என் மலர்
உள்ளூர் செய்திகள்
- பல ரெயில்கள் தாமதமாக இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
- சென்னைக்கு ரெயில் பயணம் மேற்கொள்பவர்கள் முன் கூட்டியே தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
நெல்லை:
சென்னை தாம்பரம் ரெயில் நிலையத்தில் நடைபெறும் இன்டர்லாக் சிக்னல் பணிகள் காரணமாக தென்மாவட்டங்களில் இருந்து புறப்படும் பல ரெயில்கள் பகுதி தூரம் ரத்து செய்யப்படுவதாக ரெயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.
அதன்படி செங்கோட்டை, தென்காசி, பாவூர்சத்திரம், அம்பை, கல்லிடைக்குறிச்சி, சேரன்மகாதேவி, நெல்லை வழியாக தாம்பரத்திற்கு இயக்கப்படும் (வண்டி எண் 20683 / 20684) தாம்பரம்-செங்கோட்டை-தாம்பரம் அதிவிரைவு ரெயில் வருகிற 23-ந்தேதி முதல் அடுத்த மாதம் 11-ந்தேதி வரை விழுப்புரம் வரை மட்டுமே இயங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் பல ரெயில்கள் தாமதமாக இயங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் 23-ந்தேதி முதல் அடுத்த மாதம் 17-ந்தேதி வரை சென்னைக்கு ரெயில் பயணம் மேற்கொள்பவர்கள் முன் கூட்டியே தங்கள் பயணத்தை திட்டமிட்டு கொள்ளுமாறு ரெயில்வே நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.
அதேபோல் வருகிற ஆகஸ்ட் மாதம் 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை எக்ஸ்பிரஸ் ரெயில் செங்கல்பட்டுடன் நின்று விடும். அவை தாம்பரம் மற்றும் சென்னை எழும்பூருக்கு செல்லாது என தென்னக ரெயில்வே சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
- கார் மோதியதில் கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருவிடைமருதூர்:
தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள திருவிடைமருதூர் தெற்கு தெருவை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 70). இவர் ஆண்டலாம்பேட்டை மற்றும் இளந்துறையில் பிளவர் மில் நடத்தி வந்தார். இவர் தனது மனைவி நீலாவுடன் (65) கடைவீதிக்கு சென்று காய்கறி வாங்கிக் கொண்டு வீட்டிற்கு மொபட்டில் புறப்பட்டார்.
திருவிடைமருதூர் தெற்கு வீதியில் வந்து கொண்டிருந்த போது எதிரில் வந்த கார் எதிர்பாராதவிதமாக மொபைட் மீது மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட செல்வராஜ், நீலா ஆகியோர் பலத்த காயமடைந்தனர்.
அக்கம் பக்கத்தினர் 2 பேரையும் மீட்டு கும்பகோணம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி செல்வராஜ் இறந்தார்.
மேல் சிகிச்சைக்காக நீலாவை தஞ்சாவூர் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே நீலாவும் பரிதாபமாக உயிரிழந்தார்.
இது குறித்த புகாரின் பேரில் திருவிடைமருதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து காரை ஓட்டி வந்த திருவிடைமருதூர் மனவெளி தெருவை சேர்ந்த பாலாஜி (28) என்பவரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கார் மோதியதில் கணவன்-மனைவி இருவரும் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
+2
- மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண மற்றொரு அறையில் 14 மேஜைகள் போடப்பட்டிருந்தது.
- வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விக்கிரவாண்டி:
விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதியில் எம்.எல்.ஏ.வாக இருந்த நா.புகழேந்தி மரணம் அடைந்ததால் அங்கு கடந்த 10-ந்தேதி இடைத்தேர்தல் நடைபெற்றது.
தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா, பா.ம.க. வேட்பாளர் சி.அன்புமணி, நாம் தமிழர் கட்சி வேட்பாளர் அபிநயா உள்பட 29 பேர் போட்டியிட்டனர். மொத்தமுள்ள 2 லட்சத்து 37 ஆயிரத்து 31 வாக்காளர்களில் 1 லட்சத்து 95 ஆயிரத்து 495 பேர் வாக்களித்தனர். இது 82.47 சதவீத வாக்கு பதிவாகும்.
