என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்துள்ளது கடலுக்கு நடுவே வீடு கட்டியது போல காட்சி அளிக்கிறது.
    • வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் 3 நாட்களாக தவிப்பதாகவும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தனர்.

    ராமநாதபுரம்:

    ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாக கனமழை கொட்டி தீர்த்தது. ராமேசுவரத்தில் ஒரே நாளில் 44 செ.மீ மழை பதிவானது. ராமநாதபுரம் நகரிலும் விடாது பெய்த மழையால் பல இடங்களில் தண்ணீர் சூழ்ந்தது. குறிப்பாக ராமநாதபுரம் மாவட்டம் சக்கரக்கோட்டை ஊராட்சிக்குட்பட்ட கஜினி நகரில் 100-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ள நிலையில் அந்த பகுதியில் இடுப்பளவு மழை நீர் வெள்ளம் போல சூழ்ந்துள்ளது கடலுக்கு நடுவே வீடு கட்டியது போல காட்சி அளிக்கிறது.

    வீடுகளை மழை நீர் வெள்ளம் சூழ்ந்து இருப்பதால் வீடுகளை விட்டு வெளியேற முடியாமல் 3 நாட்களாக தவிப்பதாகவும் அத்தியாவசிய பொருட்கள் கிடைக்கவில்லை என்றும் புகார் தெரிவித்தனர். இதனால் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப கூட முடியவில்லை. இது தொடர்பாக மாவட்ட நிர்வாகத்திடமும் சக்கரக்கோட்டை ஊராட்சி நிர்வாகத்திடமும் பலமுறை முறையிட்டும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என கூறி அந்த குடியிருப்பு வாசிகள் பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் இடுப்பளவு தண்ணீரில் நின்று கொண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    மேலும் மாவட்ட நிர்வாகமும் ஊராட்சி நிர்வாகம் இணைந்து உடனடியாக தேங்கியுள்ள தண்ணீரை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்துள்ளனர். 

    • அணையின் நீர்மட்டம் 108.97அடியாக உயர்ந்து காணப்படுகிறது.
    • தற்போது அணையில் 76.95 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

    சேலம்:

    நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. நேற்று வினாடிக்கு 7 ஆயிரத்து 545 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று 6 ஆயிரத்து 422 கனஅடியாக குறைந்தது.

    அணையின் நீர்மட்டம் 108.97அடியாக உயர்ந்து காணப்படுகிறது. அணையில் இருந்து டெல்டா பாசனத்துக்கு ஆயிரம் கனஅடியும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்துக்கு 500 கனஅடியும் திறக்கப்பட்டு வருகிறது.

    தற்போது அணையில் 76.95 டி.எம்.சி.தண்ணீர் இருப்பு உள்ளது.

    • தமிழகத்தில் 25-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை கன மழை முதல் மிக கன மழை பெய்யக்கூடும்.
    • பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    சென்னை:

    தெற்கு அந்தமான் கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளில் ஒரு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது.

    இதன் காரணமாக தென் கிழக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி இன்று உருவாகக் கூடும் என்று கணிக்கப்பட்டது. ஆனால் காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாவதற்கான சூழல் தள்ளிப்போனது.

    இன்று காலை 5 மணி நிலவரப்படி புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்த 24 மணி நேரத்தில் உருவாகும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து அதற்கடுத்த 2 நாட்களில் தெற்கு வங்கக்கடல் பகுதிகளில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுபெறக்கூடும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.

    இது தீவிர தாழ்வு மண்டலமாகவோ அல்லது புயல் சின்னமாகவோ மாறுவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக வானிலை ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.

    இதற்கிடையில் தெற்கு அந்தமான் கடல் பகுதியில் இருந்து மன்னார் வளைகுடா வரை ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும், தெற்கு கேரளா மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சியும் நிலவுகிறது.

    இதன் காரணமாக தமிழகத்தில் 25-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை கன மழை முதல் மிக கன மழை பெய்யக்கூடும். 25-ந்தேதி கடலோர தமிழகத்தில் அநேக இடங்களிலும், உள் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும் புதுவை மற்றும் காரைக்கால் பகுதியிலும் இடி மின்னலுடன் லேசான மழை பெய்யும்.

    கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்கள் மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யும்.

    26-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், ராமநாதபுரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்களிலும், புதுவையில் ஓரிரு இடங்களிலும் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.

    பெரும்பாலான மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது.

    • முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.65 அடியாக உள்ளது.
    • மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.30 அடியாக உள்ளது.

