என் மலர்
தமிழ்நாடு செய்திகள்

கோவையில் விஜய் தங்கியிருந்த ஓட்டலுக்கு அருகே வெடிகுண்டு மிரட்டல்
- தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜய், நிர்வாகிகள், மக்கள் முன்னிலையில் பேசினார்.
- சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
கோவை சரவணம்பட்டி அருகே உள்ள குரும்பபாளையத்தில் உள்ள எஸ்.என்.எஸ் கல்லூரியில் உள்ள அரங்கத்தில் மாலை 3 மணிக்கு பூத் கமிட்டி மாநாடு தொடங்ியது.
இந்த மாநாட்டில் கோவை, திருப்பூர், சேலம், ஈரோடு, நாமக்கல், நீலகிரி, கரூர் ஆகிய 7 மாவட்டங்களை உள்ளடக்கிய பூத் கமிட்டி நிர்வாகிகள் 16 ஆயிரம் பேர் பங்கேற்றுள்ளனர்.
இந்த கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் கருத்தரங்கம் நடைபெறும் இடத்திற்கு வருகை தந்தார்.
பூத் கமிட்டி கருத்தரங்கில் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த், தேர்தல் மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்டோர் பேசினர்.
பிறகு, தமிழக வெற்றிக் கழகத்தில் தலைவர் விஜய், நிர்வாகிகள், மக்கள் முன்னிலையில் பேசினார்.
இந்நிலையில், விஜய் தங்கியிருந்த தனியார் நட்சத்திர ஓட்டலுக்கு அருகே உள்ள நட்சத்திர விடுதிக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.
பின்னர், போலீசார் நடத்திய விசாரணையில் வெடிகுண்டு மிரட்டல் வெறும் வதந்தி என தெரியவந்துள்ளது.






