என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும்.
    • திருநீர்மலை மெயின் ரோடு, பெருமாள் நகர், ஸ்ரீ கிருஷ்ணா நகர்.

    சென்னை:

    சென்னையில் பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் தடை செய்யப்படும். பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின் விநியோகம் கொடுக்கப்படும்.

    அந்த வகையில், நாளை மின் தடை செய்யப்படும் பகுதிகள் குறித்து தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, சென்னையில் நாளை (05.07.2025) காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் வாரிய பராமரிப்பு பணி காரணமாக பின்வரும் இடங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.

    தாம்பரம்: ஓட்டேரி, ஊரப்பாக்கம், வண்டலூர், சிங்காரத்தோட்டம் ஹில் வியூ, கங்கையம்மன் கோவில், வெங்கடேசபுரம், லட்சுமிபுரம், ஆர்.எம்.கே.நகர், குண்டுமேடு, முத்துவேலர் தெரு, கிருஷ்ணா சாலை, விவேக் நகர், காமதேனு நகர், கார்த்திகேயன் நகர், பாரதி நகர், பாலாஜி நகர், திருவள்ளுவர் தெரு, பாரதிதாசன் தெரு, அவ்வை தெரு, ஸ்ரீ ராம் பார்க் 63 அடுக்குமாடி குடியிருப்பு, VOC தெரு, SV நகர், கலைவாணி தெரு, மணி தெரு, அம்மன்கோவில் தெரு, பாலாஜி தெரு, மணிமேகலை தெரு, தொல்காப்பியர் 1வது, 2வது தெரு, TKC தெரு, காமராஜர் நகர், காந்தி தெரு, ராஜ்ஸ்ட்மான் தெரு, காந்தி தெரு, பெருமாள் புரம், வெங்கம்பாக்கம், சத்தியமூர்த்தி தெரு, அமுதம் நகர், சடகோபன் நகர், தங்கராஜ் நகர், விஷ்ணு நகர், திருப்பூர் குமரன் தெரு, வசந்தம் நகர், குறிஞ்சி நகர், ஆர்எஸ்ஆர் நகர், கண்ணன்வென்யூ 1 முதல் 5வது தெரு, மாடம்பாக்கம் மெயின் ரோடு, கோகுல் நகர், பொன்னியம்மன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, வெங்கடாசலபதி தெரு, மூர்த்தி காலனி, கிருஷ்ணராஜ் நகர், அருள்நெறி நகர் மற்றும் சங்கரா பள்ளி.

    பல்லாவரம் : மூசாத்தி தெரு, ஹசன் பாஷா தெரு, யாசின் கான் தெரு, கைலார் தெரு, முத்துசா தெரு, செல்லம்மாள் தெரு, மீனாட்சி நகர் 1 முதல் 10வது தெரு, ஆஞ்சநேயர் கோவில் தெரு, கலாதரன் தெரு, செயலக காலனி, கட்டபொம்மன் தெரு, மாரியம்மன் கோவில் தெரு, கஸ்தூரி நகரி பாய் தெரு, ஏ. சுபம் நகர், யாதவள் தெரு, அம்மன் நகர், மூவர்சம்பேட்டை மெயின் ரோடு, ராஜீவ் காந்தி தெரு, ஆஞ்சநேயர் நகர், பச்சையம்மன் கோவில் தெரு.

    திருநீர்மலை: தேரடி தெரு, கிழக்கு மாட தெரு, தெற்கு மாட தெரு, குளக்கரை தெரு, வி.ஜி.என்.மகாலட்சுமி நகர், திருநீர்மலை மெயின் ரோடு, வேம்புலியம்மன் கோவில் தெரு, பஜனை கோவில் தெரு, மல்லிமா வீதி, சிவராஜ் தெரு, ஒயிலியம்மன் கோவில் தெரு, வைத்தியகார தெரு, மேட்டுத் தெரு, ஜெகஜீவன் ராம் தெரு, ஸ்ரீனிவாசன் ராம் தெரு.

