search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "eve teasing"

    மும்பை நகரில் புத்தாண்டு இரவின்போது ஈவ் டீசிங்கில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் ரோந்துப் பணியில் 40 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்படுகின்றனர். #NewYearCelebrations #Eveteasing #MumbaiPolice
    மும்பை:

    நாட்டின் வர்த்தக தலைநகரான மும்பையில் புத்தாண்டு கொண்டாட்டங்கள் விமர்சையாக நடைபெறும்.

    இந்நிலையில், மும்பை நகரில் புத்தாண்டு இரவில் ஈவ் டீசிங்கில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் வகையில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளது என போலீசார் தெரிவித்தனர். 

    இதுதொடர்பாக, மும்பை துணை கமிஷனர் மஞ்சுநாத் சிங் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், மும்பை நகரில் புத்தாண்டு இரவில் ஈவ் டீசிங்கில் ஈடுபடுவோரை கண்காணிக்கும் வகையில் 40 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர் என தெரிவித்துள்ளார்.

    பெண்களை ஈவ் டீசிங் செய்வது மற்றும் பாலியல் பலாத்காரங்கள் ஆகியவை நடக்காமல் கண்காணிப்பதற்காக மும்பை நகருக்கு உட்பட்ட முக்கிய பகுதிகளில் சிறப்பு போலீசார் ரோந்துப் பணிகளில் ஈடுபடுவார்கள் எனவும் தெரிவித்துள்ளார். #NewYearCelebrations #Eveteasing #MumbaiPolice
    எடப்பாடி அருகே கலெக்டரிடம் ஈவ் டீசிங் புகார் கொடுத்த மாணவி தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
    எடப்பாடி:

    சேலம் மாவட்டம் கொங்கணாபுரம் அருகே உள்ள சடையம்பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராஜேந்திரன். கல் உடைக்கும் தொழிலாளி.

    இவரது மகள் கோமதி (வயது 16). கொங்கணாபுரம் அரசு பள்ளியில் 12-ம் வகுப்பு படித்து வருகிறார். நேற்று கொங்கணாபுரம் பகுதியில் ஆய்வு மேற்கொண்ட கலெக்டர் ரோகிணியிடம் கோமதி ஒரு மனு கொடுத்தார்.

    அந்த மனுவில், தான் பள்ளிக்கு செல்ல முடியாத படி அதே பகுதியை சேர்ந்த சிலர் தன்னை கேலி, கிண்டல் (ஈவ்டீசிங்) செய்வதுடன் தொடர்ந்து தொந்தரவு செய்து வருவதாகவும் கூறி இருந்தார்.

    மேலும் அவர்கள் மன ரீதியாகவும், உடல்ரீதியாகவும் துன்புறுத்தி வருவதாகவும், இதனால் தேர்வு எழுத செல்ல முடியாத நிலை ஏற்பட்டு வீட்டிலேயே இருந்து வருவதாகவும் கூறியிருந்தார்.

    தனது நிலைகுறித்து கலெக்டரிடம் கூறி அழுத மாணவி கோமதிக்கு ஆறுதல் கூறி தேற்றிய கலெக்டர் ரோகிணி, உடனடியாக சம்பந்தப்பட்ட போலீஸ் அதிகாரியை அழைத்து, அம்மாணவியிடம் அத்துமீறும் நபர்கள் மீது விசாரனை செய்து கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    கலெக்டரின் உத்தரவின் பேரில் நேற்று மாலை கோமதி வசிக்கும் பகுதிக்கு சென்ற போலீசார் விசாரனை மேற்கொண்டதாக கூறப்படுகிறது. போலீசார் வந்து சென்ற சிறிது நேரத்திற்குள் கோமதி வீட்டிற்கு வந்த கேலி, கிண்டல் செய்த நபர்கள் கோமதியை மிரட்டி சென்றதாகவும், மேலும் தங்கள் மீது கொடுத்த புகாரினை திரும்ப பெற சொல்லி மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.

    இதனால் மனவேதனை அடைந்த கோமதி இன்று அதிகாலை வி‌ஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றார். வீட்டின் அருகே வாயில் நுரைதள்ளிய நிலையில் கிடந்த கோமதியை மீட்ட உறவினர்கள் அவரை எடப்பாடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இதற்கிடையே மாணவியை கேலி, கிண்டல் செய்ததுடன் கலெக்டரிடம் புகார் கொடுத்ததால் வீட்டிற்கு சென்று மிரட்டிய வாலிபர்களை பிடிக்க போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    போடி அருகே கல்லூரி மாணவியை கேலி செய்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.
    தேனி:

    போடி அருகே சிலமலை தெற்கு தெருவை சேர்ந்தவர் காமராஜ். இவரது மனைவி மீனாட்சி. இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் மீனாட்சி தனது மகள் நந்தினியுடன் தனியாக வசித்து வருகிறார்.

    நந்தினி தேனியில் உள்ள கல்லூரியில் பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வருகிறார். இவர் கல்லூரிக்கு சென்று வரும்போது மேற்கு தெருவை சேர்ந்த நாகராஜ் என்பவர் கேலி, கிண்டல் செய்துள்ளார்.

