என் மலர்
மகாராஷ்டிரா
- நான் முஸ்லிமாக இருந்தாலும். எனக்கு ராமர் மீது அசைக்க முடியாத பக்தி.
- எங்களுக்கு பல இடங்களில் போலீசாரும், பொதுமக்களும் பாதுகாப்பு, உணவு, தங்குமிடம் அளித்து உதவி புரிந்தனர்.
உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறப்பு விழா நாளை நடைபெற உள்ளது. இதில் பங்கேற்க மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் இருந்து ஷப்னம் என்ற முஸ்லிம் பெண் 1,425 கிலோ மீட்டர் தூரத்துக்கு நடைபயணம் தொடங்கியுள்ளார்.
அவருடன் அவரது நண்பர்கள் ராமன்ராஜ் சர்மா, வினீத் பாண்டே ஆகியோர் சென்றுள்ளனர்.
நான் முஸ்லிமாக இருந்தாலும். எனக்கு ராமர் மீது அசைக்க முடியாத பக்தி. ராமரை வணங்குவதற்கு ஒருவர் இந்துவாக இருக்க வேண்டிய அவசியமில்லை. ஒரு நல்ல மனிதனாக இருப்பதுதான் முக்கியம். தற்போது தினமும் 25 முதல் 30 கிலோமீட்டர் தூரம் வரை நடக்கிறேன். இதை நம்பிக்கையின் பயணமாக நாங்கள் பார்க்கிறோம். வழியில் எங்களைப் பார்க்கும் சிலர், இதுகுறித்து விசாரித்து அதை சமூக வலைதளங்களில் வெளியிடுகின்றனர். கடவுள் ராமர் அனைவருக்கும் பொதுவானவர். சாதி, மத, இன பேதமின்றி அவர் பொதுவாக இருக்கிறார்.
எங்களுக்கு பல இடங்களில் போலீசாரும், பொதுமக்களும் பாதுகாப்பு, உணவு, தங்குமிடம் அளித்து உதவி புரிந்தனர். சில சமூக வலைதளங்களில் எனக்கு எதிரான கருத்துகள் வருகின்றன. அதை நாங்கள் பொருட்படுத்துவது இல்லை.
இவ்வாறு ஷப்னம் கூறினார்.
காவிக்கொடியுடன் அவர் நடைபயணம் செல்லும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. வழியில் எதிர்படும் மக்கள் அவருக்கு ஜெய் ஸ்ரீராம் என்று கூறி வாழ்த்துகளைத் தெரிவிக்கின்றனர்.
- 4 சட்ட கல்லூரி மாணவர்கள் வழக்கை தொடர்ந்திருந்தனர்
- மனுவை தள்ளுபடி செய்து அபராதம் விதிப்பதை தவிர்த்தது நீதிமன்றம்
உத்தர பிரதேச அயோத்தியாவில் இந்துக்களின் தெய்வமான பகவான் ஸ்ரீஇராமருக்கு கோவில் கட்டப்பட்டு வந்தது.
நாளை, ஜனவரி 22 அன்று கோவில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கிறார்.
இந்தியாவில் 15 மாநிலங்கள் இந்நிகழ்ச்சிக்காக விடுமுறை அறிவித்தன. அவ்வகையில் மகாராஷ்டிர மாநிலமும் ஜனவரி 22 அன்று அரசு விடுமுறை என அறிவித்தது.
ஆனால், இந்த விடுமுறையை எதிர்த்து 4 சட்ட கல்லூரி மாணவர்கள், பொதுநல வழக்கு (Public Interest Litigation) ஒன்றை மும்பை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்தனர்.

இன்று சிறப்பு அமர்வில், ஷிவாங்கி அகர்வால், சத்யஜித் சால்வே, வேதாந்த் அகர்வால் மற்றும் குஷி பாங்கியா எனும் 4 சட்ட கல்வி மாணவர்கள் தாக்கல் செய்த மனுவை நீதிபதிகள், ஜி.எஸ். குல்கர்னி மற்றும் நீலா கோகலே ஆகியோர் விசாரித்து தீர்ப்பு வழங்கினர்.
