணிகளை இறக்கிவிடப்பட்டு பழுதடைந்த டயர் மாற்றப்பட்டது.

    இதனால், 2 மணி நேரம் தாமதமாக விமானம் புறப்பட்டுச் சென்றது. இந்த சம்பவம் சென்னை விமான நிலையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜய், நிர்வாகிகள், மக்கள் முன்னிலையில் பேசினார்.
    • சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    கோவை சரவணம்பட்டி அருகே உள்ள குரும்பபாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் மாலை 3 மணிக்கு பூத் கமிட்டி மாநாடு தொடங்ியது.

    இந்த மாநாட்டில் கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கரூர் ஆகிய 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பூத் கமிட்டி நிர்வாகிகள் 16 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.

    இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் கருத்தரங்கம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தார்.

    பூத் கமிட்டி கருத்தரங்கில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் பேசினர்.

    பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜய், நிர்வாகிகள், மக்கள் முன்னிலையில் பேசினார்.

    இந்நிலையில், விஜய் தங்கியிருந்த தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு அருகே உள்ள நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.

    இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என தெரியவந்துள்ளது.

    • கடந்த 30 ஆண்டுகளில் இளைஞர்கள் இவ்வளவு ஆர்வமாக இருந்து பார்த்ததில்லை.
    • தமிழக வெற்றிக் கழகம் தான் மாற்றத்தை கொண்டு வரப்போகிறது என்று மக்கள் புரிந்துக் கொண்டனர்.

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோவையில் நடைபெற்று வரும் பூத் கமிட்டி கருத்தரங்கத்தில் கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசினார்.

    அப்போது அவர், "30 வருஷமா ஊழல் பண்ணதாலதான் ரெய்டு வருது... ரெய்டுக்கு நீங்க பயப்படும் நேரத்தில், நாங்கள் மக்கள் ஆதரவை பெறுகிறோம்" என்றார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ இன்றைக்கு பெரும்பாலும் தலைவர்கள் மாநாடு நடத்தினாலோ அல்லது போராட்டம் நடத்தினாலோ மக்களை காசு கொடுத்து வரவழைக்கும் நிலைமை தான் இருக்கிறது.

    ஆனால் இன்றைக்கு பூத் லெவல் மீட்டிங் என்று சொன்ன உடனே நூறு சதவீதம் வருகை இருக்கிறது என்றால் இதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதி.

    கட்சி கட்டமைப்போடு மக்களுடைய ஆதரவு. இன்றைக்கு எங்களுடைய தலைவர் அழைத்தால் லட்ச கணக்கில் மக்கள் அணிதிரள்கிறார்கள் என்றால் அது தவெகவின் வெற்றி.

    இளைஞர்கள் கூட்டம் சுமார் 5 ஆயிரம் பேர் எங்களை பின்தொடர்ந்து வந்தனர். இதுதான் இளைஞர்களுடைய எழுச்சி.

    கடந்த 30 ஆண்டுகளில் இளைஞர்கள் இவ்வளவு ஆர்வமாக இருந்து பார்த்ததில்லை. அதற்கு எங்கள் தலைவருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

    மற்ற கட்சிகளின் கட்டமைப்பு எப்படி இருக்கிறது என்றால், 40 ஆண்டுகளாக ஒரே மாவட்ட செயலாளர்கள். குடும்பத்தில் இருந்து ஒரே இளைஞரணி தலைவர். மாவட்ட செயலாளர்களின் வெற்றி என்னவென்றால் 30 ஆண்டுகளாக ஊழல் செய்து மருத்துவ கல்லூரி கட்டி செட்டில் ஆகி இருப்பது தான்.

    அதனால் தான் அமலாக்கத்துறை ரெய்டு நடக்கிறது. நீங்கள் ரெய்டு வருவதைக் கண்டு பயந்துக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் மக்கள் ஆதரவை பெற்றுக் கொண்டு இருக்கிறோம். இதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி.

