என் மலர்
மகாராஷ்டிரா
- கூட்டணி மக்களவை தேர்தலுக்கு மட்டுமே என்றால்...
- அதன்பின் இந்தியா கூட்டணி இனிமேல் இல்லை என அறிவிக்க வேண்டும்.
2024 பாராளுமன்ற தேர்தலில் பாஜக-வை தோற்கடிக்க காங்கிரஸ் கட்சி தலைமையில் மெகா கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்த கூட்டணி உருவாக முக்கிய காரணமாக இருந்த நிதிஷ் குமார் ஒருங்கிணைப்பாளர் பதவி தொடர்பாக அதிருப்தி அடைந்து, பாஜகவுடன் கூட்டணி வைத்துக் கொண்டார்.
மக்களவை தேர்தலின்போது மேற்கு வங்கத்தில் தொகுதி பங்கீடு தொடர்பான பிரச்சனையில் மம்தா பானர்ஜி கூட்டணியில் இருந்து வெளியேறினார். தற்போது டெல்லி சட்டமன்ற தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையில் ஆம் ஆத்மி, காங்கிரஸ் கட்சிக்கள் எதிர்எதிராக போட்டியிடுகின்றன.
மக்களவை தேர்தலின்போது செயல்பட்டு கொண்டிருந்த இந்தியா கூட்டணி, தற்போது ஆலோசனை கூட்டம் போன்றவற்றை நடத்துவதில்லை.
இந்த நிலையில்தான் ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் உமல் அப்துல்லா, "இந்தியா கூட்டணி மக்களை தேர்தலுக்கு மட்டும்தான் என்றால், அதை முறித்துக் கொள்வது சிறந்ததாக இருக்கும். இல்லையெனில் டெல்லி சட்டமன்ற தேர்தலுக்குப் பிறகு ஆலோசனை கூட்டம் நடத்தப்பட வேண்டும்" எனத் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் இந்தியா கூட்டணி சிதறி வருவதாக அதில் உள்ள கட்சிகள் நினைத்தால், அதற்கு காங்கிரஸ்தான் பொறுப்பு என சஞ்சய் ராவத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சஞ்சய் ராவத் (உத்தவ் தாக்கரே தலைமையிலான சிவசேனா கட்சி எம்.பி.) கூறுகையில் "கூட்டணி மக்களவை தேர்தலுக்கு மட்டுமே என்றால், அதன்பின் இந்தியா கூட்டணி இனிமேல் இல்லை என அறிவிக்க வேண்டும். கூட்டணியில் உள்ள அனைத்து கட்சிகளும் அவர்களுடைய சொந்த பாதையை தேர்வு செய்ய முடியும்.
இந்தியா கூட்டணி மக்களவை தேர்தலுக்கான அமைக்கப்பட்டது. ஆனால், ஒவ்வொருவரையும் ஒன்றாக வைத்துக் கொள்ள காங்கிரஸ் பொறுப்பு எடுத்துக் கொள்ள வேண்டும். கடந்த கால தவறுகளை சரி செய்ய வேண்டியது நமக்கு அவசியம். இந்திய கூட்டணியை கலைப்பது ஒரு தீவிர நடவடிக்கையாக இருக்கும்" எனத் தெரிவித்துள்ளார்.
- டி.சி.எஸ்., பாரதி ஏர்டெல், இன்போசிஸ், இந்துஸ்தான் யுனிலிவர் பங்குகள் ஏற்றம்.
- டைட்டன், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், மாருதி சுசுகி, கோடக் மஹிந்திரா பேங்க், டாடா மோட்டார்ஸ் பங்குகள் சரிவு.
மும்பை பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ் 241.30 புள்ளிகள குறைந்து சென்செக்ஸ் 77,378.91 புள்ளிகளில் இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது.
நேற்று சென்செக்ஸ் 77,620.21 புள்ளிகளில் மும்பை பங்குச் சந்தை வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 77,882.59 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. சற்று நேரத்தில் சரிவை சநித்தது. பின்னர் மெல்லமெல்ல சற்று உயர்வை சந்தித்த வர்த்தகம் இறுதியாக 241.40 புள்ளிகள் சரிந்து 77,378.91 புள்ளிகளில் நிறைவடைந்தது.
இன்று குறைந்தபட்சமாக 77,099.55 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 77,919.70 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது.