    சம்பவத்தன்று நந்தினியை உரசுவது போல் சென்றுள்ளார். இதனை நந்தினியின் தாய் தட்டிகேட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த நாகராஜ் கொலை செய்து விடுவதாக மிரட்டி உள்ளார். இது குறித்து புகாரின் பேரில் போடி தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து நாகராஜை கைது செய்தனர்.

    சீர்காழி அருகே ஈவ்- டீசிங் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து 2 வாலிபர்களை போலீசார் கைது செய்தனர். #eveteasing
    சீர்காழி:

    நாகை மாவட்டம் சீர்காழி அருகே உள்ள காரைமேடு பகுதியை சேர்ந்தவர் முனியப்பன். இவரது மகள் ராகவி (வயது 20). இவர் பூம்புகார் அரசு கல்லூரியில் பி.காம். படித்து வந்தார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் காரைமேடு அரசு பள்ளியில் வாக்காளர் பெயர் சேர்க்கை முகாம் நடந்தது. இதனால் பெயரை சேர்ப்பதற்காக மாணவி ராகவி அங்கு சென்றார்.

    பிறது பெயரை விண்ணப்பிக்க மனு செய்து விட்டு வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார்.

    அப்போது அதே பகுதியை சேர்ந்க அப்துல் என்கிற காளிமுத்து (30), பஞ்சு என்கிற வினோத் ஆகியோர் திடீரென மாணவி ராகவியை வழிமறித்து கிண்டல் செய்தனர். ராகவிடம் திருமணம் செய்து கொள்கிறாயா? என்று கேட்டனர்.

    இதை கேட்டு ஆவேசமடைந்த ராகவி, அவர்கள் 2 பேரையும் திட்டியுள்ளார். பிறகு அவர் வீட்டுக்கு புறப்பட்டு சென்றார்.

    பிறகு தனக்கு நடந்த ஈவ் டீசிங் சம்பவத்தை நினைத்து அவர் மனமுடைந்து காணப்பட்டார். சிறிது நேரம் கழித்து வினோத்தின் தாயை சந்தித்து பேசினார்.

    அப்போது உங்களது மகன் என்னை கிண்டல் செய்து வருகிறான். தொடர்ந்து பலமுறை இதேபோல் நடந்து வருவதால் நான் தற்கொலை செய்து கொள்ள போகிறேன் என்று கோபத்துடன் கூறி விட்டு சென்றார்.

    பிறகு வீட்டுக்கு சென்ற அவர் பின்புறத்தில் இருந்த மரத்தில் ராகவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    ஈவ்- டீசிங் காரணமாக மாணவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையடுத்து ராகவியின் தந்தை முனியப்பன், வைத்தீஸ்வரன் கோவில் போலீசில் புகார் செய்தார்.

    அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். மாணவியை ஈவ் டீசிங் செய்த காளிமுத்து, வினோத் ஆகியோரை நேற்று இரவு கைது செய்தனர். கைதான 2 பேரும் சிற்ப சுதை தொழிலாளிகளாக இருந்து வருகின்றனர். #eveteasing
    ரெயில்களில் பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்துவது மற்றும் கேலி செய்யும் குற்றவாளிகளுக்கு மூன்று ஆண்டு சிறை தண்டனை வழங்க முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #EveTeasing #Women #Train
    புதுடெல்லி:

    ரெயில்களில் பயணம் செய்யக்கூடிய பெண்களை பாலியல் ரீதியில் துன்புறுத்துவது மற்றும் கேலி செய்யும் குற்றவாளிகளுக்கு அதிகபட்சமாக ஓர் ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்படுகிறது.

    இந்த நிலையில் ரெயில்களில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் தண்டனை காலத்தை 3 ஆண்டுகளாக உயர்த்தும் வகையில் சட்டத்தை மாற்றியமைக்க வேண்டுமென ரெயில் பாதுகாப்புபடை மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து ரெயில்வே பாதுகாப்புபடையின் மூத்த அதிகாரி ஒருவர் கூறியதாவது:-

    ரெயில்களில் பெண்களுக்கான பெட்டியில் பயணம் செய்கிறவர்கள் மற்றும் பெண்களிடம் கேலி செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க ரெயில்வே போலீசாரின் உதவியை நாட வேண்டி உள்ளது. இதில் பல்வேறு சிக்கல்கள் உள்ளது.

    எனவே இனிவரும் காலங்களில் இது போன்ற குற்றங்களில் ஈடுபடுபவர்கள் மீது ரெயில்வே போலீசாரின் உதவி இன்றி விரைவாக நடவடிக்கை எடுக்கவும், அவர்களுக்கான தண்டனை காலத்தை உயர்த்தவும் சட்டத்தில் திருத்தம் கொண்டுவர கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.

    மேலும் பெண்களுக்கான பெட்டியில் பயணம் செய்கிறவர்களுக்கு விதிக்கப்படும் அபராத தொகையை ரூ.500-ல் இருந்து ரூ.1,000-மாக உயர்த்தவும் வலியுறுத்தப்பட்டு இருக்கிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.  #EveTeasing #Women #Train
    ×