என் மலர்

  நீங்கள் தேடியது "Mothers"

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • டாக்டர் பாபு மற்றும் ரம்யா தேவி கலந்துகொண்டு தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் அவசியத்தை எடுத்து கூறினர்.
  • தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் சங்கம் சார்பாக வழங்கப்பட்டது.

  திருத்துறைப்பூண்டி:

  திருத்துறைப்பூண்டி டெல்டா ரோட்டரி சங்கத்தில் சார்பில் உலக தாய்ப்பால் வார விழா திருத்துறைப்பூண்டி அரசு பொது மருத்துவமனையில் ரொட்டேரியன் பிவி. ரமேஷ் தலைமையில் நடைபெற்றது. மண்டல உதவி ஆளுநர் சிவக்குமார் முன்னிலையில் டாக்டர் பாபு மற்றும் ரம்யா தேவி கலந்துகொண்டு தாய்மார்களுக்கு தாய்ப்பாலின் அவசியத்தை எடுத்துக் கூறினார்.

  நிகழ்ச்சியில் ரோட்டரி டெல்டா சங்க முன்னாள் தலைவர் சீனிவாசன் காளிதாஸ், செல்வகுமார் மற்றும் உறுப்பினர்கள் மாணிக்கவாசகம், மதன் அழகரசன் கலந்து கொண்டனர். இதில் கலந்து கொண்ட தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து உணவு பொருட்கள் சங்கம் சார்பாக வழங்கப்பட்டது. இறுதியில் செயலர் ரொட்டேரியன் ராஜதுரை நன்றி கூறினார்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • பவானி அருகே தாய் இறந்த சோகத்தில் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.
  • இது குறித்து பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  பவானி:

  ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த கண்ணாடிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் தேவராஜ் (46) கூலித் தொழிலாளி. திருமணம் ஆகவில்லை.தனது தாயாருடன் வசித்து வந்தார். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் தாயார் இறந்து போனார். இந்நிலையில் தேவராஜுக்கு ஏற்கனவே குடிப்பழக்கம் இருந்துள்ளது. தாயார் இறந்த பின்பு குடிப்பழக்கம் அதிகமானது.

  இதனால் தனியே வசித்து வந்த தேவராஜ் அதே பகுதியில் வசித்து வரும் தனது தம்பி பொங்கி யண்ணன் 43 அவரிடம் நான் வாழ விரும்பவில்லை என்றும் இனிமேல் வாழ எனக்கு என்ன இருக்கிறது என்று சொல்லி வந்துள்ளார்.

  இந்நிலையில் நேற்று மாலை விவசாயத்திற்கு பயன்படுத்தும் களைக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு தனது தம்பி வீட்டுக்கு வந்து விஷம் குடித்து விட்டதாக சொல்லி மயங்கி விழுந்தார். மயங்கி கீழே விழுந்தவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தேவராஜை மீட்டு அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

  பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவராஜ் இறந்தார். இது குறித்து பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குழந்தைகளின் தேவைகள் நியாயமானது அல்ல என்பதைப் புரிந்து கொண்ட பெற்றோர், அதை அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.
  குழந்தைகளை அடித்து வளர்க்க வேண்டும், தவறு செய்யும் குழந்தைகளை கடுமையான முறையில் கண்டிக்க வேண்டும் என்பது தவறான வழிமுறை. குழந்தைகளின் மனநிலையைப் புரிந்துகொண்டு அதற்கேற்ற முறையில், அவர்களது தவறுகளைச் சுட்டிக்காட்ட வேண்டும்.

  அவர்களிடம் கடுமையாகப் பேசுவது, அவர்கள் செய்யும் எல்லா செயல்களையும் சந்தேகக் கண்ணோடு பார்ப்பது, மற்றவர்களோடு ஒப்பிட்டுப் பேசுவது, எல்லா செயல்களிலும் குறைகளை மட்டுமே கண்டுபிடித்து திட்டுவது போன்ற நடவடிக்கைகளால் எந்த பயனும் இல்லை. இது குழந்தைகளுக்கும் நன்மை தராது; பெற்றோருக்கும் நன்மை தராது.