நிஃப்டி
இந்திய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டியும் இன்று 86.50 புள்ளிகள் சரிவடைந்து 23,440 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

நேற்று நிஃப்டி 23,526.50 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது. இன்று காலை 23,551.90 புள்ளிகளில் தொடங்கிய வர்த்தகம் குறைந்த பட்சமாக 23,344.35 புள்ளிகளிலும், அதிகபட்சமாக 23,596.60 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 86.50 புள்ளிகள் குறைந்து 23,440.00 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
டாலருக்கு நிகரான இந்தியாவின் பண மதிப்பு 14 பைசா குறைந்து இதுவரை இல்லாத அளவிற்கு 88 ரூபாயாக வீழ்ச்சி அடைந்துள்ளது.
ஏற்றம் கண்ட பங்குகள்
30 பங்குகளை அடிப்படையாக கொண்டு இயங்கும் மும்பை பங்குச் சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் டி.சி.எஸ்., பாரதி ஏர்டெல், இன்போசிஸ், இந்துஸ்தான் யுனிலிவர், ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், எல் அண்டு டி, பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ், டெக் மஹிந்திரா பங்குகள் மட்டுமே ஏற்றம் கண்டன
வீழ்ச்சி கண்ட பங்குகள்
டைட்டன், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், மாருதி சுசுகி, கோடக் மஹிந்திரா பேங்க், என்.டி.பி.சி., பவர் கிரிட் கார்ப், டாடா மோட்டார்ஸ், நெஸ்ட்லே இந்தியா, டாடா ஸ்டீல், இந்துஸ்இண்ட் பேங்க், ஆசியன் பெயிண்ட்ஸ், அதானி போர்ட்ஸ், சொமேட்டோ, ஆக்சிஸ் பேங்க், அல்ட்ராடெக் சிமெண்ட், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, சன் பார்மாசெயுட்டிகள், ஐ.டி.சி., எஸ்.பி.ஐ., ஐசிஐசிஐ பேங்க், ஹெச்.டி.டிஃப்.சி பேங்க் ஆகிய நிறுவன பங்குகள் சரிவை சந்தித்தன.
- தரையில் ரத்த வெள்ளத்தில் முழங்காலிட்டு அமர்ந்திருக்கும் அப்பெண்ணை அந்த இளைஞர் மீண்டும் தாக்குகிறார்
- இதையடுத்து கனோஜா பெண்ணின் கிராமத்திற்கு சென்று உண்மையை கண்டுபிடித்தார்.
புனேவில் உள்ள கால் சென்டரில் பணிபுரியும் இளைஞர் ஒருவர், நிறுவனத்தின் வாகன நிறுத்துமிடத்தில் சக பெண் ஊழியரை கத்தியால் குத்தி கொலை செய்துள்ளார். இதுதொடர்பான வீடியோ வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தரையில் ரத்த வெள்ளத்தில் முழங்காலிட்டு அமர்ந்திருக்கும் அப்பெண்ணை மக்கள் சூழ்ந்திருக்க அந்த நபர் கத்தியால் மீண்டும் தாக்குவது வீடியோவில் பதிவாகி உள்ளது.
அங்கு இருந்த யாரும் கொலைகாரனை தடுக்காதது மேலும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. பெண்ணை கொலை செய்தபின் இளைஞன் கத்தியை எறிந்துவிட்டு அங்கிருந்து செல்லும்போதுதான் மக்கள் முன்னேறி அவனை பிடித்துள்ளனர்.
குற்றம் சாட்டப்பட்ட இளைஞரின் பெயர் கிருஷ்ண கனோஜா (30). அவர் எர்வாடாவை தளமாகக் கொண்ட WNS குளோபலில் (வணிக செயல்முறை அவுட்சோர்சிங் நிறுவனம்) கணக்காளராக உள்ளார்.
தனது சக ஊழியரான சுபதா கோதாரே (28) தன்னிடம் பலமுறை கடன் வாங்கியதாக அவர் கூறினார். தனது தந்தை உடல்நிலை சரியில்லாமல் இருப்பதாகவும், சிகிச்சைக்கு பணம் தேவைப்படுவதாகவும் அந்த பெண் கூறியதாக அவர் தெரிவித்தார்.
