என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பூத் கமிட்டி கூட்டம்"

    • விஜயின் பிறந்தநாள் ஜூன் 22-ந்தேதி கொண்டாடப்படுகிறது.
    • பல்வேறு இடங்களிலும் வடக்கு மாவட்ட தொண்டரணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    நெல்லை:

    தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இதற்காக அரசியல் கட்சியினர் தயாராகி வருகின்றனர்.

    தமிழக வெற்றிக் கழகம் சட்டமன்ற தேர்தலில் அதிக இடங்களை கைப்பற்றி பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்ற முனைப்புடன் உள்ளது. இதற்காக கட்சி தலைவர் விஜய் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்.

    அந்த வகையில் கடந்த 26,27-ந்தேதிகளில் கோவையில் தமிழக வெற்றிக்கழகம் சார்பில் பூத் கமிட்டி கருத்தரங்கு பிரமாண்டமாக நடந்தது. இதில் விஜய் கலந்து கொண்டு பேசினார்.

    இதைத்தொடர்ந்து அடுத்தக்கட்டமாக 4 மண்டலங்களிலும் பூத் கமிட்டி கூட்டங்களை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் அடுத்த பூத் கமிட்டி கூட்டத்தை நெல்லையில் நடத்த வேண்டும் என நெல்லை மாவட்ட தமிழக வெற்றிக் கழகத்தினர் கட்சி தலைமைக்கு தங்கள் விருப்பத்தை தெரிவித்துள்ளனர்.

    இந்நிலையில் அவர்கள் விஜய்யை நெல்லைக்கு வருமாறு அழைப்பு விடுத்து இன்று நெல்லை மாநகரில் பல்வேறு இடங்களிலும் போஸ்டர்கள் ஒட்டி உள்ளனர்.

    நெல்லை மாநகரப் பகுதியான சந்திப்பு, வண்ணார்பேட்டை, பாளை சமாதானபுரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களிலும் வடக்கு மாவட்ட தொண்டரணி சார்பில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளது.

    அதில், களமும் நமதே.. இனிவரும் காலமும் நமதே.. விஜய் அவர்களே நெல்லை சீமை உங்களை அன்போடு அழைக்கிறது என்பது உள்பட பல்வேறு வாசகங்கள் உள்ளது. விஜயின் பிறந்தநாள் ஜூன் 22-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதையொட்டியும் அந்த போஸ்டர்களில் விஜய்யை வாழ்த்தி வாசகங்கள் இடம் பெற்றுள்ளன. இந்த போஸ்டர்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. 

    • அடிமை ஆட்சியை எதிர்க்க இங்கே புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது என்றார் ஆதவ் அர்ஜுனா.
    • எங்கள் கட்டமைப்பை இரண்டு நாட்கள் கோவையில் பார்த்து இருப்பார்கள் என்று ஆதவ் அர்ஜுனா கூறினார்.

    கோவை தனியார் கல்லூரியில் நடைபெறும் தவெக வாக்குச்சாவடி முகவர்கள் 2ம் நாள் கருத்தரங்கில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா உரையாற்றினார்.

    அப்போது அவ் பேசியதாவது:-

    வக்பு வாரிய சட்டத்திற்கு முதலில் போராட்டத்தை அறிவித்தது தவெக தான். தமிழகம் முழுக்க போராட்டத்தை தவெக நடத்தியது.

    வக்பு வாரிய விவகாரத்தில் விஜய் உச்சநீதிமன்றத்தை நம்பினார். ஒரு சட்டம் பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் நிறைவேறி, அதற்கு ஜனாதிபதி ஒப்புதல் கொடுத்துவிட்டார் என்றால் அதற்கு மாநிலச் சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றி அழுத்தம் தர முடியாது.

    தமிழக அரசு வக்பு சட்டத்திற்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றியது உண்மைதான். அதை வரவேற்கிறோம். ஆனால், அதை வைத்து அழுத்தம் தர முடியாது.

    கேரள அரசு வக்பு வாரிய விவகாரத்தில் தீர்மானம் நிறைவேற்றியது மட்டுமின்றி, வக்பு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தது. உச்சநீதிமன்ற வழக்கில் தமிழக அரசு தன்னை இணைத்துக் கொள்ளாதது ஏன்..?

