

"தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றான கோவையின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றவுள்ள 'கோயம்புத்தூர் மாஸ்டர் பிளான் 2041'ஐ வெளியிட்டுள்ளோம் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
#1TrillionDollar பொருளாதாரம் என்பது நமது இலக்கு! இந்த இலக்கை அடைவதற்கான அனைத்து அடித்தளங்களையும் அமைத்து, வளர்ச்சியின் பாதையில் வீறுநடை போடுகிறோம்.
அந்த வகையில், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றான கோவையின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றவுள்ள CoimbatoreMasterPlan2041-ஐ வெளியிட்டுள்ளோம்.
எல்லோருக்கும் எல்லாம், அனைத்துப் பகுதிகளுக்குமான பரவலான - சீரான வளர்ச்சி என்று திட்டமிட்டு நாம் வைக்கும் ஒவ்வொரு அடியும், தமிழ்நாடு உயர்ந்து நிற்பதற்கான அடித்தளம்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
#1TrillionDollar பொருளாதாரம் என்பது நமது இலக்கு! இந்த இலக்கை அடைவதற்கான அனைத்து அடித்தளங்களையும் அமைத்து, வளர்ச்சியின் பாதையில் வீறுநடை போடுகிறோம்.அந்த வகையில், தமிழ்நாட்டின் முக்கிய நகரங்களுள் ஒன்றான கோவையின் வளர்ச்சியில் பெரும்பங்காற்றவுள்ள #CoimbatoreMasterPlan2041-ஐ… pic.twitter.com/yHZLiQLuxI