    ஐடி காரிடார் : MCN நகர் மற்றும் Extn, பவுண்டரி சாலை, பிள்ளையார் கோவில் தெரு, SBI காலனி, கங்கையம்மன் கோவில் தெரு, ஆனந்த் நகர், காமராஜ் தெரு, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் சாலை, பாலவிநாயகர் அவென்யூ, பிரகாசம் தெரு, ராமன் நகர், ஸ்ரீபுரம் சாலை மற்றும் எல்லையம்மன் நகர்.

    திருமுடிவாக்கம்: எம்கேபி நகர், மகளிர் தொழில் பூங்கா, திருநீர்மலை மெயின் ரோடு, பெருமாள் நகர், ஸ்ரீ கிருஷ்ணா நகர், வழுதாளம்பேடு, மைக்ரோ எஸ்டேட், பாம் ரிவேரா அபார்ட்மென்ட், அமர்பிரகாஷ் அபார்ட்மென்ட், குமரன் நகர், குன்றத்தூர், மகாலட்சுமி அபார்ட்மென்ட். கலைமகள் நகர், கற்பகம் நகர்.

    கோயம்பேடு மார்க்கெட்: ரெட்டி தெரு, ஏரிக்கரை தெரு, பல்லவன் நகர், மந்தவெளி தெரு, சிவந்தி அவென்யூ, சக்தி நகர், சி பிளாக் காவியா கார்டன், கிருஷ்ணா நகர், அகத்தியர் நகர், அம்பிகா நகர், விஜிபி, அமுதா நகர், பிஎச் சாலை, ராஜீவ் காந்தி தெரு.

    • 2026 சட்டசபை தேர்தல், மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம், கூட்டணி தொடர்பாக நிர்வாகிகளிடம் விஜய் கருத்து கேட்கிறார்.
    • கூட்டம் முடிவில், மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் குறித்த முக்கிய அறிவிப்பை விஜய் வெளியிட இருக்கிறார்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்க செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 1,200 பேருக்கு நுழைவு அடையாள அட்டை அனுப்பப்பட்டு உள்ளது.

    கட்சியின் தலைவர் விஜய் 11 மணியளவில் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். அதனைத்தொடர்ந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. 2026 சட்டசபை தேர்தல், மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம், கூட்டணி தொடர்பாக நிர்வாகிகளிடம் விஜய் கருத்து கேட்கிறார்.

    த.வெ.க. சார்பில் மாவட்ட அளவில் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள், மக்கள் பிரச்சனை ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளன. கூட்டம் முடிவில், மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் குறித்த முக்கிய அறிவிப்பை விஜய் வெளியிட இருக்கிறார். செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து த.வெ.க.வின் அடுத்த கட்ட நகர்வு தொடங்க இருக்கிறது.

    • மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
    • பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    தருமபுரி:

    தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனிடையே, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று நீர்வரத்தானது வினாடிக்கு 20,000 கனஅடியாக சரிந்தது.

    இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. வினாடிக்கு 28,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.

    நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் 10-வது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

    காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.

    • காவலாளி அஜித்குமாரின் உடலில் 50 வெளிப்புற காயங்கள் இருந்தன.
    • கண்கள் சிவந்து வீங்கியுள்ளன. காதுகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோவில் காவலாளி அஜித்குமார் (வயது 28) நகை திருட்டு புகாரில் தனிப்படை போலீசாரால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இவ்வழக்கை மதுரை மாவட்ட 4-வது கோர்ட்டின் நீதிபதி ஜான் சுந்தர்லால் சுரேஷ் விசாரித்து வருகிறார். வருகிற 8-ந்தேதி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஜான் சுந்தர்லால் விரிவான அறிக்கையை தாக்கல் செய்கிறார்.

