என் மலர்
மகாராஷ்டிரா
- மிலிந்த் தியோரா காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளில் இருந்தார்.
- அவரது விலகல் அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
புதுடெல்லி:
மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் முரளி தியோரா. தந்தை வழியில் அவரது மகன் மிலிந்த் தியோராவும் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளில் இருந்தார். மும்பை காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தவர்.
இந்நிலையில், மிலிந்த் தியோரா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
இதுதொடர்பாக மிலிந்த் தியோரா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவித்துக் கொள்கிறேன். இதன்மூலம் காங்கிரசுடனான 55 ஆண்டு உறவு முடிவுக்கு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையின் 2வது கட்டத்தை இன்று தொடங்கவுள்ள நிலையில், மிலிந்த் தியோரா விலகல்
அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
- இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது.
- இந்தியா கூட்டணி ஒருங்கிணைப்பாளரை நியமிக்க வேண்டிய அவசியமில்லை என்றார் சரத் பவார்.
மும்பை:
இந்தியா கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் காணொலி வாயிலாக இன்று நடைபெற்றது. கூட்டணியின் செயல்பாடுகள், தொகுதி பங்கீடு மற்றும் தேர்தல் தயாரிப்புகள் தொடர்பாக ஆலோசனை நடத்தப்பட்டது.
இந்நிலையில், ஆலோசனைக் கூட்டத்திற்கு பிறகு தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத்பவார் புனேயில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
கூட்டணியின் ஒருங்கிணைப்பாளர் நியமனம் தொடர்பாக கூட்டணி உறுப்பினர்களிடையே எந்த கருத்து வேறுபாடும் இல்லை. நிதிஷ் குமாரை கூட்டணியின் ஒருங்கிணைப்பாளராக நியமிக்க வேண்டும் என உறுப்பினர்கள் ஆலோசனை கூறினார்கள். அதற்கு நிதிஷ் குமார் சம்மதிக்கவில்லை. கட்சித் தலைவர்கள் அடங்கிய குழுவை உருவாக்க வேண்டும். ஒருங்கிணைப்பாளரை நியமிக்க வேண்டிய அவசியமில்லை என நிதிஷ் குமார் கூறினார்.
தேர்தலில் ஓட்டு கேட்பதற்காக பிரதமர் வேட்பாளராக ஒருவரை முன்னிறுத்த வேண்டிய அவசியம் இல்லை. தேர்தலுக்குப் பிறகு தலைவரை தேர்ந்தெடுப்போம். 1977-ம் ஆண்டில் நடந்த தேர்தலின்போது மொரார்ஜி தேசாய் எதிர்க்கட்சிகளால் பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தப்படவில்லை. எதிர்க்கட்சிகள் வெற்றி பெற்றபின் அவர் பிரதமராக தேர்வு செய்யப்பட்டார்.
மகாராஷ்டிராவில் உள்ள மக்களவை தொகுதி பங்கீடு குறித்து இன்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. முடிவு எட்டப்பட்டதும் எத்தனை தொகுதிகள் என்பதை அறிவிப்போம் என தெரிவித்தார்.
- ஷார்க் சர்க்யூட் காரணமாக அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடத்தில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது
- தீ பரவ தொடங்குவதற்கு முன்னதாக கட்டிடத்தில் உள்ள பொதுமக்களை மீட்பு குழுவினர் பத்திரமாக வெளியேற்றினர்.
மும்பை அருகே தானே டோம்பிவலியில் உள்ள காசா அரேலியா கட்டிடத்தில் இன்று பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறை வீரர்கள் தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.
கட்டிடங்கள் முழுவதும் தீ பரவ தொடங்குவதற்கு முன்னதாகவே கட்டிடத்தில் உள்ள பொதுமக்களை மீட்பு குழுவினர் பத்திரமாக வெளியேற்றினர். பல தீயணைப்பு வாகனங்கள் சம்பவ இடத்திற்கு வந்த நிலையில், தீயை அணைக்கும் முயற்சியானது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. லோதா குடியிருப்பு வளாகத்தில் உள்ள காசா அரேலியா கட்டிடத்தின் 11 வது மாடியில் இருந்து ஷார்ச் சர்க்யூட் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கட்டிடத்தின் 11 வது தளத்தில் ஏற்பட்ட தீ, 18 வது மாடி வரை பரவியுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்
- மகாராஷ்டிராவில் 13 வயது சிறுமியை காதலன் பலாத்காரம் செய்ததாக கைது செய்யப்பட்டார்.
