என் மலர்
உள்ளூர் செய்திகள்
- 11-ம் வகுப்பு செய்முறை தேர்வு பிப்ரவரி 15-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெறும்.
- அடுத்தாண்டு மார்ச் 28-ந்தேதி முதல் ஏப்ரல் 15-ந்தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும்.
2024-2025 கல்வி ஆண்டுக்கான 10, 11, 12-ம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு அட்டவணையை கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இருந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். அப்போது அவர் கூறியதாவது:
செய்முறை தேர்வு
* 12-ம் வகுப்பு செய்முறை தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 7-ந்தேதி முதல் 14-ந்தேதி வரை நடைபெறும்.
* 11-ம் வகுப்பு செய்முறை தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 15-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை நடைபெறும்.
* 10-ம் வகுப்பு செய்முறை தேர்வு அடுத்தாண்டு பிப்ரவரி 22-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடைபெறும்.
பொதுத்தேர்வு
* அடுத்தாண்டு மார்ச் 3-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை பிளஸ் 2 பொதுத்தேர்வு நடக்கும்.
* அடுத்தாண்டு மார்ச் 5-ந்தேதி முதல் 27-ந்தேதி பிளஸ் 1 பொதுத்தேர்வு நடக்கும்.
* அடுத்தாண்டு மார்ச் 28-ந்தேதி முதல் ஏப்ரல் 15-ந்தேதி வரை 10ம் வகுப்பு பொதுத்தேர்வு நடக்கும்.
பொதுத்தேர்வு முடிவுகள்
* 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 9-ந்தேதி வெளியாகும்.
* 10, 11-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 19-ந்தேதி வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்.
- நாளை வடகிழக்கு பருவமழை தொடங்க உள்ளது.
- சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதிக கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை:
வங்கக் கடலில் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வந்தது. அது இன்று (திங்கட்கிழமை) குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக (புயல் சின்னம்) மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது.
அதன்படி இன்று அதிகாலை 5.30 மணியளவில் வங்கக்கடலில் தென் மத்திய பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி (புயல் சின்னம்) உருவானது. இது மேற்கு, வட மேற்கு திசை நோக்கி நகர்ந்து வருகிறது.
அதன் நகர்வை பொறுத்து தமிழகத்தில் பலத்த மழை பெய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதுகுறித்து இந்திய வானிலை ஆய்வு மையம் கூறி இருப்பதாவது:-
வங்கக் கடலில் தென் மத்திய பகுதியில் இன்று அதிகாலை 5.30 மணிக்கு குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அது இன்று காலை 8.30 மணி அளவில் அதே பகுதியில் மையம் கொண்டிருந்தது.
இது மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து நாளைக்குள் தெற்கு வங்க கடலின் மத்திய பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும். பின்னர் அது வடதமிழகம், புதுவை மற்றும் தெற்கு ஆந்திரா கடலோர பகுதிகளை நோக்கி 48 மணி நேரத்தில் நகரும்.
மேலும் கிழக்கு மற்றும் வடகிழக்கு காற்று தென்னிந்திய பகுதியில் வீசும் நிலையில் நாளை அல்லது நாளை மறுநாள் வடகிழக்கு பருவ மழை தொடங்கிவிடும்.
இதற்கிடையே வங்கக் கடலில் உருவான புயல் சின்னம் காரணமாக தமிழகத்தில் கனமழை தொடங்கி உள்ளது.
இன்று விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் ஓரிரு இடங்களில் கனமழை பெய்தது.
நாளை (15-ந்தேதி) சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களிலும், புதுச்சேரியில் ஓரிரு இடங்களிலும் கனமழை முதல் மிக கனமழை பெய்யும்.
மேலும் வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள், காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வருகிற 16-ந்தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மிக கனமழை முதல் அதி கன மழை பெய்ய வாய்ப்புள்ளது. ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
அதன்படி சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட வட மாவட்டங்களில் நாளை (15-ந்தேதி), நாளை மறுநாள் (16-ந்தேதி) ஆகிய 2 நாட்களும் 20 சென்டி மீட்டருக்கு மேல் பலத்த மழை பெய்ய வாய்ப்புள்ளது.
