என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    • தம்பி மற்றும் அவரது மனைவியை ஆணவ படுகொலை செய்த வினோத்குமார் குற்றவாளி என்று தீர்ப்பு விதிக்கப்பட்டது.
    • சின்னராஜ், கந்தவேல், அய்யப்பன் ஆகிய 3 பேரும் விடுதலை செய்யப்பட்டு விட்டனர்.

    கோவை:

    கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் சீரங்கராயன் ஓடையை சேர்ந்தவர் கருப்புசாமி. இவரது மகன் கனகராஜ். சுமைதூக்கும் தொழிலாளி. இவர் அதே பகுதியில் உள்ள வெள்ளிப்பாளையம் ரோட்டில் உள்ள வேறு சமூகத்தைச் சேர்ந்த வர்ஷினி பிரியா என்ற பெண்ணை காதலித்தார்.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் கனகராஜின் பெற்றோர் மற்றும் சகோதரர்கள் இவர்களது காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதையடுத்து 2 பேரும் வீட்டை விட்டு வெளியேறி காதல் திருமணம் செய்து, சீரங்கராயன் ஓடை பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தனர்.

    இதனால் ஆத்திரம் அடைந்த கனகராஜின் சகோதரர் வினோத், வீடு புகுந்து கனகராஜ் மற்றும் வர்ஷினி பிரியாவை வெட்டினார். இதில் கனகராஜ் சம்பவ இடத்திலேயே பலியானார். வர்ஷினி பிரியா ஆஸ்பத்திரியில் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இந்த ஆணவ படுகொலை சம்பவம் கடந்த 2019-ம் ஆண்டு நடந்தது. இந்த சம்பவம் தொடர்பாக மேட்டுப்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வினோத்குமார் மற்றும் அவரது நண்பர்களான சின்னராஜ், கந்தவேல், அய்யப்பன் ஆகியோர் கைது செய்யப்பட்டு ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.

    இந்த வழக்கு கோவை சிறப்பு கோர்ட்டில் நீதிபதி விவேகானந்தன் முன்பு விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி விவேகானந்தன், தம்பி மற்றும் அவரது மனைவியை ஆணவ படுகொலை செய்த வினோத்குமார் குற்றவாளி என்று தீர்ப்பு அளித்தார்.

    அத்துடன் வினோத்குமாருக்கான தண்டனை விவரம் வருகிற 29-ந் தேதி (புதன்கிழமை) அறிவிக்கப்படும் எனவும் நீதிபதி தெரிவித்திருந்த நிலையில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி திட்டமிட்டு ஆயுதங்களுடன் வீட்டிற்குள் நுழைந்து இளம்தம்பதியை வெட்டிக்கொன்றது நிரூபனம் ஆனதால் அவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

    கொலைக்கு சதித்திட்டம் தீட்டி கைது செய்யப்பட்ட சின்னராஜ், கந்தவேல், அய்யப்பன் ஆகிய 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.

    • ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான முடிவுகள் அரசின் பரிசீலனையில் உள்ளது.
    • ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    ஆட்டோ கட்டணம் வருகிற 1-ந்தேதி முதல் உயருகிறது. புதிய கட்டணம் தொடர்பான விரிவான பட்டியலை அனைத்து ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு வெளியிட்டது.

    அதன்படி, குறைந்தபட்ச கட்டணமாக முதல் 1.8 கிலோ மீட்டருக்கு ரூ.50 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக ஒவ்வொரு கிலோ மீட்டருக்கும் ரூ.18 கட்டணம் ஆகும். காத்திருப்பு கட்டணம் நிமிடத்துக்கு ரூ.1.50 நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இரவு 11 முதல் அதிகாலை 5 மணி வரை பயணம் செய்ய, பகல் நேர கட்டணத்தில் இருந்து 50 சதவீதம் அதிகம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது.

