என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "திமுக ஐடி"

    • டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் பல கார்களில் மாறி மாறி மறைந்திருந்தே போகும் மருமம் என்ன?
    • பழனிசாமியுடன் இருப்பவர் யார்? அவர் ஏன் தன் முகத்தை மறைக்க வேண்டும்?

    எடப்பாடி பழனிசாமியின் கள்ளக் கார் பயணங்களும், கேள்விகளும்!? என்று திமுக IT Wing தனது அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பியுள்ளது.

    இதுதொடர்பாக, திமுக ஐடி விங் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-

    1. வெள்ளை அரசு வாகனத்தில் சென்றதாக சொல்லும் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, வரும் போது எப்படி ரூ.8 கோடி மதிப்புள்ள DL2CAN 9009 பதிவெண் கொண்ட கருப்பு Bentley தனியார் சொகுசு காரில் வந்தார்?

    2. டெல்லிக்கு செல்லும் போதெல்லாம் பல கார்களில் மாறி மாறி மறைந்திருந்தே போகும் மருமம் என்ன?

    3. கட்சி தொடர்பான சந்திப்பு என்றால் கட்சியினர் உடனிருக்க வேண்டும், அரசு அலுவல் என்றால் அதிகாரிகள் உடனிருக்க வேண்டும், தனிப்பட்ட குடும்ப நிகழ்வென்றால் குடும்பத்தினர் இருக்கலாம்! ஆனால் திரு அமித்ஷா இல்லத்தில் இருந்து வெளியே வந்த காரில் பழனிசாமி உடன் இருந்தது யார்?

    4. பழனிசாமியுடன் இருப்பவர் யார்? அவர் ஏன் தன் முகத்தை மறைக்க வேண்டும்?

    5. அமைச்சருக்கு நிகரான கண்ணியமிக்க தமிழ்நாடு எதிர்க்கட்சித்தலைவர் பொறுப்பில் இருக்கும் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தனது முகத்தை மறைத்துக் கொண்டு அமித்ஷா அவர்களின் இல்லத்திலிருந்து வெளியேறுவது ஏன்? என்ன அவசியம்? என்ன நிர்பந்தம்? எதை மறைக்கிறார்? யாரை மறைக்கிறார்?

    செய்தியாளர் சந்திப்பில் தடுமாறும் பழனிச்சாமியிடம் இந்த கேள்விகளுக்கு பதிலுண்டா?

    இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    • உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு நியமிக்கும் திமுக அரசின் மோசமான முயற்சியாகவே கருதப்படுகிறது.
    • மாணவர்கள் மற்றும் பத்திரிகைத் துறையினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    உயர்நீதிமன்றத் தீர்ப்பையும் மீறி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களுக்கு தகுதியற்ற திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பணியாளர்களை நியமிக்க முயலும் பொம்மை முதலமைச்சருக்கு அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    தமிழகத்தில் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணியிடங்களில் நியமனம் செய்வதற்கு சென்னை உயர்நீதிமன்றம் தெளிவான வழிகாட்டுதல்களுடன் கூடிய தீர்ப்புகளை வழங்கி இருக்கிறது.

    அத்தீர்ப்புகளை மீறி ஸ்டாலின் மாடல் அரசு, திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு பணியாளர்களை தகுதியின்றி நியமிக்க முயல்வதாக செய்திகள் வருகின்றன. இதற்கு எனது கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

    சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் தலைமையிலான முதல் பெஞ்ச் 2016-ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பில், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் ஆள் சேர்ப்புக்கான விதிகளை தளர்த்துவது, தகுதியானவர்களை புறக்கணிப்பது நியாயமற்றது என்று கண்டித்து தகவல் மற்றும் சுற்றுலாத் துறை செயலாளர் மற்றும் தகவல் (ம) மக்கள் தொடர்பு இயக்குநருக்கு விதிகளைத் தளர்த்துவது, விதிவிலக்காக மட்டும் இருக்க வேண்டுமே தவிர, வழக்கமான நடைமுறையாக இருக்கக் கூடாது என்று உயர்நீதிமன்றம் தெளிவாகத் தெரிவித்திருந்தது.

    இந்நிலையில், உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு இளங்கலை பட்டப் படிப்புடன், பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு அல்லது மீடியா சயின்ஸ் படிப்பு கட்டாயமாக்கப்பட்ட அரசாணையை திரும்பப் பெற நிர்வாகத் திறனற்ற ஸ்டாலின் மாடல் திமுக அரசு முடிவெடுத்திருப்பதாகத் தெரிய வருகிறது.

    இது, தகுதியற்றவர்களையும், ஆட்சியாளர்களுக்கு வேண்டியவர்களையும் உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு நியமிக்கும் திமுக அரசின் மோசமான முயற்சியாகவே கருதப்படுகிறது.

    மருத்துவராக இருக்க மருத்துவப் படிப்பும், வழக்கறிஞராக இருக்க சட்டப் படிப்பும் அவசியம் என்பது போல, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு, பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு அல்லது மீடியா சயின்ஸ் துறையில் குறைந்தபட்சம் டிப்ளமோ அல்லது பட்டப் படிப்பு அவசியம் என்பது அரசாணையில் தெளிவாக உள்ளது.

    இச்சூழ்நிலையில், திமுக அரசு இந்த அடிப்படைத் தகுதிகளை புறக்கணித்து, திமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவைச் சேர்ந்தவர்களை, பத்திரிகைத் துறையில் எந்த அனுபவமோ கல்வித் தகுதியோ இல்லாமல், தற்காலிக நியமனம் என்ற பெயரில் வயது, ஜாதி, மகளிர், ஊனமுற்றோர் ஒதுக்கீடு விதிகளுக்கு, விதிவிலக்கு அளித்து நியமிக்க முயல்வதாகத் தெரிய வருகிறது.