வருகிற 17-ந்தேதி திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யும். சென்னை, காஞ்சீபுரம், திருவண்ணாமலை, தர்மபுரி, சேலம், ஈரோடு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழையும் பெய்ய வாய்ப்புள்ளது.
வருகிற 18 மற்றும் 19-ந்தேதிகளில் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.
சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு வானம் பொதுவாக மேக மூட்டத்துடன் காணப்படும். சென்னையின் ஒரு சில பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மற்றும் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழக கடலோர பகுதிகள் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் இன்று முதல் வருகிற 17-ந்தேதி வரை மணிக்கு 35 கிலோ மீட்டர் முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசும் என்பதால் மீனவர்கள் மீன் பிடிக்க செல்ல வேண் டாம் என்று எச்சரிக்கப்படுகிறது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதற்கிடையே மத்திய அரபிக்கடல் பகுதியில் ஏற்பட்ட காற்றழுத்த தாழ்வு பகுதி மணிக்கு 4 கிலோ மீட்டர் வேகத்தில் மேற்கு-வடமேற்கு திசையில் மெதுவாக நகர்ந்து இன்று அதிகாலை 8.30 மணியளவில் அதே பகுதியில் மையம் கொண்டு இருந்தது.
இது தொடர்ந்து மேற்கு-வடமேற்கு திசையில் ஓமன் கடற்கரையை நோக்கி நகர்ந்து படிப்படியாக வலுவிழந்து அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
- கர்நாடக- தமிழக எல்லையில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது.
- ஒரே நாளில் 11 ஆயிரம் கன அடி நீர் அதிகரித்துள்ளது.
மேட்டூர்:
கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிந்து அங்குள்ள கிருஷ்ணராஜசாகர், கபினி ஆகிய அணைகளில் தண்ணீர் போதுமான அளவு நிரம்பிய பிறகே உபரி நீர் தமிழகத்திற்கு திறந்து விடப்படுகிறது. இந்த உபரி நீர் காவிரி ஆறு வழியாக தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல் வழியாக மேட்டூர் அணைக்கு வந்தடைகிறது.
தற்போது கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் வி மழை பெய்து வருகிறது. இதனால் கிருஷ்ணராஜசாகர், கபினி அணைகளில் இருந்து உபரி நீர் காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது.
அதுபோல் கர்நாடக- தமிழக எல்லையில் வடகிழக்கு பருவ மழை தொடர்ந்து பெய்து வருகிறது. இதனால் காவிரி ஆற்றில் நீர்வரத்து மேலும் அதிகரித்துள்ளது. நேற்று முன்தினம் மேட்டூர் அணைக்கு வினாடிக்கு 4,938 கன அடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை 6,445 கன அடியாக அதிகரித்தது. இன்று காலையில் நீர்வரத்து மேலும் அதிகரித்து வினாடிக்கு 17,596 கன அடி வீதம் தண்ணீர் மேட்டூர் அணைக்கு வந்து கொண்டிருக்கிறது. ஒரே நாளில் 11 ஆயிரம் கன அடி நீர் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
மேட்டூர் அணையில் இருந்து தமிழக காவிரி டெல்டா பாசனத்திற்கு வினாடிக்கு 7 ஆயிரம் கன அடியும், கிழக்கு- மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கன அடி நீரும் காவிரி ஆற்றில் வெளியேற்றப்பட்டு வருகிறது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளதால் நீர்மட்டம் உயர தொடங்கியுள்ளது. நேற்று காலை 89.26 அடியாக இருந்த நீர்மட்டம் இன்று காலை 8 மணி அளவில் நீர்மட்டம் 89.92 அடியாக உயர்ந்தது. நீர் இருப்பு 52.55 டி.எம்.சி. உள்ளது.
- தலைமை செயலாளர் முருகாணந்தம் ஆட்சியர், காவல் துறை அதிகாரிகளுக்கு கடிதம்.
- முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த தலைமை செயலாளர் உத்தரவு.
வடகிழக்கு பருவமழை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழக அரசு சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்குவதை அடுத்து, முன்னெச்சரிக்கை பணிகளை தீவிரப்படுத்த ஆட்சியர்கள், காவல்துறை அதிகாரிகளுக்கு தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக தலைமை செயலாளர் முருகானந்தம் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் துறை அதிகாரிகளுக்கு கடிதம் எழுதியுள்ளார்.
