என் மலர்
உள்ளூர் செய்திகள்
- காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.
- லலிதா நகர், ஈவிபி சந்தோஷ் நகர், கிருஷ்ணா நகர், பங்களா தோப்பு, மாதா நகர் மெயின் ரோடு.
சென்னை:
சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.
இந்த நிலையில், தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-
சென்னையில் நாளை (21.05.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
அதன்படி, போரூரில், முத்து நகர், எம்ஆர்கே நகர், முகலிவாக்கம் மெயின் ரோடு, லலிதா நகர், ஈவிபி சந்தோஷ் நகர், கிருஷ்ணா நகர், பங்களா தோப்பு, மாதா நகர் மெயின் ரோடு ஆகிய இடங்களில் மின் தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவில் நடப்பாண்டில் கொரோனா தொற்றால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
- சிங்கப்பூா், வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் கொரோனா தொற்று பரவும் வீதம் குறைந்துள்ளதாகவே உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
சென்னை:
தமிழக பொது சுகாதாரத் துறை இயக்குநா் செல்வ விநாயகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
கடந்த 2020-ம் ஆண்டு உலக சுகாதார நிறுவனத்தால் பெருந்தொற்றாக அறிவிக்கப்பட்ட கொரோனா, உலக அளவில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. இருந்தபோதிலும் தமிழக அரசு மருத்துவக் கட்டமைப்பை மேம்படுத்தி, பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தி தடுப்பூசியை விரிவாக வழங்கியதன் மூலம் கொரோனா பெருந்தொற்றில் இருந்து மீண்டு, தற்போது சமூக பரவலாக வீரியம் குறைந்து காணப்படுகிறது.
நடப்பாண்டில் கொரோனா பரவல் மிகக் குறைந்த அளவே காணப்படுகிறது. அதிலும், பாதிக்கப்பட்ட நபா்களுக்கு எவ்வித தீவிர அறிகுறிகளும் காணப்படவில்லை. மேலும் இந்தியாவில் நடப்பாண்டில் கொரோனா தொற்றால் எந்த உயிரிழப்பும் ஏற்படவில்லை.
உலக சுகாதார அமைப்பின் மூலமாக கடந்த 4-ந் தேதி வெளியிடப்பட்ட வாராந்திர கொரோனா அறிக்கையின்படி தெற்கு ஆசிய நாடுகளான இந்தியா, நேபாளம், வங்கதேசம், இந்தோனேசியா, தாய்லாந்து போன்ற நாடுகளில் கொரோனா பரவல் மிகக் குறைவாகவே காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், வீரியம் இழந்த ஒமைக்ரான் வகை தீநுண்மியின் உட்பிரிவுகளான ஜெ.என்.1, எக்இசி ஆகிய தொற்றுகளே காணப்படுவதாகவும், புதிதாக உருமாறிய தீநுண்மி பரவவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமல்லாது சிங்கப்பூா், வியட்நாம், பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளிலும் கொரோனா தொற்று பரவும் வீதம் குறைந்துள்ளதாகவே உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
உலக அளவில் இந்நோயின் தாக்கம் மற்றும் இறப்பின் விகிதம் மிகவும் குறைந்தே காணப்படுவதை இதன் மூலம் உணர முடிகிறது.
இருந்தபோதிலும், பொதுமக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவதுடன், சரியான தொற்று தடுப்பு வழிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும். அறிகுறிகள் உள்ளவா்களும், குறிப்பாக காய்ச்சல், நுரையீரல் சாா்ந்த இணைநோய்களால் பாதிக்கப்பட்டவா்களும் அருகிலுள்ள மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை மேற்கொள்ளுமாறு வலியுறுத்தப்படுகிறாா்கள்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர்.
- மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
தருமபுரி:
கர்நாடகா காவிரி நீர்ப்பிடிப்பு பகுதி மற்றும் கர்நாடகா மாநிலம், மைசூர், மாண்டியா மாவட்டங்கள், சாம்ராஜ் நகர் ஆகிய பகுதிகளில் கடந்த இரு தினங்களாக விடிய விடிய கனமழை பெய்துள்ளது. இதனால் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில் கர்நாடகா, தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளான அஞ்செட்டி, கேரட்டி, நாட்றாம்பாளையம், ராசிமணல், பிலிகுண்டுலு, ஒகேனக்கல் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்துள்ளது.