பணத்தைத் திருப்பித் தருமாறு சுபதாவிடம் கேட்டபோது, தந்தையின் நிலையைக் காரணம் காட்டி பணத்தைத் திருப்பித் தர மறுத்தார். இதையடுத்து கனோஜா பெண்ணின் கிராமத்திற்கு சென்று உண்மையை கண்டுபிடித்தார்.அவரது தந்தை பூரண நலமுடன் இருப்பதாகவும், எந்த பிரச்சனையும் இல்லை என்றும் அவர் அறிந்தார்.

இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலை 6 மணியளவில், கனோஜா, சுபதாவை அவரது அலுவலகத்தின் வாகன நிறுத்துமிடத்திற்கு அழைத்துள்ளார். சுபதா பணத்தைத் திருப்பித் தர மீண்டும் மறுக்கவே, இது வாக்குவாதத்திற்கு வழிவகுத்தது. இதனால் கோபமடைந்த கனோஜா அவரை சமையலறைக் கத்தியால் குத்தி கொன்றுள்ளார்.
பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பெண், இறந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். குற்றம் சாட்டப்பட்ட இளைஞர் கனோஜாவை போலீசார் கைது செய்துள்ளனர்.
- மறுநாள் அதிகாலை வேளையில் ஒரு வீடியோ பதிவை உறவினர்களுக்கு அனுப்பினர்.
- எங்களை ஒரே சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யுங்கள் என்று உருக்கமாக கூறி இருந்தனர்.
நாக்பூர்:
மகாராஷ்டிரா மாநிலம் நாக்பூரில் உள்ள மார்ட்டின் நகர் பகுதியை சேர்ந்தவர் ஜெரில் என்ற டோனி ஆஸ்கார்(வயது56). இவரது மனைவி அன்னி(45). ஜெரில் பிரபல ஓட்டல்களில் சமையல்காரராக வேலை செய்தவர். கொரோனாவுக்கு பிறகு வேலைக்கு செல்லவில்லை.
இந்த தம்பதிக்கு திருமணமாகி 26 ஆண்டுகள் ஆகியும் குழந்தை இல்லை. ஆனாலும் அவர்கள் ஒருவருக்கொருவர் மிகவும் பாசத்துடன் வாழ்ந்து வந்தனர்.
சம்பவத்தன்று இரவு தங்களது 26-வது திருமண நாளை வெகுவிமரிசையாக கொண்டாடினர். உறவினர்கள், நண்பர்களை அழைத்து விருந்து வைத்தனர். மறுநாள் அதிகாலை வேளையில் ஒரு வீடியோ பதிவை உறவினர்களுக்கு அனுப்பினர். அதில் "நாங்கள் இந்த உலகத்தை விட்டு செல்கிறோம்" என்று கூறியிருந்தனர்.
இதைப்பார்த்த உறவுக்கார பெண் ஒருவர் பதறினார். அவர் உடனே மற்ற உறவினர்களுக்கு தகவல் தெரிவித்தார். அவர்கள் ஜெரில் வீட்டுக்கு விரைந்து சென்று பார்த்தனர். அப்போது படுக்கையில் மணக்கோலத்தில் அன்னி பேச்சுமூச்சு இன்றி கிடந்தார். சமையல் அறையில் ஜெரில் தூக்கில் தொங்கிக்கொண்டு இருந்தார். தகவலின் பேரில் போலீசார் விரைந்து வந்து விசாரணை நடத்தினர். இதில் கணவன்-மனைவி இருவரும் தற்கொலை செய்துகொண்டது தெரியவந்தது.
முதலில் அன்னி தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார். அவரது உடலை தூக்கு கயிற்றில் இருந்து இறக்கிய ஜெரில், தனது மனைவியின் உடலுக்கு திருமணத்தின்போது எடுத்த சேலையை அணிவித்து, பூ, பொட்டு வைத்து மணக்கோலத்தில் அலங்கரித்துள்ளார். பின்னர் ஜெரில் தானும் திருமணத்தின் போது எடுத்த ஆடையை அணிந்து தூக்குப்போட்டு தற்கொலை செய்தது தெரியவந்தது.