    2026 சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மீது அதிருப்தியில் இருக்கும்போது தமிழக வெற்றிக் கழகம் தான் மாற்றத்தை கொண்டு வரப்போகிறது என்று மக்கள் புரிந்துக் கொண்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • பூத் கமிட்டி ஏஜெண்டுகள் தான் தேர்தல் களத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.
    • நாம் என்ன செய்ய உள்ளோம் என்பதை மக்களிடம் கொண்டு செல்லும் போர் வீரர்கள் தான் நீங்கள்.

    பூத் கமிட்டி கருத்தரங்கு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது அவர் என் நெஞ்சில் குடியிருக்கும் கோவை மக்களுக்கும், எனது தோழர்களுக்கும் வணக்கம் என தனது உரையை தொடங்கினார்.

    மேலும் அவர் கூறியதாவது:-

    கோவை என்றாலே மக்களின் மரியாதை தான் முதலில் ஞாபகம் வருகிறது.

    பெயர் தான் பூத் லெவல் பயிற்சி பட்டறை. ஆனால் இங்கு வேறு ஏதோ நிகழ்வு நடப்பதை போல உள்ளது.

    பூத் கமிட்டி என்றால் ஓட்டுக்காக நடைபெறுவது மட்டும் அல்ல என்பது எனது பார்வை. மக்களுடன் நாம் ஓன்றிணைய போகிறோம் என்பது தான் இந்த பயிற்சி பட்டறை.

    இதுவரை செய்தவர்களை போல் நாம் செய்ய போவதில்லை. மனதில் நேர்மை இருக்கு, கறை படியாத அரசியல் கைகள் உள்ளது. உழைக்க உடம்பில் தெம்பு இருக்கிறது. நமக்கான களம் தயாராக இருக்கிறது.

    மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடிக்கும் வேலை நடக்க விட மாட்டோம்.

    பூத் கமிட்டி ஏஜெண்டுகள் தான் தேர்தல் களத்தில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும்.

    ஆட்சிக்கு வர நினைப்பது மக்களுக்காக மட்டுமே. மக்களின் நலனுக்காக மட்டுமே தவேக ஆட்சிக்கு வர வேண்டும் என நினைக்கிறேன்.

    நமது கட்சி மேல் நம்பிக்கையை மக்களிடம் கொண்டு வரப் போவதே பூத் லெவலில் வேலை பார்க்கும் நீங்கள் தான். நாம் என்ன செய்ய உள்ளோம் என்பதை மக்களிடம் கொண்டு செல்லும் போர் வீரர்கள் தான் நீங்கள்.

    நம்பிக்கையோடு களம் இறங்குங்கள் வெற்றி நிச்சயம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பூத் கமிட்டி நிர்வாகிகள் 16 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.
    • பூத் கமிட்டி கருத்தரங்கில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசினார்.

    கோவை சரவணம்பட்டி அருகே உள்ள குரும்பபாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் மாலை 3 மணிக்கு பூத் கமிட்டி மாநாடு தொடங்ியது.

    இந்த மாநாட்டில் கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கரூர் ஆகிய 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பூத் கமிட்டி நிர்வாகிகள் 16 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.

    இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் கருத்தரங்கம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தார்.

    பூத் கமிட்டி கருத்தரங்கில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பேசினார்.

    அப்போது அவர்," தமிழக வெற்றி கழகத்தால் மற்ற கட்சிகளுக்கு பயம் வந்துவிட்டது. தவெகவின் வெற்றிக்கு கடுமையாக உழைக்க வேண்டும்" என்றார்.

    • தனியார் பட்டாசு ஆலையில் இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது.
    • விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்றார்.

    விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள பட்டாசு ஆலைகளில் தற்போது உற்பத்தி பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.

    கோடை காலம் என்பதால் விபத்துக்கள் அதிகம் ஏற்பட வாய்ப்புள்ளது. எனவே தொழிலாளர் கவனமுடன் செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில், சிவகாசி அருகே உள்ள எம்.புதுப்பட்டியில் இயங்கி வரும் தனியார் பட்டாசு ஆலையில் இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது. இதில் 3 பேர் உடல் கருகி பலியானார்கள்.

    பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார்.

    அதன்படி, பட்டாசு ஆலையில் ஏற்பட்ட விபத்தில் உயிரிழந்தர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.4 லட்சம் நிதியுதவி அறிவிக்கப்பட்டுள்ளது.

    மேலும், பட்டாசு ஆலை வெடி விபத்தில் 3 பேர் உயிரிழந்தனர் என்ற துயரமான செய்தி கேட்டு அதிர்ச்சி, வேதனை அடைந்தேன். விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு அவர்களது உறவினர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல் என்றார்.

    விபத்தில் படுகாயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.1 லட்சமும், லேசான காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்க முதலமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.

    • பூத் கமிட்டி நடைபெறும் இடத்திற்கு காரில் சென்றபடி ரோடு ஷோ நடத்தினார் விஜய்.
    • கோவை விமான நிலையம் வந்த விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    2026-ம் ஆண்டு தேர்தலை எதிர்கொள்வதற்கும், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளிலும், குறிப்பாக கிராமப்புறங்களிலும் பூத் கமிட்டியை பலப்படுத்துவதில் விஜய் கவனம் செலுத்தி வருகிறார்.

    இதற்காக தமிழகம் முழுவதும் ஒரு பூத்துக்கு ஒரு ஆண், ஒரு பெண் என 2 பேர் வீதம் 35 ஆயிரம் பூத் கமிட்டிகள் அமைக்கப்பட்டுள்ளன. மொத்தமாக 70 ஆயிரம் பூத் கமிட்டி உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

    பூத் கமிட்டி பணிகள் நிறைவடைந்ததும், பூத் கமிட்டி மாநாடு நடத்துவதற்கான பணிகளில் தமிழக வெற்றிக்கழகம் தீவிரம் காட்டியது. இந்த மாநாட்டை மொத்தமாக இல்லாமல், மண்டலங்கள் வாரியாக பிரித்து நடத்த முடிவு செய்தனர்.

    அதன்படி தமிழகத்தை 5 மண்டலங்களாக பிரித்து தற்போது மாநாடு நடத்த உள்ளனர். அதன்படி, முதல்கட்டமாக கொங்கு மண்டல பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான மாநாடு இன்றும், நாளையும் கோவையில் நடக்கிறது.

    கோவை சரவணம்பட்டி அருகே உள்ள குரும்பபாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் மாலை 3 மணிக்கு பூத் கமிட்டி மாநாடு தொடங்குகிறது. இந்த மாநாட்டில் கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கரூர் ஆகிய 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பூத் கமிட்டி நிர்வாகிகள் 16 ஆயிரம் பேர் பங்கேற்கின்றனர்.

    மாநாட்டில் பங்கேற்க ஏற்கனவே அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மூலம் பூத் கமிட்டி நிர்வாகிகளுக்கான அடையாள அட்டைகள் கொடுக்கப்பட்டு இருந்தன. அடையாள அட்டை வைத்திருந்தவர்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்பட்டனர்.

    இந்த மாநாட்டில் தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்கிறார். இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து தனி விமானம் மூலமாக கோவைக்கு வந்தார்.

    கோவை விமான நிலையம் வந்த விஜய்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். அதிகளவில் கூடிய தொண்டர்களால் விமான நிலையமே ஸ்தம்பித்தது. இதனால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    பின்னர், கோவை விமான நிலையத்தில் இருந்து தனியார் ஓட்டலுக்கு சென்ற விஜய் சிறிது ஓய்வுக்கு பிறகு பூத் கமிட்டி நடைபெறும் இடத்திற்கு காரில் சென்றபடி ரோடு ஷோ நடத்தினார்.

    அப்போது, வழிநெடுகிலும் ரசிகர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஒரு சிலர் விஜய்யின் கார் மீது ஏறினர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

    இந்த நிலையில், தவெக தலைவர் விஜய் கருத்தரங்கம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தார்.

    ×