என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    அவதூறு பேச்சின் பிறப்பிடமே தி.மு.க. தான் - சீமான்
    X

    அவதூறு பேச்சின் பிறப்பிடமே தி.மு.க. தான் - சீமான்

    • ஜெயலலிதா இருக்கும் மேடைகளில் கலைஞர் தொடர்பாக பாடல் ஒலிக்கப்பட்டுள்ளது.
    • கர்ம வீரர் காமராஜரை கருவாட்டுக்காரி மகன் என பேசியவர் கருணாநிதி.

    சென்னை:

    சென்னை சேப்பாக்கத்தில் நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * கலைஞர் தொடர்பான பிரச்சனைக்கு உரிய பாடலை உருவாக்கியது அதிமுக.

    * ஜெயலலிதா இருக்கும் மேடைகளில் கலைஞர் தொடர்பாக பாடல் ஒலிக்கப்பட்டுள்ளது. கலைஞர் குறித்து அதிமுக பல வருடங்களாக பாடிய பாடலைத்தான் நாங்கள் பாடினோம்.

    * கலைஞர் தொடர்பான பிரச்சனைக்கு உரிய பாடலுக்கும் நாம் தமிழருக்கும் தொடர்பு இல்லை.

    * அந்த பாடலை எழுதி வெளியிட்டது அதிமுக தான். அப்போதெல்லாம் எங்கே போனீர்கள், இப்போது என்னை கேள்வி எழுப்புகிறீர்கள்?

    * அவதூறாக பேசுவதற்கு பிறப்பிடமே திமுக கட்சி தான்.

    * கர்ம வீரர் காமராஜரை கருவாட்டுக்காரி மகன் என பேசியவர் கருணாநிதி.

    * எம்ஜிஆரை ஆண்மையற்றவர் என திமுகவினர் பேசி உள்ள வரலாறு உண்டு.

    * திமுகவின் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி, சைதை சாதிக் பெண்களை இழிவுபடுத்தி உள்ளனர் என்று கூறினார்.

    Next Story
    ×