அவர்கள் உறவினர்களுக்கு அனுப்பிய வீடியோவில் உருக்கமாக பேசி இருந்தது தெரியவந்தது. அதில், "எங்களது சாவுக்கு நாங்களே காரணம். சொத்துகளை உறவினர்கள் பகிர்ந்து கொள்ளுங்கள். எங்களை ஒரே சவப்பெட்டியில் வைத்து அடக்கம் செய்யுங்கள்" என்று உருக்கமாக கூறி இருந்தனர்.
திருமண நாளை வெகுவிமரிசையாக கொண்டாடிவிட்டு உயிரை மாய்த்துக்கொண்ட இந்த தம்பதி ஏற்கனவே திட்டமிட்டு, இந்த விபரீத செயலில் ஈடுபட்டது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது. கணவன்-மனைவி இருவரும் உடல்நல பிரச்சனையால் பாதிக்கப்பட்டு இருந்ததும், குழந்தை இல்லாத ஏக்கத்தில் இருந்ததும் தெரியவந்தது. இதுவே அவர்களின் இந்த விபரீத முடிவுக்கு காரணமாக இருக்கலாம் என்று போலீசார் தெரிவித்தனர்.
இந்த துயரம் குறித்து உறவினர்கள் கூறுகையில், "திருமண நாளை தம்பதியர் கொண்டாடியபோது அவர்கள் அனைவருடன் சகஜமாக பேசினர். நண்பர்கள் விளையாட்டு காட்டியபோது சிரித்து மகிழ்ந்தனர். ஆனால் அடுத்தநாள் அவர்களை பிணமாக பார்ப்பதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அனைவருக்கும் பிரியாவிடை கொடுக்கத்தான் திருமண நாளை கொண்டாடி இருப்பதாக கருதுகிறோம்" என்றனர்.
திருமண நாளை மகிழ்ச்சியாக கொண்டாடிவிட்டு துயர முடிவை தேடிக்கொண்ட தம்பதியரால் அந்தப்பகுதியே சோகத்தில் மூழ்கி உள்ளது.
- திடீரென முடி உதிரும் பாதிப்பு அதிகமாகி வழுக்கையாகி வருகின்றனர்.
- கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 50 பேருக்கு முடி உதிர்ந்துள்ளது
மும்பை:
மராட்டிய மாநிலம் புல்தானா மாவட்டத்தில் உள்ள பாண்ட்கான், கல்வாட், ஹிங்னா ஆகிய கிராமங்களில் ஏராளமானவர்கள் வசித்து வருகின்றனர்.
இந்த கிராமத்தில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் பலருக்கும் திடீரென முடி உதிரும் பாதிப்பு அதிகமாகி கொத்து கொத்தாக முடி உதிர்ந்து வழுக்கையாகி வருகின்றனர்.
ஆண், பெண் பேரமின்றி சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலருக்கும் இந்த பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. உச்சந்தலையில் சிறிது அரிப்பு, சில நாட்களுக்கு பின் ரோமத்தின் தன்மை சொரசொரப்புடன் மாறுதல், பின்னர் 72 மணி நேரத்திற்குள் வழுக்கை என அவர்களது முடி தானாகவே உதிர்ந்து விழுவதாக கூறப்படுகிறது.
மேலும் தலைமுடியை கைகளால் லேசாக கோதினாலும் கூட அவை கையோடு வந்து விடுவதா வும் அந்த கிராம மக்கள் கூறுகின்றனர். 3 கிராமங்களில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் 50 பேர் வரை இந்த முடி உதிர்ந்துள்ளது அந்த கிராம மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பாதிக்கப்பட்ட மக்கள் டாக்டர்களிடம் சென்று சிகிச்சை பெற்று வருகின்ற னர். முடி உதிர ஆரம்பித்து விட்டால் ஒரு வாரத்தில் தலை வழுக்கையாகி விடுவதால் கிராம மக்கள் பீதியடைந்துள்ளனர்.
தலை முடி மட்டுமல்லாது தாடியும் உதிர்ந்து வருவதாக ஆண்கள் கூறுகின்றனர். வாலிபர் ஒருவர் கூறுகை யில், கடந்த 10 நாட்களாக எனது தலைமுடி வேகமாக உதிர்ந்து விடுவதாக உணருகிறேன் என்றார்.
இந்த புதிய நோய் பரவலுக்கு காரணம் என்ன? என்று இதுவரை கண்டறியப்படவில்லை.