- இச்சம்பவம் காமத்தால் நடக்கவில்லை என்பதால் காதலனுக்கு ஜாமின் வழங்கியது ஐகோர்ட்.
மும்பை:
மகாராஷ்டிராவின் நாக்பூரில் 26 வயதான வாலிபர், அதே பகுதியைச் சேர்ந்த 13 வயது சிறுமியை காதலித்து வந்தார். 2020-ம் ஆண்டு அச்சிறுமி வீட்டை விட்டு வெளியேறினார். இதனால் அச்சிறுமியின் தந்தை போலீசில் புகார் அளித்தார். அவரை தேடிய போலீசார் சிறுமியை கண்டுபிடித்ததுடன், அழைத்துச் சென்ற காதலனையும் கைது செய்தனர். அவர்மீது கடத்தல், பாலியல் வன்கொடுமை பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சிறுமியிடம் போலீசார் நடத்திய விசாரணையில், நான் வீட்டை விட்டு விரும்பியே வெளியேறினேன். என்னை திருமணம் செய்து கொள்வதாக காதலன் வாக்குறுதி அளித்தார். இதனால் வீட்டிலிருந்து நகை, பணத்தை எடுத்துக் கொண்டு அவருடன் சென்றேன். மகாராஷ்டிராவில் வெளியே பல்வேறு இடங்களில் தங்கியிருந்தோம் என தெரிவித்தார்.
இந்நிலையில், தனக்கு ஜாமின் கேட்டு மும்பை உயர்நீதிமன்றத்தின் நாக்பூர் கிளையில் காதலன் மனுதாக்கல் செய்தார். மனுவை விசாரித்த நீதிபதி, சிறுமி மைனர் ஆனாலும், விருப்பப்பட்டே வீட்டை விட்டு காதலனுடன் தங்கியதாக போலீசிடம் கூறியுள்ளார். பாலியல் உறவு சம்பவம் அவர்களுக்கு இடையிலான காதல் விவகாரத்தில் நடந்திருக்கிறது என்பது வெளிப்படையாக தெரிகிறது. காமத்தால் நடந்ததாக தெரியவில்லை எனக்கூறி, காதலனுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டார்.
- மும்பை மற்றும் அருகில் உள்ள நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு பிரமாண்ட பாலம்.
- நாட்டின் மிக நீளமான கடல்வழி பாலம் என்ற சிறப்பை பெற்ற இந்த பாலம் மும்பை சிவ்ரியில் தொடங்கி நவிமும்பை புறநகரான சிர்லேவில் முடிகிறது.
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை மற்றும் அருகில் உள்ள நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு பிரமாண்ட பாலம் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பாலத்தை பிரதமர் மோடி நேற்று திறந்து வைத்தார்.
பொதுமக்கள் பயன்படுத்தும் வகையில் இன்று முதல் பொது பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்த பாலத்தில் கட்டணம் செலுத்திதான் பயணம் மேற்கொள்ள வேண்டும். ஒருவர் நான்கு சக்கர வாகனம் (கார்) வைத்திருந்து, தினந்தோறும் இந்த பாலத்தை பயன்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டால், ஆண்டுக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.
#WATCH | Atal Setu - the Mumbai Trans Harbour Link - is India's longest bridge built on the sea and it is expected to see the movement of more than 70,000 vehicles every day pic.twitter.com/VqmPMf1CCU
— ANI (@ANI) January 12, 2024
கார் ஒரு முறை பயணம் செய்ய 250 ரூபாய் கட்டணம் செலுத்த வேண்டும். ஒரு முறை சென்று திரும்பி வர (Return Journey) 375 ரூபாய் செலுத்த வேண்டும். பாஸ் அடிப்படையில் ஒரு நாளுக்கு 625 ரூபாயும், ஒரு மாதத்திற்கு 12,500 ரூபாயும் செலுத்த வேண்டும். ஒருவர் மாத பாஸ் எடுத்து சென்று வந்தால் வருடத்திற்கு ஒன்றரை லட்சம் ரூபாய் செலுத்த வேண்டியிருக்கும்.