அதில், மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார். நாளை வடகிழக்கு பருவமழை தொடங்கவுள்ள நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை துரிதப்படுத்த தலைமை செயலாளர் உத்தரவிட்டுள்ளார்.
முன்னதாக பருவமழை தொடங்குவதை ஒட்டி, பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்த தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அதிகாரிகளுடன் தீவிர ஆலோசனை நடத்துகிறார்.
- வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
- கோவையில் நேற்று நள்ளிரவு வரை கனமழை வெளுத்து வாங்கியது.
கோவை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை தொடங்குகிறது.
வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பே பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது.
கோவை மாவட்ட பகுதியில் கடந்த ஒருவாரமாக மாலை மற்றும் இரவு நேரத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. அதிலும் இரவில் கனமழை கொட்டித்தீர்த்து வருகிறது. கோவையில் நேற்று நள்ளிரவு வரை கனமழை வெளுத்து வாங்கியது.
கோவை பகுதியில் இரவில் மழை பெய்த நிலையில் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்நிலையில் கோவை மாவட்டத்தில் இன்று பள்ளி, கல்லூரிகள் அனைத்தும் வழக்கம்போல் இயங்கும் என கலெக்டர் கிராந்தி குமார் தெரிவித்துள்ளார்.
- சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
- சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர்.
சென்னை:
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை நாளை (செவ்வாய்க்கிழமை) தொடங்குகிறது. இதையொட்டி சென்னை உள்பட 4 மாவட்டங்களுக்கு அதி கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து பேரிடர் மீட்பு படையினரும் தயார் நிலையில் உள்ளனர். முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை தமிழக அரசும் தீவிரப்படுத்தியுள்ளது.
இந்நிலையில் வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனை நடைபெற உள்ளது.
சென்னை தலைமை செயலகத்தில் இன்று காலை 11 மணிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.
சென்னை மாநகராட்சி உள்ளிட்ட அனைத்து மாவட்ட நிர்வாக அதிகாரிகளும் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க உள்ளனர். அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன் முன் எச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொள்கிறார்.
- உத்தரபிரதேசத்துக்கு 94 லட்சத்து 50 ஆயிரத்து 268 மில்லியன் டன் உணவு தானியம் வழங்கப்பட்டுள்ளது.
- உணவு தானியம் அதிகம் பெற்ற பட்டியலில் பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன.
சென்னை:
கொரோனா பரவல் உச்சத்தில் இருந்த கடந்த 2020-ம் ஆண்டின்போது மக்களுக்கு உதவுவதற்காக மத்திய அரசு, 'பிரதமரின் கரீப் கல்யாண் அன்ன யோஜனா' என்ற உணவு பாதுகாப்பு திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இந்த திட்டத்தின் கீழ் மாதந்தோறும் ஒரு நபருக்கு தலா 5 கிலோ அரிசி, கோதுமை உள்பட உணவு தானியம் வழங்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், கடந்த 2023-24-ம் ஆண்டில் இந்த திட்டத்தின்படி நாடு முழுவதும் உள்ள மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களுக்கு 4 கோடியே 95 லட்சத்து 45 ஆயிரத்து 597 மில்லியன் டன் உணவு தானியம் விநியோகிக்கப்பட்டுள்ளது.
இதில், நாட்டிலேயே அதிகபட்சமாக உத்தரபிரதேசத்துக்கு 94 லட்சத்து 50 ஆயிரத்து 268 மில்லியன் டன் உணவு தானியம் வழங்கப்பட்டுள்ளது. உணவு தானியம் அதிகம் பெற்ற பட்டியலில் பீகார், மகாராஷ்டிரா, மேற்கு வங்காளம், மத்தியபிரதேசம், ராஜஸ்தான், கர்நாடகம் ஆகிய மாநிலங்கள் அடுத்தடுத்த இடங்களில் உள்ளன. தமிழகத்தை பொறுத்தமட்டில் இந்த காலக்கட்டத்தில் 23 லட்சத்து 36 ஆயிரத்து 649 மில்லியன் டன் உணவு தானியம் பெற்றுள்ளது.
மேற்கண்ட தகவலை மத்திய அரசு தெரிவித்துள்ளது.
- இன்று கன முதல் மிக கனமழை பெய்யும்.
