என் மலர்
மகாராஷ்டிரா
- சைஃப் அலி கான், லீலாவதி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
- பாந்த்ரா போலீஸ் உயர் அதிகாரிகள் சைஃப் அலி கான் வீட்டுக்கு சென்று ஆய்வு செய்தனர்.
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கான் - கரீனா கபூர் தம்பதி மும்பை பாந்த்ரா மேற்கு பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 7-வது மாடியில் வசித்து வருகிறார்கள்.
இன்று அதிகாலை 2.30 மணியளவில் அடையாளம் தெரியாத மர்ம நபர் ஒருவன் சைஃப் அலி கான் வீட்டுக்குள் நுழைந்துள்ளான். அப்போது சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் விழித்துக் கொண்டனர்.
கொள்ளையனை பார்த்ததும் சைஃப் அலி கான் அதிர்ச்சி அடைந்தார். அவனை பிடிக்க முயன்றார். இருவரும் கடுமையாக மோதிக்கொண்டு கைகலப்பில் ஈடுபட்டனர்.
அந்த நேரத்தில் கொள்ளையன் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் சைஃப் அலி கானை சரமாரியாக குத்திவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டான்.
இதில் அவரது உடலில் கழுத்து, முதுகு பகுதி (தண்டுவடம் அருகே), கை உள்ளிட்ட 6 இடங்களில் காயம் ஏற்பட்டது. இதில் 2 இடங்களில் பலத்த காயம் ஏற்பட்டது. அவரது உடலில் இருந்து ரத்தம் கொட்டியது.
சைஃப் அலி கான் கத்தியால் குத்தப்பட்டதை பார்த்து வீட்டில் இருந்த அனைவரும் அலறினார்கள். இதேபோல வீட்டில் இருந்த பணிப்பெண்ணும் கொள்ளையனால் தாக்கப்பட்டார்.
கத்திக்குத்தில் படுகாயம் அடைந்த சைஃப் அலி கான் பாந்த்ரா பகுதியில் உள்ள லீலாவதி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
அவருக்கு ஆபரேஷன் செய்யப்பட்டது. இதனையடுத்து அவர் உயிருக்கு ஆபத்து இல்லை என்று மருத்துவர்கள் தெரிவித்தனர்.
சம்பவம் பற்றி தகவல் அறிந்ததும் பாந்த்ரா போலீஸ் உயர் அதிகாரிகள் சைஃப் அலி கான் வீட்டுக்கு சென்றனர். அவரது வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்த கொள்ளையனை குற்றப்பிரிவு போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்நிலையில், குற்றவாளியின் சிசிடிவி புகைப்படத்தை மும்பை போலீசார் வெளியிட்டுள்ளனர். அந்த புகைப்படத்தில் மாடி படிக்கட்டுகளில் இருந்து குற்றவாளி கீழே இறங்கி வருகிறார். அவனுக்கு கிட்டத்தட்ட 35 வயது இருக்கும் போலீசார் தெரிவித்தனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- சட்டசபை , உள்ளாட்சி தேர்தல் குறித்து இதுவரை கூட்டணியில் எதுவும் விவாதிக்கப்படவில்லை.
- டெல்லி தேர்தலை பொறுத்தவரை நாம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதே எனது கருத்து.
மகாராஷ்டிராவில் காங்கிரஸ், உத்தவ் தாக்கரேயின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் ஆகியவை தேசிய அளவில் இந்தியா கூட்டணியிலும், மாநிலத்தில் 'மகா விகாஸ் அகாடி' கூட்டணியிலும் செயல்பட்டு வருகின்றன.
கடந்த நவம்பரில் நடந்த சட்டசபை தேர்தலில் இந்த கூட்டணி படுதோல்வி அடைந்ததில் இருந்து கூட்டணிக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டது.
மகாராஷ்டிராவில் விரைவில் உள்ளாட்சி தேர்தல் நடக்கிறது. இதில் தனித்து போட்டியிடப் போவதாக, முன்னாள் முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் சிவசேனா அறிவித்து இருந்தது. கூட்டணியில் இடம் பெற்றுள்ள காங்கிரஸ், தேசியவாத காங்கிரசிடம் கலந்து ஆலோசிக்காமல் அவர் இந்த முடிவை அறிவித்தார்.