    இந்த நிலையில், அஜித் குமாரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. பிரேத பரிசோதனை அறிக்கையில், காவலாளி அஜித்குமாரின் உடலில் 50 வெளிப்புற காயங்கள் இருந்தன. இதில் 12 சிராய்ப்பு காயங்கள், மீதி ரத்தக்கட்டு காயங்களாக இருந்துள்ளன.

    ரத்தம் கன்றிய காயங்கள் ஒவ்வொன்றும் ஒரு காயமாக இருந்தாலும் அந்த காயத்தினுள்ளே பல்வேறு ரத்தக்கட்டு காயங்கள் அடங்கியுள்ளன. வயிற்றின் நடுவே கம்பை வைத்து குத்திய காயத்துடன், மண்டை ஓட்டின் இரு பக்கங்கள், நடுமண்டை, தலைப்பகுதி முழுவதுமாக கட்டையால் அடித்த காயம், மூளையில் இரு இடங்களில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. சிகரெட்டால் சூடு வைக்கப்பட்ட புண் இருந்துள்ளது. இடது கையில் 3 இடங்களில் சிகரெட் சூடு வைக்கப்பட்டுள்ளது. ஒரே இடத்தில் மீண்டும் மீண்டும் அடித்ததால் ரத்த காயம் பல வகையாக காணப்படுகிறது.

    கண்கள் சிவந்து வீங்கியுள்ளன. காதுகளில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது. இதயத்தில் இரு இடங்கள் மற்றும் கல்லீரலில் ரத்தக்கசிவு ஏற்பட்டுள்ளது.

    தரையில் இழுத்துச் சென்றதால் சிராய்ப்புகள் ஏற்பட்டிருக்கலாம் அல்லது போலீசார் அடிக்கும் போது தற்காத்துக்கொள்ள போராடி இருந்ததாலும் சிராய்ப்புகள் ஏற்பட்டு இருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

    • வி.சி.க. பெண் கவுன்சிலர் கோமதி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
    • கொலை செய்துவிட்டு திருநின்றவூர் காவல் நிலையத்தில் அவரது கணவர் ஸ்டீபன்ராஜ் சரணடைந்துள்ளார்.

    திருவள்ளூர் மாவட்டம் திருநின்றவூரில் வி.சி.க. பெண் கவுன்சிலர் கோமதி வெட்டி படுகொலை செய்யப்பட்டுள்ளார். திருமணத்தை மீறிய உறவில் இருந்ததாக கூறி, அவரது கணவரே வெட்டி கொலை செய்த கொடூரம் நிகழ்ந்துள்ளது.

    கொலை செய்துவிட்டு திருநின்றவூர் காவல் நிலையத்தில் கணவர் ஸ்டீபன்ராஜ் சரணடைந்துள்ளார். ஸ்டீபன்ராஜை கைது செய்த போலீசார் கொலை தொடர்பாக அவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம்.
    • தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது.

    மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளது. மேலும் சென்னை நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யலாம் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.

    அதன்படி, தமிழகத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், தமிழகத்தில் இன்று காலை 10 மணிவரை 4 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    நீலகிரி, கோவை, தேனி, தென்காசி ஆகிய மாவட்டங்களில் இன்று காலை 10 மணிவரை மழை பெய்யலாம் என கூறப்பட்டுள்ளது. 

    • தமிழ்நாடு முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களைத் தொடர்புகொண்டு பேசினேன்.
    • தமிழ்நாடு தொடர்ந்து தலைநிமிர்ந்து நடைபோட, திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்திட வேண்டும்.

    தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழ்நாட்டு மக்களின் உள்ளங்களையும் எண்ணங்களையும் ஒருங்கிணைத்திட ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பில் ஈடுபட்டுள்ள மாவட்டக் கழகச் செயலாளர்களைத் தொடர்புகொண்டு பேசினேன்.