ஓட்டுப்பதிவு முடிவடைந்ததும், வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் மையமான பனையபுரம் அரசு மேல்நிலைப்பள்ளி மையத்திற்கு கொண்டு செல்லப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டது.
பரபரப்பாக எதிர்பார்க்கப்பட்ட இந்த தேர்தலில் இன்று (சனிக்கிழமை) காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது.
இதையொட்டி காலை 7.30 மணியளவில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறையின் சீல் அகற்றப்பட்டு வாக்குப்பதிவு எந்திரங்கள், வாக்கு எண்ணும் அறைக்கு கொண்டு செல்லப்பட்டன.
அதுபோல் விக்கிரவாண்டி தாலுகா அலுவலகத்தில் இருந்து தபால் வாக்குச்சீட்டுகள் அடங்கிய பெட்டிகளும் கொண்டு வரப்பட்டது. வாக்கு எண்ணிக்கை தொடங்கியதும் முதலாவதாக தபால் வாக்குகள் எண்ணப்பட்டன.
இதற்காக அங்குள்ள தனி அறையில் 2 மேஜைகள் போடப்பட்டு அங்கு தபால் வாக்குகள் எண்ணப்பட்டன. தபால் வாக்குகள் எண்ணப்பட்ட போது சில வாக்குச் சீட்டுகளில் கூடுதல் மை கொட்டி இருந்தது.
இதனால் அந்த வாக்குச் சீட்டுகளை செல்லாது என்று தேர்தல் அதிகாரி அறிவித்தார். இதற்கு பா.ம.க. தரப்பில் கடும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதனால் சிறிது நேரம் சர்ச்சை நிலவியது.
அதன் பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன. வாக்கு எண்ணும் பணியில் 14 கிராம உதவியாளர்கள், தாசில்தார்கள், துணை தாசில்தார்கள் மற்றும் அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த அலுவலர்கள், ஊழியர்கள் என 150 பேர் ஈடுபட்டனர்.
வாக்கு எண்ணிக்கையை எந்தவித அசம்பாவிதமும் ஏற்படாமல் அமைதியான முறையில் நடத்தி முடிக்க ஏதுவாக, வாக்கு எண்ணும் மையத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. திஷாமித்தல், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு தீபக் சிவாச் ஆகியோர் தலைமையில் 4 கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள், 7 துணை போலீஸ் சூப்பிரண்டுகள், 28 இன்ஸ்பெக்டர்கள், 86 சப்-இன்ஸ்பெக்டர்கள் மற்றும் போலீசார், தமிழ்நாடு சிறப்பு காவல் படையினர், துணை ராணுவப்படையினர் என 1,195 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மின்னணு எந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ண மற்றொரு அறையில் 14 மேஜைகள் போடப்பட்டிருந்தது. ஒவ்வொரு மேஜையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணிக்கை நிகழ்வுகளை சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கவும், வீடியோ கேமரா மூலம் பதிவு செய்யவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வாக்கு எண்ணிக்கையை 20 சுற்றுகளாக நடத்தி முடிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. 9.30 மணி அளவில் முதல் சுற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவு அறிவிக்கப்பட்டது.
தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 8,565, பாம.க. வேட்பாளர் சி.அன்புமணி 3,906, நாம் தமிழர் வேட்பாளர் டாக்டர் அபிநயா 303 வாக்குகள் பெற்று இருந்தனர். 2-வது சுற்றில் தி.மு.க. 12,002, பாம.க. 5904, நாம் தமிழர் 819 பெற்றனர்.
2-வது சுற்று ஓட்டு எண்ணிக்கை முடிவில் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 6,524 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலையில் இருந்தார். 3-வது சுற்றில் தி.மு.க. 18,057, பா.ம.க. 7,323, நாம் தமிழர் 1,383 வாக்குகள் பெற்றன. 4-வது சுற்றில் தி.மு.க. 24,169 பா.ம.க. 9,131, நாம் தமிழர் 1,500 வாக்குகள் பெற்றன.
4-வது சுற்று முடிவில் தி.மு.க. 15038 வாக்குகள் அதிகம் பெற்று முன்னிலை யில் இருந்தது. 10.30 மணி அளவில் 5-வது சுற்று முடிவுகள் வெளியானது. அப்போது தி.மு.க. 24,171, பா.ம.க. 8,825, நாம் தமிழர் 1,763 வாக்குகள் பெற்று இருந்தன.