  தொடர்ச்சியாக குழந்தைகளை குறை சொல்லிக் கொண்டும், திட்டிக் கொண்டுமே இருந்தால் அந்தக் குழந்தைக்குத் தாழ்வுமனப்பான்மை அதிகரிக்கும். அந்த தாழ்வு மனப்பான்மையால் வெளியிடங்களில் மற்றவர்களோடு பழகுவதிலும், நடந்து கொள்ளும்விதங்களிலும் பெரிய பாதிப்பு ஏற்படும். தன்னம்பிக்கை குறைந்து, அந்தக் குழந்தையின் சமூக வாழ்க்கையே கேள்விக்குறியாகும் அளவு சூழல் உருவாகும்.

  பெற்றோர் இதுபோல் அதிக கடுமையோடு நடந்துகொள்வதால் குழந்தைகளின் மனநிலை பாதிக்கப்பட்டு, அவர்கள் தகாத செயல்களைச் செய்யவும் வாய்ப்பு உருவாகும். இதன் எதிரொலியாக கல்வியில் ஈடுபாடு குறைந்து, அதில் பின்னடைவு ஏற்படுகிறது. எதையும் கேள்வி கேட்பது, தனக்கு எல்லாம் தெரியும், தான் நினைத்தது சரியாக இருக்கும் என்ற மனநிலை குழந்தைகளின் வளரிளம் பருவத்தில் இயல்பாகவே இருக்கும்.

  அந்த நேரத்தில் அவர்களிடம் கடுமையாக நடந்து கொள்வதால் தங்களுடைய சக வயது குழந்தைகளிடமும் அதே கடுமையான உணர்வினை பிரதிபலிப்பார்கள். அதுமட்டுமல்ல; தான் நினைத்த காரியத்தை நிறைவேற்றிக் கொள்வதற்கும் அவர்கள் அதேபோன்ற கடுமையான நடவடிக்கைகளையே கையாள்கிறார்கள். இப்படியே வளரும் குழந்தைகளின் வளர் இளம் பருவத்தில் அவர்களின் வயது அதிகரிக்க அதிகரிக்க, தான் தவறானவன்தான் என்று மற்றவர்கள் மத்தியில் தைரியமாக உரக்கச் சொல்லும் நிலை உண்டாகி விடும்.

  இதுபோன்ற மனநிலை குழந்தைகளிடம் உருவாகிவிடாமல், சரியான முறையில் குழந்தைகளை அணுகி மாற்ற வேண்டிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. குழந்தைகளுக்கு அவர்களுடைய பெற்றோர்தான் முதல் நாயகர்கள். பெற்றோருடைய நடவடிக்கைகள் மற்றும் அவர்கள் அமைத்து கொடுக்கும் சூழலில் இருந்தே குழந்தைகள் பல புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்கிறார்கள்.

  குழந்தைகளின் குறைகளைச் சுட்டிக் காட்டும் முன்னர் அவர்கள் செய்கிற நல்ல விஷயங்களை முதலில் பாராட்டும் பழக்கத்தைப் பின்பற்ற வேண்டும். மனதாரப் பாராட்டுவதன் மூலம் குழந்தைகளுடைய மனநிலை மகிழ்ச்சியுடனும், உற்சாகத்துடனும் இருக்கும்.

  குழந்தைகளின் தேவைகள் நியாயமானது அல்ல என்பதைப் புரிந்து கொண்ட பெற்றோர், அதை அவர்களிடம் பக்குவமாக எடுத்துச் சொல்லும் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

  ‘இந்த விஷயத்தை செய்யாதே’ என்று உத்தரவு போடுவதைவிட, அந்தச் செயல் ஏன் தவறானது என்பதை அவர்களுக்குப் புரியவைக்க வேண்டும். இதையெல்லாம் உனக்கு சொல்லிப் புரிய வைக்க முடியாது என்று தப்பிப்பது ஆரோக்கியமான அணுகுமுறை அல்ல.

