கர்ப்பிணி பெண்களுக்கு கீரை, பழங்கள் வழங்கல்

52 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைப்பெற்றது.கர்ப்பிணி தாய்மார்கள் யோகா பயிற்சியை கற்றுக்கொண்டனர்.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு கீரை, பழங்கள் வழங்கப்பட்டது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி பெண்களுக்கு கீரை, பழங்கள் வழங்கப்பட்டது.
Published on

நாகப்பட்டினம்:

நாகை மாவட்ட பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் திருமருகல் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கர்ப்பிணி தாய்மார்களுக்கு பரிசோதனை மற்றும் கீரைகள், பழங்கள் வழங்கும் முகாம் நடைபெற்றது.

இதில் வட்டார மருத்துவ அலுவலர் அரவிந்தா தலைமை வகித்து கர்ப்பிணி தாய்மார்களுக்கு கீரைகள் மற்றும் பழங்களை வழங்கினார்.

முன்னதாக 52 கர்ப்பிணி தாய்மார்களுக்கு மருத்துவ பரிசோதனை நடைப்பெற்றது.

இதில் கர்ப்பிணி தாய்மார்கள் யோகா பயிற்சியை கற்றுக்கொண்டனர்.

இதில் மருத்துவர்கள் இந்திரா, பார்கவி, மருந்தாளுனர் சக்திவேல் மற்றும் செவிலியர்கள் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com