அந்த தீர்ப்பில் குறிப்பிடப்பட்டதாவது:
விடுமுறைகள் குறித்த முடிவுகள் மாநிலங்களின் அதிகார எல்லைக்கு உட்பட்டவை. மதசார்பின்மைக்கு ஒத்து போகும் வகையில் வழிபாடு குறித்த விடுமுறைகளை மாநிலங்கள் அறிவிக்க வேண்டும். ஆனால், இந்த மனுவில் அவ்வாறு மாநிலம் செயல்படவில்லை என காட்ட மனுதாரர்கள் தவறி விட்டனர். இந்த மனு, அரசியல் காழ்ப்புணர்ச்சியாலும், விளம்பர மோகத்தாலும் தூண்டப்பட்டதாக தெரிகிறது. இது பொதுநல வழக்கல்ல; பொது விளம்பர வழக்கு (publicity interest litigation). எனவே இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுதாரர்கள் எதிர்காலத்தில் கவனமாக இருப்பார்கள் என கருதி, அபராதம் விதிப்பதை தவிர்க்கிறோம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டது.
முன்னதாக, விசாரணைக்கு எடுத்து கொள்ளும் முன்பே வழக்கு குறித்த விவரங்கள் ஊடகங்களில் எவ்வாறு கசிந்தது என மனுதாரர்களை நீதிபதிகள் கேட்டதற்கு, தங்களுக்கும் அது தெரியாது என அவர்கள் பதிலளித்தனர்.
- மம்தா பேசியது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
- திரிணாமுல் காங்கிரஸ் எனது தொகுதியில் போட்டியிட்டாலும் எனக்கு கவலை இல்லை.
கொல்கத்தா:
விரைவில் பாராளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மேற்கு வங்கத்தில் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கும், காங்கிரஸ் கட்சிக்கும் இடையே பேச்சு வார்த்தையின் போது கருத்து வேறுபாடு ஏற்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.
இந்நிலையில் முர்ஷிதா பாத் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் கூட்டத்தில் முதல்-மந்திரி மம்தா பானர்ஜி பேசும் போது, மாவட்டத்தில் மட்டுமல்ல 3 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் வெற்றி பெற பாடுபட வேண்டும்.
தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தையின் போது திரிணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு உரிய முக்கியத்துவம் கொடுக்கப்படாவிட்டால் மேற்கு வங்கத்தில் 42 தொகுதிகளிலும் திரிணாமுல் காங்கிரஸ் போட்டியிட தயாராக உள்ளது என்றார். அவரது இந்த பேச்சு இந்தியா கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது.
கடந்த பாராளுமன்ற தேர்தலின் போது மாநிலத்தில் உள்ள 42 தொகுதிகளில் திரிணாமுல் காங்கிரஸ் 22 தொகுதிகளிலும், பா.ஜனதா 18 இடங்களிலும், காங்கிரஸ் 2 இடங்களிலும் வெற்றி பெற்றன.

முர்ஷிதாபாத் மாவட்டத்தில் உள்ள பஹரங்பூர் தொகுதியில் மாநில காங்கிரஸ் தலைவரான ஆதிர் ரஞ்சன் சவுத்ரி வெற்றி பெற்று இருந்தார். இந்நிலையில் முர்ஷிதாபாத் மாவட்டத்தில் திரிணாமுல் காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற வேண்டும் என மம்தா பேசியது கூட்டணியில் உள்ள காங்கிரஸ் நிர்வாகிகள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் இந்த விவகாரம் குறித்து பேசிய காங்கிரஸ் மூத்த தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, இந்தியா கூட்டணியில் அங்கம் வகித்தாலும் திரிணாமுல் காங்கிரஸ் எனது தொகுதியில் போட்டியிட்டாலும் எனக்கு கவலை இல்லை. எங்கள் தலைவர்கள் இந்த விவகாரம் குறித்து ஏற்கனவே பேசி இருக்கிறார்கள்.
நான் இந்த நிலைக்கு எளிதாக வந்துவிடவில்லை. பல்வேறு சவால்களை எதிர்கொண்டும், தேர்தலில் வெற்றி பெற்றே வந்துள்ளேன். எப்படி போட்டியிடுவது, எப்படி வெற்றி பெறுவது என்பது எனக்கு தெரியும் என்றார்.
- 22-ந்தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது.
- அதனைத் தொடர்ந்து மகாராஷ்டிரா மாநிலத்தில் பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்டப்பட்டுள்ளது. வருகிற 22-ந்தேதி (நாளைமறுதினம்) கும்பாபிஷேகம் நடைபெற இருக்கிறது. இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து பிரமுகர்கள், பக்தர்கள் கலந்த கொள்ள இருக்கிறார்கள்.
கும்பாபிஷேக விழாவைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களில் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மத்திய அரசு அரைநாள் பொது விடுமுறை அளித்துள்ளது.
மகாராஷ்டிரா மாநிலத்திலும் வருகிற 22-ந்தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பொதுவிடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் பொது விடுமுறையை எதிர்த்து நான்கு சட்டக் கல்லூரி மாணவர்கள் மும்பை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர். இந்த மனுவை உடனடியாக விசாரணைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தனர். இதனை ஏற்று நீதிமன்றம் நாளை இந்த மனுவை விசாரிக்கிறது.