  குழந்தைகளின் எதிர்காலத்துக்குத் தேவையான கல்வி, விளையாட்டு போன்ற பலவற்றையும் உருவாக்கிக் கொடுப்பதோடு நற்பண்புகள் நிறைந்த நல்ல மனிதனாக வளர்க்க வேண்டிய மிகப் பெரிய பொறுப்பு பெற்றோருக்கு உள்ளது. எனவே, குழந்தைகளின் மனநிலை அறிந்து செயல்பட வேண்டும்.
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  குழந்தை வளர்ப்பில் பெரும் பங்கு முக்கிய பங்கு தாயின் கடமை தான். இப்படியான குழந்தை வளர்ப்பில் தாய்மார்கள் செய்யும் தவறுகளும் அதைத் திருத்திக்கொள்ளும் முறையும் பார்க்கலாம்.
  குழந்தை வளர்ப்பில் பெரும் பங்கு முக்கிய பங்கு என்னவென்றால் அது தாயின் கடமைதான். தாய் இல்லாத குழந்தை வளர்ப்பு என்றும் முழுமை பெறாது. தாயின் அரவணைப்பு குழந்தையின் மனவளர்ச்சிக்கும் உடல் வளர்ச்சிக்கும் மிக அவசியம். உடல் மற்றும் மன ஆற்றலை தருவதில் தாய்க்கு மட்டுமே சிறப்பான இடம் உண்டு. இப்படியான குழந்தை வளர்ப்பில் தாய்மார்கள் செய்யும் தவறுகளும் அதைத் திருத்திக்கொள்ளும் முறையும் பார்க்கலாம்.

  தாய் செய்யும் தவறுகள் என்னென்ன?

  * ஒவ்வொரு குழந்தையின் உடல் மற்றும் மன வளர்ச்சியும் ஒரே மாதிரி இருக்காது. பிற குழந்தைகள் அல்லது அக்கம் பக்கத்து குழந்தைகளுடன் ஒப்பிட்டு பேச கூடாது.

  * பிற குழந்தைகளின் நல்ல பழக்கங்களை காண்பித்து அதுபோல தானும் வளர்த்துக்கொள்ள குழந்தைகளுக்கு தாய்மார்கள் அறிவுறுத்தலாம்.

  * குழந்தை ஒரு வயது ஆனதும் ஓடியாடி விளையாடும்போது சில தாய்மார்கள் குழந்தையுடன் சேர்ந்து விளையாடுவதில்லை. இது தவறு. சிறிது நேரமாவது குழந்தையுடன் ஓடியாடி விளையாடுவதுதான் சரி.

  * வீட்டில் சண்டை போன்றதை பார்க்கும் குழந்தைகள் மனதால் வெகுவாக பாதிக்கின்றனர். இதைத் தாயும் தந்தையும் சேர்ந்தே தவிர்க்க வேண்டும்.

  * பிடிவாதம் செய்யும் குழந்தைகளை அடிப்பது தவறு. பிடிவாதமாக உள்ள குழந்தைக்கு முதல் முறையில் விட்டுக் கொடுத்து பின் பிடிவாதம் செய்ய கூடாது எனச் சொல்லலாம்.

  * கிள்ளுவது, கொட்டுவது, அடிப்பது, கடுஞ்சொற்களில் திட்டுவது போன்றவற்றை அறவே தவிர்க்க வேண்டும்.

  * குழந்தை தவறு செய்துவிட்டால் பாசத்தால் கண்டிக்காமல் இருப்பது பெரும் தவறு. சில நிமிடங்கள் பேசாமல் இருந்து, பின் குழந்தையை கண்டித்து மெதுவாக புரிய வைத்துவிட வேண்டும்.

  * தன் குழந்தை மற்ற குழந்தைகளை அடித்துவிடாமல் பார்த்துக்கொள்ள வேண்டும். அடித்து விளையாடினால் உடனே தடுத்து கண்டிப்பதும் அவசியம்.

  * டிவியை பேட்டால் அடிப்பது, ரிமோட்டை தூக்கி போடுவது போன்றவற்றை குழந்தைகள் செய்தால் அதன் மதிப்பு, அதன் முக்கியத்துவம், அந்தப் பொருளின் விலை போன்றவற்றை சொல்லி இச்செயல்களை தடுக்க புரிதல் ஏற்படுத்தி விடலாம்.

  * குழந்தை உண்ணும் தின்பண்டங்களைத் தன் குழந்தைக்கு என வைத்துக்கொள்ளாமல் குழந்தையுடன் விளையாடும் மற்ற குழந்தைகளுக்கும் குழந்தையையே கொடுக்குமாறு சொல்லி அறிவுறுத்த வேண்டும்.