இந்த நிலையில் உத்தவ் தாக்கரேயின் கருத்துக்கு சரத் பவார் ஆதரவு தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:-
இந்தியா கூட்டணி தேசிய பிரச்சனை மற்றும் பாராளுமன்ற தேர்தலுக்காக மட்டுமே உருவாக்கப்பட்டது. சட்டசபை , உள்ளாட்சி தேர்தல் குறித்து இதுவரை கூட்டணியில் எதுவும் விவாதிக்கப்படவில்லை.
உள்ளாட்சித் தேர்தலில், அனைவரும் ஒன்றிணைந்து போட்டியிடுவதா அல்லது தனித்தனியாக போட்டியிடுவதா என்று இன்னும் சில நாட்களில் அனைவருடனும் ஆலோசனை கூட்டம் நடத்தி முடிவு செய்யப்படும். கூட்டணிக்குள் நாங்கள் ஒவ்வொருவருடனும் தொடர்பில் இருக்கிறோம்.
டெல்லி தேர்தலை பொறுத்தவரை நாம் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு ஆதரவளிக்க வேண்டும் என்பதே எனது கருத்து.
இவ்வாறு சரத் பவார் கூறியுள்ளார்.
அவரது இந்த பேச்சு மகா விகாஸ் அகாடி கூட்டணியில் பிளவு ஏற்பட்டுள்ளது என்பதற்கு வலு சேர்ப்பதாக அமைந்துள்ளது.
- சத்ரபதி சிவாஜி மகாராஜ் இந்திய கடற்படைக்கு புதிய பலத்தையும் புதிய தொலைநோக்குப் பார்வையையும் அளித்தார்.
- இன்றைய இந்தியா உலகின் ஒரு பெரிய கடல்சார் சக்தியாக வளர்ந்து வருகிறது.
மும்பை:
பிரதமர் மோடி இன்று 3 கடற்படை போர் கப்பல்களை நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
அவர் இன்று காலை மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் உள்ள கடற்படை கப்பல் கட்டும் தளத்திற்கு சென்றார். அவருக்கு கடற்படை அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. பின்னர் நடந்த விழாவில் ஐ.என்.எஸ். சூரத், ஐ.என்.எஸ். நீலகிரி, ஐ.என்.எஸ். வக்ஷீர் ஆகிய மூன்று முன்னணி கடற்படை போர்க்கப்பல்களை அறிமுகப்படுத்தி நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
விழாவில் பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங், கடற்படைத் தளபதி தினேஷ் திரிபாதி, மகாராஷ்டிர முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ், துணை முதல்-மந்திரிகள் ஏக்நாத் ஷிண்டே, அஜித் பவார், உயர் அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-
இந்தியாவின் கடல்சார் பாரம்பரியம், கடற்படையின் புகழ்பெற்ற வரலாறு, சுயசார்பு இந்தியா இயக்கம் ஆகியவற்றிற்கு இன்று ஒரு மிகப் பெரிய நாள். சத்ரபதி சிவாஜி மகாராஜ் இந்திய கடற்படைக்கு புதிய பலத்தையும் புதிய தொலைநோக்குப் பார்வையையும் அளித்தார்.
இன்று அவரது புனித பூமியில் 21-ம் நூற்றாண்டின் கடற்படையை வலுப்படுத்துவதில் மிகப்பெரிய பணியை செய்து உள்ளோம்.
ஒரு நாசகார கப்பல், ஒரு போர்க்கப்பல் மற்றும் ஒரு நீர்மூழ்கிக் கப்பல் ஆகிய மூன்றும் ஒன்றாக கடற்படையில் சேர்க்கப்படுவது இதுவே முதல் முறை ஆகும். இவை மூன்றும் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவர்கள் என்பது பெருமைக்குரிய விஷயம். இன்றைய இந்தியா உலகின் ஒரு பெரிய கடல்சார் சக்தியாக வளர்ந்து வருகிறது.
