search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "தாய்மார்கள்"

    • கர்ப்பிணி பெண்கள் ஓய்வெடுக்கும் அறையும் ஏற்பாடு
    • உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று.

    கன்னியாகுமரி:

    உலகப்புகழ் பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளி நாட்டு சுற்றுலா பயணிகளும், பக்தர்களும் வந்து அம்மனை தரிசனம் செய்துவிட்டு செல்கிறார்கள். இதில் பெண் பக்தர்கள் அதிக அளவில் வந்து செல்கிறார்கள்.

    இந்த கோவில் நடை தினமும் அதிகாலை 4.30 மணிக்கு திறக்கப்பட்டு மதியம் 12.30 மணிக்கு அடைக்கப்படுகிறது. அதே போல மாலை 4 மணிக்கு திறக்கப்பட்டு இரவு 8.30 மணிக்கு அடைக்கப்படுகிறது. இந்த கோவிலுக்கு வரும் பெண் பக்தர்களில் சிலர் கர்ப்பிணி தாய்மார்களாகவும், சிலர் கைக்குழந்தையுடனும் வந்து சாமி கும்பிட்டு விட்டு செல்கிறார்கள்.

    இந்த கோவிலுக்கு வரும் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பால் ஊட்டும் இட வசதி இல்லை. திறந்த வெளியில் தாய்மார்கள் குழந்தைகளுக்கு பாலூட்டும் அவல நிலை இருந்து வந்தது. எனவே இந்த கோவிலுக்கு வரும் தாய்மார்கள் குழந்தை களுக்கு பாலூட்டுவதற்கு வசதியாக பாலூட்டும் வரை அமைக்க வேண்டும் என்று பெண் பக்தர்கள் நீண்ட காலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதேபோல கர்ப்பிணிகள் தங்கி இளைப்பாறு வதற்கு வசதியாக ஓய்வறை வசதி செய்துதர வேண்டும் என்றும் பெண் பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். அதன் பேரில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவில் நிர்வாகம் சார்பில் கோவிலுக்கு வரும் தாய் மார்கள் தங்களது குழந்தைகளுக்கு பாலூட்டுவதற்கு வசதியாக கோவிலின் மேற்கு பக்கம் உள்ள வெளிப்பிரகாரத்தில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்துவிட்டு வெளியே வரும் வாசலுக்கு அருகில் தாய்மார்கள் பாலூட்டும் அறையும், கர்ப்பிணிகள் ஓய்வெடுக்கும் அறையும் அமைக்கப்பட்டுள்ளன. இதனை கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சாமிகும்பிட வரும் பெண் பக்தர்கள் வெகுவாக வரவேற்றுள்ளனர்.

    • 52 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைப்பெற்றது.
    • கர்ப்பிணி தாய்மார்கள் யோகா பயிற்சியை கற்றுக்கொண்டனர்.

    நாகப்பட்டினம்:

    நாகை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனை மற்றும் கீரைகள், பழங்கள் வழங்கும் முகாம் நடைபெற்றது.

    இதில் வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்தா தலைமை வகித்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு கீரைகள் மற்றும் பழங்களை வழங்கினார்.

    முன்னதாக 52 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைப்பெற்றது.

    இதில் கர்ப்பிணி தாய்மார்கள் யோகா பயிற்சியை கற்றுக்கொண்டனர்.

    இதில் மருத்துவர்கள் இந்திரா, பார்கவி, மருந்தாளுனர் சக்திவேல் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

    • டாக்டர் பாபு மற்றும் ரம்யா தேவி கலந்துகொண்டு தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் அவசியத்தை எடுத்து கூறினர்.
    • தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் சங்கம் சார்பாக வழங்கப்பட்டது.

    திருத்துறைப்பூண்டி:

    திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கத்தில் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா திருத்துறைப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் ரொட்டேரியன் பிவி. ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. மண்டல உதவி ஆளுநர் சிவக்குமார் முன்னிலையில் டாக்டர் பாபு மற்றும் ரம்யா தேவி கலந்துகொண்டு தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் அவசியத்தை எடுத்துக் கூறினார்.

    நிகழ்ச்சியில் ரோட்டரி டெல்டா சங்க முன்னாள் தலைவர் சீனிவாசன் காளிதாஸ், செல்வகுமார் மற்றும் உறுப்பினர்கள் மாணிக்கவாசகம், மதன் அழகரசன் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் சங்கம் சார்பாக வழங்கப்பட்டது. இறுதியில் செயலர் ரொட்டேரியன் ராஜதுரை நன்றி கூறினார்.

    ×