    விஜய் ஏன் 3 நிமிடம் மட்டுமே பூத் கமிட்டி மாநாட்டில் பேசினார் என சிலர் கேட்கிறார்கள். அவர் 3 நிமிடம் பேசியதற்கே கோவை ஸ்தம்பித்துவிட்டது. எனவே, எங்கள் திட்டம் குறித்து நீங்கள் கவலைப்பட வேண்டாம். போலீசார் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்ய வேண்டும். எங்கள் தலைவர் விஜய்யின் பாதுகாப்பை நாங்கள் உறுதி செய்து கொள்வோம்.

    மக்கள் பாதுகாப்பை உறுதி செய்யப் பாதுகாப்பைக் கொடுங்கள் அதுவே போதும். தேர்தல் நடக்கும்போது மூத்த நிர்வாகிகளைக் காட்டிலும் பூத் கமிட்டி உறுப்பினர்களுக்கே அதிக பவர் இருக்கிறது.

    வாக்குப்பதிவின்போது கடைசி இரண்டு மணி நேரம் வாக்களிக்காதவர்களின் லிஸ்ட்டை வைத்து கள்ள ஓட்டுப் போட வாய்ப்பு இருக்கிறது. அதை பூத் கமிட்டி ஏஜெண்டுகள் கண்காணிக்க வேண்டும்.

    நீங்கள் அது குறித்து குரல் எழுப்பினால், உடனே தலைமையின் ஆதரவு வந்துவிடும். அதன் பிறகு அவர்களால் வாக்குப்பெட்டிக்குச் சீல் வைக்க முடியாது. அதேபோல வாக்கு எண்ணிக்கை நடக்கும்போதும் கவனமாகக் கண்காணிக்க வேண்டும்.

    வாக்கு எண்ணிக்கை முறையாக நடைபெறுவதை பூத் கமிட்டி ஏஜெண்டுகள் உறுதி செய்ய வேண்டும். அதுவே பிரதானமானது.

    இத்தனை காலம் தவெகவுக்கு கட்சி கட்டமைப்பு இல்லை என்ற விமர்சனங்கள் இருந்தது. இப்போது எங்கள் கட்டமைப்பை இரண்டு நாட்கள் கோவையில் பார்த்து இருப்பார்கள்.

    ஊழலாட்சியை, அடிமை ஆட்சியை எதிர்க்க இங்கே புரட்சி உருவாகிக் கொண்டிருக்கிறது. இது மக்களுடைய செல்வாக்கு, இந்த இளைஞர்களை வைத்து என்ன செய்யப் போகிறார்கள் என பேசுகிறார்கள்.

    2026 தமிழக வெற்றிக் கழகத்திற்கான நாள்.. 2 நாட்களாக கோவை முடங்கிவிட்டது.. வரலாறு உருவாகும்போது பழைய காலத்தை பற்றி பேசிக் கொண்டிருப்பார்கள்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • கடந்த 30 ஆண்டுகளில் இளைஞர்கள் இவ்வளவு ஆர்வமாக இருந்து பார்த்ததில்லை.
    • தமிழக வெற்றிக் கழகம் தான் மாற்றத்தை கொண்டு வரப்போகிறது என்று மக்கள் புரிந்துக் கொண்டனர்.

    தமிழக வெற்றிக் கழகம் சார்பில் கோவையில் நடைபெற்று வரும் பூத் கமிட்டி கருத்தரங்கத்தில் கட்சியின் தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா பேசினார்.

    அப்போது அவர், "30 வருஷமா ஊழல் பண்ணதாலதான் ரெய்டு வருது... ரெய்டுக்கு நீங்க பயப்படும் நேரத்தில், நாங்கள் மக்கள் ஆதரவை பெறுகிறோம்" என்றார்.

    இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

    ஆளும் கட்சியோ, எதிர்க்கட்சியோ இன்றைக்கு பெரும்பாலும் தலைவர்கள் மாநாடு நடத்தினாலோ அல்லது போராட்டம் நடத்தினாலோ மக்களை காசு கொடுத்து வரவழைக்கும் நிலைமை தான் இருக்கிறது.

    ஆனால் இன்றைக்கு பூத் லெவல் மீட்டிங் என்று சொன்ன உடனே நூறு சதவீதம் வருகை இருக்கிறது என்றால் இதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் உறுதி.

    கட்சி கட்டமைப்போடு மக்களுடைய ஆதரவு. இன்றைக்கு எங்களுடைய தலைவர் அழைத்தால் லட்ச கணக்கில் மக்கள் அணிதிரள்கிறார்கள் என்றால் அது தவெகவின் வெற்றி.