சில மாதங்களில், நமது கடற்படை நூற்றுக்கணக்கான உயிர்களைக் காப்பாற்றியுள்ளது. ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் மதிப்புள்ள தேசிய-சர்வ தேச சரக்குகளைப் பாதுகாத்துள்ளது. இது இந்தியாவின் மீதான உலகத்தின் நம்பிக்கையை அதிகரித்து உள்ளது. இந்திய கடற்படை மற்றும் கடலோர காவல் படை மீதான இந்த நம்பிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இன்று, ஆசியான், ஆஸ்திரேலியா, வளைகுடா, ஆப்பிரிக்க நாடுகள் என எதுவாக இருந்தாலும், அனைத்துடனும் இந்தியாவின் பொருளாதார ஒத்துழைப்பு வலுவடைந்து வருகிறது.
இந்தியா மிகப்பெரிய கடல்சார் சக்தியாக மாறி வருகிறது.
உலகின் 3-வது பெரிய பொருளாதார நாடாக இந்தியா வேகமாக முன்னேறி வருகிறது. நாட்டின் தேவைகளைக் கருத்தில் கொண்டு புதிய பணிகள் தொடங்கப்பட்டுள்ளன.
எதிர்காலத்தில் எல்லையற்ற விண்வெளி மற்றும் ஆழ்கடல் இரண்டும் எவ்வளவு முக்கியம் என்பதை நாம் அனைவரும் அறிவோம். எனவே, இன்று இந்தியா விண்வெளி மற்றும் ஆழ்கடல் இரண்டிலும் தனது திறன்களை அதிகரித்து வருகிறது. நமது சமுத்திரயான் திட்டம், கடலில் 6000 மீட்டர் ஆழத்திற்கு அழைத்துச் செல்லப்போகிறது. இதை ஒரு சில நாடுகள் மட்டுமே செய்து உள்ளன. எதிர்காலத்தின் எந்தவொரு சாத்தியக்கூறுகளிலும் அரசாங்கம் எந்த முயற்சியையும் விட்டுவிடவில்லை.
இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில், இந்தியா முதல் பதிலளிப்பவராக உருவெடுத்துள்ளது.
உலகப் பாதுகாப்பு, பொருளாதாரம் மற்றும் புவிசார் அரசியல் இயக்க வியலுக்கு வழிகாட்டுவதில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கப்போகிறது. பிராந்திய நீர்நிலைகள், வழிசெலுத்தல் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பான வர்த்தக விநியோகக் கோடுகள் மற்றும் கடல் வழிகளைப் பாதுகாப்பது முக்கியம். இந்தியா விரிவாக்கத்திற்காக அல்ல, வளர்ச்சிக்காக பாடுபடுகிறது.
கடந்த 10 ஆண்டுகளில் 33 கப்பல்கள், 7 நீர்மூழ்கிக் கப்பல்கள் கடற்படையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்தியாவின் பாதுகாப்பு உற்பத்தி ரூ.1.25 லட்சம் கோடியைத் தாண்டியுள்ளது. 100-க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
பி15பி ஏவுகணை அழிப்பான் திட்டத்தின் 4-வது மற்றும் இறுதி கப்பலான ஐ.என்.எஸ். சூரத், உலகின் மிகப்பெரிய மற்றும் அதிநவீன அழிப்புக் கப்பல்களில் ஒன்றாகும். இது 75 சதவீதம் உள்நாட்டில் வடிவமைக்கப்பட்டது. அதிநவீன ஆயுத-சென்சார் தொகுப்புகள், மேம்பட்ட கட்டமைப்புத் திறன்களை கொண்டுள்ளது.
இக்கப்பலின் செயல்பாட்டு வரம்பு 7,500 கிலோ மீட்டருக்கும் அதிகமாகும். இது இந்தியாவின் முதல் செயற்கை நுண்ணறிவு செயல்படுத்தப்பட்ட போர்க்கப்பல் ஆகும்.
பி17ஏ ஸ்டீல்த் ப்ரிகேட் திட்டத்தின் முதல் கப்பலான ஐ.என்.எஸ் நீலகிரி, இந்திய கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்பு பணியகத்தால் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது அடுத்த தலைமுறை உள்நாட்டு போர்க்கப்பல்களை பிரதிபலிக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் பிரம்மோஸ் சூப்பர்சோனிக் குரூஸ் ஏவுகணைகள் உள்ளன.