நேற்று மாலை 5 ஆயிரம் கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்றுகாலை 8 மணி நிலவரப்படி 8 ஆயிரம் கனஅடியாக அதிகரித்து வந்தது. இதனால் காவிரி ஆற்றில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது.
நீர்வரத்து அதிகரித்துள்ளதால் ஒகேனக்கல் மெயின் அருவி, ஐந்தருவி, சினிபால்ஸ், ஐவர்பாணி உள்ளிட்ட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டுகிறது.
சுற்றுலா பயணிகள் குடும்பத்துடன் பரிசல் பயணம் மேற்கொண்டு காவிரி ஆற்றின் அழகை ரசித்தனர். மேலும் தொங்கு பாலத்தில் நின்று காவிரி ஆற்றில் விழும் தண்ணீரை ஆர்வமுடன் ரசித்து மகிழ்ந்தனர். பின்னர் அவர்கள் மெயின் அருவியில் குளித்தும், பெண்கள் காவிரி ஆற்றில் குளித்தும் மகிழ்ந்தனர்.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- மழை காரணமாக அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது.
- பெருங்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று மாலை முதல் பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளில் மழைநீர் தேங்கி உள்ளது.
இந்த நிலையில், மதுரை வலையங்குளத்தில் மழை காரணமாக வீட்டின் சுவர் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
மழை காரணமாக அப்பகுதியில் மின் தடை ஏற்பட்டுள்ளது. இதனால் வீட்டிற்கு வெளியே அமர்ந்து பேசிக்கொண்டிருந்த போது சுவர் இடிந்து விழுந்ததில் அம்மாபிள்ளை (65), வெங்கடம்மா (55), வீரமணி (10) ஆகியோர் உயிரிழந்தனர்.
இச்சம்பவம் குறித்து பெருங்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
- பாதுகாப்பு கருதி முன் எச்சரிக்கையாக வினாடிக்கு 4,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கர்நாடக மாநிலத்தில் பெங்களூரு மற்றும் தென்பெண்ணை ஆற்றின் நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், ஓசூர் பகுதியிலும் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கே.ஆர்.பி. அணைக்கு நீர்வரத்து தொடர்ந்து அதிகரிக்க தொடங்கி உள்ளது.
இதனால் கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மொத்த கொள்ளளவான 52 அடியில் 51 அடியை எட்டியதால் 3 மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பு கருதி முன் எச்சரிக்கையாக வினாடிக்கு 4,000 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
இதனால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்படும் என்பதால் கிருஷ்ணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை மாவட்ட மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி அணை முதல் சாத்தனூர் அணை வரை தென்பெண்ணை ஆற்றங்கரை ஓரத்தில் தாழ்வான பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
சென்னை:
மத்திய மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின்மேல் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. மேலும், மத்திய கிழக்கு அரபிக்கடலில் இன்று வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகும். இதன் காரணமாக நாளை (வியாழக்கிழமை) அதே பகுதியில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு உள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து, மேலும் வலுவடையும்.
இதன் காரணமாக, இன்று கோவை, ஈரோடு, திருப்பூர், தேனி, திண்டுக்கல், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், நாமக்கல், திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, மதுரை, சிவகங்கை, ராமநாதபுரம், விருதுநகர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் கனமழையும், கோவை மாவட்டத்தின் மலைப்பகுதிகள் மற்றும் நீலகிரி மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. சென்னையில் இன்று ஒரு சில பகுதிகளில் இடி, மின்னலுடன் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளது என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி, தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. சென்னையில் காலை முதல் மிதமான மழை பெய்து வருகிறது. இதனால் வெயில் அவதி அடைந்த மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
இந்த நிலையில், இன்று காலை 10 மணி வரை 7 மாவட்டங்களில் லேசான முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் காலை 10 மணிவரை லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
- தண்டனை காலம் முடிவடைந்ததும் அவர் இந்தியாவை விட்டு வெளியேற உத்தரவு.