    இளைஞர்கள் கூட்டம் சுமார் 5 ஆயிரம் பேர் எங்களை பின்தொடர்ந்து வந்தனர். இதுதான் இளைஞர்களுடைய எழுச்சி.

    கடந்த 30 ஆண்டுகளில் இளைஞர்கள் இவ்வளவு ஆர்வமாக இருந்து பார்த்ததில்லை. அதற்கு எங்கள் தலைவருக்கு தான் நன்றி சொல்ல வேண்டும்.

    மற்ற கட்சிகளின் கட்டமைப்பு எப்படி இருக்கிறது என்றால், 40 ஆண்டுகளாக ஒரே மாவட்ட செயலாளர்கள். குடும்பத்தில் இருந்து ஒரே இளைஞரணி தலைவர். மாவட்ட செயலாளர்களின் வெற்றி என்னவென்றால் 30 ஆண்டுகளாக ஊழல் செய்து மருத்துவ கல்லூரி கட்டி செட்டில் ஆகி இருப்பது தான்.

    அதனால் தான் அமலாக்கத்துறை ரெய்டு நடக்கிறது. நீங்கள் ரெய்டு வருவதைக் கண்டு பயந்துக் கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் மக்கள் ஆதரவை பெற்றுக் கொண்டு இருக்கிறோம். இதுதான் தமிழக வெற்றிக் கழகத்தின் வெற்றி.

    2026 சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி மீது அதிருப்தியில் இருக்கும்போது தமிழக வெற்றிக் கழகம் தான் மாற்றத்தை கொண்டு வரப்போகிறது என்று மக்கள் புரிந்துக் கொண்டனர்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • மகளிர் அணியில் கூடுதலாக உறுப்பினர்கள் சேர்க்கவும்
    • இளைஞர்-இளம்பெண்கள் பாசறையில் அதிகமான பெண்களை சேர்க்கவும் தீர்மானம்

    ராஜாக்கமங்கலம் :

    ராஜாக்கமங்கலம் ஒன்றிய அ.தி.மு.க. பூத் கமிட்டி கூட்டம் ராஜாக்க மங்கலத்தில் ஒன்றிய செய லாளர் பொன்சேகர் தலை மையில் நடைபெற்றது. சிறப்பு விருந்தினர்களாக அமைப்பு செயலாளர் தளவாய் சுந்தரம்

    எம்.எல்.ஏ., முன்னாள் அமைச்சர் ராஜலட்சுமி ஆகியோர் கலந்து கொண்ட னர்.

    கூட்டத்தில் மாநில எம்.ஜி.ஆர். இளைஞர் அணி துணை செயலாளர் கிருஷ்ணதாஸ், முன்னாள் எம்.எல்.ஏ. நாஞ்சில் முருகே சன், இலக்கிய அணி அமைப்பு செயலாளர் சந்துரு, மாவட்ட இளைஞர் பாசறை செயலாளர் அக் ஷயாகண்ணன், ஒன்றிய செயலாளர் பொன் சுந்தர நாத், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள் அய்யப்பன், சாந்தினி பகவதியப்பன், மாவட்ட வக்கீல் பிரிவு செயலாளர் சுந்தரம், மாவட்ட பஞ்சாயத்து கவுன் சிலர் ஜான்சிலின் விஜிலா, மாநில மகளிர் அணி துணை செயலாளர் ராணி, ஒன்றிய செயலாளர்கள் வீராசாமி, ராதாகிருஷ்ணன், முன் னாள் மாவட்ட செயலாளர் அசோகன், ராஜாக்கமங்க லம் கிளை செயலாளர் தங்கப்பன், ஒன்றிய அவைத் தலைவர் முருகன், ஒன்றிய பொருளாளர் மணிகண்டன் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    இதில் மகளிர் அணியில் கூடுதலாக உறுப்பினர்கள் சேர்க்கவும், இளைஞர்-இளம்பெண்கள் பாசறையில் அதிகமான பெண்களை சேர்க்கவும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. ஒவ்வொரு பூத்துக்கும் தனித்தனி பொறுப்பாளர்களை நியமித்து அதிகமான வாக்குகளை அ.தி.மு.க.விற்கு பெற தீர்மானம் நிறைவேற்றப்பட் டது. முடிவில் நாகர்கோவில் மாநகர உறுப்பினர் ஸ்ரீலிஜா நன்றி கூறினார்

    ×