ஏற்கனவே கார் வாங்கும்போது 12 சதவீத வரி, அதன்பின் சாலை வரி, க்ரீன் செஸ், பெட்ரோல்- டீசல் மற்றும் அதன்மீதான 40 சதவீத வரி இவ்வளவும் செலுத்தியபின், இந்த ஒன்றரை லட்சம்...
சாமானிய மக்களுக்கு இது தலை சுற்றுவதுபோன்றுதான் இருக்கும்.
- பிரதமர் நரேந்திர மோடி மகாராஷ்டிராவில் உள்ள காலாராம் கோவில் சென்றார்.
- அங்கு கோவில் வளாகத்தை தண்ணீரைக் கொண்டு தூய்மை செய்த வீடியோ வைரலாகியது.
மும்பை:
அடல் சேது பாலம் திறப்பு உள்பட பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரா மாநிலம் சென்றார். நாசிக் சென்றுள்ள பிரதமர் மோடி கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள ராம்குந்திற்கு சென்று வழிபாடு செய்தார்.
அதன்பின், பஞ்சவடி பகுதியில் உள்ள காலாராம் கோவிலுக்குச் சென்ற பிரதமர் மோடி அங்கு வழிபாடு நடத்தி பிரார்த்தனை செய்தார்.
முன்னதாக கோயில் வளாகத்தில் தண்ணீர் வாளியை தானே தூக்கி சென்று தூய்மை செய்யும் பணியில் ஈடுபட்டார். மேலும், நாடு முழுவதும் உள்ள கோயில்களில் தூய்மை பணிகளை மேற்கொள்ளுமாறு அனைவருக்கும் பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். கோவில் வளாகத்தில் அவர் சுத்தம் செய்யும் வீடியோ வைரலாகி வருகிறது.
- சுமார் 5 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் கட்டுமான பணிகள் கடந்த மாதம் முடிவடைந்தது.
- இந்த கடல்வழி பாலத்துக்கு 'அடல் சேது' என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டது.
மும்பை:
மாநில தலைநகர் மும்பை மற்றும் அருகில் உள்ள நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு பிரமாண்ட பாலம் அமைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் மிக நீளமான கடல்வழி பாலம் என்ற சிறப்பை பெற்ற இந்தப் பாலம் மும்பை சிவ்ரியில் தொடங்கி நவிமும்பை புறநகரான சிர்லேவில் முடிகிறது.
நவிமும்பை நவசேவா துறைமுகத்தை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதால், இது 'மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்' என அழைக்கப்படுகிறது. இருப்பினும் இந்த கடல்வழி பாலத்துக்கு 'அடல் சேது' என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டது.
இந்தப் பாலத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணி 2018-ம் ஆண்டு ஏப்ரல் 24-ம் தேதி தொடங்கியது. சுமார் 5 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் கட்டுமான பணிகள் கடந்த மாதம் முடிவடைந்தது.
ரூ.17 ஆயிரத்து 843 கோடி செலவில் பிரமாண்டமாக வடிவம் பெற்றுள்ள இந்த பாலம் 6 வழிச்சாலையாக அமைக்கப்பட்டு உள்ளது.
மும்பை- நவிமும்பை இடையே 15 கி.மீ. பயண தூரத்தையும், ஒன்று முதல் ஒன்றரை மணி நேரத்தில் இருந்து 20 நிமிடங்களாக பயண நேரத்தையும் குறைக்கிறது.
இந்தப் பாலத்தில் மோட்டார் சைக்கிள்கள், 3 சக்கர வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் மெதுவாக செல்லும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
இந்நிலையில், நாட்டின் மிக நீளமான கடல்வழி பாலத்தை பிரதமர் மோடி இன்று திறந்து வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார்.