எனினும் மாவட்ட சுகாதாரத்துறை அதிகாரிகள் அந்த கிராமத்திற்கு சென்று அங்கு வினியோகம் செய்யப்படும் தண்ணீரை சோதனைக்கு எடுத்து சென்றுள்ளனர்.
மேலும் முடி மற்றும் தோல் மாதிரிகளை சோதனைக்கு எடுத்து செல்லப்பட்டுள்ளது. இதன் முடிவுகள் வந்தால் தான் முடி உதிர்வுக்கான காரணம் தெரியவரும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அதே நேரத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கிராம மக்கள் தண்ணீரை சுட வைத்து பயன்படுத்தும்படி அதிகாரிகள் கேட்டுக்கொண்டுள்ளனர்.
இதுகுறித்து பஞ்சாயத்து தலைவர் ரமா பாட்டீல் கூறுகையில், கடந்த 10 நாட்களாக எங்கள் கிராமங்களில் ஒருவித மர்ம நோய் பரவுகிறது. தலை முடியை தொட்டால் கூட கையோடு வந்து விடுகிறது. இதனால் மக்களிடம் பீதி நிலவுகிறது என்றார்.
- விஷம் கலப்பதை மண்டபத்தில் இருந்த சிலர் பார்த்துள்ளனர்.
- தலைமறைவான மகேஷ் பாட்டீல் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
பெற்றோர் எதிர்ப்பை மீறி காதல் திருமணம் கொள்ளும் மணமக்களை பழிவாங்கும் போக்கு காலம்காலமாக நடைபெற்று வருகிறது. தனது விருப்பத்தை மீறி திருமணம் செய்தால் மகன் அல்லது மகள் என்றும் பாராமல் ஆணவக் கொலை செய்யும் சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. இருதரப்பினருக்கு இடையே முன்விரோதம் காரணமாக மோதல் என பல்வேறு குற்ற சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதுபோன்ற சம்பவங்களால் இருதரப்பைச் சேர்ந்தவர்களுக்கு தான் இழப்பு இருக்கும். ஆனால், மகாராஷ்டிராவில் நடந்த நிகழ்வோ இதையெல்லாம் மிஞ்சும் அளவிற்கு உள்ளது.
தனது விருப்பத்தை மீறி சகோதரி மகள் காதல் திருமணம் செய்து கொண்ட ஆத்திரத்தில் இருந்த தாய் மாமன், திருமண வரவேற்பு நிகழ்வில் தயாரிக்கப்பட்ட உணவில் விஷம் கலந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் கோலாப்பூர் மாவட்டத்தில் இந்நிகழ்வு நடைபெற்றுள்ளது.
தாய்மாமனான மகேஷ் பாட்டீல் எதிர்ப்பை மீறி சகோதரியின் மகள் காதல் திருமணம் செய்து கொண்டார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்காக சமைக்கப்பட்ட உணவில் விஷம் கலந்துள்ளார்.
இவர் விஷம் கலப்பதை மண்டபத்தில் இருந்த சிலர் பார்த்துள்ளனர். இதனால் விஷம் கலந்த உணவை யாரும் சாப்பிடவில்லை. இதையடுத்து மகேஷ் பாட்டீலை அங்கிருந்தவர்கள் பிடிக்க முற்பட்டனர். எனினும், அவர் அங்கிருந்து தப்பியோடி தலைமறைவாகி விட்டார். தலைமறைவான மகேஷ் பாட்டீல் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து போலீசார் தேடி வருகின்றனர்.
- வீடியோவை ஒரு மாணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட அது வைரலாகியது.
- வார்டனின் இந்த நடனத்தை பார்த்த பலரும் இதுபோன்ற வார்டன் தங்களுக்கு கிடைக்கவில்லையே என பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் உள்ள ஒரு தனியார் கல்லூரி செயல்படுகிறது. இந்த கல்லூரிக்குச் சொந்தமான மாணவியர் விடுதி அருகிலேயே அமைந்துள்ளது. இங்கு 100-க்கும் மேற்பட்ட மாணவிகள் தங்கி அந்த கல்லூரியில் படித்து வருகின்றனர்.