நான்கு மாணவர்கள் அளித்துள்ள மனுவில், அதிகாரத்தில் இருக்கும் அரசியல் கட்சி அதன் விருப்பத்திற்கு ஏற்ப பொது விடுமுறை அளிக்க முடியாது. மத நிகழ்ச்சியை கொண்டாட பொது விடுமுறை அறிவித்தது அரசியல் சாசனத்தில் கூறப்பட்டுள்ள மதச்சார்பின்மை கொள்கைகளை மீறுவதாகும். ஒரு அரசு எந்த மதத்துடனும் தொடர்பு கொள்ளவோ அல்லது ஊக்குவிக்கவோ முடியாது எனக் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த மனுவை குல்கர்னி, நீலா கோகாலே நீதிபதிகள் கொண்ட சிறப்பு பெஞ்ச் விசாரிக்கிறது.
கோவா, மத்திய பிரதேச மாநிலங்களிலும் பொது விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
- கும்பாபிஷேக விழா ஏற்பாடுகளை உத்தர பிரதேச மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
- வரும் 22-ம் தேதியன்று பங்குச்சந்தைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
மும்பை:
அயோத்தியில் கட்டப்பட்டுள்ள ராமர் கோவிலின் கும்பாபிஷேக விழா வரும் 22-ம் தேதி நடைபெற உள்ளது. இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை அம்மாநில அரசு தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.
ராமர் கோவில் கும்பாபிஷேகம் நடைபெறும் நாளான 22-ம் தேதியன்று மத்திய அரசு அலுவலகங்கள், வங்கிகளுக்கு அரைநாள் விடுமுறை அளித்து மத்திய அரசு அறிவித்தது.
இதற்கிடையே, 22-ம் தேதியன்று பங்குச்சந்தைகள் அனைத்தும் காலை 9 மணிக்கு பதிலாக மதியம் 2.30 மணிக்கு திறக்கப்பட்டு, மாலை 5 மணிவரை செயல்படும் என ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
இந்நிலையில், வரும் திங்கட்கிழமை அரைநாள் விடுமுறை அளிக்கப்படுவதால் இன்று பங்குச்சந்தைகள் காலை 9.15 மணி முதல் 3.30 மணி வரை செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், நிலுவையில் உள்ள அனைத்து பரிவர்த்தனைகளின் தீர்வும் வரும் 22-ம் தேதி ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- மகாராஷ்டிரா அரசு தோல்வி அடைந்துள்ளது. அவர்களால் பா.ஜ.க.வுக்கு ஓட்டு வாங்க முடியாது.
- எனவே பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் மகாராஷ்டிரா வருகிறார் என்றார் சஞ்சய் ராவத்.
மும்பை:
உத்தவ் தாக்கரே அணியை சேர்ந்த சிவசேனா தலைவர் சஞ்சய் ராவத் இன்று செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:
பிரதமர் மோடி மீண்டும் மீண்டும் மகாராஷ்டிராவுக்கு வருகிறார். அவர் மகாராஷ்டிராவை அவ்வளவு நேசிக்கிறார் என்பதால் அல்ல.
உத்தர பிரதேசத்திற்கு பிரதமர் செல்வது உ.பி.யை நேசிப்பதால் அல்ல. உத்தர பிரதேசத்தில் மக்களவைத் தொகுதிகள் அதிகம். அதற்குப் பிறகு மகாராஷ்டிரா. வரும் மக்களவைத் தேர்தலில் மகாராஷ்டிரா முக்கியப் பங்கு வகிக்கும்.
இங்குள்ள அரசு தோல்வி அடைந்துள்ளது. அவர்களால் பா.ஜ.க.வுக்கு ஓட்டு வாங்க முடியாது.
கடந்த 13 மாதங்களில் 8 முதல் 10 முறை இங்கு வந்துள்ள பிரதமர் மோடி ஏன் ஒருமுறை கூட மணிப்பூர் செல்லவில்லை? என கேள்வி எழுப்பினார்.
- சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான மிலிந்த் தியோரா கட்சியை விட்டு விலகினார்.
- 2019-ம் ஆண்டிலிருந்து காங்கிரசில் இருந்து வெளியேறிய முக்கிய பிரமுகர்களின் எண்ணிக்கை 11 ஆனது.
மும்பை:
காங்கிரஸ் கட்சியிலிருந்து மூத்த தலைவர்கள் விலகி செல்வது தொடர்கதையாகி வருகிறது. சமீபத்தில் காங்கிரஸ் கட்சியின் முக்கிய பிரமுகரான மிலிந்த் தியோரா கட்சியை விட்டு விலகினார்.
