என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விஜய் தலைமையில் இன்று த.வெ.க. செயற்குழு கூட்டம்
    X

    விஜய் தலைமையில் இன்று த.வெ.க. செயற்குழு கூட்டம்

    • 2026 சட்டசபை தேர்தல், மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம், கூட்டணி தொடர்பாக நிர்வாகிகளிடம் விஜய் கருத்து கேட்கிறார்.
    • கூட்டம் முடிவில், மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் குறித்த முக்கிய அறிவிப்பை விஜய் வெளியிட இருக்கிறார்.

    சென்னை:

    தமிழக வெற்றிக் கழகத்தின் செயற்குழு கூட்டம் பனையூரில் உள்ள கட்சி அலுவலகத்தில் இன்று நடக்கிறது. இதில் பங்கேற்க செயற்குழு உறுப்பினர்கள், மாவட்ட செயலாளர்கள், சிறப்பு அழைப்பாளர்கள் என 1,200 பேருக்கு நுழைவு அடையாள அட்டை அனுப்பப்பட்டு உள்ளது.

    கட்சியின் தலைவர் விஜய் 11 மணியளவில் கூட்டத்தில் பங்கேற்க இருக்கிறார். அதனைத்தொடர்ந்து முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன. 2026 சட்டசபை தேர்தல், மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம், கூட்டணி தொடர்பாக நிர்வாகிகளிடம் விஜய் கருத்து கேட்கிறார்.

    த.வெ.க. சார்பில் மாவட்ட அளவில் கொள்கை விளக்க பொதுக்கூட்டங்கள், மக்கள் பிரச்சனை ஆர்ப்பாட்டங்கள் நடத்துவது குறித்தும் ஆலோசிக்கப்பட உள்ளன. கூட்டம் முடிவில், மக்கள் சந்திப்பு சுற்றுப்பயணம் குறித்த முக்கிய அறிவிப்பை விஜய் வெளியிட இருக்கிறார். செயற்குழு கூட்டத்தை தொடர்ந்து த.வெ.க.வின் அடுத்த கட்ட நகர்வு தொடங்க இருக்கிறது.

    Next Story
    ×