- இந்த விவகாரத்தில் மனுதாரரின் கோரிக்கையை நிராகரிப்பதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
இலங்கை தமிழர் சுபாஷ்கரன் என்பவர் சட்டவிரோத தடுப்பு காவலில் தமிழ்நாடு கியூ பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டார்.
பிறகு 2018ம் ஆண்டு சுபாஷ்கரன் என்பவருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கி விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதற்கு எதிராக சுபாரஷ்கரன் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம், சுபாஷ்கரனின் சிறை தண்டனையை 7 ஆண்டுகளாக குறைத்து உத்தரவிட்டது.
ஆனால், தண்டனை காலம் முடிவடைந்ததும் அவர் இந்தியாவை விட்டு வெளியேற வேண்டும் என்றும் உத்தரவில் கூறப்பட்டது.
உயர்நீதிமன்றத்தின் இந்த தீர்ப்புக்கு எதிராக சுபாஷ்கரன் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
இந்த மனு மீதான விசாரணை இன்று உச்சநீதிமன்றத்தில் நீதிபதி திபங்கர் தத்தா தலைமையிலான அமர்வின் முன் வந்தது.
இதில், சுபாஷ்கரன் தரப்பில் ஆஜரானி வழக்கறிஞர், "இவர் ஒரு இலங்கை தமிழர், அகதியாக வந்தவர். அவரது நாட்டில் உயிருக்கு அச்சுறுத்தல் உள்ளது.
குறிப்பாக இவரது மனைவி மற்றும் குழந்தைகள் அனைவரும் இந்தியாவில் குடியேறி விட்டனர். எனவே இவரையும் இந்தியாவிலேயே குடியேற அனுமதிக்க வேண்டும் என்று கோரினார்.
அதற்கு நீதிபதிகள், "இந்தியா என்பது உலக அளவிலிருந்து மக்கள் அகதிகளாக வந்து குடியேற ஒரு சத்திரம் கிடையாது. ஏற்கனவே நாட்டில் 140 கோடி மக்கள் உள்ள நிலையில், எல்லா இடங்களிலும் இருந்து வந்து இங்கு குடியேற இது சத்திரம் அல்ல, அவ்வாறு செய்யவும் இயலாது என தெரிவித்தனர்
மேலும், "இங்கே குடியேற உங்களுக்கு என்ன உரிமை இருக்கிறது. சட்டப்பிரிவு 19ன் படி இந்தியாவின் அடிப்படை உரிமை, குடிமக்களுக்கு மட்டும் தான் உள்ளது. இந்த விவகாரத்தில் உயர்நீதிமன்றம் முன்னதாக பிறப்பித்த உத்தரவில் நாங்கள் தலையிட விரும்பவில்லை" எனக் கூறினர்
அதற்கு மனுதாரர் தரப்பு வழக்கறிஞர், "மனுதாரர் முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினராகப் போராடியதால், அவர் இலங்கைக்கு திரும்பிச் சென்றால், அவர் கைது செய்யப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு கொல்லப்படுவார் எனவே அவரை இந்தியாவில் குடியமர்த்த வேண்டும்" என மீண்டும் கோரினார்.
ஆனால் நீதிபதிகள் அவ்வாறு அவருக்கு இலங்கையில் அச்சுறுத்தல் இருக்குமேயானால் அவர் வேறு நாடுகளை அணுகலாம், எனவே இந்த விவகாரத்தில் மனுதாரரின் கோரிக்கையை நிராகரிப்பதாக கூறி மனுவை தள்ளுபடி செய்தனர்.
இந்நிலையில், உச்சநீதிமன்றம் அளித்த இந்த தீர்ப்புக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் வேதனை தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
இலங்கை தமிழர் வழக்கில் உச்ச நீதிமன்ற தீர்ப்பு வேதனை அளிக்கிறது. மனிதநேய மாண்பை உடைப்பதுபோல் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது.
மனிதாபிமான அடிப்படையில் தஞ்சம் புகுவோருக்கு அடைக்கலம் கொடுப்பது தேசத்தின் கடமை. இந்தியா என்ன சத்திரமா? என்று உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது அதிர்ச்சி அளிக்கிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- வருகிற 27ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய அவகாசம் உள்ளது.