மிலிந்த் தியோராவின் விலகலுடன் 2019லிருந்து காங்கிரசிலிருந்து வெளியேறிய முக்கிய பிரமுகர்களின் எண்ணிக்கை 11 ஆனது.
இந்நிலையில், மூத்த காங்கிரஸ்காரும், முன்னாள் மத்திய மந்திரியுமான சுஷில்குமார் ஷிண்டே சோலாப்பூர் மாவட்டத்தில் நடந்த நிகழ்ச்சியில் நேற்று கலந்து கொண்டார்.
அப்போது அவர் பேசுகையில், எனக்கும், எனது மகளுமான எம்.எல்.ஏ. பிரணிதி ஷிண்டேவும்வுக்கும் பா.ஜ.க.வில் சேர இருமுறை வாய்ப்பு வந்தது. ஆனால் நான் ஒரு காங்கிரஸ்காரன் என்பதால் கட்சியை விட்டு விலகப் போவதில்லை என உறுதிபடத் தெரிவிக்கிறேன் என்றார்.
- சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு ரூ.1.20 கோடி அபராதம்.
- சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ.30 லட்சமும் அபராதம்.
மகாராஷ்டிரா மாநிலம், மும்பையில் விமான ஓடுபாதையில் பயணிகள் உணவருந்திய விவகாரத்தில் இண்டியோ நிறுவனத்திற்கு ரூ.1.50 கோடி அபராதம் விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது.

இதில், சிவில் விமான பாதுகாப்பு அமைப்பு ரூ.1.20 கோடியும், சிவில் விமானப் போக்குவரத்து இயக்குநரகம் ரூ.30 லட்சமும் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
- இந்தியாவின் மிக நீண்ட பாலம் மற்றும் மிக நீண்ட கடல் பாலம் என்ற பெருமையை அடல் சேது பெற்றது.
- இந்தப் பாலத்தில் செல்லும் மக்கள் வாகனங்களை நிறுத்தி புகைப்படம், வீடியோ எடுத்தவண்ணம் உள்ளனர்.
மும்பை:
மும்பை-நவி மும்பை இடையே அமைக்கப்பட்டுள்ள அடல் சேது பாலம் சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்தப் பாலத்தை பிரதமர் மோடி திறந்துவைத்த சில நாட்களில் அப்பகுதி மக்களுக்கு சுற்றுலா பகுதியாக மாறியுள்ளது.
இந்தப் பாலம் பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்துள்ளது. அந்தப் பாலத்தில் பொதுமக்கள் செல்பி மற்றும் புகைப்படங்களை எடுப்பதற்காக தங்கள் வாகனங்களை நிறுத்துவதை போலீசார் கவனித்தனர். இதுதொடர்பாக பல புகைப்படங்கள், வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகின. பொதுமக்களின் பிக்னிக் ஸ்பாட் ஆக மாறத்தொடங்கியதால் பாலத்தில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும் நிலை உருவானது.
இந்நிலையில், பாலத்தில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு மும்பை போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
அடல் சேது பாலம் நிச்சயமாக பார்த்து ரசிக்கும் அளவிற்கு மதிப்புமிக்கது என்பதை நாங்கள் ஏற்றுக்கொள்கிறோம். ஆனால் வாகனங்களை பாலத்தில் நிறுத்துவதும், புகைப்படங்கள் எடுப்பதும் சட்டவிரோதமானது. பாலத்தில் வாகனங்களை நிறுத்தும் பயணிகளுக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்படும் என தனது எக்ஸ் தளத்தில் புகைப்படங்களுடன் பதிவிட்டுள்ளது. மேலும், 21.8 கி.மீ. நீளமுள்ள அடல் சேது பாலம் பிக்னிக் ஸ்பாட் அல்ல என்றும் அந்த புகைப்படத்தில் குறிப்பிட்டுள்ளது.
இருசக்கர வாகனங்கள், ஆட்டோ ரிக்ஷாக்கள், டிராக்டர்கள், மெதுவாக நகரும் வாகனங்கள் ஆகியவை இந்தப் பாலத்தில் அனுமதிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
- கோவாவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டு வந்தது.
- விமானத்தில் இருந்து இறங்க படிக்கட்டு வைக்கப்பட்டதால் பயணிகள் அவசர அவசரமாக கீழே இறங்கினார்கள்.