    இந்நிலையில், ஆட்டோ கட்டணத்தை உயர்த்துவது தொடர்பாக அரசு இதுவரை எந்த முடிவும் எடுக்கவில்லை என்றும் கட்டணத்தை உயர்த்துவது தொடர்பான முடிவுகள் அரசின் பரிசீலனையில் உள்ளது என்றும் போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    மேலும், ஆட்டோ சங்கங்கள் தன்னிச்சையாக கட்டணத்தை உயர்த்த முடியாது. சில ஆட்டோ சங்கங்கள் வரும் பிப்ரவரி மாதம் 1ம் தேதி முதல் கட்டணத்தை உயர்த்த உள்ளதாக போக்குவரத்து துறை கவனத்திற்கு வந்துள்ளது.

    அரசு நிர்ணயம் செய்துள்ள கட்டணத்தை மீறி கூடுதல் கட்டணம் வசூலித்தால் வட்டார போக்குவரத்து அலுவலர்களிடம் புகார் அளிக்கலாம்.

    புகாரின் அடிப்படையில் கூடுதலாக கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.

    • மக்களுக்காகவே தமிழக வெற்றிக் கழகம் கட்சி. மக்களுக்காக நீங்கள் செயல்பட வேண்டும்.
    • உங்களை நம்பியே கட்சி தொடங்கியுள்ளேன். கட்சிக்கு உண்மையாக, நேர்மையாக உழைக்க வேண்டும்.

    தமிழக வெற்றிக் கழகம் கட்சித் தலைவர் விஜய் மாவட்டச் செயலாளர்களை நியமிக்கும் பணியில் கவனம் செலுத்தி வருகிறார். முதற்கட்டமாக 19 மாவட்ட செயலாளர்களை அறிவித்திருந்தார். மீதமுள்ள மாவட்ட செயலாளர்களை தேர்ந்தெடுப்பதற்காக மாவட்ட நிர்வாகிகளுடன் இன்று பனையூர் அலுவலகத்தில் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தின் முடிவில் மேலும் 19 மாவட்டங்களுக்கு செயலாளர்களை அறிவித்துள்ளார்.

    இது தொடர்பாக பின்னர் விஜய் வெளியிட்டுள்ள எக்ஸ் பக்க பதிவில் "தமிழக வெற்றிக் கழகத்தில் இரண்டாம் கட்டமாக 19 கழக மாவட்டங்களுக்கு கழக விதிகளின்படி மாவட்டப் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

    மாவட்ட நிர்வாகிகளின் விவரங்களை அறிய... https://dropbox.com/scl/fo/w3uvc48ljnlniyrqc5x0v/AO_PD9HpX94MhMeZjuNa7JM?rlkey=927a55eupvh0nocq4hi52dmvw&st=75kfq593&dl=0

    புதியதாகப் பொறுப்பேற்கும் நிர்வாகிகளுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொள்கிறேன். புதிய நிர்வாகிகளுக்குக் கழகத் தோழர்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு நல்கிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

    முன்னதாக விஜய் நிர்வாகிகளிடம் பேசும்போது "மக்களுக்காகவே தமிழக வெற்றிக் கழகம் கட்சி. மக்களுக்காக நீங்கள் செயல்பட வேண்டும். 2026 சட்டமன்றத் தேர்தலில் நிச்சயமாக வெற்றி பெறுவோம். மக்கள் இயக்கமாக இருந்த நேரத்தில் நீங்கள் நன்றாக பணியாற்றி வந்தீர்கள். தற்போது உங்களை நம்பியே கட்சி தொடங்கியுள்ளேன். கட்சிக்கு உண்மையாக, நேர்மையாக உழைக்க வேண்டும்" எனத் தெரிவித்துள்ளார்.

    தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் தனது கட்சியை வலுப்படுத்தும் பணிகளை மேற்கொண்டு வருகிறார். கட்சி தொடங்கி ஒர் ஆண்டு நிறைவு பெற இருப்பதை ஒட்டியும், 2026 தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தயாராகும் வகையிலும் கட்சி பணிகளை தீவிரப்படுத்தி வருகிறார்.