    மேலும், தேர்தல் ஆதாயத்திற்கு இவர்களைப் பயன்படுத்துவதற்கான உள்நோக்கமாகவே தோன்றுகிறது.

    பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்புத் துறையில் கல்வி கற்று, வேலை வாய்ப்புக்காக காத்திருக்கும் ஆயிரக்கணக்கான இளைஞர்களின் கனவுகளைத் தகர்க்கும் இந்த முடிவு, தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைப் பறிப்பதாக உள்ளது. இதற்கு மாணவர்கள் மற்றும் பத்திரிகைத் துறையினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

    சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுகளை மதித்து, தற்காலிக நியமனம் என்ற பெயரில் தகுதியற்றவர்களை நியமிக்கும் முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும் என்றும்; 2022-ஆம் ஆண்டு இந்த அரசு வெளியிட்ட அரசாணையின்படி, உதவி மக்கள் தொடர்பு அலுவலர் பணிக்கு பத்திரிகை மற்றும் மக்கள் தொடர்பு அல்லது மீடியா சயின்ஸ் துறையில் குறைந்தபட்சம் டிப்ளமோ அல்லது பட்டப் படிப்பு முடித்தவர்களை தமிழ் நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் மட்டுமே நியமிக்க வேண்டும் என பொம்மை முதலமைச்சர் ஸ்டாலினை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • கடந்த இரண்டு வாரங்களுக்கு மேலாக அதிமுக- பாமக கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை.
    • நேற்று ஒரேநாளில் பா.ஜனதா கூட்டணியில் பாமக தொடர்ந்து நீடிப்பதாக முடிவு எடுக்கப்பட்டது.

    மக்களவை தேர்தலில் பா.ஜனதா உடன் ஒருபோதும் கூட்டணி இல்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இதனால் பா.ஜனதா மற்றும் அதிமுக தனித்தனியாக தமிழகத்தில் கூட்டணி அமைக்க முயற்சி மேற்கொண்டன.

    இரண்டு கட்சிகளும் பாமக-வுக்கு வலைவிரித்தன. இந்த மக்களவை தேர்தலை தவிரித்து 2026 சட்டமன்ற தேர்தலையும் மனதில வைத்து பாமக பல்வேறு கணக்குகளை போட்டது.

    பல்வேறு காரணங்களை மனதில் வைத்து அதிமுக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது. ஆனால் மாநிலங்களவை இடம் கொடுப்பதில் சிக்கல் ஏற்பட்டது. பாமக அதில் உறுதியாக இருந்தது. இதனால் இன்று கூட்டணி முடிவாகிவிடும். நாளை முடிவாகிவிடும் என நாட்கள் இழுத்துக் கொண்டே சென்றன.

    இந்த நிலையில்தான் மாவட்ட செயலாளர்களுடன் ஆலோசனை நடத்தி கூட்டணி குறித்து முடிவு எடுக்கப்படும் என பாமக நேற்று அறிவித்தது. நேற்று மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்ற நிலையில், இரவில் பா.ஜனதா உடன்தான் கூட்டணி என பாமக தனது முடிவை அறிவித்தது.

    அதனைத் தொடர்ந்து இன்று காலை தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை, இணை மத்திய மந்திரி எல். முருகன் ஆகியோர் தைலாபுரம் தோட்டத்தில் உள்ள டாக்டர் ராமதாஸ் இல்லம் சென்றனர். அங்கு பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்தம் கையெழுத்தானது. பா.ஜனதா கூட்டணியில் பாமக-வுக்கு 10 இடங்கள் வழங்கப்பட்டது.

    பாமக-வை அதிமுக முழுமையாக நம்பியிருந்த நிலையில் பா.ஜனதா கூட்டணியில் இணைந்துள்ளது. இது அதிமுக-வுக்கு பின்னடைவுதான்.

    இச்சம்பவத்தை வைத்து திமுக ஐ.டி. பிரிவு எக்ஸ் பக்த்தில் அதிமுக-வை கிண்டல் செய்யும் வகையில் ஊட்டிக்கு தனியாதான் போகனும் போல... என எடப்பாடி பழனிசாமி வீட்டின் படத்தை வெளியிட்டு பதிவிட்டிருந்தது.

    சத்யராஜ் நடித்துள்ள அமைதிப்படை படத்தில் சத்தியராஜ் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார். வாக்கு எண்ணிக்கையின் போது, அவரது வாக்கு வித்தியாசத்தில் அதிகரிக்க அதிரிக்க மணிவண்ணன் சின்னவீடு அப்படியோ சத்தயராஜ் பக்கம் சாய்வார். அப்போது மணிவண்ணன் இதுபோன்ற ஒரு வசனத்தை பேசுவார். அதை வைத்து நக்கலாக திமுக இவ்வாறு பதிவிட்டுள்ளது.

    இதற்கு அதிமுக பதிலடி கொடுக்கும் வகையில் "உனக்கென்னப்பா... நீ ஜாபர் சாதிக்கை கூட கட்சியில சேர்த்துட்டு Private Jet ல போவ.

    நாங்க அப்படியா? தமிழ்நாட்டு நலன் பத்தி சிந்திக்கிற கட்சிகளுடனும் மக்களுடனும் கூட்டணி வெச்சிருக்கோம்.

    ஊட்டி என்ன- கும்மிடிப்பூண்டில இருந்து குமரி வரைக்கும் எல்லா ஊருக்கும் போவோம்- ஸ்டைலா கெத்தா! ?️" என பதிலடி கொடுத்துள்ளது.

    ×