  * பொய் சொல்வதைப் பார்த்து ரசிக்கும் பெற்றோர் அதிகமாக உள்ளனர். ஆரம்பத்திலே பொய் சொல்ல கூடாது. பொய் சொன்னால் பிறர் கேலிக்கு ஆளாக வேண்டி இருக்கும் எனச் சொல்லி வளர்க்க வேண்டும்.

  * குழந்தைகள் தவறாக, மரியாதைக் குறைவாக பேசும்போது பார்த்து ரசிக்க கூடாது. வீட்டில் இருப்பவர்கள் சிரித்தால், அது குழந்தைகளின் மனதில் பதிந்து வெளியிடங்களிலும் அதையே செய்யும்.

  * குழந்தை கேட்டவுடன் வெளி உணவுகளை வாங்கி தருவது தவறு. அதே உணவுகளை வீட்டில் செய்து சாப்பிடலாம் எனச் சொல்லி புரிய வைக்கலாம். மேலும், வயிறுக்கு கெடுதி என்றும் சொல்லுங்கள்.

  * குழந்தைக்கு தேவையில்லாமல் காசு கொடுப்பதைத் தவிருங்கள். காசை உண்டியலில் சேமிக்கும் பழக்கத்தை தூண்டலாம். அந்தப் பணத்தை குழந்தைக்கான உடை, மற்ற முடியாத குழந்தைகளுக்கு நோட், பேனா வாங்கி தருவது மிக சிறப்பு. இதெல்லாம் குழந்தையை நல்வழிப்படுத்தும்.

  * நேரமின்மை காரணத்தால் பெற்றோர் குழந்தைகளிடம், பொறுமையாக இருப்பது இல்லை. பொறுமை இல்லாத பெற்றோருக்கும் குழந்தைகளுக்கும் அதிக இடைவெளி விழும்.

  * குழந்தை செய்யும் ரசிக்கும்படியான குறும்புகளை ரசிப்பதும் தவறை கண்டிப்பதும் சமபங்காக இருத்தல் நல்லது. ஆனால், தற்போது இது குறைந்து வருகிறது.

  * பிற குழந்தையை ஒப்பிட்டு பாடுவது, ஆடுவது, படிப்பது போல தன் குழந்தை இல்லை என வருத்தப்படுவதும் குழந்தைகளை கட்டாயப்படுத்துவதும் அதிகமாகி வருகிறது. இதைத் தவிர்க்கவும்.

  * குழந்தையை அடிக்கடி பாராட்டுவதில்லை. இதனால் குழந்தைகள் சோர்வடையும். முடிந்த அளவு குழந்தையை பாராட்டுங்கள்.

  * குழந்தையிடம் நட்பாகவும் கண்டிப்பாகவும் இருந்தால் நல்ல குழந்தையை வளர்த்து எடுக்க முடியும்.

  * அதிக நாடகங்களைப் பார்ப்பதை அவசியம் தவிருங்கள். ஒவ்வொரு வார்த்தையும் குழந்தை கவனிக்கின்றது என மறக்க வேண்டாம்.

  * நன்மை செய்தால் நல்ல விளைவு, தீமை செய்தால் தண்டனை கிடைக்கும் எனச் சொல்லி வளர்க்க வேண்டும்.

  * ஆண் குழந்தைக்கு இரண்டு முட்டை, பெண் குழந்தைக்கு ஒரு முட்டை தருவது என வேறுபாடு காண்பிக்க கூடாது.

  * ஆண் குழந்தைதான் நடனம், விளையாட்டுகளில் ஈடுபட வேண்டும். பெண்கள் அல்ல என பெண் குழந்தைகளைத் தடுப்பது சரியான வளர்ப்பு முறை அல்ல.

  * அன்பு கலந்த கண்டிப்பு, நியாயமான கோபம், தேவையானவற்றுக்கு பாராட்டு என சரியான முறைகளை கையாளுங்கள்.

  * அன்பு, பொறுமை, விட்டுக்கொடுத்தல், நட்பு, சகிப்புத்தன்மை ஆகியவற்றுக்கான அர்த்தங்களை குழந்தைகளுக்கு சொல்லி கொடுத்து நல்ல குழந்தையாக மாற்றுங்கள்.
  ×