    தமிழகத்தின் 234 தொகுதிகளிலும் கவனம் செலுத்தும் வகையில், 2 தொகுதிகளுக்கு ஒரு மாவட்ட செயலாளர் என்ற அடிப்படையில் கட்சி பொறுப்பாளர்களை நியமனம் செய்யும் பணிகளை மேற்கொண்டார். அதன்படி மாவட்ட அளவில் கட்சி பணிகளை செய்வதற்கு மாவட்ட செயலாளர் தலைமையில் வலுவான அணியை விஜய் உருவாக்கி வருகிறார்.

    மாவட்ட செயலாளர் தலைமையில் இணைச் செயலாளர், பொருளாளர், 2 துணை செயலாளர்கள் மற்றும் 10 செயற்குழு உறுப்பினர்கள் மாவட்ட கட்சிப் பணிகளை மேற்கொள்வார்கள். இந்த அடிப்படையில் தமிழக வெற்றிக் கழகத்தில் புதிய நிர்வாகிகள் தேர்வாகி வருகிறார்கள்.

    234 சட்டசபை தொகுதிகளுக்கும் பணிகளை தீவிரப்படுத்த 120 மாவட்ட செயலாளர்களில் பெரும்பாலானவர்கள் தேர்வு செய்யப்பட்டு விட்டனர். அதில் முதல் கட்டமாக விஜய் தமிழக வெற்றிக்கழகத்துக்கு புதிதாக 19 மாவட்ட செயலாளர்களை அறிவித்தார்.

     இதையடுத்து நேற்று முன்தினம் (27-ந்தேதி) தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் பனையூர் அலுவலகத்தில் நிர்வாகிகளோடு ஆலோசனை நடத்த உள்ளதாக கூறப்பட்டது. அடுத்த 4 நாட்களுக்கு நடைபெறும் எனவும் தகவல் வெளியானது. ஆனால் ஆலோசனைக் கூட்டம் தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது. இந்த நிலையில் ஒத்திவைக்கப்பட்ட நிர்வாகிகள் கூட்டம் இன்று நடைபெற்றது. அப்போது மாவட்ட செயலாளர்களை நியமித்துள்ளார்.

    • 1,087 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.19.03 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.
    • 2012ம் ஆண்டு பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

    ஈரோடு சுசி ஈமு பார்ம்ஸ் மேலாண் இயக்குனருக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து கோவை தமிழ்நாடு முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    மேலும், ரூ.19.03 கோடி அபராதம் விதித்து கோவை தமிழ்நாடு முதலீட்டாளர் நல பாதுகாப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

    கடந்த 2010ம் ஆண்டு ஈமு கோழி பண்ணை தொடர்பான திட்டங்கள் விளம்பரப்படுத்தப்பட்டது.

    இதைதொடர்ந்து, கிளை அலுவலகம் பொள்ளாச்சியில் செயல்பட்ட நிலையில், 1,087 முதலீட்டாளர்களிடம் இருந்து ரூ.19.03 கோடி மோசடி செய்ததாக புகார் எழுந்தது.

    இதைதொடர்ந்து, 2012ம் ஆண்டு பொருளாதார குற்றப்பிரிவு காவல்துறை வழக்குப்பதிவு செய்தது.

    இந்நிலையில் இந்த வழக்கு தொடர்பான இறுதிக்கட்ட விசாரணை முடிவில் ஈமு பார்ம்ஸ் இயக்குனருக்கு 10 ஆண்டு சிறை தண்டனையும், ரூ.19.03 கோடி அபராதமும் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

    மேலும், தமிழகம் முழுவதும் சுசி ஈமு கோழி நிறுவனம் மீது 10 மோசடி வழக்குகள் உள்ளன.