இதனால் 5-வது சுற்று முடிவில் தி.மு.க. வேட்ப ளர் அன்னியூர் சிவா 15,346 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார். 6-வது சுற்று முடிவில் தி.மு.க. 31,151, பா.ம.க. 11,483, நாம் தமிழர் கட்சி 2,275 வாக்குகள் பெற்று இருந்தன. தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா 19,668 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருந்தார்.
இதேபோல் தொடர்ந்து ஒவ்வொரு சுற்று முடிவிலும் தி.மு.க. வேட்பாளர் அன்னியூர் சிவா முன்னிலை வகித்து வருகிறார். நண்பகல் 12.30 மணி நிலவரப்படி தி.மு.க. 83,431, பா.ம.க. 36,341, நாம் தமிழர் 6,767 வாக்குகள் பெற்று இருந்தன.
இதன் மூலம் தி.மு.க. விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அமோக வெற்றி பெறுவது தொடக்கத்திலேயே உறுதியானது. இதனால் தி.மு.க. தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
இதனிடையே, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் அன்னியூர் சிவா அதிக வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ள நிலையில், சென்னை அண்ணாஅறிவாலயத்தில் தி.மு.க. தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்கினார்.
- சண்டாளன் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தியவர் கருணாநிதி.
- சண்டாளர் என்ற வார்த்தை பயன்படுத்தியதால் கந்த சஷ்டி கவசம் எழுதியவர் மீதும் எஸ்சி, எஸ்டி வழக்கு போட முடியுமா?
சென்னை:
சென்னை சேப்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* சண்டாளன் என்ற வார்த்தை கிராமங்களில் இயல்பாக பயன்படுத்தப்படும் வார்த்தை.
* சண்டாளன் என்ற வார்த்தையை அதிகம் பயன்படுத்தியவர் கருணாநிதி.
* சண்டாளன் என்று ஒரு சமூகம் இருப்பது எனக்கு தெரியாது. வழக்கு மொழியாக தான் பேசினேன்.
* திருமூலர் வரை சண்டாளர் வார்த்தை பயன்படுத்தி உள்ளார். கந்த சஷ்டி கவசத்தில் அந்த வார்த்தை உள்ளது.
* சண்டாளர் என்ற வார்த்தை பயன்படுத்தியதால் கந்த சஷ்டி கவசம் எழுதியவர் மீதும் எஸ்சி, எஸ்டி வழக்கு போட முடியுமா? என்று கூறினார்.
- 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
- விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சென்னை காட்டுப்பள்ளி துறைமுகத்தில் கன்டெய்னர் பெட்டி விழுந்து விபத்துக்குள்ளானது.
அதிக எடை கொண்ட கன்டெய்னர் விழுந்ததில், கீழே வாகனத்தில் இருந்த ஓட்டுநர் உடல் நசுங்கி உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்தில் படுகாயமடைந்த 3 பேருக்கு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
கிரேன் மூலம் கன்டெய்னரை தூக்கியபோது கீழே நிறுத்தப்பட்டிருந்த வாகனம் மீது விழுந்து விபத்துக்குள்ளானது.
விபத்து குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஜெயலலிதா இருக்கும் மேடைகளில் கலைஞர் தொடர்பாக பாடல் ஒலிக்கப்பட்டுள்ளது.
- கர்ம வீரர் காமராஜரை கருவாட்டுக்காரி மகன் என பேசியவர் கருணாநிதி.
சென்னை:
சென்னை சேப்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* கலைஞர் தொடர்பான பிரச்சனைக்கு உரிய பாடலை உருவாக்கியது அதிமுக.
* ஜெயலலிதா இருக்கும் மேடைகளில் கலைஞர் தொடர்பாக பாடல் ஒலிக்கப்பட்டுள்ளது. கலைஞர் குறித்து அதிமுக பல வருடங்களாக பாடிய பாடலைத்தான் நாங்கள் பாடினோம்.

* கலைஞர் தொடர்பான பிரச்சனைக்கு உரிய பாடலுக்கும் நாம் தமிழருக்கும் தொடர்பு இல்லை.