    கூடலூர்:

    தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள வைகை அணை மூலம் 5 மாவட்ட விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றது. பருவமழை கைகொடுத்ததால் 71 அடி உயரம் கொண்ட வைகை அணையின் நீர்மட்டம் 65 அடி வரை எட்டியது. அதனைத் தொடர்ந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டது.

    பின்னர் மதுரை மாவட்ட பூர்வீக பாசனத்திற்காக தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதனால் அணையின் நீர்மட்டம் 58.79 அடியாக குறைந்துள்ளது. அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்பட்ட தண்ணீர் 569 கன அடியில் இருந்து 1699 கன அடியாக அதிகரிக்கப்பட்டது. அணைக்கு 1183 கனஅடி நீர் வருகிறது. 3381 மி.கன அடி நீர் இருப்பு உள்ளது.

    முல்லைப்பெரியாறு அணையின் நீர்மட்டம் 121.65 அடியாக உள்ளது. 395 கன அடிநீர் வருகிறது. அணையில் இருந்து தமிழக பகுதிக்கு 967 கன அடி நீர் திறக்கப்படுகிறது. 2955 மி. கன அடி இருப்பு உள்ளது.

    மஞ்சளாறு அணையின் நீர்மட்டம் 54.30 அடியாக உள்ளது. அணைக்கு வரும் 100 கன அடி நீர் அப்படியே திறக்கப்படுகிறது. சோத்துப்பாறை அணையின் நீர்மட்டம் 126.28 அடியாக உள்ளது. வரத்தும் திறப்பும் 30 கன அடி.

    தேக்கடியில் மட்டும் 0.4 மி.மீ. மழை அளவு பதிவாகி உள்ளது.

    • மழை பெய்யாத நாட்களில் நீர்பனி காணப்பட்டது.
    • நீலகிரி மாவட்டத்தில் உறைபனிக்காலம் தொடங்கும் முன்பு வழக்கமாக நீர் பனிப்பொழிவு காணப்படும்.

    அருவங்காடு:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் அக்டோபர் மாதம் நீர்பனி விழும். தொடர்ந்து நவம்பர் மாதம் 2-வது வாரத்திற்கு மேல் உறைபனி விழ தொடங்கும்.

    இந்த நிலையில் இந்த ஆண்டு கடந்த வாரம் வரை நீலகிரி மாவட்டத்தில் மழை பெய்து வந்த நிலையில், உறைபனி விழுவதில் தாமதம் ஏற்பட்டது.

    அதே சமயம் மழை பெய்யாத நாட்களில் நீர்பனி காணப்பட்டது. இதனால் மாலை நேரங்களில் குளிர் அதிகமாக காணப்பட்டது.

    குன்னூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீர்ப்பனியின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது. இது சுற்றுலா பயணிகளை பரவசப்படுத்தும் வகையில் அமைந்து உள்ளது.

    அதிகாலை நேரத்தில் புல்வெளிகள், தேயிலை தோட்டம் மற்றும் மலர் செடிகளில் நீர்ப்பனி கண்ணாடி இழைகள் போல, முத்துக்கள் கொட்டிய மாதிரி காட்சி அளிக்கிறது. அதிலும் குறிப்பாக குன்னூர், ஜிம்கானா, கரும்பாலம், காட்டேரி, குன்னகம்பை, கொலகம்பை, கொல்லிமலை, கேத்திபாலடா மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நீர்ப்பனிப்பொழிவு காணப்பட்டது.

    நீலகிரி மாவட்டத்தில் உறைபனிக்காலம் தொடங்கும் முன்பு வழக்கமாக நீர் பனிப்பொழிவு காணப்படும். அந்த வகையில் தற்போது நீர்ப்பனிப்பொழிவு தொடங்கி இருப்பதால் இன்னும் ஒரு சில வாரங்களில் உறைப்பனிப்பொழிவு தொடங்குமென எதிர்பார்க்கப்படுகிறது.

    • வெள்ளி விலையில் மாற்றம் இல்லை.
    • ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    தங்கம் விலை கடந்த 18-ந்தேதி முதல் மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. விலை குறைந்த நேரத்தில் கடந்த 17-ந்தேதி ஒரு சவரன் ரூ.56 ஆயிரத்துக்கு கீழ் வந்த நிலையில், மீண்டும் அதிகரித்து கடந்த 19-ந்தேதி மீண்டும் ரூ.56 ஆயிரத்தை தாண்டியது. தொடர்ந்து விலை அதிகரித்து கொண்டே வந்து, நேற்று முன்தினம் ரூ.57 ஆயிரத்தையும் கடந்தது.