    அவினாசி ஒன்றியத்தில் மக்களுடன் இருந்த திருப்பூர் வடக்கு மாவட்டக் கழகச் செயலாளர் தினேஷ் குமார் அவர்கள், அங்கிருந்த மக்களிடம் அலைபேசியை வழங்க, "தமிழ்நாடு தொடர்ந்து தலைநிமிர்ந்து நடைபோட, திராவிட மாடல் ஆட்சி தொடர்ந்திட வேண்டும்" என்ற தங்களது விருப்பத்தை உற்சாகத்தோடு என்னிடம் வெளிப்படுத்தினர்!

    தமிழ்நாட்டின் ஒற்றுமையே நமது வலிமை!

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • திரை பிரபலங்கள் முன்னிலையில் நடைபெற்ற ’டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2’ புத்தகம் வெளியீட்டு விழா.
    • சுமார் 45-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    தன்வீர் தயானந்த யோகி ஜெயந்தி விழா ஜூலை 2ம் தேதி கோலாகலமாக கொண்டாடப்பட்ட நிலையில், இவ்விழாவை முன்னிட்டு 'தெய்வீக அற்புதங்களும் மற்றும் ரகசியங்களும்' என்று சொல்லக்கூடிய 'டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ்' (Divine Miracles and Secrets - Part 2) என்ற புத்தகத்தின் இரண்டாம் பாகம் வெளியிடப்பட்டது.

    சென்னையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் நடைபெற்ற கோலாகலமான விழாவில் 'டிவைன் மிராக்கல் அண்ட் சீக்ரெட்ஸ் 2' (Divine Miracles and Secrets - Part 2) புத்தகம் வெளியிடப்பட்டது. மேலும், 'யோகா - பாகம் 1' (Yoga - Part 1) புத்தகம் மற்றும் 'சுக ஞானநந்தம்' (Suga Gnananantham) இசை ஆல்பமும் வெளியிடப்பட்டது.

    இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக ரஷ்ய நாட்டின் சுகாதார அமைச்சகத்தின் இயக்குநர் டாக்டர் ஏ. நஜீரூல் அமீன், பிரபல திரைப்பட நடிகர் ராமகிருஷ்ணா, பிரபல பட்டிமன்ற பேச்சாளர் புலவர் ராமலிங்கம் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்கள்.

    மேலும், திரைப்படத்துறை, தொழில்துறை, விளையாட்டுத்துறை, விவசாயத்துறை, சமூக செயல்பாட்டாளர்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் சாதித்தவர்கள் மற்றும் சமூக ஊடக பிரபலங்கள் என சுமார் 45-க்கும் மேற்பட்ட பிரபலங்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

    • இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது.
    • மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

    போதைப்பொருள் பயன்படுத்திய வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் கிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஆகியோர் ஜாமின் கோரி சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் மனுக்களை தாக்கல் செய்தனர்.

    மனுக்கள் மீதான விசாரணை இன்று நடைபெற்றது. அப்போது, ஸ்ரீகாந்த், கிருஷ்ணா தரப்பில் வாதிடப்பட்டது. மருத்துவ பரிசோதனையில் தான் போதைப்பொருள் பயன்படுத்தவில்லை என முடிவு வந்தது என கிருஷ்ணா தரப்பும், போலீசார் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பும் அளிப்பதாக ஸ்ரீகாந்த் தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.

    இருவருக்கும் ஜாமின் வழங்க காவல்துறை எதிர்ப்பு தெரிவித்தது. இதையடுத்து மனுக்கள் மீதான தீர்ப்பை நீதிமன்றம் ஒத்திவைத்தது.