இதில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரிகள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார் ஆகியோர் கலந்து கொண்டனர்.
பிரதமர் மோடி மகாராஷ்டிரா வருகையையொட்டி மும்பை, நவிமும்பை மற்றும் நாசிக் நகரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
#WATCH | PM Modi inaugurates Atal Bihari Vajpayee Sewari - Nhava Sheva Atal Setu in Maharashtra
— ANI (@ANI) January 12, 2024
Atal Setu is the longest bridge in India and also the longest sea bridge in the country. It will provide faster connectivity to Mumbai International Airport and Navi Mumbai… pic.twitter.com/2GT2OUkVnC
- சுமார் 5 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் கட்டுமான பணிகள் கடந்த மாதம் முடிவடைந்தது.
- ‘பாரத் ரத்னம்’ என்ற நகை தொழில் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.
மும்பை:
மாநில தலைநகர் மும்பை மற்றும் அருகில் உள்ள நவிமும்பை நகரங்களை இணைக்கும் வகையில் அரபிக்கடலில் 22 கி.மீ. தூரத்துக்கு பிரமாண்ட பாலம் அமைக்கப்பட்டு உள்ளது.
நாட்டின் மிக நீளமான கடல்வழிபாலம் என்ற சிறப்பை பெற்ற இந்த பாலம் மும்பை சிவ்ரியில் தொடங்கி நவிமும்பை புறநகரான சிர்லேவில் முடிகிறது.
நவிமும்பை நவசேவா துறைமுகத்தை இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு உள்ளதால், இது 'மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங்' என அழைக்கப்படுகிறது. இருப்பினும் இந்த கடல்வழி பாலத்துக்கு 'அடல் சேது' என முன்னாள் பிரதமர் வாஜ்பாய் பெயர் சூட்டப்பட்டு உள்ளது.
இந்த பாலத்துக்கு பிரதமர் மோடி கடந்த 2016-ம் ஆண்டு அடிக்கல் நாட்டினார். கட்டுமான பணி 2018-ம் ஆண்டு ஏப்ரல் 24-ந்தேதி தொடங்கியது. சுமார் 5 ஆண்டுகளாக நடந்து வந்த நிலையில் கட்டுமான பணிகள் கடந்த மாதம் முடிவடைந்தது.
ரூ.17 ஆயிரத்து 843 கோடி செலவில் பிரமாண்டமாக வடிவம் பெற்றுள்ள இந்த பாலம் 6 வழிச்சாலையாக அமைக்கப்பட்டு உள்ளது.
மும்பை- நவிமும்பை இடையே 15 கி.மீ. பயண தூரத்தையும், 1 முதல் 1½ மணி நேரத்தில் இருந்து 20 நிமிடங்களாக பயண நேரத்தையும் குறைக்கிறது.
இந்த பாலத்தில் மோட்டார் சைக்கிள்கள், மூன்று சக்கர வாகனங்கள், டிராக்டர்கள் மற்றும் மெதுவாக செல்லும் வாகனங்களுக்கு அனுமதி இல்லை.
இந்த பிரமாண்ட பாலத்தை பிரதமர் மோடி இன்று (வெள்ளிக்கிழமை) திறந்து வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கிறார். இவை உள்ளிட்ட வெவ்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று மகாராஷ்டிரத்தில் சுற்றுப்பயணம் செய்கிறார்.
மதியம் 12.15 மணிக்கு நாசிக் வரும் பிரதமர் மோடி அங்கு நடைபெறும் தேசிய இளைஞர் திருவிழாவை தொடங்கி வைக்கிறார். பின்னர் மும்பை வரும் அவர் பிற்பகல் 3.30 மணிக்கு கடல்வழி பாலத்தை திறந்து வைக்கிறார்.
