என் மலர்
கிரிக்கெட் (Cricket)

விமல்குமார் அதிரடி: இறுதிப்போட்டிக்கு முன்னேறியது திண்டுக்கல் டிராகன்ஸ்
- டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
- முதலில் ஆடிய சேப்பாக் அணி 20 ஓவரில் 178 ரன்களை எடுத்தது.
திண்டுக்கல்:
9-வது டி.என்.பி.எல். தொடரின் இறுதிப்போட்டிக்கான 2-வது தகுதிச்சுற்று ஆட்டத்தில் சேப்பாக் சூப்பர் கில்லீஸ், திண்டுக்கல் டிராகன்ஸ் அணிகள் இன்று மோதின. டாஸ் வென்ற திண்டுக்கல் அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் பேட்டிங் செய்த சேப்பாக் சூப்பர் கில்லீஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 178 ரன்கள் எடுத்தது.
கேப்டன் பாபா அபராஜித், ஜெகதீசன் ஜோடி அதிரடியாக விளையாடி அரை சதம் அடித்தனர். ஜெகதீசன் 81 ரன்னிலும், பாபா அபராஜித் 67 ரன்னிலும் ஆட்டமிழந்தனர்.
திண்டுக்கல் டிராகன்ஸ் சார்பில் சசிதரன் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
இதையடுத்து, 179 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் திண்டுக்கல் அணி களமிறங்கியது. அந்த அணியின் விமல்குமார் அதிரடியாக ஆடினார். சிக்சர்களைப் பறக்கவிட்டார்.
17வது ஓவரில் ஒரு பவுண்டரி, 5 சிக்சர் உள்பட 34 ரன்களை விளாசினார். விமல்குமார் 30 பந்தில் 65 ரன்களைக் குவித்து ஆட்டம் இழந்தார். பாபா இந்திரஜித் 41 ரன்கள் எடுத்தார்.
இறுதியில் திண்டுக்கல் அணி 18.4 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 182 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றதுடன் இறுதிப்போட்டிக்கும் முன்னேறி அசத்தியது.