- தமிழக அரசு முன்எச்சரிக்கை பணிகளை மேற்கொண்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவும் மேலடுக்கு சுழற்சி, தெற்கு வங்கக்கடல் மத்திய பகுதியில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக உருவாக வாய்ப்பு உள்ளது. இது தொடர்ந்து வலுப்பெற்று மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து, நாளை (செவ்வாய்க்கிழமை), நாளை மறுநாள் (புதன்கிழமை) புதுச்சேரி, தமிழகத்தின் வட மாவட்டங்கள், தெற்கு ஆந்திர கடற்கரை பகுதிகளில் நிலவக்கூடும்.
இதன் காரணமாக அடுத்து வரும் நான்கு நாட்களுக்கு தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்காலில் மழை தொடரும் என வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் பாலச்சந்திரன் கூறும் போது, "விழுப்புரம், கடலூர், அரியலூர், பெரம்பலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இன்று கன முதல் மிக கனமழை பெய்யலாம்."
"சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, திருச்சி, ராமநாதபுரம் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. நாளை (செவ்வாய்கிழமை) சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, கடலூர் மாவட்டங்கள், புதுச்சேரியில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்யும்."
"வேலூர், திருப்பத்தூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், ஈரோடு, அரியலூர், பெரம்பலூர், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழையும் பெய்யக்கூடும்."
"நாளை மறுநாள் (புதன்கிழமை) தமிழகத்தின் வட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களிலும், சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை முதல் மிக கனமழையும், சில நேரங்களில் அதி கனமழையும் பெய்ய வாய்ப்பு இருக்கிறது," என்று தெரிவித்தார்.
வடகிழக்கு பருவமழை தொடங்குவதையொட்டி சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் அதிக அளவு மழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் அறிவித்து இருப்பதை தொடர்ந்து தமிழக அரசு முன்னெச்சரிக்கை பணிகளை முடுக்கிவிடுட்டுள்ளது.
- முதலில் ஆடிய சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 203 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
- தமிழக அணி முதல் இன்னிங்சில் 367 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.
புதுடெல்லி:
ரஞ்சிக் கோப்பை தொடரின் முதல் சுற்று ஆட்டங்கள் நடந்து வருகிறது. குரூப் டி பிரிவில் தமிழக அணியும், சவுராஷ்டிரா அணியும் கோயம்புத்தூரில் விளையாடி வருகின்றது. டாஸ் வென்ற சௌராஷ்டிரா அணி பேட்டிங் தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் ஆடிய சவுராஷ்டிரா அணி முதல் இன்னிங்சில் 203 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது. வசவடா 62 ரன் எடுத்தார்.
ஜிராங் ஜெனி 34 ,ஷெல்டோன் ஜாக்சன் மற்றும் கேப்டன் ஜெய்தேவ் உனத்கட் தலா 21 ரன்களை எடுத்ததனர்.
தமிழக அணி சார்பில் சோனு யாதவ், முகமது, சாய் கிஷோர் ஆகியோர் தலா 3 விக்கெட் வீழ்த்தினர்.
இதையடுத்து, தமிழக அணி களமிறங்கியது. சாய் சுதர்ஷன் 82, ஜெகதீசன் 100, புரதோஷ் பௌல் 49, இந்திரஜித் 40 என ரன்கள் எடுத்தனர். கடைசி கட்டத்தில் ஆண்ட்ரே சித்தார்த் 38, முகமது 26 ரன்களை எடுத்தனர்.
இறுதியில், தமிழக அணி முதல் இன்னிங்சில் 367 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதன்மூலம் 164 ரன்கள் மெகா முன்னிலை பெற்றது.
தொடர்ந்து, 2-வது இன்னிங்ஸ் களமிறங்கிய சவுராஷ்டிரா அணி விரைவில் விக்கெட்களை இழந்தது. முன்னணி வீரர்கள் ஒற்றை இலக்கத்தில் ஆட்டமிழந்தனர்.
இறுதியில், மூன்றாம் நாள் முடிவில் சவுராஷ்டிரா அணி 5 விக்கெட்டுக்கு 35 ரன் எடுத்து திணறி வருகிறது. சவுராஷ்டிரா அணி இன்னும் 129 ரன்கள் பின்தங்கியுள்ளது.