இதையடுத்து நவிமும்பையில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அவர் பங்கேற்கிறார். மாலை 4.15 மணியளவில் இங்கு நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி மாநிலத்தில் சுமார் ரூ.12 ஆயிரம் கோடியிலான பல்வேறு திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுகிறார். இதில் ரூ.8 ஆயிரத்து 700 கோடி மதிப்பீட்டில் மும்பை எல்ேலா கேட் முதல் மெரின் டிரைவ் வரை 9.2 கி.மீ. தூரம் அமைக்கப்படும் சுரங்கப்பாதைக்கும் அடிக்கல் நாட்ட உள்ளார். இந்த சுரங்கப்பாதை கிழக்கு புறநகர் நெடுஞ்சாலையை இணைக்கும் வகையில் அமைக்கப்படுகிறது. இந்த சுரங்க்பாதை மும்பை வளர்ச்சிக்கு மற்றொரு மைல்கல்லாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரூ.2 ஆயிரம் கோடி மதிப்பிலான ரெயில்வே திட்டங்களுக்கும் அடிக்கல் நாட்டப்படுகிறது. 'பாரத் ரத்னம்' என்ற நகை தொழில் திட்டத்தையும் தொடங்கி வைக்கிறார்.
மகாராஷ்டிரத்தில் முடிவுற்ற மற்றும் தொடங்கி வைக்கும் திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.30 ஆயிரம் கோடியாகும்.
விழாக்களில் முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்-மந்திரிகள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித்பவார் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
நவிமும்பை பொதுக்கூட்ட நிகழ்ச்சியில் ஏராளமான பெண்கள் சுமார் 1 லட்சம் பேர் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பிரதமர் மோடி மகாராஷ்டிரா வருகையையொட்டி மும்பை, நவிமும்பை மற்றும் நாசிக் நகரங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.
- நான் அதை செய்தேன். முதல்வராக இருந்திருந்தால் இதை செய்திருப்பேன் என சொல்லி கொண்டிருக்கிறார்.
- முதல்வராக இருந்த இரண்டரை ஆண்டு காலங்களில் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
இரண்டரை வருடமாக ஆட்சியில் இருந்தபோது மகாராஷ்டிரா மாநிலத்தின் முன்னாள் முதல்வரான உத்தவ் தாக்கரே வீட்டை விட்டு வெளியே வரவில்லை. அவர் வீட்டில் உட்கார்ந்து கட்டுரை எழுத வேண்டும் என பா.ஜனதா தலைவரும் அம்மாநிலத்தின் துணை முதல்வருமான தேவேந்திர பட்னாவிஸ் கிண்டல் செய்துள்ளார்.
இதுகுறித்து தேவேந்திர பட்நாவிஸ் கூறுகையில் "நான் பறவையாக இருந்தால், நான் கிரிக்கெட்ராக இருந்தால் இப்படி நாம் சில நேரங்களில் கட்டுரைகள் எழுதுவோம். அதேபோன்று ஒரு நபர் இந்த மாநிலத்தில் உள்ளார். நான் அதை செய்தேன். முதல்வராக இருந்திருந்தால் இதை செய்திருப்பேன் என அவர் சொல்லி கொண்டிருக்கிறார். அவர் முதல்வராக இருந்த இரண்டரை ஆண்டு காலங்களில் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
அவர் வீட்டிலேயே உட்கார்ந்து கட்டுரை எடுத வேண்டும். நாங்கள் மக்களுக்கான சேவை செய்வோம்" என்றார்.
- இளம் அரசியல்வாதிகள் அரசியலில் சேருங்கள். ஆக்கப்பூர்வமாக இருங்கள்.
- ஆனால் அடிக்கடி கட்சி மாறாதீர்கள் என முன்னாள் துணை ஜனாதிபதி தெரிவித்தார்.
மும்பை:
எம்.ஐ.டி அரசுப் பள்ளி மற்றும் எம்.ஐ.டி உலக அமைதிப் பல்கலைக்கழகம் இணைந்து நடத்திய 13-வது பாரதிய சத்ர சன்சாத் தொடக்க விழாவில் முன்னாள் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு கலந்துகொண்டார். அப்போது அவர் பேசியதாவது:
இளம் அரசியல்வாதிகள், மாணவர்கள் அரசியலில் சேருங்கள். அதில் ஆக்கப்பூர்வமாகவும், கவனத்துடனும் இருங்கள். ஆனால் அடிக்கடி கட்சி மாறாதீர்கள்.