புத்தாண்டை முன்னிட்டு அங்குள்ள மாணவிகள் ஆடிப்பாடி தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். அதிக சத்தம் கேட்டதால் இதனை தட்டிக் கேட்க அந்த விடுதி வார்டன் அங்கு சென்றார். அவரை பார்த்ததும் மாணவிகள் ஒரு நிமிடத்தில் உறைந்து போயினர். ஆனால் அதில் ஒரு மாணவி அவரது கையை பிடித்து நடனமாடும்படி வற்புறுத்தினார்.
முதலில் திட்டுவது போல சென்றாலும் அந்த மாணவியின் வேண்டுகோளுக்கிணங்க வார்டனும் 'வக்த் பாதல் தியா, ஜஸ்பத் பாதல் தியே' என்ற பிரபல இந்தி பாடலுக்கு அவர்களுடன் சேர்ந்து நடனமாடினார். இந்த வீடியோவை ஒரு மாணவி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட அது வைரலாகியது.
வார்டனின் இந்த நடனத்தை பார்த்த பலரும் இதுபோன்ற வார்டன் தங்களுக்கு கிடைக்கவில்லையே என பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
- அவரது நம்பர் பிளேட் கொண்ட காரை தாஜ் ஓட்டலில் சாகிர் அலி பார்த்துள்ளார்.
- அந்த காரை நிறுத்த சாகிர் அலி முயன்றுள்ளார்.
தாஜ் ஓட்டலில் ஒரே நம்பர் பிளேட் கொண்ட 2 கார்கள் நுழைந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து தாஜ் ஓட்டலில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டது. பின்னர் 2 கார்களையும் போலீசார் கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் இந்த நம்பர் பிளேட் சாகிர் அலி என்பவருக்கு சொந்தமானது என்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.
சாகிர் அலிக்கு அடிக்கடி போக்குவரத்து விதிகளை மீறியதாக அபராதம் விதிக்கப்பட்டு வந்துள்ளது. அவர் செல்லாத இடத்தில கூட போக்குவரத்து விதிகளை மீறியதாக அவருக்கு மெசேஜ் வரவே அவர் போலீசிடம் இது தொடர்பாக புகார் கொடுத்துள்ளார்.
இந்நிலையில் அவரது நம்பர் பிளேட் கொண்ட காரை தாஜ் ஓட்டலில் சாகிர் அலி பார்த்துள்ளார். அந்த காரை நிறுத்த சாகிர் அலி முயன்றுள்ளார். பின்னர் போலீசார் 2 கார்களையும் நிறுத்தியுள்ளனர்.
சாகிர் அலியின் காரின் பதிவு எண் MH01EE2388 என்றும் மற்றொரு காரின் பதிவு எண் MH01EE2383 ஆகும். காருக்காக வாங்கிய கடனை அடைக்க இஎம்ஐ கட்ட முடியாததால் தனது கார் எண்ணின் கடைசி இலக்கத்தை '8' ஆக மாற்றியதாக மற்றொரு காரின் ஓட்டுநர் போலீசாரிடம் தெரிவித்தார். இதனையடுத்து கார் உரிமையாளர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
லஸ்கர் இ தொய்பா பயங்கரவாதிகள் 2008 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி மும்பை தாஜ் ஓட்டலில் மிகப்பெரிய தாக்குதல்களை அடுத்தடுத்து நிகழ்த்தியதை யாரும் மறக்க மாட்டார்கள்.
அரபிக்கடலில் படகு மூலம் வந்த 10 பேர் கொண்ட பாகிஸ்தான் பயங்கரவாத கும்பல், தெற்கு மும்பையில் புகுந்து பல இடங்களில் தாக்குதல் தொடுத்தது. அந்த சமயத்தில் தாஜ் ஓட்டலில் 6 குண்டுகள் வெடித்தன. இந்த தாக்குதலில் எண்ணற்றோர் உயிரிழந்தனர்.
- ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், டைட்டன் ஆகிய இரண்டு நிறுவன பங்குகள் சற்று ஏற்றம் கண்டன.
- மும்பை பங்குச் சந்தையின் முக்கியமான 28 நிறுவன பங்குகள் இன்று சரிவை சந்தித்தன.
மும்பை பங்குச் சந்தை குறியீடு சென்செக்ஸ் 1,258.12 புள்ளிகள் குறைந்து இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை சென்செக்ஸ் 79,223.11 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இன்று காலை 58 புள்ளிகள் உயர்ந்து 79,281.65 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. இன்று குறைந்த பட்சமாக 77,781.62 புள்ளிகளிலும், அதிக பட்சமாக 79,532.67 புள்ளிகளிலும் வர்த்தகம் ஆனது. இறுதியாக 1,258.12 புள்ளிகள் சரிந்து சென்செக்ஸ் 77964.99 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.
