தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை

பவானி அருகே தாய் இறந்த சோகத்தில் மகன் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
தாய் இறந்த சோகத்தில் மகன் தற்கொலை
Published on

பவானி:

ஈரோடு மாவட்டம், பவானி அடுத்த கண்ணாடிபாளையம் பகுதியைச் சேர்ந்தவர் பொன்னுசாமி. இவரது மகன் தேவராஜ் (46) கூலித் தொழிலாளி. திருமணம் ஆகவில்லை.தனது தாயாருடன் வசித்து வந்தார். கடந்த இரண்டு மாதத்திற்கு முன்பு உடல் நலக்குறைவால் தாயார் இறந்து போனார். இந்நிலையில் தேவராஜுக்கு ஏற்கனவே குடிப்பழக்கம் இருந்துள்ளது. தாயார் இறந்த பின்பு குடிப்பழக்கம் அதிகமானது.

இதனால் தனியே வசித்து வந்த தேவராஜ் அதே பகுதியில் வசித்து வரும் தனது தம்பி பொங்கி யண்ணன் 43 அவரிடம் நான் வாழ விரும்பவில்லை என்றும் இனிமேல் வாழ எனக்கு என்ன இருக்கிறது என்று சொல்லி வந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று மாலை விவசாயத்திற்கு பயன்படுத்தும் களைக்கொல்லி மருந்தை குடித்துவிட்டு தனது தம்பி வீட்டுக்கு வந்து விஷம் குடித்து விட்டதாக சொல்லி மயங்கி விழுந்தார். மயங்கி கீழே விழுந்தவரை அக்கம் பக்கத்தினர் உதவியுடன் தேவராஜை மீட்டு அந்தியூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

பின்னர் மேல்சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனின்றி தேவராஜ் இறந்தார். இது குறித்து பவானி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com