search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Chennai Port"

    • 142 ஆண்டுகள் பழமையான சென்னை துறைமுகம் சென்னை மாநகரத்தின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி உள்ளது.
    • பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சென்னை துறைமுகத்தின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    சென்னை:

    கடந்த நிதியாண்டில் சென்னை துறைமுகம் ரூ.156 கோடி லாபம் ஈட்டி படைத்துள்ளது என்று துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தெரிவித்து உள்ளார்.

    சுதந்திர தின விழாவை முன்னிட்டு சென்னை துறைமுக தலைவர் சுனில் பாலிவால் தேசிய கொடியை ஏற்றி வைத்தார். மத்திய தொழில் பாதுகாப்பு படையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் பேசியதாவது:-

    142 ஆண்டுகள் பழமையான சென்னை துறைமுகம் சென்னை மாநகரத்தின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றி உள்ளது. மேலும் நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு மிகவும் உறுதுணையாக இத்துறைமுகம் இருந்து வருகிறது. கடந்த 13 ஆண்டுகளில் இல்லாத வகையில் முதல் முறையாக கடந்த நிதி ஆண்டில் ரூ. 156 கோடி லாபம் ஈட்டி சாதனை படைத்துள்ளது. தற்போது செயல்பாட்டில் உள்ள முக்கிய திட்டங்களை விரைவாக முடித்திட அனைத்து அதிகாரிகளும் உறுதுணையாக இருந்து பணியாற்றி வருகின்றனர்.

    சென்னை துறைமுகத்தில் இருந்து பூந்தமல்லி நெடுஞ்சாலை மதுரவாயல் வரை அமைக்கப்பட உள்ள ஈரடுக்கு மேம்பால திட்டத்திற்கான பணிகள் விரைவில் தொடங்கப்பட்டு இரண்டரை ஆண்டுகளுக்குள் கட்டுமான பணிகள் முடிக்கப்படும். ஸ்ரீபெரும்புதூர் அருகே மப்பேட்டில் ரூ.1400 கோடி மதிப்பீட்டிலான பல்நோக்கு சரக்குகள் கையாளும் முனையம் அமைப்பதற்கான பணிகள் விரைவாக நடைபெற்று வருகிறது.

    இது போன்ற பல்வேறு நடவடிக்கைகள் மூலம் சென்னை துறைமுகத்தின் வளர்ச்சி விகிதம் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அடுத்த ஓராண்டுக்கு முன் அனைத்து திட்டங்களும் செயல்படுத்தி முடிக்கப்படும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    சென்னை துறைமுகத்தில் லாரி டிரைவர்களை கத்தியால் குத்தி செல்போன் மற்றும் பணம் பறித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #robbery

    திருவொற்றியூர்:

    சென்னை துறைமுகத்திற்கு சரக்குகளை ஏற்றி கொண்டு செல்லும் கண்டெய்னர் லாரிகளை எண்ணூர் கடற்கரை சாலையில் வரிசையில் நிறுத்தி விட்டு டிரைவர்கள் வண்டியில் காத்து இருப்பார்கள்.

    வட மாநிலத்தைச் சேர்ந்த டிரைவர் தினேஷ், திருச்சிணாங்குப்பம் அருகே நிறுத்தி விட்டு லாரியில் உட்கார்ந்து இருந்தார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் டிரைவர் தினேசிடம் இருந்த செல்போனை பறித்தனர்.

    தடுக்க முயன்ற தினேசை கத்தியால் காலில் குத்தி விட்டு அவரிடமிருந்து ரொக்கம் ஆயிரத்தை பறித்து கொண்டு மோட்டார் சைக்கிளில் தப்பி ஓடிவிட்டனர்.

    உடனே தினேஷ் ரோந்து சென்ற திருவொற்றியூர் போலீசாரிடம் கூறினார். அவர்கள் தேடுதல் வேட்டை நடத்திய போது, சிறிது தூரத்தில் மற்றொரு டிரைவர் முருகேசனை கத்தியால் குத்தி விட்டு அவரிடம் இருந்து செல்போன், ரூ. 800 பறித்து விட்டு தப்பி ஓடிய 2 பேரை போலீசார் துரத்தி சென்றனர்.

    தாங்கல் தியாகராயபுரத்தில் போலீசார் ஒருவனை பிடித்தனர். விசாரணையில் அவன் ராம்குமார் என்பது தெரியவந்தது. தப்பியோடிய அதே பகுதியை சேர்ந்த மதனை தேடி வருகிறார்கள்.