    இதன் தொடர்ச்சியாக நேற்றும் அதன் விலை அதிகரித்து காணப்பட்டது. கிராமுக்கு ரூ.80-ம், சவரனுக்கு ரூ.640-ம் உயர்ந்து, ஒரு கிராம் ரூ.7 ஆயிரத்து 225-க்கும், ஒரு சவரன் ரூ.57 ஆயிரத்து 800-க்கும் விற்பனை ஆனது. இதன் மூலம் தங்கம் விலை ரூ.58 ஆயிரத்தை நெருங்க இருக்கிறது. கடந்த 5 நாட்களில் மட்டும் தங்கம் விலை பவுனுக்கு ரூ.2 ஆயிரத்து 320 அதிகரித்துள்ளது.

    இந்த நிலையில் இன்றும் தங்கம் விலை அதிரடியாக உயர்ந்துள்ளது. கிராமுக்கு 75 ரூபாய் அதிகரித்து ஒரு கிராம் தங்கம் ரூ. 7,300-க்கும் சவரனுக்கு 600 ரூபாய் அதிகரித்து ஒரு சவரன் ரூ. 58,400-க்கும் விற்பனையாகிறது.

    கடந்த 6நாட்களில் தங்கம் விலை சவரனுக்கு 2,920 ரூபாய் வரை உயர்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது. 


    வெள்ளி விலையில் மாற்றம் இல்லை. ஒரு கிராம் வெள்ளி ரூ.101-க்கும், ஒரு கிலோ ரூ.1 லட்சத்து ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டது.

    கடைசி ஐந்து நாள் தங்கம் விலை நிலவரம்:-

    22-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,800

    21-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 57,160

    20-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,920

    19-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,520

    18-11-2024- ஒரு பவுன் (22 காரட்) ரூ. 56,960

    கடைசி ஐந்து நாள் வெள்ளி விலை நிலவரம்:-

    22-11-2024- ஒரு கிராம் ரூ. 101

    21-11-2024- ஒரு கிராம் ரூ. 101

    20-11-2024- ஒரு கிராம் ரூ. 101

    19-11-2024- ஒரு கிராம் ரூ. 101

    18-11-2024- ஒரு கிராம் ரூ. 99

    • எய்ம்ஸ் மருத்துவமனை என்பது இன்னும் ஏட்டளவில் தான் இருக்கிறதே தவிர முன்னேற்றம் எதையும் காணவில்லை.
    • திராவிட முன்னேற்றக் கழகம் 200 இடங்களுக்கு மிகாமல் நிச்சயமாக வெற்றி பெறும்.

    சென்னையில் திமுக எம்.பி. திருச்சி சிவா செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    நடைபெற இருக்கிற குளிர்கால கூட்டத்தொடரில் பல்வேறு பிரச்சனைகளை எழுப்ப இருக்கிறோம். தமிழ்நாடு மாநிலம் தொடர்ந்து ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்பட்டு வருகிறது.

    கடந்த காலங்களில் நிதிக்குழுவின் பரிந்துரைகளும் பாரபட்சமாக இருந்தாலும் கூட பரிந்துரைத்த அளவிற்கு கூட தமிழ்நாட்டிற்கு நிதி ஒதுக்கீடு செய்யப்படவில்லை.

    வரி பங்கீட்டு என்பதில் மாநில அரசுகளுக்கு எந்த அளவிற்கு பங்கீடு தர வேண்டுமோ அதில் குறிப்பாக மற்ற மாநிலங்களை விட கூட தமிழ்நாட்டிற்கு தரவில்லை. இப்போது இருக்கும் 41 என்பதை 50 விழுக்காடு தரப்பட வேண்டும் என்ற தீர்மானத்தை ஏற்கனவே தமிழ்நாடு அரசின் சார்பில் நிதிக்குழுவிடம் சொல்லப்பட்டு விட்டது.

    எய்ம்ஸ் மருத்துவமனை என்பது இன்னும் ஏட்டளவில் தான் இருக்கிறதே தவிர முன்னேற்றம் எதையும் காணவில்லை. அதற்காக எந்த நிதி ஒதுக்கீடும் செய்யவில்லை.

    இயற்கை பேரிடரின்போது கேட்கப்பட்ட 39 ஆயிரம் கோடிக்கு மாறாக வெறும் 287 கோடி தான் தரப்பட்டு இருக்கிறது.