    • வாகன நிறுத்தத்திற்கான மாதாந்திர பாஸ்கள் பிப்ரவரி 1ம் தேதி முதல் நிறுத்தம் செய்ய முடிவு.
    • மெட்ரோ ரெயில் நிலையங்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வாகனங்களுக்கு அனுமதி.

    சென்னை மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகன நிறுத்தத்திற்கான மாதாந்திர பாஸ்கள் பிப்ரவரி 1ம் தேதி முதல் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வாகனங்களுக்கு அனுமதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்து சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:-

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தத்திற்கான மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் 01.02.2025 முதல் நிறுத்தம்

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகனம் நிறுத்தும் இடங்களுக்கான தேவை அதிகரித்து வருவதைக்கருத்தில் கொண்டு, சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் 01.02.2025 முதல் வாகனம் நிறுத்தத்திற்கான மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் வழங்குவதை நிறுத்த முடிவு செய்துள்ளது.

    அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் முதலில் வருபவர்களுக்கு முன்னுரிமை என்ற அடிப்படையில் வாகனம் நிறுத்தும் இடங்கள் இனி பயன்படுத்தப்படும். பயணிகள் தங்களது நான்கு சக்கர வாகனங்கள் மற்றும் இரு சக்கர வாகனங்களை நிறுத்த இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளவும், சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்திற்கு தங்கள் ஆதரவைத் தொடரவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

    ஜனவரி 2025-ல் வாகனம் நிறுத்துவதற்காக ஏற்கனவே வாங்கப்பட்ட மாதாந்திர பார்க்கிங் பாஸ்கள் அவற்றின் செல்லுபடியாகும் காலம் முடியும் வரை அனுமதிக்கப்படும்.

    மெட்ரோ ரெயில் நிலையங்களில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பயண அட்டை ( Travel Card) விற்பனை மற்றும் ரீசார்ஜ் செய்யும் வசதி முதற்கட்டனாக 11 மெட்ரோ ரெயில் நிலையங்களில் நிறுத்தம்.

    மெட்ரோ ரெயிலில் பயணிக்க சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பயண அட்டையுடன் கூடுதலாக 14.04.2023 முதல் தேசிய பொது போக்குவரத்து அட்டையை (சிங்கார சென்னை அட்டை) சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

    01.04.2025 முதல் SBI வழங்கிய தேசிய பொது போக்குவரத்து அட்டைக்கு (சிங்கார சென்னை அட்டை) முழுமையாக மாற சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, 41 மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் படிப்படியாக சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பயண அட்டைகளை ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது.

    முதல் கட்டமாக, புதிய வண்ணாரப்பேட்டை, காலடிப்பேட்டை, திருவொற்றியூர் தேரடி, திருவொற்றியூர், நந்தனம், சின்னமலை, OTA - நங்கநல்லூர் சாலை, மீனம்பாக்கம், எழும்பூர், கீழ்ப்பாக்கம் மற்றும் செனாய்நகர் ஆகிய 11 மெட்ரோ ரெயில் நிலையங்களில் சென்னை மெட்ரோ இரயில் நிறுவனத்தின் பயண அட்டை விற்பனை / ரீசார்ஜ் செய்யும் வசதி நிறுத்தப்படுகிறது.

    அதன்படி, மேற்கூறிய மெட்ரோ ரெயில் நிலையங்களில் சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனத்தின் பயண அட்டையை ரீசார்ஜ் செய்ய திட்டமிட்டுள்ள பயணிகள், தங்களது பயண அட்டையில் உள்ள மீதித் தொகையை மெட்ரோ இரயில்களில் பயணிப்பதற்கு அல்லது மெட்ரோ ரெயில் நிலையங்களில் வாகனம் நிறுத்துவதற்கு பயன்படுத்திவிட்டு, மேலும் பயன்பாட்டிற்காக தேசிய பொது போக்குவரத்து அட்டையை (சிங்கார சென்னைஅட்டை) பெற அறிவுறுத்தப்படுகிறார்கள்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • சீமான் மீது சேலம் சூரமங்கலம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • சமூக நீதிப் பேரவை என்ற அமைப்பு சார்பில் அளித்த புகாரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    தந்தை பெரியார் குறித்து நாதக ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி வருகிறார்.

