என் மலர்
உள்ளூர் செய்திகள்
- அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு வருகிற 19-ந்தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ராணிப்பேட்டை மாவட்டம் சோளிங்கர் வட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு நாளை மறுநாள் உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
சோளிங்கர் ஆஞ்சநேய சுவாமி கோவில் குடமுழுக்கு விழாவினை ஒட்டி திங்கட்கிழமை உள்ளூர் விடுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் சந்திரகலா தெரிவித்துள்ளார்.
மேலும், உள்ளூர் விடுமுறையை ஈடுசெய்யும் பொருட்டு வருகிற 19-ந்தேதி சனிக்கிழமை அன்று வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- தர்மபுரி மாவட்ட கூடுதல் கலெக்டர் கேத்தரின் சரண்யா, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) செயல் இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.
- உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனர் மோகன், புவியியல் மற்றும் சுரங்கத்தின் இயக்குராக நியமிக்கப்படுகிறார்.
சென்னை:
தமிழக அரசு வெளியிட்ட அரசாணையில் கூறியிருப்பதாவது:-
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளர் கலை அரசி, மிகப் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை கமிஷனராக பணியிடமாற்றம் செய்யப்பட்டுள்ளார். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை கமிஷனராக இருந்த சம்பத், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமை செயல் அலுவலராகவும், தமிழ்நாடு கதர் கிராமத் தொழில் வாரியத்தின் தலைமை செயல் அலுவலராக இருந்த மகேஸ்வரி, நில நிர்வாகம், நகர்ப்புற நில உச்சவரம்பு மற்றும் நகர்ப்புற நிலவரி இயக்குனராகவும் நியமிக்கப்படுகிறார்.
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஜான் லூயிஸ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் மேலாண்மை இயக்குனராகவும், புவியியல் மற்றும் சுரங்கத்தின் இயக்குனர் சரவணவேல்ராஜ், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை செயலாளராகவும் பணியிட மாற்றம் செய்யப்படுகின்றனர். உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனர் மோகன், புவியியல் மற்றும் சுரங்கத்தின் இயக்குராகவும், நகராட்சி நிர்வாகத்துறை முன்னாள் இயக்குனர் சிவராசு, உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை இயக்குனராகவும் பணியிடமாற்றம் செய்யப்படுகின்றனர்.
சென்னை ஆறுகள் மறுசீரமைப்பு அறக்கட்டளையின் செயலாளர் ராஜேந்திர ரத்னூ, தமிழ்நாடு நகர்ப்புற வளர்ச்சி நிதியத்தின் தலைவராக கூடுதல் பொறுப்பு வகிப்பார். தர்மபுரி மாவட்ட கூடுதல் கலெக்டர் கேத்தரின் சரண்யா, தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனத்தின் (சிப்காட்) செயல் இயக்குனராக நியமிக்கப்படுகிறார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தபோது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
- மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகளுக்கு இடையூறு ஏற்பட்டது.
கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
உ.செல்லூர் கிராமத்தை சேர்ந்த இருதரப்பினர் இடையே ஏற்கனவே முன்விரோதம் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்தபோது ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கி கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
மருத்துவர்கள், செவிலியர்கள், நோயாளிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக ஒருவரையொருவர் தாக்கி கொண்டதால் அங்கிருந்தவர்கள் அச்சத்தில் உறைந்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
- கள்ளச்சாராயம் குடித்து செத்தால் ரூ.10 லட்சம் கொடுக்கிறது.
- எளிய மகன் நானே எங்கள் அம்மாவுக்கு ரூ.5 லட்சம் கொடுக்கிறேன்.
கடலூரில் நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது
வரும் 8-ந்தேதி காலையில் அம்மாவை போய் பார்த்துவிட்டு எங்கள் போராட்டம் தொடரும்.
அரசே ரூ.5 லட்சம் தான் கொடுக்கிறது. கள்ளச்சாராயம் குடித்து செத்தால் ரூ.10 லட்சம் கொடுக்கிறது. காவலர்கள் அடித்து செத்தால் ரூ.5 லட்சம்தான் கொடுக்கிறது.
எளிய மகன் நானே எங்கள் அம்மாவுக்கு ரூ.5 லட்சம் கொடுக்கிறேன். என்னது இது... அவ்வளவுதான் உயிருக்கு மதிப்பா?
நிகிதா மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும், கைது செய்ய வேண்டும். அதுவரை தொடர்ந்து போராடுவேன். இன்னும் 3 நாட்கள் இருக்கிறது.
த.வெ.க. தலைவர் விஜய் அரசியல் குறித்த கேள்விக்கு, என் அரசியலை தான் நீங்கள் என்னிடம் கேட்க வேண்டும் என்று கூறினார்.
- மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
- 11-வது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தருமபுரி:
தமிழக-கர்நாடகா காவிரி கரையோரங்களில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து குறைவதும் அதிகரிப்பதுமாக இருந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக தமிழக காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த மழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்பட்டது. இதனிடையே, ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நேற்று வினாடிக்கு 43,000 கனஅடியாக நீர்வரத்து வந்து கொண்டிருந்தது.
இந்த நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து மீண்டும் அதிகரித்துள்ளது. வினாடிக்கு 50,000 கன அடியாக உயர்ந்துள்ளது. இதனால் ஒகேனக்கல்லில் உள்ள மெயின் அருவி, சினிபால்ஸ், ஐந்தருவி உள்பட அருவிகளில் தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டியது.
நீர்வரத்து அதிகரித்ததன் காரணமாக பாதுகாப்பு கருதி காவிரி ஆற்றில் பொதுமக்கள் குளிக்கவோ, துணி துவைக்கவோ கூடாது என போலீசார் அறிவுறுத்தி வருகிறார்கள். ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்து வருவதால் 11-வது நாளாக பரிசல் இயக்கவும், சுற்றுலா பயணிகள் அருவியில் குளிக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றில் நீர்வரத்தை தமிழக-கர்நாடக எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் தொடர்ந்து அளவீடு செய்து கண்காணித்து வருகிறார்கள்.
- ரசிகர்களால் சின்ன தல என அன்புடன் அழைக்கப்படுபவர் சுரேஷ் ரெய்னா.
- இவர் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.
சென்னை:
கிரிக்கெட் ரசிகர்களால் சின்ன தல என அன்புடன் அழைக்கப்படுபவர் சுரேஷ் ரெய்னா. இந்திய கிரிக்கெட்டுக்கு தனது பங்களிப்பை வழங்கியுள்ள சுரேஷ் ரெய்னா, ஐபிஎல் போட்டிகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காகவும் விளையாடியுள்ளார். இதனால் தமிழ் ரசிகர்களுக்கு சுரேஷ் ரெய்னாவை மிகவும் பிடிக்கும்.
இந்நிலையில், முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சுரேஷ் ரெய்னா, தமிழ் சினிமாவில் நடிகராக அவதாரம் எடுக்கிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.
டிரீம் நைட் ஸ்டோரீஸ் (DKS ) என்ற தயாரிப்பு நிறுவனத்தின் தொடக்க விழா நடைபெற்றது. இந்த நிறுவனம் தயாரிக்க உள்ள முதல் திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் சுரேஷ் ரெய்னா அறிமுகமாகிறார்.
லோகன் என்பவர் இயக்கும் இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்கிறார்.
ரெய்னா நடிக்கவிருக்கும் இந்த திரைப்படத்தின் அறிவிப்பு காணொளியை சிவம் தூபே வெளியிட்டார். அதன்பின், ரெய்னா வீடியோ கால் மூலம் நிகழ்வில் இணைந்து பல விஷயங்களைப் பகிர்ந்துகொண்டார்.
இதுதொடர்பாக, சுரேஷ் ரெய்னா கூறுகையில், தமிழ்நாட்டில்தான் விசில் போடு ஆர்மி இருக்கிறது. பல கிரிக்கெட் போட்டிகளில் இங்கு ஆடியிருக்கிறேன். ரசம், சென்னை கடற்கரை எனக்கு மிகவும் பிடிக்கும். அதனால்தான் தமிழில் நடிக்கிறேன். மக்களின் அன்பும் எனக்குக் கிடைத்திருக்கிறது என தெரிவித்தார்.
- டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய சேப்பாக் அணி 20 ஓவரில் 178 ரன்களை எடுத்தது.
திண்டுக்கல்:
9-வது டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது.
கேப்டன் பாபா அபராஜித், ஜெகதீசன் ஜோடி அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தனர். ஜெகதீசன் 81 ரன்னிலும், பாபா அபராஜித் 67 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
திண்டுக்கல் டிராகன்ஸ் சார்பில் சசிதரன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. அந்த அணியின் விமல்குமார் அதிரடியாக ஆடினார். சிக்சர்களைப் பறக்கவிட்டார்.
17வது ஓவரில் ஒரு பவுண்டரி, 5 சிக்சர் உள்பட 34 ரன்களை விளாசினார். விமல்குமார் 30 பந்தில் 65 ரன்களைக் குவித்து ஆட்டம் இழந்தார். பாபா இந்திரஜித் 41 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் திண்டுக்கல் அணி 18.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.
- தேசிங்கு ராஜா 2 படம் வரும் 11ம் தேதி வெளியாகி உள்ளது.
- தேசிங்குராஜா -2' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் டீசர் வெளியானது.