ஐ.என்.எஸ் சூரத், ஐ.என்.எஸ் நீலகிரி ஆகிய 2 போர்க்கப்பல்களிலும் மேம்பட்ட இலகுரக ஹெலி காப்டர் மற்றும் புதிதாக சேர்க்கப்பட்ட எம்.எச்-60ஆர் உள்ளிட்ட பல்வேறு ஹெலிகாப்டர்களை இயக்க முடியும்.
பி75 ஸ்கார்பீன் திட்டத்தின் 6-வது மற்றும் இறுதி நீர்மூழ்கிக் கப்பலான ஐ.என்.எஸ்வக்ஷீர் பிரான்ஸ் கடற்படைக் குழுவுடன் இணைந்து கட்டப்பட்டு உள்ளது.
இது நீர்மூழ்கிக் கப்பல் கட்டுமானத்தில் இந்தியாவின் வளர்ந்து வரும் நிபுணத்துவத்தை பிரதிபலிக்கிறது என்று இந்திய கடற்படை தெரிவித்துள்ளது. ஐ.என்.எஸ் வக்ஷீர், உலகின் மிகவும் மேம்பட்ட நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றாகும். மேலும் டீசல்-மின்சார நீர்மூழ்கிக் கப்பல்களில் ஒன்றாகும்.
இது மேற்பரப்பு எதிர்ப்பு போர், நீர்மூழ்கி எதிர்ப்பு போர், உளவுத்துறை சேகரிப்பு, பகுதி கண்காணிப்பு மற்றும் சிறப்பு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளை மேற்கொள்ள வடிவமைக்கப்பட்டுள்ளது
பாதுகாப்பு உற்பத்தி மற்றும் கடல்சார் பாதுகாப்பில் உலகளாவிய தலைமைத்துவமாக மாற வேண்டும் என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் 3 போர் கப்பல்கள் அறிமுகப்படுத்தப்படுவது ஒரு குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் குறிக்கிறது என்றும், இந்தியாவின் கடற்படைக்கு வலுசேர்க்கும் வகையில் இந்த கப்பல்கள் இருக்கும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
- 9 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீஸ்ரீ ராதா மதன்மோகன் இஸ்கான் கோவிலை திறந்து வைக்க உள்ளார்.
- மகாயுதி கூட்டணியை சேர்ந்த 230 எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
மகாராஷ்டிராவில் கடந்த நவம்பர் மாதம் நடந்த சட்டசபை தேர்தலில் பா.ஜ.க. கூட்டணி அமோக வெற்றி பெற்றது. டிசம்பர் மாதம் நடந்த மகாயுதி கூட்டணி பதவி ஏற்பு விழாவில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். இந்தநிலையில் அவர் இன்று (புதன்கிழமை) மும்பை வருகிறார். அவர் மும்பை கடற்படை டாக்யார்டில் காலை 10.30 மணிக்கு நடைபெறும் விழாவில், ஐ.என்.எஸ். சூரத், ஐ.என்.எஸ். நீலகிரி, ஐ.என்.எஸ். வாக்ஸ்ரீ போர்கப்பலை நாட்டுக்கு அர்பணிக்கிறார்.
இதேபோல மாலை 3.30 மணிக்கு நவிமும்பை, கார்கர் பகுதியில் 9 ஏக்கரில் கட்டப்பட்டுள்ள ஸ்ரீஸ்ரீ ராதா மதன்மோகன் இஸ்கான் கோவிலை திறந்து வைக்க உள்ளார்.
இதற்கிடையே அவர் மதியம் 12 மணியளவில் மும்பையில் மகாயுதி கூட்டணியை சேர்ந்த 230 எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேச உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கட்சி தலைமை ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.க்கள் மும்பையை விட்டு வெளியே செல்ல கூடாது என உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதுகுறித்து பா.ஜ.க. உயர்மட்ட தலைவர் ஒருவர் கூறுகையில், "ஜனவரி 15-ந் தேதி மும்பை வரும் பிரதமர் மோடி மகாயுதி கூட்டணி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேச உள்ளார். மகாயுதி கூட்டணி எம்.எல்.ஏ.க்களை ஒட்டுமொத்தமாக பிரதமர் சந்தித்து பேச உள்ளது இதுவே முதல் முறை." என்றார்.