இப்போதெல்லாம் யார் எந்தக் கட்சியில் இருக்கிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வதே கடினமாக இருக்கிறது. நாடு முழுவதும் சென்று சில நபர்கள் பெயரைக் குறிப்பிட்டு அவர்கள் கட்சியைக் கூறுகிறேன். அங்கிருக்கும் மற்றவர்கள், நீங்கள் குறிப்பிடும் நபர் தற்போது அந்தக் கட்சியில் இல்லை என என்னிடம் திருத்திக் கூறுகின்றனர். ஜனநாயகத்துக்கே இது வெட்கக்கேடானது.
கட்சி தலைவர் ஆணவமாகவோ, சர்வாதிகாரியாகவோ மாறினால் கட்சிக்குள் விவாதித்து முடிவு எடுங்கள். அதுவே வழி. இல்லை என்றால் அரசியலின் மீதான மரியாதையை மக்கள் இழக்க நேரிடும். எம்.எல்.ஏ.க்கள் அடிக்கடி கட்சி மாறினால் மக்கள் அரசியல் ஆர்வத்தையும் இழக்க நேரிடும். அது ஜனநாயகத்துக்கு கேடாகவும் அமைந்துவிடும். எம்.எல்.ஏ.க்கள் மக்களுக்கு முன்னுதாரணமாக இருக்கவேண்டும் என தெரிவித்தார்.
- ஏக்நாத் ஷிண்டேவை நீக்கும் அதிகாரம் உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை.
- ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் மந்திரியாக தொடரலாம்.
மும்பை:
மகாராஷ்டிரா முதல் மந்திரி ஏக்நாத் ஷிண்டே உள்ளிட்ட சிவசேனா எம்.எல்.ஏ.க்கள் மற்றும் உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதி நீக்க மனுக்கள் மீது சபாநாயகர் நேற்று முடிவை அறிவித்தார்.
ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான அணிதான் உண்மையான சிவசேனா அணி. ஷிண்டே அணி எம்.எல்.ஏக்கள் நீக்கத்தை ஏற்க முடியாது. சட்டமன்ற கட்சித்தலைவர் பதவியில் இருந்து ஏக்நாத் ஷிண்டேவை நீக்க உத்தவ் தாக்கரேவுக்கு அதிகாரம் இல்லை என சபாநாயகர் அதிரடியாக தெரிவித்தார்.
இந்நிலையில், முன்னாள் முதல் மந்திரியான உத்தவ் தாக்கரே, சபாநாயகரின் தீர்ப்பு பச்சை ஜனநாயகப் படுகொலை. இத்தீர்ப்புக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் முறையிடுவோம் என காட்டமாகத் தெரிவித்துள்ளார்.
- ஏக்நாத் ஷிண்டேவை நீக்கும் அதிகாரம் உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை.
- ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் முதல்வராக தொடரலாம்.
மகாராஷ்டிராவில் கடந்த 2022ம் ஆண்வு ஜூன் 21ம் தேதி அன்று சிவசேனா இரண்டாக பிரிந்தபோது, உண்மையான சிவசேனா அரசியல் கட்சியாக ஷிண்டே அணி இருந்தது.
ஷிண்டே முகாம் எம்எல்ஏக்கள் மீதான தகுதி நீக்க மனுக்களை சபாநாயகர் ராகுல் நார்வேகர் தள்ளுபடி செய்தார்.
ஏக்நாத் ஷிண்டே குழு சிவசேனா அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
ஏக்நாத் ஷிண்டேவை நீக்கும் அதிகாரம் சிவசேனாவின் தலைவராக உள்ள உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை. மேலும், 53 எம்எல்ஏக்களையும் தகுதி நீக்கம் செய்யவும் முடியாது.
ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் முதல்வராக தொடரலாம் எனவும் சபாநாயகர் அதிரடியாக அறிவித்தார்.