    இதனால், தந்தை பெரியார் ஆதரவாளர்கள் முதல் அரசியல் கட்சி தலைவர்கள் வரை கண்டனங்கள் எழுந்து வருகிறது.

    இருப்பினும், சீமான் தொடர்ந்து தந்தை பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவித்து வருகிறார்.

    இந்நிலையில், தந்தை பெரியார் குறித்து இழிவாக பேசிய புகாரில், நாம் தழிமர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் மீது மேலும் ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி, சீமான் மீது சேலம் சூரமங்கலம் போலீசார் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சமூக நீதிப் பேரவை என்ற அமைப்பு சார்பில் அளித்த புகாரில் 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

    • பிப்ரவரி 3-ந் தேதி வரை நடக்கிறது.
    • சிப்காட் வளாகம் விழாக்கோலம் பூண்டுள்ளது.

    திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே குளவாய்ப்பட்டியில் உள்ள சிப்காட் வளாகத்தில் பாரத சாரண, சாரணியர் இயக்கத்தின் வைரவிழா மற்றும் முன்னாள் முதல்வர் கலைஞர் நூற்றாண்டு நினைவு பெருந்திரளணி மாநாடு சிறப்பு 'ஜாம்புரி' என்ற பெயரில் நேற்று தொடங்கி பிப்ரவரி 3-ந் தேதி வரை நடக்கிறது.

    இந்த மாநாட்டில் தமிழகம் மட்டுமல்லாமல் இந்தியாவின் அனைத்து மாநிலங்களில் இருந்தும் சுமார் 25 ஆயிரம் சாரண, சாரணியர்கள் மற்றும் அவர்களது வழிகாட்டிகள் கலந்து கொள்கிறார்கள்.

    சாரணர்களுக்காக சிப்காட் வளாகத்தில் சாரணர்கள் தங்குவதற்கு ஏராளமான கூடாரங்கள் அமைக்கப்பட்டுள்ளன. அத்துடன் உணவு தயாரிப்பு கூடங்கள், மருத்துவ உதவி மையங்கள், கருத்தரங்கு கூடங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. பல்லாயிரகணக்கான சாரணர்கள் அங்கு குவிந்து விட்டதால் சிப்காட் வளாகம் விழாக்கோலம் பூண்டுள்ளது.


    இந்நிகழ்வில் கலந்துகொண்டுள்ள சாரணர்கள் 24-க்கும் மேற்பட்ட சாகசப் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். பலகைகள் பாலம், குரங்கு பாலம், பீம் ஏறுதல், டயர் டனல், தீ பள்ளம், துப்பாக்கிச் சுடுதல், அம்பு எறிதல் போன்ற பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். இதற்காக 72 தளங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் தமிழ்நாடு பாரத சாரண சாரணியர் இயக்கத்தின் தலைவரும், அமைச்சருமான அன்பில் மகேஸ் பொய்யாமொழி பயிற்சிகளில் பங்கேற்றுள்ள மாணவ-மாணவர்களை சந்தித்து வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

    • ஈழத்தில் தன் இன மக்கள் சாவதை சகிக்காது, உள்ளத்தில் எரிந்த நெருப்பை தனது உடலிலே கொட்டிய தற்கொடையாளன்!
    • வீரத்தமிழ்மகன் அன்புத் தம்பி முத்துக்குமார் நினைவைப் போற்றுவோம்!

    சென்னை:

    நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

    ஈழத்தில் தன் இன மக்கள் சாவதை சகிக்காது, உள்ளத்தில் எரிந்த நெருப்பை தனது உடலிலே கொட்டிய தற்கொடையாளன்! வீரத்தமிழ்மகன் அன்புத் தம்பி முத்துக்குமார் நினைவைப் போற்றுவோம்!