பிரதமர் மோடி எம்.பி.க்களை சந்தித்து பேசி உள்ளார். இதேபோல தேசிய தலைவர்களையும் டெல்லிக்கு அழைத்து பேசி உள்ளார். ஒரு குறிப்பிட்ட மாநிலத்தில் பா.ஜ.க., கூட்டணி கட்சி எம்.எல்.ஏ.க்களை சந்தித்து பேசுவது இதுவே முதல் முறை என கூறப்படுகிறது. எனவே இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
- நான் 1978-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில முதல்வராக இருந்தேன்.
- அப்போது அமித் ஷா எங்கிருந்தார் என்பது எனக்குத் தெரியாது.
மகாராஷ்டிரா மாநிலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா கலந்து கொண்டு பேசும்போது, 1978-ம் ஆண்டு தொடங்கப்பட்ட சரத் பவாரின் துரோக அரசியல், 2024 மகாராஷ்டிர மாநில தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதன் மூலம் முடிவுக்கு வந்துள்ளது எனக் கூறினார்.
இந்த நிலையில் அமித் ஷாவின் விமர்சனத்திற்கு சரத் பவார் பதில் அளித்துள்ளார். இது தொடர்பாக சரத் பவார் கூறுகையில் "நான் 1978-ம் ஆண்டு மகாராஷ்டிரா மாநில முதல்வராக இருந்தேன். அப்போது அமித் ஷா எங்கிருந்தார் என்பது எனக்குத் தெரியாது. நான் முதல்வராக இருந்தபோது, ஜன சங்கத்தை சேர்ந்த உத்தமராவ் பாட்டீல் போன்றவர்கள் (பாஜக-வின் முன்னோடிகள்) என்னுடைய மந்திரி சபையில் இடம் பிடித்தனர். அரசியல் தலைவர்களிடையே முன்னதாக நல்ல தொடர்பு இருந்தது. தற்போது அது இல்லை" என்றார்.
இதற்கு சான்றாக 2001-ம் ஆண்டு புஜ் நிலநடுக்கம் ஏற்பட்டபோது, தான் எதிர்க்கட்சியில் இருந்தாலும் கூட, வாஜ்பாய் தன்னை பேரிடர் நிர்வாக ஆணையத்தின் துணைத் தலைவராக்கினார் என சரத் பவார் தெரிவித்தார்.
- பா.ஜனதா வெற்றியால் நிலையான அரசு அமைந்து உள்ளதால் சரத்பவாரின் துரோக அரசியல் முடிவுக்கு வந்து உள்ளது.
- 2024 தேர்தல்களில் மக்கள் உத்தவ் தாக்கரே, சரத் பவாருக்கான இடத்தை காட்டி உள்ளனர்.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தலில் பா.ஜனதா கூட்டணி அமோக வெற்றி பெற்றது. குறிப்பாக பா.ஜனதா மொத்தம் உள்ள 288 தொகுதிகளில் 149-ல் போட்டியிட்டு 132 இடங்களை கைப்பற்றி சாதனை படைத்தது. இந்த சாதனை வெற்றிக்கு பிறகு முதல் முறையாக பா.ஜனதா மாநில நிர்வாகிகள் மாநாடு ஷீரடியில் நேற்று நடந்தது. இதில் மாநிலம் முழுவதும் இருந்து எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட தலைவர்கள், செயலாளர்கள் மற்றும் தொண்டர்கள் என சுமார் 15 ஆயிரம் பேர் கலந்து கொண்டனர்.
மாநாட்டில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா, நிதின் கட்காரி, முதல்-மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பல தலைவர்களும் கலந்து கொண்டு கட்சியினரை அடுத்து வரும் தேர்தல்களுக்கு உற்சாகப்படுத்தும் வகையில் பேசினா்.
இதில் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷா பேசியதாவது:-
சரத்பவார் துரோக மற்றும் நம்பிக்கை துரோக அரசியலை மகாராஷ்டிரா மாநிலத்தில் 1978-ம் ஆண்டு தொடங்கினார். 2024-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் அந்த அரசியல் மக்களால் நிராகரிக்கப்பட்டுள்ளது. பா.ஜனதா இந்த வெற்றியால் நிலையான அரசு அமைந்து உள்ளதால் சரத்பவாரின் துரோக அரசியல் முடிவுக்கு வந்து உள்ளது.
