என் மலர்
உள்ளூர் செய்திகள்
- வாக்குச்சாவடிகளில் நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தல்.
- சென்னையில் 14 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தீவிர திருத்தப்பணிக்கு பின்னர் வரைவு வாக்காளர் பட்டியல் நேற்று முன்தின் வெளியிடப்பட்டது. இதில் 97.37 லட்சம் பேர் நீக்கப்பட்டுள்ளனர். தற்போது பட்டியலில் 5.43 கோடி வாக்காளர்களே உள்ளனர்.
சென்னை மாவட்டத்தில் உள்ள 16 தொகுதிகளுக்கு வெளியிடப்பட்ட வரைவு வாக்காளர் பட்டியலில் 14 லட்சத்து 25 ஆயிரம் வாக்காளர்கள் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.
இந்த நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் நீக்கப்பட்டவர்களுக்காக சென்னையில் நேற்று், இன்றும் சிறப்பு முகாம் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டது. அதன்படி, நேற்று வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுக்காக சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில், ஏராளமானோர் பங்கேற்று விண்ணப்பித்து சென்றனர்.
சென்னையில் அந்தந்த வாக்குச்சாவடிகளில் நடைபெறும் சிறப்பு முகாமை பயன்படுத்திக்கொள்ளுமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. புதிதாக சேர வேண்டியவர்கள் படிவம் 6-ஐயும், ஒருவரின் பெயர் தவறாக சேர்க்கப்பட்டிருந்தால் படிவம் 7-ஐயும், முகவரி, பெயர் மாற்றத்திற்கு படிவம் 8-ஐயும் நிரப்பி சமர்ப்பிக்க வேண்டும் என கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், வரைவு வாக்காளர் பட்டியலில் பெயர் விடுபட்டவர்களுக்காக சென்னையில் இரண்டாவது நாளாக இன்றும் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.
- மாமல்லபுரத்தில் உள்ள ‘ப்போர் பாயிண்ட்ஸ்' கன்வென்ஷன் சென்டரில் நாளை கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறது.
- கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.
சென்னை:
தமிழக அரசியல் கட்சிகள் சார்பில் தனித்தனியாக கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் த.வெ.க சார்பில் செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தில் உள்ள 'ப்போர் பாயிண்ட்ஸ்' கன்வென்ஷன் சென்டரில் நாளை (திங்கட்கிழமை) கிறிஸ்துமஸ் விழா நடைபெறுகிறது.
இந்த விழாவில் த.வெ.க. தலைவர் விஜய் கலந்துகொண்டு பேசுகிறார். இதில் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் பங்கேற்கிறார்கள்.
- இலங்கையின் மூத்த இசையமைப்பாளர் எம்.பி.பரமேஷின் புத்தக வெளியீட்டு விழா நடைபெற்றது
- இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக எம்.பி. திருச்சி சிவா கலந்துகொண்டார்.
சென்னை சாலிகிராமத்தில் இலங்கையின் மூத்த இசையமைப்பாளர் எம்.பி.பரமேஷின் புத்தக வெளியீட்டு விழா மற்றும் அவரது 60 ஆண்டு இசை சேவையை கவுரவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக திமுக எம்.பி. திருச்சி சிவா கலந்துகொண்டார். அப்போது அவரிடம் இந்தி பாடல் பாடுமாறு அங்கிருந்தவர்கள் கேட்டுள்ளனர்.
ஆனால் அதற்கு இந்தி பாடல் பாடாமல் "மௌனமே பார்வையால்..." என்ற தமிழ் பாடலை பாடி அங்கிருந்தவர்களை மகிழ்வித்தார்
- பொருநை அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை என 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளது.
- ஐந்திணை நிலங்களின் வாழ்வியலை 5டி திரையரங்கில் காணலாம்.
நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள பொருநை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார். பல்வேறு சிறப்புகளை உள்ளடக்கிய பொருநை அருங்காட்சியகத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
நெல்லை ரெட்டியார்பட்டியில் உள்ள பொருநை அருங்காட்சியகம் ஆதிச்சநல்லூர், கொற்கை, சிவகளை என 3 ஆக பிரிக்கப்பட்டுள்ளது. பொருநை அருங்காட்சியகத்தில் உள்ள ஆதிச்சநல்லூர் கட்டிடத்தில் 1,585 பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.
கொற்கை கட்டிடத்தில் பாண்டியர்களின் கடல் வணிகம், முத்துக்குளித்தல் தொடர்பாக பழங்கால பொருட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. சிவகளை கட்டிடத்தில் 5,300 ஆண்டுக்கு முந்தைய இரும்பு உருக்கும் தொழில்நுட்பம், நெல் மணிகள், பழங்கால பொருட்களை காணலாம்.
தமிழர்களின் குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என ஐந்திணை நிலங்களின் வாழ்வியலை 5டி திரையரங்கில் காணலாம். பொருநை அருங்காட்சியகத்தில் கடல் வழி வணிகம், முத்துக்குளித்தல் போன்றவற்றை திரைப்பட பாணியில் 3டி தொழில்நுட்பத்தில் காணலாம்.
பண்டைய தமிழர்களின் பாரம்பரிய முறையில் முற்றம், தாழ்வாரம் அமைத்து பொருநை அருங்காட்சியகம் கட்டப்பட்டுள்ளது. பொருநை அருங்காட்சியகத்தில் திறந்தவெளி திரையரங்கு, மூலிகை தோட்டம், கைவினைப்பொருட்கள் விற்பனையகம் உள்ளது.
மலையடிவாரத்தில் அருங்காட்சியகம் அமைந்துள்ளதால் அங்கிருந்து நெல்லை மாநகர் அழகை பார்க்கும் வசதியும் உள்ளது.
- பராசக்தி படத்தின் போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது.
- பராசக்தி படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் சிவகார்த்திகேயன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார்.
சுதா கொங்கரா இயக்கத்தில் சிவகார்த்திகேயனின் நடித்துள்ள படம், 'பராசக்தி'. இது சிவகார்த்திகேயனின் 25வது படம்.
இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் பணி நடைபெற்று வருகிறது. அடுத்தாண்டு பொங்கல் விடுமுறையையொட்டி ஜனவரி 14-ல் ஜனநாயகனுக்கு போட்டியாக இப்படம் ரிலீஸாக உள்ளது.
இப்படத்தின் ப்ரோமோஷன் பணிகளில் சிவகார்த்திகேயன் தீவிரமாக ஈடுபட்டுள்ளார். இந்நிலையில், சென்னை மத்திய கைலாஷ் பகுதியில் நடிகர் சிவகார்த்திகேயன் சென்ற கார் விபத்துக்குள்ளானது.
சிவகார்த்திகேயன் வந்த கார், முன்னால் சென்ற கார் மீது லேசாக மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. நல்வாய்ப்பாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏதும் ஏற்படவில்லை என தகவல் வெளியாகியுள்ளது.
விபத்து தொடர்பாக இரு தரப்புக்கும் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில், போலீசார் சமரசம் பேசி உள்ளனர். இது தொடர்பாக மயிலாப்பூர் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
- சகோதர உணர்வுமிக்க சமுதாயம் தான் இன்றைய இந்தியாவுக்கு தேவை.
- சிறுபான்மையினர் நலனுக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
நெல்லை மாவட்டம் டக்கரம்மாள்புரத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
அனைவரும் ஒற்றுமையாக ஒருவர் மீது ஒருவர் அன்போது இருக்க வேண்டும்.
வெறுப்புணர்வு பாவங்களை செய்ய தூண்டும்; அன்பு என்பது அத்தனை பாவங்களை போக்கும்.
இந்து, இஸ்லாமிய, கிறிஸ்தவ சகோதரர்கள் ஒருதாய் வயிற்று பிள்ளையாய் ஒற்றுமையாய் வாழ வேண்டும்.