    ஒன்றிய அரசும் மாநில அரசும் சேர்ந்து செய்ய வேண்டிய திட்டங்களுக்கு ஒன்றிய அரசு தரவேண்டிய பங்குகளை எதையும் தருவதே இல்லை.

    மாற்றாந்தாய் மனப்பான்மையோடு ஒன்றிய அரசு நடந்து கொள்வது கூட்டாட்சி தத்துவத்திற்கு எதிரானது.

    குறிப்பாக, எதிர்க்கட்சிகள் ஆளுகின்ற மாநிலங்களை இப்படி வஞ்சிப்பதன் மூலம் இந்த ஆட்சியின் செல்வாக்கை குறைக்கலாம் என்று அவர்கள் கருதலாம். ஆனால் அது இயலாது.

    அதே வேளையில் மாநில மக்களுக்கு எது தேவை என்று உணர்ந்து செயல்படுத்தக்கூடிய பொறுப்பும் கடமையும் மாநில அரசுக்கு தான் உண்டு.

    அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு ஏராளமான திட்டங்களை நிறைவேற்றி வருகிறபோது அதற்குரிய நியாயமான நிதி ஒன்றிய அரசு வழங்காமலேயே வருவதை இந்த முறை நாங்கள் பாராளுமன்ற கூட்டத்தொடரில் முக்கியத்துவம் கொடுத்து எழுப்புவோம்.

    அதானி பிரச்சனை உள்பட பல பிரச்சனைகள் உள்ளன. எல்லா பிரச்சனைகளும் நடைபெற உள்ள கூட்டத்தொடரில் எழுப்பப்படும்.

    நாங்கள் தமிழ்நாட்டில் இருந்து செல்லும் காரணத்தினால் மக்களவை, மாநிலங்களவை இரண்டிலும் உள்ள உறுப்பினர்கள் மாநில நலன் கருதி நாங்கள் கோரிக்கைகளாக எடுத்துரைப்போம்.

    மாநில தேவைகள், வஞ்சிக்கப்படுவது குறித்து முக்கியத்துவம் கொடுத்து பேசுவோம்.

    மாநில நலன்கள் குறித்தும், மாநில அரசு எப்படி ஒன்றிய அரசால் வஞ்சிக்கப்படுகிறது என்பதை குறித்தும் இரு அவை உறுப்பனர்களும் எடுத்துரைப்போம்.

    திராவிட முன்னேற்றக் கழகம் 200 இடங்களுக்கு மிகாமல் நிச்சயமாக வெற்றி பெறும். மீண்டும் கழக ஆட்சி என்பதை விட 200 இடங்களுக்கு குறையாமல் பெற வேண்டும் என்பது எங்கள் இலக்கு என்று கூறினார்.

    • தமிழ்நாட்டு மக்கள் கிட்ட சொல்றேன். ... யாரும் சீமானை நம்பாதீங்க...
    • உங்கள் மேல நான் வந்து வழக்கு தொடுத்தா திமுக கால்ல போய் விழுறீங்க...

    சென்னை:

    நடிகர் ரஜினிகாந்த்-இன் அரசியல் வருகைக்கு நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கடும் எதிர்ப்பு தெரிவித்து வந்தார். மேலும், நடிகர் ரஜினிகாந்த் குறித்தும் கடும் விமர்சனங்களை முன்வைத்தார். அரசியல் கட்சியை அறிவித்த ரஜினிகாந்த் அதன்பிறகு அரசியலில் இருந்து விலகுவதாக கூறி அனைவரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தினார்.

    இதனிடையேதான் நேற்றுமுன்தினம் சீமான் - ரஜினிகாந்த் சந்திப்பு நடந்தேறியது. இந்த சந்திப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்பட்டு வரும்நிலையில், நடிகை விஜயலட்சுமி பேசிய வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அதில் அவர் பேசியிருப்பதாவது:-

    விஜய் வீட்டில் பிச்சை எடுத்து பார்த்தாச்சி. அது எதுவும் வேலைக்கு ஆகாது என்றதும் அடுத்ததா போயஸ்கார்டனில் ரஜினி சார் வீட்டில் போய் பிச்சை எடுக்கலாம்-னு போய்ட்டிங்களா Mr. சீமான்.