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    • சிகிச்சை பெற்று வந்த யேசுதாஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
    • போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    கோவை:

    திருநெல்வேலி மாவட்டம் கரையிருப்பு சுந்தராபுரத்தை சேர்ந்தவர் யேசுதாஸ்(வயது33).

    இவர் கடந்த 2012-ம் ஆண்டு திருப்பூரில் நடந்த கொலை வழக்கில் கைது செய்யப்பட்டார். பின்னர் அவருக்கு கோர்ட்டு இந்த வழக்கில் ஆயுள் தண்டனை விதித்தது.

    இந்த நிலையில் யேசுதாஸ் கடந்த 2023-ம் ஆண்டு முதல் கோவை மத்திய ஜெயிலில் அடைக்கப்பட்டார். ஜெயிலில் உள்ள கைதிகளுக்கு ஒவ்வொரு வேலை கொடுக்கப்படுவது வழக்கம்.

    அதன்படி யேசுதாசுக்கு ஜெயிலில் உள்ள தொழிற்சாலையில் பணி ஒதுக்கப்பட்டு பணியாற்றி வந்தார்.

    கடந்த 27-ந்தேதி யேசுதாஸ், தொழிற்சாலையில் பணியில் ஈடுபட்டிருந்தார். அன்று மதியம் கழிவறைக்கு செல்வதாக கூறி சென்றார். ஆனால் நீண்ட நேரமாகியும் அவர் திரும்பி வரவில்லை.

    இதனால் சந்தேகம் அடைந்த காவலர்கள் கழிவறைக்கு சென்று பார்த்தனர். அப்போது அவர் அங்கு மயங்கிய நிலையில் கிடந்தார்.

    அவரை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த யேசுதாஸ் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து ரேஸ்கோர்ஸ் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

    யேசுதாஸ் மயங்கி விழுந்ததில், கழுத்து எலும்பில் முறிவு ஏற்பட்டு அழுத்தியதால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு உயிரிழந்ததாக முதற்கட்ட விசாரணையில் டாக்டர்கள் தெரிவித்ததாக போலீசார் கூறினர்.

    இருப்பினும் அவர் எப்படி இறந்தார் என்பது குறித்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஜெயில் கைதி மரணம் அடைந்துள்ள நிலையில், பணியில் கவனக்குறைவாக இருந்ததாக கோவை மத்திய ஜெயில் துணை வார்டன் மனோரஞ்சிதம், உதவி வார்டன் விஜயராஜ், தலைமை காவலர்கள் பாபுராஜ், தினேஷ் ஆகிய 4 பேரை சஸ்பெண்டு செய்து ஜெயில் சூப்பிரண்டு செந்தில் குமார் உத்தரவிட்டுள்ளார்.

    • சீமான் மீது ஏற்கனவே 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன.
    • தேர்தல் பறக்கும்படை அதிகாரி நவீன், கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி 5-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடும் நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோடு கிழக்குத் தொகுதியில் முகாமிட்டு தொடர் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

    தெருமுனைப் பிரசாரம், பொதுக்கூட்டங்களில் பேசி வருகிறார். இதில், தேர்தல் விதிகளை மீறியும், அனுமதி பெறாமல் பிரசாரம் செய்ததாக ஏற்கனவே வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் சீமான், கட்சியினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

    இதில் சீமான் மீது ஏற்கனவே 4 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு உள்ளன. இந்நிலையில், ஈரோடு நெரிக்கல்மேட்டில் நேற்று மாலை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமியை ஆதரித்து மாலை 5.30 மணி முதல் 6.30 மணி வரை பொதுக்கூட்டம் நடத்திட நாம் தமிழர் கட்சியினர் அனுமதி பெற்றிருந்தனர்.