சகோதர உணர்வுமிக்க சமுதாயம் தான் இன்றைய இந்தியாவுக்கு தேவை.
சிறுபான்மையினர் நலனில் எப்போதும் உண்மையான அக்கறை கொண்ட இயக்கம் திராவிட முன்னேற்றக் கழகம். சிறுபான்மையினர் நலனுக்காக திமுக அரசு பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி வருகிறது.
ராமநாதபுரம் மூக்கையூர் கிராமத்தில் உள்ள தொன்மை வாய்ந்த புனித யாக்கோபு தேவாலயம் ரூ.1.42 கோடியில் புனரமைக்கப்படும்.
தமிழக அரசின் அணுகுமுறையால் சிறுபான்மை கல்வி நிறுவனங்களில் 1,439 ஆசிரியர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சிறுபான்மையினர் அதிகம் வசிக்கும் 11 மாவட்டங்களில் ரூ.597 கோடியில் கூடுதல் உட்கட்டமைப்பு வசதி செய்யப்படும்.
திமுக ஆட்சியில் தமிழகத்தில் உள்ள 16 தேவாலயங்களில் ரூ.2.16 கோடியில் புனரமைக்கப்பட்டுள்ளது.
கிறிஸ்தவர்களின் ஜெருசலேம் புனித பயணத்திற்கான நிதி உதவி கூடுதலாக்கப்பட்டுள்ளது.
சிறுபான்மையினர் மூலம் நடத்தும் கல்வி நிறுவனங்களுக்கு நிரந்தர சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
அரசு உதவி பெறும் சிறுபான்மையினர் பள்ளிகளும் காலை உணவு திட்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் குறிப்பிடப்பட்டுள்ளது.
- தவெக பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- செந்தில்நாதன் மீது பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
தவெக நாமக்கல் கிழக்கு மாவட்டச் செயலாளர் செந்தில்நாதனின் பதவி பறிக்கப்பட்டுள்ளது.
கட்சியின் மகளிர் அணி நிர்வாகியுடன் திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக சர்ச்சை எழுந்த நிலையில், அவர் மீது பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கட்சிக்கு எந்த விதமான களங்கத்தை யார் விளைவித்தாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என புஸ்ஸி ஆனந்த் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
- SIR-க்குப் பிறகான வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது.
தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள் கூட்டம் நாளை மாலை 6 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் SIR-க்குப் பிறகான வரைவு வாக்காளர் பட்டியல் சரிபார்த்தல் தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
இந்நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நாளை நடைபெற இருந்த மாவட்ட செயலாளர்கள் கூட்டம் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
திமுக மாவட்ட செயலாளர் கூட்டத்திற்கான மாற்று தேதி விரைவில் அறிவிக்கப்படும் என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
- வடமாநிலத்தவர்கள் கும்பலாக இருக்கைகளை ஆக்கிரமிப்பதாக பயணிகள் புகார்
- டிக்கெட் இல்லாமல் பயணித்த 80 பேருக்கு 300 வீதம் ரூ.24,000 அபராதம் விதிக்கப்பட்டது.
மதுரையில் இருந்து ராமேஸ்வரம் சென்ற ரெயிலில் உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பக்தர்கள் டிக்கெட் எடுக்காமல் பயணித்துள்ளனர்.
வடமாநிலத்தவர்கள் கும்பலாக இருக்கைகளை ஆக்கிரமிப்பதாக டிக்கெட் எடுத்த பயணிகள் டிக்கெட் பரிசோதகருக்கு புகார் அளித்துள்ளனர். இதனையடுத்து டிக்கெட் இல்லாமல் பயணித்த 80 பேருக்கு 300 வீதம் ரூ.24,000 அபராதம் விதிக்கப்பட்டது.