* அந்த பாடலை எழுதி வெளியிட்டது அதிமுக தான். அப்போதெல்லாம் எங்கே போனீர்கள், இப்போது என்னை கேள்வி எழுப்புகிறீர்கள்?
* அவதூறாக பேசுவதற்கு பிறப்பிடமே திமுக கட்சி தான்.
* கர்ம வீரர் காமராஜரை கருவாட்டுக்காரி மகன் என பேசியவர் கருணாநிதி.
* எம்ஜிஆரை ஆண்மையற்றவர் என திமுகவினர் பேசி உள்ள வரலாறு உண்டு.
* திமுகவின் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சைதை சாதிக் பெண்களை இழிவுபடுத்தி உள்ளனர் என்று கூறினார்.
- பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளதால் அதற்கான ஆவணங்களையும் போலீசார் சரிபார்த்தனர்.
- 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
பெரியகுளம்:
தேனி மாவட்டம் பெரியகுளம் தென்கரை பகுதியில் 2 எண் இணை சார்பதிவாளர் அலுவலகம் உள்ளது. இங்கு நேற்று காலை முதல் அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெறுவதாக தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் தேனி மாவட்ட லஞ்ச ஒழிப்பு டி.எஸ்.பி. சுந்தர்ராஜன், இன்ஸ்பெக்டர்கள் ராமேஸ்வரி, ஜெயப்பிரியா தலைமையிலான போலீசார் சார்பதிவாளர் அலுவலகத்தில் நுழைந்து சோதனை நடத்தினர்.
மாலை 4 மணிக்கு தொடங்கிய சோதனை 6 மணி நேரத்துக்கு மேலாக நீடித்தது. இதில் கணக்கில் வராத ரூ.87,500யை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றினர். அதிக அளவில் பத்திரப்பதிவு நடைபெற்றுள்ளதால் அதற்கான ஆவணங்களையும் போலீசார் சரிபார்த்தனர்.
இந்த அலுவலகத்தில் 2 ஆண்டுகளாக தாமரைக்குளம் தாசில்தார் நகரை சேர்ந்த பரமேஸ்வரி (வயது56) என்பவர் பணிபுரிந்து வருகிறார். அவரிடம் போலீசார் பத்திரப்பதிவுகள் குறித்த விபரங்கள் குறித்து கேட்டறிந்தனர். மேலும் இது தொடர்பாக ஆவணங்களையும் சேகரித்தனர். சோதனையின் போது அலுவலகத்தில் பத்திரப்பதிவுக்காக வந்திருந்த பொதுமக்கள் வெளியேற்றப்பட்டன. மேலும் இணை சார்பதிவாளர் பரமேஸ்வரி, அலுவலக உதவியாளர்கள் உள்பட 3 பேர் மீது லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
- மழையால் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
- இரவு நேரத்தில் தடுப்புச்சுவர் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் தப்பினர்.
கோத்தகிரி:
நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது.
கூடலூர், பந்தலூர், ஊட்டி உள்ளிட்ட பகுதிகளில் அவ்வப்போது மழை பெய்து வருகிறது. ஆனால் குன்னூர், கோத்தகிரி பகுதிகளில் பருவமழை பெய்யாமல் ஏமாற்றி வந்தது.
அவ்வப்போது சாரல் மழை மட்டுமே பெய்து வந்தது. இந்த நிலையில் நேற்று மாலையில் குன்னூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் மழை பெய்ய தொடங்கியது. சிறிது நேரத்தில் பலத்த மழையாக மாறியது.
சில மணி நேரங்கள் பலத்த மழையாக கொட்டி தீர்த்தது. அதனை தொடர்ந்து விடிய, விடிய விட்டு விட்டு மழை பெய்து கொண்டே இருந்தது. இந்த மழையால் குன்னூரில் உள்ள முக்கிய சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. மழையுடன் கடும் குளிரும் நிலவியது. திடீர் மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தொடர் மழைக்கு குன்னூர் அருகே உள்ள பிளாக் பிரிட்ஜ் பகுதியில் ராட்சத மரம் ஒன்று சாலையின் நடுவே விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதேபோல் இன்று அதிகாலை 5 மணியளவில் குன்னூர்-மஞ்சூர் சாலையிலும் மரம் விழுந்தது. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தகவல் அறிந்த குன்னூர் தீயணைப்பு துறை நிலைய அலுவலர் குமார் தலைமையிலான வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று மரங்களை வெட்டி அகற்றி போக்குவரத்தை சீர்படுத்தினர்.