    விஜய் அண்ணா கிட்ட இருந்து தப்பிக்கிறதுக்கு வேற எந்த வழியும் கிடைக்கலையா. ரஜினி சார் யாருனு ஞாபம் இருக்கா. அவங்க அரசியலுக்கு வரன்னு சொன்ன உடனே உங்க வாய் தான் சொல்லிச்சு. அவர் கன்னடாக்காரர்... அவர் மேல உப்பு, மிளகாய் தூள் எல்லாம் போட்டு வறுத்து எடுத்துட்டுப் பார்க்கணும்னு நான் விருப்பப்படுறேன்னு அப்படின்னு மேடைமேடையா அவரை கொச்சைப்படுத்துனீங்களே... அத மறந்துட்டா போய் நேற்று (வியாழக்கிழமை) அவர் வீட்டில் பிச்சை எடுத்துட்டு நின்னுக்கிட்டு இருந்தீங்க.. அசிங்கமா இல்ல..

    விஜய் அண்ணாக்கிட்ட இருந்து தப்பிக்கணும்னு ரஜினி சார் கால்ல விழுறீங்க... உங்கள் மேல நான் வந்து வழக்கு தொடுத்தா திமுக கால்ல போய் விழுறீங்க... உங்கள யாரும் நம்ப மாட்டாங்க Mr.சீமான். தமிழ்நாட்டு மக்கள் கிட்ட சொல்றேன். ... யாரும் சீமானை நம்பாதீங்க...

    இவ்வாறு அந்த வீடியோவில் விஜயலட்சுமி பேசி உள்ளார். 




    • பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது.
    • கார்கில் அவென்யூ, அய்யனார் அவென்யூ, ஜோயல் அபார்ட்மெண்ட் & எஸ்வி பார்ம்ஸ் ஆகிய பகுதிகள்.

    சென்னை:

    சென்னையில் இன்று பராமரிப்பு பணிகள் காரணமாக ஒரு சில பகுதிகளில் மின் தடை செய்யப்படுகிறது. காலை 9 மணி முதல் மதியம் 2 மணி மின் தடை செய்யப்படும் என்று தமிழ்நாடு மின்சார வாரியம் அறிவித்துள்ளது.

    தமிழ்நாடு மின்சார வாரியம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

    சென்னை நகரில் சேலையூர்: மங்களா அடுக்குமாடி குடியிருப்பு, ஸ்ருஸ்டி வில்லா, ஜிகேஎம் கல்லூரி சாலை, ஜெய் வாட்டர், கே.கே. நகர், பெருமாள்புரம், சரவணா நகர், கார்கில் அவென்யூ, அய்யனார் அவென்யூ, ஜோயல் அபார்ட்மெண்ட் & எஸ்வி பார்ம்ஸ் ஆகிய பகுதிகள்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • திடீரென தையல்நாயகி அமர்ந்திருந்த இருக்கை உடைந்து விழுந்தது.
    • பயணிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா அரசு ஆஸ்பத்திாிக்கு கொண்டு சென்றனர்.

    சிதம்பரம்:

    கடலூர் மாவட்டம் சாமியார்பேட்டையில் இருந்து நேற்று காலை பயணிகளை ஏற்றிக்கொண்டு சிதம்பரம் நோக்கி அரசு பஸ் ஒன்று புறப்பட்டது.

    குமராட்சியை சேர்ந்த ஹரிதரன் (வயது 60) என்பவர் பஸ்சை ஓட்டினார். சிதம்பரம் அருகே வேலக்குடியை சேர்ந்த அருள்மணி என்பவர் கண்டக்டர் பணியில் இருந்தார்.

    இந்த பஸ் புதுக்குப்பம் கிராமத்தில் உள்ள நிறுத்தத்திற்கு காலை 7.30 மணி அளவில் வந்தபோது, அதே கிராமத்தை சேர்ந்த சந்திரன் மனைவி தையல்நாயகி (52) என்பவர் பஸ்சில் ஏறி, பின்பக்க இருக்கையில் அமர்ந்துள்ளார். பின்னர் பஸ் புறப்பட்டு, புதுப்பேட்டை அருகில் சென்றுகொண்டிருந்தபோது, திடீரென தையல்நாயகி அமர்ந்திருந்த இருக்கை உடைந்து விழுந்தது.

    இதில் நிலை தடுமாறிய தையல்நாயகி பஸ்சின் பின்பக்க படிக்கட்டு வழியாக சாலையில் விழுந்தார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக பயணிகள் கூச்சலிட்டனர். இந்த சத்தம் கேட்டு உடனே, ஹரிதரன் பஸ்சை நிறுத்தினார். விபத்தில் தையல் நாயகியின் இடது கையில் எலும்பு முறிவு ஏற்பட்டது. பின்னர், பயணிகள் உடனடியாக அவரை மீட்டு சிகிச்சைக்காக சிதம்பரம் ராஜா முத்தையா அரசு ஆஸ்பத்திாிக்கு கொண்டு சென்றனர்.