துள்ளாத மனமும் துள்ளும், பூவெல்லாம் உன் வாசம் போன்ற படங்களை இயக்கிய இயக்குநர் எழில் இயக்கத்தில் கடந்த 2013-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் 'தேசிங்கு ராஜா'.
இதில் விமல் கதாநாயகனாக நடிக்க இவருக்கு ஜோடியாக பிந்து மாதவி நடித்திருந்தார். காமெடி படமாக உருவான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதையடுத்து 10 ஆண்டுகளுக்கு பிறகு 'தேசிங்கு ராஜா' படத்தின் இரண்டாம் பாகம் வெளியாக உள்ளது. முதல் பாகத்தில் நடித்த நடிகர் விமலே இரண்டாம் பாகத்திலும் ஹீரோவாக நடித்து வருகிறார். இரண்டாவது முக்கிய கதாபாத்திரத்தில் ஜனா நடிக்கிறார்.
தெலுங்கில் ராம் சரண் நடித்து ஹிட்டான 'ரங்கஸ்தலம்' படத்தில் நடித்த பூஜிதா பொன்னாடா மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வரும் ஹர்ஷிதா இருவரும் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.
மேலும் சிங்கம் புலி, ரோபோ சங்கர், ரவி மரியா, ரெடின் கிங்ஸ்லி, புகழ், மொட்டை ராஜேந்திரன், வையாபுரி, மதுரை முத்து, மதுமிதா போன்ற பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இப்படத்தை இன்ஃபினிட்டி கிரியேஷன்ஸ் சார்பில் பி.ரவிசந்திரன் தயாரிக்கிறார். 'பூவெல்லாம் உன் வாசம்' படத்திற்கு பிறகு இயக்குநர் எழிலுடன் இசையமைப்பாளர் வித்யாசாகர் இந்த படத்தில் இணைந்துள்ளார்.
தேசிங்குராஜா -2' படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்த நிலையில் படத்தின் டீசர் வெளியிடப்பட்டது.
வரும் 11ம் தேதி வெளியாக இருக்கும் தேசிங்குராஜா 2 படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.
- உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு நியமிக்கும் திமுக அரசின் மோசமான முயற்சியாகவே கருதப்படுகிறது.
- மாணவர்கள் மற்றும் பத்திரிகைத் துறையினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியற்ற திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பணியாளர்களை நியமிக்க முயலும் பொம்மை முதலமைச்சருக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
தமிழகத்தில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களில் நியமனம் செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதல்களுடன் கூடிய தீர்ப்புகளை வழங்கி இருக்கிறது.
அத்தீர்ப்புகளை மீறி ஸ்டாலின் மாடல் அரசு, திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பணியாளர்களை தகுதியின்றி நியமிக்க முயல்வதாக செய்திகள் வருகின்றன. இதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் தலைமையிலான முதல் பெஞ்ச் 2016-ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ஆள் சேர்ப்புக்கான விதிகளை தளர்த்துவது, தகுதியானவர்களை புறக்கணிப்பது நியாயமற்றது என்று கண்டித்து தகவல் மற்றும் சுற்றுலாத் துறை செயலாளர் மற்றும் தகவல் (ம) மக்கள் தொடர்பு இயக்குநருக்கு விதிகளைத் தளர்த்துவது, விதிவிலக்காக மட்டும் இருக்க வேண்டுமே தவிர, வழக்கமான நடைமுறையாக இருக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் தெளிவாகத் தெரிவித்திருந்தது.
இந்நிலையில், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு இளங்கலை பட்டப் படிப்புடன், பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு அல்லது மீடியா சயின்ஸ் படிப்பு கட்டாயமாக்கப்பட்ட அரசாணையை திரும்பப் பெற நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் திமுக அரசு முடிவெடுத்திருப்பதாகத் தெரிய வருகிறது.
இது, தகுதியற்றவர்களையும், ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களையும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு நியமிக்கும் திமுக அரசின் மோசமான முயற்சியாகவே கருதப்படுகிறது.
மருத்துவராக இருக்க மருத்துவப் படிப்பும், வழக்கறிஞராக இருக்க சட்டப் படிப்பும் அவசியம் என்பது போல, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு, பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு அல்லது மீடியா சயின்ஸ் துறையில் குறைந்தபட்சம் டிப்ளமோ அல்லது பட்டப் படிப்பு அவசியம் என்பது அரசாணையில் தெளிவாக உள்ளது.
இச்சூழ்நிலையில், திமுக அரசு இந்த அடிப்படைத் தகுதிகளை புறக்கணித்து, திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்தவர்களை, பத்திரிகைத் துறையில் எந்த அனுபவமோ கல்வித் தகுதியோ இல்லாமல், தற்காலிக நியமனம் என்ற பெயரில் வயது, ஜாதி, மகளிர், ஊனமுற்றோர் ஒதுக்கீடு விதிகளுக்கு, விதிவிலக்கு அளித்து நியமிக்க முயல்வதாகத் தெரிய வருகிறது.