    ஆனால், தேர்தல் விதிகளை மீறி அனுமதிக்கப்பட்ட நேரத்தை தவிர்த்து மாலை 6.15 மணிக்கு பொது க்கூட்டத்தை தொடங்கி இரவு 9.15 மணிக்கு முடித்தனர். இதுகுறித்து தேர்தல் பறக்கும்படை அதிகாரி நவீன், கருங்கல்பாளையம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

    புகாரின்பேரில் தேர்தல் விதிகளை மீறியதாக நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் கட்சியினர் 5 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    • பெண்களை காரைக் கொண்டு தடுத்து நிறுத்தும் துணிச்சல் சமூக விரோதிகளுக்கு எவ்வாறு ஏற்பட்டது.
    • சென்னையில் அண்மைக்காலமாக பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது கண்டிக்கத்தக்கது.

    சென்னை:

    சென்னை ஈ.சி.ஆர். சாலையில் முட்டுக்காடு பகுதியில் நள்ளிரவு நடுரோட்டில் காரை நிறுத்திய இளைஞர்கள் மற்றொரு காரில் வந்த பெண்களை துரத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக சமூக வலைதளத்தில் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

    இந்த சம்பவம் குறித்து பெண்களை துரத்தி சென்ற இளைஞர்கள் மீது 4 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இந்நிலையில் கிழக்குக் கடற்கரை சாலையில் பெண்களை துரத்திச் சென்று தொல்லை கொடுத்த திமுகவினர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளார்.

    இது குறித்து அவர் கூறியதாவது:-

    சென்னை கிழக்குக் கடற்கரைச் சாலையில் இளம்பெண்கள் சிலர் பயணித்த காரை, திமுக கொடி கட்டப்பட்ட காரில் வந்த சிலர் வழிமறித்து காரில் இருந்த பெண்களிடம் அத்துமீறும் காட்சிகள் அடங்கிய காணொலி சமூக ஊடகங்களில் வேகமாக பரவி வருகிறது. சென்னை புறநகரின் மிக முக்கியமான சாலையில் பயணிக்கும் பெண்களை வழிமறித்து தொல்லை கொடுக்கும் அளவுக்கு சமூக விரோதிகளுக்கு துணிச்சல் ஏற்பட்டிருப்பது அச்சமும் கவலையும் அளிக்கிறது.

    பாதிக்கப்பட்ட மக்கள் இது குறித்து கானாத்தூர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், குற்றம் செய்த சமூக விரோதிகள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்காத காவல்துறையினர், பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நெருக்கடி கொடுப்பதாக கூறப்படுகிறது.

    பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நீதியும், பாதுகாப்பும் வழங்க வேண்டிய காவல்துறையினரே குற்றவாளிகளுக்கு ஆதரவாக செயல்படுவது கண்டிக்கத்தக்கது.

    சென்னையின் மிக முக்கிய சாலையில் பயணிக்கும் பெண்களை காரைக் கொண்டு தடுத்து நிறுத்தும் துணிச்சல் சமூக விரோதிகளுக்கு எவ்வாறு ஏற்பட்டது? காரில் திமுக கொடி கட்டப்பட்டிருந்ததாலா? அல்லது தமிழ்நாட்டில் பெண்களுக்கு எதிராக எத்தகைய குற்றங்கள் நடந்தாலும் அதை அரசும், காவல்துறையும் கண்டு கொள்ளாது என்பதாலா? என்பது குறித்து அரசு விளக்கமளிக்க வேண்டும்.

    சென்னையில் அண்மைக்காலமாக பெண்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுவது கண்டிக்கத்தக்கது. கிழக்குக் கடற்கரை சாலையில் பெண்களை வழிமறித்து அத்துமீறிய, திமுக கொடிகட்டப்பட்ட காரில் வந்தவர்கள் மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    என அன்புமணி ராமதாஸ் கூறினார்.

    • பான் கார்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் அது இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் தான் உள்ளது.
    • வரி செலுத்துவது நமது கடமை என்று முழுவதுமாக நம்புகிறேன்.