அதேபோல உத்தவ் தாக்கரேவின் வாரிசு, துரோக அரசியலும் நிராகரிக்கப்பட்டுள்ளது. 2024 தேர்தல்களில் மக்கள் உத்தவ் தாக்கரே, சரத் பவாருக்கான இடத்தை காட்டி உள்ளனர். மராட்டியத்தில் பா.ஜனதா பெற்று உள்ள வெற்றி நீண்டகால விளைவுகளை ஏற்படுத்தும். வரலாற்று சிறப்புமிக்க இந்த வெற்றி 'இந்தியா' கூட்டணியின் நம்பிக்கையை உடைத்துவிட்டது. அடுத்த மாதம் டெல்லியில் நடைபெறும் சட்டசபை தேர்தலில் பா.ஜனதா வெற்றி பெறும்.
இவ்வாறு அமித் ஷா கூறினார்.
- இரும்புக்கம்பி ஏற்றிச்சென்ற லாரி மீது டெம்போ மோதியது.
- இந்த விபத்தில் 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலம் நாசிக் மாவட்டம் வர்கா நகரில் நேற்று இரும்புக்கம்பி ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்றுகொண்டிருந்தது. அதேபோல், நிப்ஹட் நகரில் இருந்து 16 பேருடன் சிட்கோ தொழிற்பேட்டைக்கு டெம்போ ஒன்றும் சென்றுகொண்டிருந்தது.
வர்கா நகர் அருகே அய்யப்பன் கோவில் சாலையில் சென்றுகொண்டிருந்த டெம்போ எதிரே இரும்புக்கம்பி ஏற்றி வந்த லாரி மீது நேருக்கு நேர் மோதி விபத்துக்கு உள்ளானது.
இந்த கோர விபத்தில் டெம்போவில் பயணித்த 8 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 8 பேர் படுகாயம் அடைந்தனர்.
விபத்து குறித்து தகவலறிந்த போலீசார் அங்கு வந்து படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதித்தனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி மீது டெம்போ வேன் மோதிய விபத்தில் 8 பேர் பலியானது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
- விராட் கோலி தற்போது தனது குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருகிறார்.
- விராட் கோலி தனது மனைவி அனுஷ்காவுடன் மும்பையில் உள்ள கேட்வே ஆஃப் இந்தியா பகுதிக்கு சென்றுள்ளார்.
பார்டர் கவாஸ்கர் கோப்பைக்கு பிறகு இந்தியாவின் நட்சத்திர கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது குடும்பத்துடன் நேரம் செலவிட்டு வருகிறார்.
இந்நிலையில், விராட் கோலியை பார்த்ததும் ரசிகை ஒருவர் ஆச்சரியப்படும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.
சமூக ஊடகங்களில் வைரலாகி வரும் ஒரு வீடியோவில், "விராட் கோலி தனது மனைவி அனுஷ்காவுடன் மகாராஷ்டிராவின் மும்பையில் உள்ள கேட்வே ஆஃப் இந்தியா பகுதியில் உள்ளார். அப்போது அவர்களுக்கு பின்னால் இருக்கும் பெண் ஒருவர் கோலியை பார்த்ததும் உற்சாகமடைகிறார்.
இந்தியாவின் நுழைவாயில் என்றவுடன் நமக்கெல்லாம் நினைவுக்கு வருவது டெல்லியில் இருக்கும் இந்தியா கேட் தான். ஆனால் இந்தியாவிற்கு மற்றுமொரு நுழைவாயில் உள்ளது. அது தான் மும்பையில் உள்ள கேட்வே ஆஃப் இந்தியா ஆகும்.
- இந்த நபர் இந்தியாவுக்கே அச்சுறுத்தல், இது போன்ற மூர்க்கத்தனமான வகுப்புவாத பேச்சை அவர் வெளிப்படுத்துவது இது முதல் முறை அல்ல.