- விண்ணப்பம் செய்தவர்களில் 46,691 பேர் மாணவர்கள். 75,959 பேர் மாணவிகள். 48 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் .
பிளஸ்-2 முடித்த மாணவ- மாணவிகள் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர www.tngasa.in என்ற இணைய தளம் மூலம் பதிவு செய்யலாம் என அரசு அறிவித்திருந்தது. அதன்படி விருப்பமுள்ள மாணவ, மாணவிகள் விண்ணப்பங்களை பதிவு செய்து வருகின்றனர். வருகிற 27ஆம் தேதி வரை விண்ணப்பங்களை பதிவு செய்ய அவகாசம் உள்ளது.
இந்த நிலையில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் சேர் 1,61,324 மாணவ-மாணவிகள் பதிவு செய்துள்ளனர். இதில் 46,691 பேர் மாணவர்கள். 75,959 பேர் மாணவிகள். 48 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் என அமைச்சர் கோவி செழியன் தெரிவித்துள்ளார்.
- பணி நேரத்தில் தனியார் மருத்துவமனைக்கு செல்கிறார்களா?
- மருத்துவர் பிரபாகரனுக்கு ரூ.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தவரை தனியாருக்கு மாற்றி பணம் பறிக்கப்பட்ட சம்பவத்தில் மனித உரிமைகள் ஆணையம் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சை அளிக்க செல்லும் அரசு மருத்துவர்களை கண்காணிக்க வேண்டும் என மனித உரிமைகள் ஆணையம் ஆணை பிறப்பித்துள்ளது.
பணி நேரத்தில் தனியார் மருத்துவமனைக்கு செல்கிறார்களா? என கண்காணிக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
கோவில்பட்டி அரசு மருத்துவமனை தீக்காயப்பிரிவு மருத்துவர் பிரபாகரனுக்கு ரூ.40 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
உரிய சிகிச்சை கிடைக்காமல் உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு ரூ.50 லட்சம் இழப்பீடு வழங்க ஆஐண பிறப்பிக்கப்பட்டுள்ளது.
- திமுக `சார்’களுக்கு இரையாக்க முயற்சித்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
- திருமணம் செய்துகொண்டு, பல முக்கிய திமுக நிர்வாகிகளிடம் கல்லூரி மாணவியை தனது மனைவி என்று அறிமுகம்.
அரக்கோணம் கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை சம்பவத்தை கண்டித்து அதிமுக போராட்டம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து அதிமுக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
அரக்கோணம் பகுதியில் கல்லூரி மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த அரக்கோணம் திமுக இளைஞர் அணி துணை அமைப்பாளர் மீது நடவடிக்கை எடுக்காத ஸ்டாலின் மாடல் அரசின் காவல் துறையைக் கண்டித்தும், தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களை
வேடிக்கை பார்த்து வரும் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டக் கழகத்தின் சார்பில், அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம்!
21.5.2025 – புதன்கிழமை காலை 9.30 மணி ராணிப்பேட்டை மாவட்டம், அரக்கோணத்தில் திமுக இளைஞர் அணி நிர்வாகி தெய்வச்செயல் என்பவர் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற திமுக `சார்'களுக்கு இரையாக்க முயற்சித்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சி அளிக்கிறது.
அரக்கோணத்தில் உள்ள அரசு கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வரும் கல்லூரி மாணவியை, ஏற்கெனவே வேறு பெண்ணுடன் திருமணமாகி வாழ்ந்து வரும் அரக்கோணம் கிழக்கு ஒன்றிய தி.மு.க. இளைஞர் அணி துணை அமைப்பாளர் சு. தெய்வச்செயல், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் முதல் அம்மாணவியை பின்தொடர்ந்தும், கைபேசி வாயிலாகவும் காதலிப்பதாகத் தொடர்ந்து வற்புறுத்தியும், திருமணம் செய்துகொள்ள விரும்புவதாக தொடர்ந்து டார்ச்சர் செய்தும் மிரட்டிய நிலையில் அம்மாணவி, `எனக்கு ஏற்கெனவே திருமணமாகி கருத்து வேறுபாட்டால் விவாகரத்து வழக்கு நீதிமன்றத்தில் நடந்து வருகிறது' என்று தெரிவித்த நிலையிலும், தொடர்ந்து திமுக நிர்வாகி தெய்வச்செயல் வலுக்கட்டாயமாக அம்மாணவியை கடத்திச் சென்று தனது உறவினர்களுடன் சோளிங்கர் அருகில் உள்ள கோயிலில் திருமணம் செய்துகொண்டு,
பல முக்கிய திமுக நிர்வாகிகளிடம் கல்லூரி மாணவியை தனது மனைவி என்று அறிமுகம் செய்துவைத்துள்ளார்.