    அங்கு அவருக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர், மேல்சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.

    இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தமிழ்நாட்டில் தாய்மார்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது.
    • தற்போது 2023-24-ல் இது 45.5 ஆக மேலும் குறைந்திருக்கிறது.

    சென்னை:

    கடந்த 20 ஆண்டுகளில் தமிழ்நாட்டில் பிரசவத்தின்போது தாய்மார்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாகவும், அரசு ஆஸ்பத்திரிகளில் இதுவரை இல்லாத அளவுக்கு டாக்டர்கள் பணியிடம் காலியாக இருப்பதாகவும் சமூக வலைத்தளங்களில் ஒரு தகவல் வேகமாக பரவி வருகிறது. இதனை தமிழக அரசு மறுத்துள்ளது.

    இதுதொடர்பாக தமிழக அரசின் அதிகாரப்பூர்வ சமூக ஊடக கணக்கான தகவல் சரிபார்ப்பகம் வெளியிட்டுள்ள பதிவில், "கடந்த 2001-ம் ஆண்டில் தமிழ்நாட்டில் பிரசவத்தின்போது ஒரு லட்சம் பேரில் 134 ஆக இருந்த தாய்மார்களின் இறப்பு விகிதம் கடந்த 2018-20-ல் 54 ஆக குறைந்தது.

    தற்போது 2023-24-ல் இது 45.5 ஆக மேலும் குறைந்திருக்கிறது. ஆனால் தமிழ்நாட்டில் தாய்மார்களின் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதாக பொய்யான தகவல் பரப்பப்படுகிறது'' என்று கூறப்பட்டுள்ளது.

    • முருகேஸ்வரி தனது விண்ணப்பத்தில் வடமதுரையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட தனது வங்கி கணக்கு எண்ணை குறிப்பிட்டிருந்தார்.
    • அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை அருகே உள்ள ரெட்டியபட்டி, காஞ்சி பெரியவர் நகரை சேர்ந்தவர் முத்துப்பாண்டி (வயது 43). முறுக்கு வியாபாரி. இவரது மனைவி முருகேஸ்வரி (40). இந்த தம்பதிக்கு கண்ணன், மகேஸ்வரன் என்ற 2 மகன்கள் உள்ளனர்.

    இந்தநிலையில் முருகேஸ்வரி கடந்த ஆண்டு தமிழக அரசின் மகளிர் உரிமை தொகை பெறுவதற்கு விண்ணப்பித்து இருந்தார். தொடர்ந்து அரசு தரப்பில் இருந்து முருகேஸ்வரியின் செல்போன் எண்ணுக்கு உங்களுடைய மனு ஏற்றுக்கொள்ளப்பட்டது. நீங்கள் மகளிர் உரிமைத்தொகைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளீர்கள் என்று குறுஞ்செய்தி வந்துள்ளது.

    இதற்கிடையே முருகேஸ்வரி தனது விண்ணப்பத்தில் வடமதுரையில் உள்ள ஒரு தேசிய மயமாக்கப்பட்ட தனது வங்கி கணக்கு எண்ணை குறிப்பிட்டிருந்தார். ஆனால் முருகேஸ்வரி வங்கிக் கணக்கின் கடைசி எண்ணை தவறாக பதிவேற்றம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

    இதனால் கடந்த 14 மாதங்களாக அதே வங்கியில் கணக்கு வைத்துள்ள காணப்பாடியைச் சேர்ந்த 60 வயது முதியவருக்கு மாதந்தோறும் ரூ.1,000 வரவு வைக்கப்பட்டுள்ளது. ஆனால் முருகேஸ்வரியின் செல்போன் எண்ணுக்கு பணம் வரவு வைக்கப்பட்டதாக குறுந்தகவல் மட்டும் வந்துள்ளது.

    பின்னர் அந்த முதியவர் முதல் 3 மாதங்கள் மட்டும் வங்கியில் இருந்து பணத்தை எடுத்து முருகேஸ்வரியிடம் கொடுத்தார். அதன்பின்னர் அவர் பணத்தை தரவில்லை. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை கோரிக்கை விடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. எனவே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனி கவனம் செலுத்தி மகளிர் உரிமை தொகை பணத்தை மீட்டு தருமாறு முருகேஸ்வரி கோரிக்கை விடுத்துள்ளார்.

    ×