கோத்தகிரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான கொடநாடு, கீழ்கோத்தகிரி, கட்டபெட்டு உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்தது. இந்த மழையால் சுற்றுவட்டார பகுதிகள் முழுவதும் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவுகிறது.
இந்த மழைக்கு, கோத்தகிரி பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளியின் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. இரவு நேரத்தில் தடுப்புச்சுவர் விழுந்ததால் அதிர்ஷ்டவசமாக மாணவர்கள் தப்பினர்.
இந்த சாலை வழியாக தான் மாணவர் நல விடுதி, வனத்துறை அலுவலக குடியிருப்பு, அரசு ஊழியர் மற்றும் காவலர் குடியிருப்புகளுக்கு செல்ல வேண்டும். பரபரப்பாக இருக்கக்கூடிய இந்த சாலையில், தடுப்பு சுவர் இடிந்து விழுந்ததால் அப்பகுதிக்கு செல்லக் கூடியவர்கள் மிகவும் சிரமம் அடைந்தனர். தொடர்ந்து அதனை அகற்றும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.
இந்த பள்ளியில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு தான், பள்ளி வளாகத்திற்குள் நுழைவதை தடுக்கும் வகையில் ரூ.70 லட்சம் மதிப்பில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டது. கடந்த மே மாதம் 19-ந் தேதி பெய்த மழைக்கு இந்த தடுப்புச்சுவர் இடிந்து விழுந்தது. பின்னர் மீண்டும் இடிந்து விழுந்த இடத்தில் தடுப்புச்சுவர் கட்டப்பட்டு, வர்ணம் பூச்சு பணி நடந்து வந்தது.
இந்தநிலையில் தான் 2-வது முறையாக ஏற்கனவே இடிந்த பகுதியின் அருகே மீண்டும் தடுப்புச்சுவர் இடிந்து விழுந்துள்ளது.
- 124.80 அடி உயரமுள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 104.60 அடியாக இருந்தது.
- மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 42 அடியாக இருந்தது.
சேலம்:
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. இதன் காரணமாக கர்நாடகாவில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள கிருஷ்ண ராஜசாகர் மற்றும் கபினி அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்து காணப்படுகிறது.
124.80 அடி உயரமுள்ள கிருஷ்ண ராஜ சாகர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 104.60 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3406 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 2257 கனஅடி தண்ணீர் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது.
இதே போல் 84 அடி உயரமுள்ள கபினி அணையின் நீர்மட்டம் 82.91 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 6424 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 5 ஆயிரம் கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. கபினி அணை விரைவில் நிரம்பும் நிலையில் உள்ளது. கிருஷ்ண ராஜ சாகர் மற்றும் கபினி அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரி ஆற்றில் வினாடிக்கு 7 ஆயிரத்து 257 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருக்கிறது.
மேட்டூர் அணையின் நீர்மட்டம் இன்று காலை 42 அடியாக இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3191 கனஅடி தண்ணீர் வந்து கொண்டு இருந்தது. அணையில் இருந்து வினாடிக்கு 1000 கனஅடி தண்ணீர்வெளியேற்றப்பட்டு வருகிறது.
- ஐந்தருவில் 5 கிளைகளிலும் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டியது.
- மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி ஆக்ரோஷமாக தண்ணீர் விழுந்தது.
தென்காசி:
தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதிகள், செங்கோட்டை, புளியரை, இலஞ்சி, தென்காசி நகரம், பாவூர்சத்திரம் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை முதல் தொடர்ந்து சாரல் மழை பெய்தது.
மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் கனமழை நீடித்ததால் குற்றாலத்தில் உள்ள மெயின் அருவி, பழைய குற்றாலம், ஐந்தருவி, சிற்றருவி, புலி அருவி உள்ளிட்ட அருவிகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. சிறிது நேரத்தில் பழைய குற்றாலம், ஐந்தருவி, மெயின் அருவியில் வெள்ளப்பெருக்காக மாறியதால் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு நலன் கருதி குளிக்க தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவில் 5 கிளைகளிலும் ஆர்ப்பரித்து தண்ணீர் கொட்டியது. மெயின் அருவியில் பாதுகாப்பு வளைவை தாண்டி ஆக்ரோஷமாக தண்ணீர் விழுந்தது.