இந்திய பங்குச் சந்தை குறியீடு நிஃப்டியும் இன்று 388.70 புள்ளிகள் குறைந்து வர்த்தகம் நிறைவடைந்தது. கடந்த வெள்ளிக்கிழமை 24,004.75 புள்ளிகளில் வர்த்தகம் நிறைவடைந்தது.

இன்று காலை நிஃப்டி 41 புள்ளிகள் உயர்நது 24,045.80 புள்ளிகளில் வர்த்தகம் தொடங்கியது. அதிக பட்சமாக 24,089.95 புள்ளிகளிலும், குறைந்தபட்சமாக 23,551.90 புள்ளிகளிலும் வர்த்தகமானது. இறுதியாக 338.70 புள்ளிகள் வீழ்ச்சி கண்டு 23616.05 புள்ளிகளில் இன்றைய வர்த்தகம் நிறைவடைந்தது.
ஏற்றம் கண்ட பங்குகள்
30 பங்குகளை அடிப்படையாக கொண்டு இயங்கும் மும்பை பங்குச் சந்தையின் இன்றைய வர்த்தகத்தில் ஹெச்.சி.எல். டெக்னாலஜிஸ், டைட்டன் ஆகிய இரண்டு நிறுவன பங்குகள் மட்டுமே சற்று ஏற்றம் கண்டன.
வீழ்ச்சி கண்ட பங்குகள்
ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரிஸ், இந்துஸ்தான் யுனிலிவர், பஜாஜ் பைனான்ஸ், மாருதி சுசுகி, கோடக் மஹிந்திரா பேங்க், என்.டி.பி.சி., டைட்டன், பவர் கிரிட் கார்ப், டாடா மோட்டார்ஸ், பஜாஜ் பின்செர்வ், நெஸ்ட்லே இந்தியா, டாடா ஸ்டீல், இந்துஸ்இண்ட் பேங்க் டெக் மஹிந்திரா, ஆசியன் பெயிண்ட்ஸ், அதானி போர்ட்ஸ், சொமேட்டோ, ஆக்சிஸ் பேங்க், அல்ட்ராடெக் சிமெண்ட், மஹிந்திரா அண்டு மஹிந்திரா, சன் பார்மாசெயுட்டிகள், எல் அண்டு டி, ஹெச்.சி.எல். டெக்னாலாஜிஸ், ஐ.டி.சி., எஸ்.பி.ஐ., இன்போசிஸ், ஐசிஐசிஐ பேங்க், பாரதி ஏர்டெல், ஹெச்.டி.டிஃப்.சி பேங்க், டி.சி.எஸ். ஆகிய 28 நிறுவுன பங்குகள் சரிவை சந்தித்தன.
இந்திய ரூபாய் மதிப்பு வீழ்ச்சி
டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இன்றைய வர்த்தகத்தில் 3 பைசா வீழ்ச்சி கண்டு இது வரை இல்லாத அளவிற்கு 85.82 ரூபாயாக அதிகரித்துள்ளது.
- சிவசேனா பிரிவு ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் பிரிவு அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்கள் ஆகினர்.
- எங்கள் நிலைப்பாட்டில் மறுபரிசீலனை எதுவும் இல்லை
மகாராஷ்டிராவில் கடந்த வருடம் நவம்பரில் நடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக கூட்டணி வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்தது. முதல்வராக தேவேந்திர பட்நாவிஸ் பொறுப்பேற்க, சிவசேனா பிரிவு ஏக்நாத் ஷிண்டே, தேசியவாத காங்கிரஸ் பிரிவு அஜித் பவார் ஆகியோர் துணை முதல்வர்கள் ஆகினர்.
இந்நிலையில் சமீபத்தில் தான் வெற்றி பெற்ற பாராமதி தொகுதிக்கு விஜயம் செய்த துணை முதல்வர் அஜித் பாவார் சர்ச்சை கருத்து ஒன்றை கூறியுள்ளார். வாக்காளர்கள் தன்னைத் தேர்ந்தெடுத்ததால் அவர்கள் தனக்கு 'முதலாளி' அல்ல என்று வாயை விட்டுள்ளார்.