அதில், ஒருசிலர் மட்டும் அபராதத்தை செலுத்தியுள்ளனர்; மற்றவர்கள் ஜெய்கோ என முழக்கமிட்டவாறு அபராதம் செலுத்தாமல் தப்பி ஓடினர்.
ரெயிலில் 400க்கும் மேற்பட்ட உ.பி. பக்தர்கள் வந்த நிலையில் சுமார் 100 பேரிடம் மட்டுமே டிக்கெட் இருந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
- மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் 2 நாட்கள் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம்.
- கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.
தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்றும், நாளையும் 2 நாட்கள் நெல்லை மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார்.
நெல்லைக்கு வந்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு சாலையின் இருபுறமும் திரண்ட தி.மு.க. தொண்டர்கள், பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
இந்நிலையில், மாலை 4 மணிக்கு புறப்பட்டு வண்ணார்பேட்டை தெற்கு புறவழிச்சாலை வழியாக டக்கரம்மாள்புரம் சென்று அங்கு கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் சார்பில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கேற்கிறார்.
நெல்லை மாவட்டம் டக்கரம்மாள்புரத்தில் நடைபெறும் கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கம் நடத்தும் கிறிஸ்துமஸ் விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றுள்ளார்.
கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்திருந்த குழந்தைகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் புகைப்படம் எடுத்துக்கொண்டார்.
- பொருநை அருங்காட்சியகம் தமிழர்களின் 3,200 ஆண்டுகால பழமையான நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் அமைப்பு.
- நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் அதிநவீன தொழில்நுட்படத்துடன் வடிவமைப்பு.
நெல்லையில் திறக்கப்படவுள்ள பொருநை அருங்காட்சியம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடியோ வெளியிட்டுள்ளார்.அதில்,"பொருநை ஆற்றங்கரையில் தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் ஏராளமான வரலாற்று சான்றுகள் கிடைத்துள்ளது. அனைவரும் அணிஅணியாக வருமாறு" அழைப்பு விடுத்துள்ளார்.
அந்த வீடியோவில் அவர் பேசியதாவது:-
பொருநை ஆற்றங்கரையில் தொல்லியல் துறை நடத்திய ஆய்வில் ஏராளமான வரலாற்று சான்றுகள் கிடைத்துள்ளது. பொருநை அருங்காட்சியகம் தமிழர்களின் 3,200 ஆண்டுகால பழமையான நாகரிகத்தை பறைசாற்றும் வகையில் அமைந்துள்ளது.
ஆதிச்சநல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள், சிவகளையில் கிடைத்த இரும்பு கருவிகளை அருங்காட்சியகத்தில் காணலாம்.
பொருநை ஆற்றங்கரையோரம் வாழ்ந்த மக்களின் வாழ்வியல், பண்பாடு, கலைகளை திரையில் காணும் வகையில் தனி அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
நெல்லையில் பொருநை அருங்காட்சியகம் அதிநவீன தொழில்நுட்படத்துடன் வடிவமைக்கப்பட்டுள்ளது.
கீழடி நமது தாய் மண், பொருநை தமிழர்களின் பெருமை என்பதை பறைசாற்றுவோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை.
- கூட்டணி பேச்சுவார்த்தை குழு தொடர்பாக செங்கோட்டையன் உள்ளிட்டோரிடம் ஆலோசனை.
தேர்தல் கூட்டணி பேச்சுவார்த்தை குழு அமைப்பது தொடர்பாக பனையூர் அலுவலகத்தில் தமிழக வெற்றிக் கழகம் நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.
மேலும், கூட்டணி பேச்சுவார்த்தை குழு தொடர்பாக செங்கோட்டையன், புஸ்ஸி ஆனந்த், தேர்தல் பிரச்சார மேலாண்மை பொது செயலாளர்ர் ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட நிர்வாகிகளுடன் விஜய் ஆலோசனை நடத்தி வருகிறார்.
தமிழ்நாட்டில் சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் விஜய் முக்கிய ஆலோசனை நடத்துகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.