இன்று காலையில் மழை குறைந்து அருவிகளில் வெள்ளப்பெருக்கும் குறைந்ததால் புலி அருவி, பழைய குற்றாலம் அருவிகளில் காலை முதலே சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி வழங்கப்பட்டது.
ஐந்தருவி, மெயின் அருவியிலும் தண்ணீரின் சீற்றம் குறைந்ததால் இன்று காலை சுற்றுலா பயணிகள் அங்கும் குளிக்க அனுமதிக்கப்பட்டனர். தென்காசி மற்றும் குற்றாலம் பகுதிகளில் காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது. குளிர்ந்த காற்றுடன் ரம்மியமான சூழ்நிலை நிலவி வருவதாலும், இன்று விடுமுறை தினம் என்பதாலும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை காலை முதலே அதிகமாக காணப்பட்டது.
- தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர்செல்வம் ஆகியோருடன் சென்று ஆய்வு செய்தார்.
- நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி சார்பில் நாகர்கோவிலில் வருகின்ற 15 ஆம் தேதி மிக சிறப்பாக நடைபெற இருக்கும் பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாள் விழா பொதுக்கூட்ட ஏற்பாடுகளை கன்னியகுமாரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் மற்றும் மாவட்ட தலைவர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் தமிழ் நாடு காங்கிரஸ் கமிட்டி பொது செயலாளர்செல்வம் ஆகியோருடன் சென்று ஆய்வு செய்தார்.

இந்நிகழ்ச்சியில் பொதுமக்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையொப்பம் இட்டுள்ளார்.
- மத்திய அரசிடம் மாதிரி வடிவத்தை தமிழக அரசு வழங்கி உள்ளது.
தமிழகத்தின் முன்னாள் முதலமைச்சரான திமுகவின் தலைவருக்காக 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி' என்ற பெயரில் ஒரு நினைவு நாணயம் வெளியிட தமிழக அரசு விரும்பியது.
இதற்காக, ரூ.100 மதிப்பில் நினைவு நாணயம் வெளியிடும்படி மத்திய நிதியமைச்சகத்திடம் தமிழக அரசு சார்பில் கடந்த வருடம் கோரிக்கை வைக்கப்பட்டது.
இந்நாணயத்தை கலைஞர் கருணாநிதியின் நூறாவது பிறந்தநாளில் கடந்த ஜூன் 3-ல் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. பல்வேறு காரணங்களால் இந்த நாணயம் குறிப்பிட்ட தேதியில் வெளியிட முடியாமல் போனது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நாணயத்திற்கான அனுமதி கோப்பில் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கையொப்பம் இட்டதாக தகவல் வெளியானது.
தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று முன்னாள் முதலமைச்சர் 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் டாக்டர் மு.கருணாநிதி' என்ற பெயரில் நினைவு நாணயம் வெளியிட மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது.
ஆங்கிலம் மற்றும் இந்தியில் அவரின் பெயருடன் 'தமிழ் வெல்லும்' என்ற வாசகம் இந்த நாணயத்தில் இடம் பெற உள்ளது. இதற்கான உத்தரவு விரைவில் மத்திய அரசின் அரசிதழில் வெளியாக உள்ளதாகவும், இதற்கான மாதிரி வடிவத்தை தமிழக அரசு வழங்கி உள்ளதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில், கலைஞர் நூற்றாண்டையொட்டி 100 ரூபாய் நினைவு நாணயம் வெளியிடுவதற்கான அரசாணை மத்திய அரசின் அரசிதழில் வெளியானது.
நாணையத்தின் ஒரு புறம் 'முத்தமிழ் அறிஞர் கலைஞர் பிறந்த நாள் நூற்றாண்டு 1924 – 2024' என அச்சிடப்பட்டும். மறுபுறத்தில் தேசிய நினைவுச் சின்னத்துடன் ரூ.100 என நாணயத்தின் மதிப்பும் குறிப்பிடப்பட்டுள்ளது.