பாராமதியில் கூட்டம் ஒன்றில் பேசிய அஜித் பவார், நீங்கள் எனக்கு வாக்களித்ததால், நீங்கள் எனக்கு முதலாளி அல்லது உரிமையாளராகிவிட்டீர்கள் என்று அர்த்தமல்ல. இப்போது என்னை விவசாயக் கூலி ஆக்கிவிட்டீர்களா? என்று மக்கள் கூட்டத்தை பார்த்து கறாராக கூறினார்.
முன்னதாக ஜனவரி 3 ஆம் தேதி, அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி (என்சிபி), சரத் பவார் அணியுடன் மீண்டும் இணையப்போவதில்லை என்று திட்டவட்டமாக தெரிவித்திருந்தது.
நாங்கள் தேசிய ஜனநாயக கூட்டணி [என்டிஏ] மற்றும் மஹாயுதியுடன் தொடர்வோம். எங்கள் நிலைப்பாட்டில் மறுபரிசீலனை எதுவும் இல்லை என்று மகாராஷ்டிர மாநில என்சிபி தலைவர் சுனில் தட்கரே தெரிவித்திருந்தார். இதற்கிடையே அஜித் பவாரின் ஆணவம் தொனிக்கும் பேச்சு வைரலாகி வருகிறது.
- பீகாரில் நிதிஷ்குமாருடன் பா.ஜ.க. கூட்டணியில் உள்ளது.
- அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பாரா என்ற சந்தேகம் உள்ளது.
மும்பை:
உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சியின் மூத்த தலைவரான சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பீகார் மாநிலத்தில் கூட்டணிக் கட்சியை பா.ஜ.க. முதுகில் குத்தியது.
பீகாரில் நிதிஷ்குமாருடன் பா.ஜ.க. கூட்டணியில் உள்ளது. 10 ஐக்கிய ஜனதா தள கட்சி எம்.பி.க்களை வேட்டையாடும் வேலையை தொடங்கியுள்ளது.
இதனால் நிதிஷ்குமார் கலக்கத்தில் உள்ளார். அவர் தேசிய ஜனநாயக கூட்டணியில் நீடிப்பாரா என்ற சந்தேகம் உள்ளது.
வரும் பீகார் சட்டசபை தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஒரு பகுதியாக ஐக்கிய ஜனதா தளம் கட்சி போட்டியிடுவது சாத்தியமில்லை என தெரிவித்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ.க. ஆட்சி 2 ஆண்டு நீடிக்குமா என்பது சந்தேகமே என சில தினங்களுக்கு முன் சஞ்சய் ராவத் கருத்து தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
- கழுத்து மற்றும் பிற உடல் பாகங்களில் பலமுறை குத்தி கொலை செய்துள்ளார்.
- அதன்பின் அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு சென்று குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.
தன்னை விட சகோதரி மீது அதிகம் அன்பு செலுத்திய வயதான தாயை மகள் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் கிழக்கு குர்லாவின் குரேஷி நகரில் வசித்து வந்தவர் சபீரா பானு ஷேக் (71). இவரது 41 வயது மகள் மகள் ரேஷ்மா முஃபர் காசி[ Reshma Muffar Qazi]. கடந்த வியாழக்கிழமை மாலை வீட்டில் இவர்கள் இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் எழுந்துள்ளது.
அப்போது சமையலறை காய்கறி வெட்டும் கத்தியால் தாய் சபீராவை வயிறு, மார்பு, கழுத்து மற்றும் பிற உடல் பாகங்களில் பலமுறை குத்தி கொலை செய்துள்ளார். அதன்பின் அருகில் உள்ள சுனாபாட்டி[Chunabhatti] காவல் நிலையத்துக்கு சென்று குற்றத்தை ஒப்புக்கொண்டு வாக்குமூலம் அளித்துள்ளார்.

காசி தனது மூத்த சகோதரியை அவர்களின் தாய் அதிகமாக நேசிப்பதாக நினைத்து பொறாமை கொண்டு இந்த கொலையை செய்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர். சம்பவ இடத்துக்கு விரைந்து குற்றத்தை உறுதி செய்த பின்னர் காசியை போலீஸ் கைது செய்துள்ளது.