இந்நிலையில், கடந்த மார்ச் மாதம் மேலும் ஒரு பெண், கல்லூரி மாணவியிடம் ஏற்கெனவே ஐந்து வருடத்திற்கு முன்பு திமுக நிர்வாகி தெய்வச்செயல் தன்னை ஏமாற்றி திருமணம் செய்துகொண்டு தவறாகப் பயன்படுத்துவதாகவும், மேலும், இந்த திமுக நிர்வாகி இதுபோல் பல பெண்களை ஏமாற்றி மோசடி செய்துள்ள விபரத்தையும் தெரிவித்துள்ளார்.
எனவே, கல்லூரி மாணவி, திமுக நிர்வாகி தெய்வச்செயல், ஏற்கெனவே பலருடன் திருமணம் செய்துகொண்ட நிலையில், தன்னையும் மிரட்டி திருமணம் செய்து கொண்டதாகவும், தன்னை பாலியல் வன்புணர்வு செய்ததாகவும், தவறான வழியில் ஈடுபடுத்த துன்புறுத்துவதாகவும், உரிய ஆதாரங்களுடன் காவல் துறையில் புகார் அளித்தும், காவல்துறை குஐசு பதிவு செய்ய மறுத்ததாகவும், கடும் போராட்டத்திற்குப் பிறகு காவல்துறை, தான் கூறிய முழு விபரங்களையும் குஐசு-ல் குறிப்பிடாமல் பதிவு செய்ததால், அறிக்கையை வாங்க மறுத்துப் போராட்டம் நடத்தி உள்ளார். இதைத் தொடர்ந்து, கல்லூரி மாணவியின் பேட்டியை அனைத்து ஊடகங்களும், நாளிதழ்களும் விரிவாக வெளியிட்டுள்ளன.
திமுக இளைஞர் அணி நிர்வாகி தெய்வச்செயல் கல்லூரி மாணவியை ஏமாற்றி பிற `சார்'களுக்கு இரையாக்க முயற்சித்ததாக வரும் செய்தி அதிர்ச்சியளிக்கிறது.
இதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன்.
கல்லூரி மாணவியின் புகாருக்கு உரிய நேரத்தில் முழு விபரங்களையும் குஐசு-ல் பதிவு செய்யாமல் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்திய காவல் துறையைக் கண்டித்தும்;, தமிழகத்தில் தொடர்ந்து பெண்களுக்கு எதிராக அதிகரித்து வரும் பாலியல் குற்றங்களைத் தடுக்காத விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்தும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டத்தின் சார்பில், 21.5.2025 – புதன் கிழமை காலை 9.30 மணியளவில், அரக்கோணம் பழைய பேருந்து நிலையம் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டம், கழக மகளிர் அணிச் செயலாளரும்,
கழக செய்தித் தொடர்பாளரும், முன்னாள் அமைச்சருமான திருமதி பா. வளர்மதி அவர்கள் தலைமையிலும்; கழக அமைப்புச் செயலாளர் திரு. திருத்தணி கோ. அரி, நுஒ. ஆ.ஞ., ராணிப்பேட்டை கிழக்கு மாவட்டக் கழகச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி
துணை கொறடாவுமான திரு. சு. ரவி, ஆ.டு.ஹ., ஆகியோர் முன்னிலையிலும் நடைபெறும்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், இராணிப்பேட்டை கிழக்கு மாவட்டத்தைச் சேர்ந்த கழக சார்பு அணிகளின் துணை நிர்வாகிகள், முன்னாள் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும்; மாவட்டத்தில் பல்வேறு நிலைகளில் பணியாற்றி வரும் நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்புகளின் இந்நாள், முன்னாள் பிரதிநிதிகளும், நகர, பேரூராட்சி மன்றங்களின் இந்நாள், முன்னாள் வார்டு உறுப்பினர்களும், கூட்டுறவு சங்கங்களின் முன்னாள் பிரதிநிதிகளும், கழக உடன்பிறப்புகளும் பெருந்திரளாகக் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன்.