    மதுரையில் நடந்த வருமான வரித்துறையின் நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் விஜய் சேதுபதி பேசியதாவது:

    என்னை இந்த நிகழ்ச்சிக்கு அழைத்ததற்கு ரொம்ப நன்றி.

    அரசின் திட்டங்களை தெரிந்து கொள்ள யாரை சென்று பார்க்க வேண்டும். எப்படி பார்க்க வேண்டும் என்பது கஷ்டமாக இருக்கும்.

    நாம் எளிமையாக தெரிந்து கொள்ள, எல்லோருக்கும் புரியும் அளவிற்கு இணையதளத்தை ஆரம்பித்து வங்கி கணக்கு எப்படி ஆரம்பிப்பது, சிக்கல்கள் என்ன? என்று குழந்தைகளுக்கு புரிவதுபோல் கார்ட்டூன் வடிவத்தில் கொடுத்து இருப்பது சுவாரசியமாக இருந்தது.

    பான் கார்டு விண்ணப்பிக்க வேண்டும் என்றால் அது இந்தி, ஆங்கிலத்தில் மட்டும் தான் உள்ளது. நிறைய பேருக்கு அது புரிவது கடினமாக உள்ளது. இது தமிழிலும் இருந்தால் புரிந்துகொள்ள சுலபமாக இருக்கும்.

    உங்களின் இந்த முயற்சி எல்லோரும் எளிமையாக போய் சேர வேண்டும் என்பதற்கான முயற்சி தான். இதை நான் வரவேற்கிறேன். ஆனால் அது தமிழிலும் இருந்தால் இன்னும் எளிமையாக எல்லோருக்கும் போய்ச்சேரும்.

    திடீரென்று ஏதாவது பிரச்சனை வரும்போது தான் அது என்ன பிரச்சனை என்று ஒரு படபடப்பில் அதை தெரிந்து கொள்வோம். அதற்கு முன்பே அது பற்றிய விளக்கமும் தெளிவும் நமக்கு புரியும் மொழியில் இருந்தால் நாம் இன்னும் தெளிவாக இருக்க முடியும் என்று நினைக்கிறேன்.

    இல்லையென்றால் அதற்கும் ஒருவரை சார்ந்து தான் இருக்க வேண்டியது இருக்கும். அது நிகழ்ந்தால் இன்னும் நன்றாக இருக்கும்.

    இந்த முயற்சி ரொம்ப அற்புதமானது. வரி செலுத்துவது மிகவும் முக்கியம். அவசியம்.

    நம்முடைய உரிமைக்காக நமது அரசிடம் எப்படி கோரிக்கை வைக்கிறோமோ அதே போல் வரி செலுத்துவது நமது கடமை என்று முழுவதுமாக நம்புகிறேன்.

    அதனால் இந்த முயற்சியை நான் வரவேற்கிறேன். மிகவும் கஷ்டப்பட்டு சம்பாதித்து வரி எல்லாம் கட்டுகிறோம். ஏதாவது benifit இருந்தால் நன்றாக இருக்கும். அதையும் யோசித்து பாருங்கள்.

    நன்றாக சம்பாதிக்கும்போது வரி கட்டி இருப்போம். ஒரு காலத்திற்கு மேல் வருமானம் இல்லாமல் போய் நிலைமை சரியில்லாமல் போனால் நல்ல tax payer ஆக ஒரு சிட்டிசனாக வரி கட்டி இருந்தால் அவருக்கு என்று சில benefits இருக்கலாமே என்று தோன்றுகிறது. இதையும் நீங்கள் consider செய்ய வேண்டும்.

    ஷூட்டிங் நடுவில் வந்துள்ளேன். இங்கிருந்து திருச்சிக்கு செல்ல வேண்டும். எல்லாரையும் சந்தித்ததில் பெரும் மகிழ்ச்சி. நன்றி. தமிழ்த்தாய் வாழ்த்து பாடி ஆரம்பித்தது எனக்கு சந்தோஷமாக இருந்தது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    ×