- EVM - EVERY VOTE AGAINST MULLAH என்று தெரிவித்தார்
மிண்ண்னு வாகுபதவிவு இயந்திரங்களான இவிஎம் இயந்திரங்களின் விரிவாக்கம், ஒவ்வொரு வாக்கும் முல்லாவுக்கு எதிரானது என்று பொருள் என பாஜகவை சேர்ந்த மகாராஷ்டிர அமைச்சர் நித்தேஷ் ரானே சர்ச்சையை கிளப்பியுள்ளார்.
கடந்த வெள்ளிக்கிழமை சாங்லியில் இந்து கர்ஜன சபையில் உரையாற்றுகையில் அவர் EVM - EVERY VOTE AGAINST MULLAH என்று தெரிவித்தார். எதிர்க்கட்சிகள் இவிஎம் இயந்திரத்தின்மீது சந்தேகம் தெரிவிக்கும் நிலையில் அதை விமர்சிக்கும் விதமாக, இந்துக்கள் ஒன்று திரண்டு வாக்களிப்பதை பலரால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என்று ரானே பேசினார்.
இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்த திருவனந்தபுர காங்கிரஸ் எம்.பி. சஷி தரூர், எந்தவொரு குறிப்பிட்ட சமூகத்தையும் குறிவைப்பது தவறானது, அனைவரும் நாட்டின் சமமான குடிமக்கள் என்றும், அதுதான் நாடு முன்னேற ஒரே வழி.
இந்த மாதிரியான விஷயம் மிகவும் அதிர்ச்சியளிக்கிறது. நம் நாட்டில், சுதந்திரப் போராட்டத்தின் அடிப்படைப் பாடத்தை நாம் உண்மையில் புரிந்து கொள்ள வேண்டும். நாம் அனைவரும் இந்தியாவின் சமமான குடிமக்கள், அதுதான் நம் நாட்டிற்கு ஒரே அடிப்படையாக இருக்க முடியும் என்று தெரிவித்தார்.

இதற்கிடையில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தலைவர் பிருந்தா காரத், ரானேவின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்ததுடன், ரானேவை கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இது வெறுப்பு பேச்சு, இந்த நபரை கைது செய்ய வேண்டும், இந்த நபர் இந்தியாவுக்கே அச்சுறுத்தல், இது போன்ற மூர்க்கத்தனமான வகுப்புவாத பேச்சை அவர் வெளிப்படுத்துவது இது முதல் முறை அல்ல..
இது பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ்- ன் பாசாங்குத்தனம் .. பிரதமர் அரசியல் சாசனத்தைப் பற்றிப் பேசுகிறார், இங்கு அவரது அமைச்சர் இந்த வெறுப்புப் பேச்சு மூலம் அரசியலமைப்பின் அடிப்படை அடித்தளத்தை அழித்து வருகிறார், எனவே அவர் பதவியில் இருந்து நீக்கப்பட வேண்டும் என்று பிருந்தா காரத் கூறினார்.
- தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
- யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
தானே:
மும்பை அருகே உள்ள தானே மாவட்டத்தில் ஸ்ரீநகரில் வாக்லே எஸ்டேட் பகுதி அமைந்து உள்ளது. இங்குள்ள 5 மாடி கட்டடத்தின் தரைத் தளத்தில் இருந்த சலவைக் கடையில் இன்று அதிகாலை 5 மணியளவில் தீ விபத்து ஏற்பட்டது.
இதைதொடர்ந்து குடியிருப்பில் இருந்த சுமார் 250 பேரும் பாதுகாப்பாக கட்டடத்தில் இருந்து வெளியேற்றப்பட்டனர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினரும் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். அவர்கள் 1 மணி நேரத்தில் தீயை அணைத்தனர்.
பின்னர் வெளியேற்றப் பட்டவர்கள் தங்கள் குடியிருப்புகளுக்குள் அனுமதிக்கப்பட்டனர். தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. தீ விபத்துக்கான காரணம் குறித்து விசாரிக்கப்பட்டு வருகிறது.
- ஓம்கார் தனது தந்தையிடம் ஸ்மார்ட்போன் கேட்டு விடாப்பிடியாக இருந்துள்ளார்.
- மனமுடைந்த ஓம்கார் வீட்டை விட்டு சென்றார்.