நிர்வாகத் திறனற்ற விடியா திமுக-வின் ஸ்டாலின் மாடல் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பொதுமக்கள் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
- விநாயகர், ஜடை மாரியம்மன் கோவில் மூலஸ்தான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது.
- சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
தருமபுரி மாவட்டம், காரிமங்கலம் அருகே கயிறுகாரன் கொட்டாய் பகுதியில் செல்வ விநாயகர், ஜடை மாரியம்மன் கோவில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.
கணபதி ஹோமம், கணபதி பூஜையுடன் தொடங்கியது. தொடர்ந்து முதல் கால யாக பூஜை, அஷ்ட பந்தன மருந்து சாற்றுதல் ஆகியவை நடந்தது.
நேற்று காலை விக்னேஸ்வர பூஜை, 2-ம் காலயாக பூஜை, மகா பூர்ணா ஹுதி ஆகியவை நடந்தது. தொடர்ந்து விநாயகர், ஜடை மாரியம்மன் கோவில் மூலஸ்தான கோபுரத்திற்கு கும்பாபிஷேகம் நடந்தது.
திருப்பூர் சுப்பிரமணிய சிவாச்சாரியார் தலைமையில் கோபுர கலசத்திற்கு புனித நீர் ஊற்றி கும்பாபி ஷேகத்தை நடத்தி வைத்தனர். தொடர்ந்து சுவாமி மற்றும் அம்மனுக்கு மகா அபிஷேகம், அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது.
விழாவில் முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டார். சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது.
இன்று (19-ந் தேதி) முதல் மண்டல பூஜை நடக்கிறது. ஏற்பாடுகளை கோவுல் தர்மகர்த்தாக்கள், நிர்வாகக் கமிட்டியினர் மற்றும் விழா குழுவினர் செய்துள்ளனர்.
- தஞ்சை மணிமண்டபம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை நடைபெறுகிறது.
- நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
தஞ்சாவூர்:
தமிழ்நாடு மின் பகிர்மான கழக தஞ்சை உதவி செயற்பொறியாளர் விஜய் ஆனந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை மணிமண்டபம் துணைமின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
எனவே இந்த துணைமின் நிலையத்தில் இருந்து மின்விநியோகம் பெறும் பகுதிகளான அருளானந்த நகர், பிலோமினா நகர், காத்தூண் நகர், சிட்கோ, அண்ணாநகர், காமராஜர் நகர், பாத்திமா நகர், அன்பு நகர், திருச்சி ரோடு, வ.உ.சி. நகர், பூக்காரதெரு, இருபது கண் பாலம், கோரிக்குளம், கணபதி நகர், ராஜப்பா நகர், மகேஸ்வரி நகர், திருப்பதி நகர், செல்வம் நகர், அண்ணாமலை நகர், ஜெ.ஜெ நகர், டி.பி.எஸ். நகர், சுந்தரம் நகர், பாண்டியன் நகர், எஸ்.இ. ஆபீஸ், கலெக்டர் பங்களா ரோடு, டேனியல் தாமஸ் நகர், ராஜ ராஜேஸ்வரி நகர்,
என்.எஸ். போஸ் நகர், தென்றல் நகர் துளசியாபுரம், தேவன் நகர், பெரியார் நகர், இந்திரா நகர், கூட்டுறவு காலனி, நடராஜபுரம் காலனி தெற்கு, புதிய ஹசிங் யூனிட், முல்லை நகர், மருதம் நகர், நெய்தல் நகர், நட்சத்திரா நகர், வி.பி. கார்டன், ஆர்.ஆர். நகர், சேரன் நகர், காவேரி நகர், நிர்மலா நகர், யாகப்பா நகர், அருளானந்த அம்மாள் நகர், குழந்தை இயேசு கோவில், பிஷப் காம்ப்ளக்ஸ் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் இருக்காது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.