மேலும், தேர்தல் ஆதாயத்திற்கு இவர்களைப் பயன்படுத்துவதற்கான உள்நோக்கமாகவே தோன்றுகிறது.
பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் கல்வி கற்று, வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவுகளைத் தகர்க்கும் இந்த முடிவு, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைப் பறிப்பதாக உள்ளது. இதற்கு மாணவர்கள் மற்றும் பத்திரிகைத் துறையினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.
சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுகளை மதித்து, தற்காலிக நியமனம் என்ற பெயரில் தகுதியற்றவர்களை நியமிக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும்; 2022-ஆம் ஆண்டு இந்த அரசு வெளியிட்ட அரசாணையின்படி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு அல்லது மீடியா சயின்ஸ் துறையில் குறைந்தபட்சம் டிப்ளமோ அல்லது பட்டப் படிப்பு முடித்தவர்களை தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மட்டுமே நியமிக்க வேண்டும் என பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- ஈட்டிய விடுப்பில் 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
- முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு ஈட்டிய விடுப்பு சரண் 2025 அக்டோபர் 1ம் தேதி முதல் நடைமுறைக்கு வருவதாக அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
வரும் 2026ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வரும் என அறிவிக்கப்பட்ட நிலையில் முன்கூட்டியே நடைமுறைக்கு கொண்டுவரப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈட்டிய விடுப்பில் 15 நாட்கள் வரை சரண் செய்து பணப்பலன் பெறலாம் எனவும் தமிழக அரசு தெரிவித்துள்ளது.
இதன்மூலம், சுமார் 8 லட்சம் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் பயன்பொறுவார்கள் என்றும், மேலும், அறிவிப்பை செயல்படுத்த ஆண்டுக்கு ரூ.3,561 கோடி கூடுதல் நிதி ஒதுக்கப்படும் என்றும் தமிழக அரசு ஆணையில் கூறப்பட்டுள்ளது.
முதல்வரின் அறிவிப்பை செயல்படுத்தும் வகையில் அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
- கோவையின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றவுள்ள CoimbatoreMasterPlan2041-ஐ வெளியிட்டுள்ளோம்.
- திட்டமிட்டு நாம் வைக்கும் ஒவ்வொரு அடியும், தமிழ்நாடு உயர்ந்து நிற்பதற்கான அடித்தளம்.
"தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றான கோவையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றவுள்ள 'கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041'ஐ வெளியிட்டுள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
#1TrillionDollar பொருளாதாரம் என்பது நமது இலக்கு! இந்த இலக்கை அடைவதற்கான அனைத்து அடித்தளங்களையும் அமைத்து, வளர்ச்சியின் பாதையில் வீறுநடை போடுகிறோம்.
அந்த வகையில், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றான கோவையின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றவுள்ள CoimbatoreMasterPlan2041-ஐ வெளியிட்டுள்ளோம்.
எல்லோருக்கும் எல்லாம், அனைத்துப் பகுதிகளுக்குமான பரவலான - சீரான வளர்ச்சி என்று திட்டமிட்டு நாம் வைக்கும் ஒவ்வொரு அடியும், தமிழ்நாடு உயர்ந்து நிற்பதற்கான அடித்தளம்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
- பொன்மலை, செந்தண்ணீர்புரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 முதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் இருக்காது.
திருச்சி:
திருச்சி அம்பிகாபுரம் துணை மின் நிலையத்தில் நாளை (சனிக்கிழமை) மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.
எனவே அரியமங்கலம், எஸ்.ஐ.டி., அம்பிகாபுரம், ரயில்நகர், நேருஜிநகர், காமராஜ்நகர், மலையப்ப நகர், ராணுவகாலனி, பாப்பாக்குறிச்சி, கைலாஷ் நகர், சக்திநகர், ராஜப்பாநகர், எம்ஜிஆர் நகர், சங்கிலியாண்டபுரம், பாலாஜி நகர், மேலக்கல் கண்டார்கோட்டை, கீழக்கல்கண்டார் கோட்டை, கொட்டப்பட்டு, அரியமங்கலம் தொழிற்பேட்டை, சிட்கோகாலனி, காட்டூர், திருநகர், நத்தமாடிப்பட்டி, கீழக்குறிச்சி, ஆலத்தூர், பொன்மலை, செந்தண்ணீர்புரம் ஆகிய பகுதிகளில் நாளை காலை 9.45 முதல் மாலை 4 மணிவரை மின்வினியோகம் இருக்காது என மின்வாரிய திருச்சி கிழக்கு கோட்ட செயற்பொறியாளர் கணேசன் தெரிவித்துள்ளார்.