தமிழக அணி சார்பில் குஜ்ராப்னீட் சிங் 4 விக்கெட்களை கைப்பற்றினார்.
- மழை நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு.
- பக்கிங்காம் கால்வாயின் முகத்துவாரம் அமைந்துள்ள முட்டுக்காட்டில் தூர்வாரும் பணி.
வடகிழக்கு பருவமழை வரும் 15ம் தேதி முதல் தொடங்கவுள்ள நிலையில், மழை நேர முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அதன் ஒருபகுதியாக, பக்கிங்காம் கால்வாயின் முகத்துவாரம் அமைந்துள்ள முட்டுக்காட்டில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார்.
இதுதொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
வடகிழக்கு பருவமழை வருவதையொட்டி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, பருவ மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைத் தொடர் ஆய்வு செய்து வருகிறோம்.
சென்னையின் மழைநீர் வடிகாலுக்கான முக்கிய நீர் வழித்தடமாக இருக்கின்ற அடையாறு ஆற்றின் முகத்துவாரம் அமைந்துள்ள பகுதியில் நடைபெறும் பணிகளை அதிகாரிகளுடன் இன்று ஆய்வு செய்தோம்.
நீர்வளத்துறைச் சார்பில் ஆகாயத்தாமரையை அகற்றுதல், மணற்திட்டுகளை நிரந்தரமாக அப்புறப்படுத்துதல் என அடையாறு முகத்துவாரத்தில் மேற்கொள்ளப்பட்ட பணிகளைக் கேட்டறிந்தோம்.
பதற்றம் தவிர்த்து விழிப்போடு செயல்படுவோம் - பாதுகாப்பான மழைக்காலத்தை உறுதி செய்வோம்.
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
- மிக அவசிய தேவையான குடிநீர், பால் தங்கள் பகுதிகளில் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
- தேவையான மருந்து மாத்திரைகளை கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.
வடகிழக்கு பருவமழை வரும் 15ம் தேதி முதல் தொடங்குவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், பருவமழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு உதவிட நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் தயார் நிலையில் இருக்க திமுக தலைமை உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-
பருவ மழையை எதிர்கொள்ள அரசு முழு அளவில் தயாராக உள்ளது. பாதிக்கப்படும் மக்களுக்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என கட்சியினருக்கு திமுக அறிவுறுத்தியுள்ளது.
மிக அவசிய தேவையான குடிநீர், பால் தங்கள் பகுதிகளில் தடையின்றி கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும்.
வழக்கத்திற்கு மாறாக பெருமழை வந்தாலும், பதற்றமில்லாமல் மழைக்காலத்தை எதிர்கொள்ள வேண்டும்.
தேவையான மருந்து மாத்திரைகளை கையிருப்பில் வைத்துக் கொள்ள வேண்டும்.
மழையால் பாதிக்கப்படும் மக்களுக்கு அரிசி, பருப்பு, எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை வாங்கித் தர ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
வழக்கத்திற்கு மாறாக பெருமழை வந்தாலும், பதற்றமில்லாமல் மழைக்காலத்தை எதிர்கொள்ள வேண்டும்.
இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
- ஊ.மங்கலம் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் சுதாகர் கைது செய்யப்பட்டுள்ளார்.
- 7 வழக்குகளில் தொடர்புடைய நபருக்கு தடையில்லா சான்று வழங்கியது அம்பலம்.
கடலூர் மாவட்டம் நெய்வேலி என்எல்சி நிறுவனத்தில் பணிபுரிய தடையில்லா சான்று வழங்கியது மோசடி நடந்துள்ளது.
இதையடுதது, ஊ.மங்கலம் காவல் நிலையத்தை சேர்ந்த தலைமை காவலர் சுதாகர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும், 2 தலைமை காவலர்களான சங்கு பாலன், ஜோசப் சஸ்பெண்ட் செய்து கடலூர் மாவட்ட எஸ்.பி., ராஜாராமஜ் அதரடி நடவடிக்கை எடுத்துள்ளார்.
7 வழக்குகளில் தொடர்புடைய நபருக்கு தடையில்லா சான்று வழங்கி அவர் பணியில் தொடர்ந்தது விசாரணையில் அம்பலமாகியுள்ளது.