    இந்நிலையில், போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு ஜாமின் வழங்க மறுப்பு தெரிவித்து சென்னை போதைப் பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    • சென்னை எழும்பூர் டூ செங்கோட்டை இடையே வரும் 6ம் தேதி மற்றும் 7ம் தேதி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.
    • குடமுழுக்கு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

    திருச்செந்தூர் முருகன் கோவில் குடுமுழுக்கு வருகிற 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. குடமுழுக்கை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திருச்செந்தூர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குடமுழுக்கு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

    இந்நிலையில், திருச்செந்தூர் குடமுழுக்கு விழாவை முன்னிட்டு சிறப்பு ரெயில்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

    திருச்செந்தூர் ஸ்ரீ சுப்பிரமணிய சுவாமி கோயில் குடமுழுக்கு விழாவின்போது ஏற்படும் கூடுதல் கூட்ட நெரிசலை சமாளிக்க சிறப்பு ரெயில்களை தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    அதன்படி, சென்னை எழும்பூர் டூ செங்கோட்டை இடையே வரும் 6ம் தேதி மற்றும் 7ம் தேதி சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    வரும் 6ம் தேதி சென்னை எழும்பூர்- செங்கோட்டை வரை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    வரும் 7ம் தேதி செங்கோட்டை- சென்னை எழும்பூர் வரை சிறப்பு ரெயில்கள் இயக்கப்படுகிறது.

    இதற்கான முன்பதிவுகள் 04.07.2025 அன்று காலை 08:00 மணிக்கு தொடங்கும் எனவும், பயணிகள் தங்களின் பயணத்தை முன்கூட்டியே திட்டமிடும்படியும் தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது.

    • திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கு வருகிற 7ஆம் தேதி நடக்கிறது.
    • தமிழ்நாடு முழுவதும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் வருகை தருவார்கள்.

    திருச்செந்தூர் முருகன் கோவில் குடுமுழுக்கு வருகிற 7ஆம் தேதி நடைபெற இருக்கிறது. குடமுழுக்கை முன்னிட்டு தமிழகத்தில் இருந்து லட்சக்கணக்கான மக்கள் திருச்செந்தூர் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. குடமுழுக்கு நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை தமிழக அரசு செய்து வருகிறது.

    இந்தநிலையில் "திருச்செந்தூர் முருகன் கோவில் குடமுழுக்கை ஒட்டி ஜூலை 5 முதல் 8ஆம் தேதி வரை சென்னை, திருச்சி, கோயம்புத்தூர், திருப்பூர், சேலம், மதுரை, ராமேஸ்வரம், தூத்துக்குடி, திருநெல்வேலி, நாகர்கோவில் ஆகிய இடங்களில் இருந்து கூடுதலாக 600 பேருந்துகள் இயக்கப்படும்" என தூத்துக்குடி மாவட்ட கலெக்டர் அறிவித்துள்ளார்.

    • தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 24 காவல் மரணங்கள் அரங்கேறியுள்ளன.
    • சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் சந்தை திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    அ.ம.மு.க. பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் காவல்நிலையத்திற்கு விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோவில் காவலாளி அஜித்குமார் மரணம் அடைந்த சம்பவம் தமிழகம் முழுவதும் மிகப்பெரிய அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது.

    தி.மு.க. ஆட்சிப்பொறுப்பேற்ற கடந்த நான்கு ஆண்டுகளில் மட்டும் 24 காவல் மரணங்கள் அரங்கேறியுள்ளன. திருப்புவனம் கோவில் காவலாளி அஜித்குமாரின் மரணத்திற்கு நீதி வேண்டியும், விசாரணை எனும் பெயரில் காவல்நிலையங்களில் அடுத்தடுத்து அரங்கேறும் காவல் மரணங்களை தடுக்கத் தவறிய தி.மு.க. அரசைக் கண்டித்தும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நாளை (4ம் தேதி) மாலை 4 மணியளவில் சிவகங்கை மாவட்டம், திருப்புவனம் சந்தை திடலில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது.

    சிவகங்கை மாவட்டக் கழகத்தின் ஏற்பாட்டில் நடைபெறவுள்ள இக்கண்டனப் பொதுக்கூட்டத்தில் தலைமைக் கழக நிர்வாகிகள், மாவட்டக் கழக செயலாளர்கள், நிர்வாகிகள் என அனைவரும் பெருந்திரளாக கலந்து கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    ×