மகாராஷ்டிர மாநிலத்தில் தந்தை, மகன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
மகாராஷ்டிர மாநிலம் நாந்தேட்டில் 10-வது படித்து வந்த ஓம்கார் (16) தனது தந்தையிடம் படிப்பிற்காக ஒரு ஸ்மார்ட்போன் வாங்கித் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் பணப் பிரச்சனை காரணமாக அவனது தந்தையால் ஸ்மார்ட்போனை வாங்க முடியவில்லை.
ஓம்கார் தனது தந்தையிடம் ஸ்மார்ட்போன் கேட்டு விடாப்பிடியாக இருந்துள்ளார். கடந்த புதன்கிழமை மாலை மீண்டும் பிரச்சினையை எழுப்பினார்.
பண்ணை மற்றும் வாகனத்திற்காக வாங்கிய கடனை திருப்பிச் செலுத்துவதால், ஸ்மார்ட்போன் வாங்க இயலவில்லை என்று அவனது தந்தை கூறினார்.
இதனால் மனமுடைந்த ஓம்கார் வீட்டை விட்டு சென்றார். அவன் பண்ணைக்குச் சென்றதாக அவரது குடும்பத்தினர் நினைத்தனர். ஆனால் அவன் மறுநாள் காலை வரை திரும்பாததால் தீவிரமாக தேடி வந்தனர்.
இதையடுத்து பண்ணைக்கு வந்த விவசாயி, மரத்தில் தூக்கில் தொங்கியபடி மகன் பிணமாக கிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். துக்கத்தில் மூழ்கிய அவர், தனது மகனின் உடலை அவிழ்த்துவிட்டு, விரக்தியில் அதே கயிற்றை தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இறந்த மகன் ஓம்கார் 3 சகோதரர்களில் இளையவர். மகர சங்கராந்தியைக் கொண்டாட லத்தூர் மாவட்டத்தில் உள்ள உத்கிரில் உள்ள தனது விடுதியில் இருந்து வீடு திரும்பினார்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த அதிகாரிகள் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர், அங்கு இருவரும் இறந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உள்ளாட்சி தேர்தலில் தனித்து போட்டியிடுவோம் என சஞ்சய் ராவத் கூறினார்.
- இந்த அறிவிப்பு இண்டியா கூட்டணிக்கு பெரும் பின்னடைவாகக் கருதப்படுகிறது.
மும்பை:
மகாராஷ்டிர மாநிலத்தில் விரைவில் மும்பை மாநகராட்சி உள்ளிட்ட பல உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மும்பை, தானே, நாக்பூர் மற்றும் பிற நகராட்சிகள், ஜில்லா பரிஷத்கள் மற்றும் பஞ்சாயத்துகளில் நடைபெறும் நகராட்சித் தேர்தல்களில் தனியாகப் போட்டியிடப் போவதாக சிவசேனாவின் உத்தவ் பிரிவு இன்று அறிவித்தது.
உத்தவ் தாக்கரேவின் இந்த அறிவிப்பு மகாராஷ்டிராவில் இண்டியா கூட்டணிக்கு பின்னடைவாகும்.
2024 பாராளுமன்ற தேர்தலுக்குப் பிறகு இண்டியா கூட்டணியின் ஒரு கூட்டம் கூட நடக்கவில்லை என சஞ்சய் ராவத் எம்.பி. ஏற்கனவே தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தலைநகர் மும்பையில் உத்தவ் தாக்கரே சிவசேனா அணியின் எம்.பி. சஞ்சய் ராவத் செய்தியாளர்களைச் சந்தித்தார்.
அப்போது அவர் அளித்த கூறியதாவது:
உள்ளாட்சி தேர்தலில் கூட்டணியாக போட்டியிட்டால் அது கட்சியின் வளர்ச்சியைத் தடுக்கிறது. நாங்கள் எங்கள் பலத்தின் அடிப்படையில் போட்டியிடுவோம்.
மகாராஷ்டிராவில் உள்ள இண்டியா கூட்டணிக்கு ஒரு ஒருங்கிணைப்பாளரைக் கூட அவர்களால் நியமிக்க முடியவில்லை. இது நல்லதல்ல.
கூட்டணியின் மிகப்பெரிய கட்சியாக கூட்டத்தைக் கூட்டுவது காங்கிரஸ் கட்சியின் பொறுப்பாகும் என தெரிவித்தார்.