    கச்சா எண்ணெயுடன் மிகப்பெரிய கப்பல் வந்ததன் மூலம் கடல்சார் வர்த்தக சேவையில் சென்னை துறைமுகம் மைல் கல்லை எட்டியிருப்பதாக மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தெரிவித்தார். #ChennaiPort
    சென்னை:

    கிரீஸ் நாட்டின் போர்டோ எம்போரியஸ் நிறுவனத்துக்கு சொந்தமான ‘எம்.டி. நியூ டைமண்ட்’ என்ற மிகப்பெரிய கப்பல், கச்சா எண்ணெயுடன் சென்னை துறைமுகத்துக்கு வந்துள்ளது. கேப்டன் நிகிடாஸ் என்பவரின் தலைமையின் கீழ் 24 பணியாளர்களுடன் கடந்த 20-ந் தேதி ஈராக்கில் உள்ள அல் பஸ்ராவில் இருந்து புறப்பட்டு நேற்று காலை 9.46 மணிக்கு இந்த கப்பல் சென்னைக்கு வந்தது.

    சென்னை துறைமுகத்தில் இதுவரை கையாளப்பட்ட எண்ணெய் கப்பல்களில் இது தான் மிகப்பெரியது. இந்த கப்பலை மத்திய இணை மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன், சென்னை துறைமுக தலைவர் ரவீந்திரன் ஆகியோர் வரவேற்றனர்.

    பின்னர் பொன்.ராதா கிருஷ்ணனும், ரவீந்திரனும் நிருபர்களிடம் கூறியதாவது:-


    சென்னை துறைமுகத்துக்குள் முதல் முறையாக மிகப்பெரிய கப்பல் வந்து இருக்கிறது. இதன் மூலம் கடல்சார் வர்த்தக சேவையில் சென்னை துறைமுகம் மைல் கல்லை எட்டி உள்ளது. 1 லட்சத்து 60 ஆயிரம் டன் கச்சா எண்ணெயை சென்னையில் இறக்குமதி செய்ய வந்து இருக்கிறது. இந்த கப்பல் 3 லட்சம் டன் கச்சா எண்ணெயை சுமந்து வரும் திறன் கொண்டது.

    தற்போது சோதனை ஓட்டமாக அதன் கொள்ளளவை பாதியாக குறைத்து கொண்டுவரப்பட்டு இருக்கிறது. முழு கொள்ளளவுடன் கப்பல் துறைமுகத்துக்குள் வருவதற்கு 20 மீட்டர் ஆழம் தேவை. நமது துறைமுகம் 12 மீட்டர் ஆழம்தான் இருக்கிறது. அதை 16 மீட்டராக ஆழப்படுத்துவதற்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் 2 ஆண்டுக்குள் 16 மீட்டர் ஆழத்தை நடைமுறைக்கு கொண்டு வந்துவிடுவோம். அப்படி வந்தால் 2 லட்சத்து 50 ஆயிரம் டன் கொள்ளளவு கொண்ட எண்ணெய் கப்பலை நிறுத்த முடியும். துறைமுக விரிவாக்க பணிகளுக்காக ரூ.14 கோடிக்கு ஒப்பந்தம் போடப்பட்டு இருக்கிறது.

    சென்னை துறைமுகத்துக்குள் மிகப்பெரிய கச்சா எண்ணெய் கப்பல் வருவதால் துறைமுக உபயோகிப்பாளர்களுக்கு 30 முதல் 40 சதவீதம் செலவினம் குறையும்.

    மதுரவாயல்-துறைமுகம் பறக்கும் சாலை திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கை 2 மாதத்தில் முடிந்துவிடும். குளச்சல் துறைமுகத்துக்கான விரிவான திட்ட அறிக்கை இறுதி கட்டத்தில் இருக்கிறது.

    தூய்மை இந்தியா திட்டத்தின் ஒரு பகுதியாக துறைமுகத்துக்குள் சாலை மற்றும் கப்பல் தளங்களில் தூசுவை அகற்ற சுத்தம் செய்யும் எந்திரம் வாங்கப்பட்டு இருக்கிறது. இதன் மூலம் ஒரு மணி நேரத்தில் 5 கிலோ மீட்டர் தூரத்தை சுத்தம் செய்ய முடியும். சென்னை துறைமுகத்தில் மணல் இறக்குமதி செய்ய ஒப்புதல் வாங்கப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர். #ChennaiPort
    ×