மும்பை:
டெல்லியில் கடந்த சில நாட்களாக கடுமையான பனிமூட்டம் நிலவுகிறது. இதனால் சென்னை, பெங்களூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து செல்லும் சில விமானங்கள் தரை இறங்க முடியாததால் திருப்பி விடப்பட்டுள்ளன. விமானங்கள் புறப்படுவதில் பல மணி நேரம் தாமதமாகிறது.
கோவாவில் இருந்து டெல்லிக்கு இண்டிகோ விமானம் புறப்பட்டு வந்தது. டெல்லியில் பனி மூட்டம் அதிகமாக இருந்ததால் தரை இறங்க முடியவில்லை. இதனால் அந்த விமானம் மும்பை சத்ரபதி சிவாஜி மகாராஜ் விமானநிலையத்தில் தரை இறக்கப்பட்டது. இதையடுத்து விமானத்தில் இருந்து இறங்க படிக்கட்டு வைக்கப்பட்டதால் பயணிகள் அவசர அவசரமாக கீழே இறங்கினார்கள். உடனே அவர்கள் விமான ரன்வேயின் அருகில் விமானங்கள் நிறுத்தும் இடத்துக்கு சென்று அமர்ந்தனர்.
உடனே குடும்பத்துடன் அவர்கள் உணவுகளை சாப்பிட ஆரம்பித்தனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதை பார்த்ததும் விமான நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்பு படை வீரர்கள் அங்கு விரைந்து சென்று பயணிகளை அப்புறப்படுத்த முயன்றனர். ஆனால் பயணிகள் நகராமல் தொடர்ந்து சாப்பிடுவதில் மும்முரமாக இருந்தனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இந்த சம்பவத்துக்கு விமான நிறுவனம் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் மன்னிப்பு கேட்டுள்ளனர். இது தொடர்பாக அந்த நிறுவனம் டெல்லியில் மோசமான வானிலை காரணமாக விமானம் திருப்பி விடப்பட்டது. இதற்கு பயணிகளிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறோம். எதிர்காலத்தில் இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க நடவடிக்கை எடுக்கப்படும். இது தொடர்பாக விசாரணை நடத்த உத்தரவிடப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளது.
இதன் காரணமாக சுமார் 12 மணி நேரம் விமான பயணிகள் தவித்தனர்.
- ஏக்நாத் ஷிண்டேவை நீக்கும் அதிகாரம் உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை.
- ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் முதல் மந்திரியாக தொடரலாம் என்றார்.
மும்பை:
மகாராஷ்டிராவில் கடந்த 2022-ம் ஆண்வு ஜூன் 21-ம் தேதி அன்று சிவசேனா இரண்டாகப் பிரிந்தபோது, உண்மையான சிவசேனா அரசியல் கட்சியாக ஷிண்டே அணி இருந்தது. ஷிண்டே முகாம் எம்.எல்.ஏ.க்கள் மீதான தகுதிநீக்க மனுக்களை சபாநாயகர் ராகுல் நார்வேகர் தள்ளுபடி செய்தார். ஏக்நாத் ஷிண்டே குழு சிவசேனா அரசியல் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டது.
ஏக்நாத் ஷிண்டேவை நீக்கும் அதிகாரம் சிவசேனாவின் தலைவராக உள்ள உத்தவ் தாக்கரேவுக்கு இல்லை. 53 எம்.எல்.ஏ.க்களையும் தகுதிநீக்கம் செய்யவும் முடியாது. ஏக்நாத் ஷிண்டே மகாராஷ்டிராவின் முதல் மந்திரியாக தொடரலாம் என சபாநாயகர் அதிரடியாக அறிவித்தார்.
இந்நிலையில், சபாநாயகர் அறிவிப்பை ஏற்க மறுத்து உத்தவ் தாக்கரே தரப்பு உச்சநீதிமன்றத்தில் மனு செய்துள்ளது. மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
- மிலிந்த் தியோரா காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளில் இருந்தார்.
- அவரது விலகல் அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.
புதுடெல்லி:
மகாராஷ்டிர மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவராக இருந்தவர் முரளி தியோரா. தந்தை வழியில் அவரது மகன் மிலிந்த் தியோராவும் காங்கிரஸ் கட்சியில் பல்வேறு பதவிகளில் இருந்தார். மும்பை காங்கிரஸ் தலைவராக பதவி வகித்தவர்.
இந்நிலையில், மிலிந்த் தியோரா காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகியுள்ளார்.
இதுதொடர்பாக மிலிந்த் தியோரா வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில், காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினர் உள்பட அனைத்து பொறுப்புகளில் இருந்தும் விடுவித்துக் கொள்கிறேன். இதன்மூலம் காங்கிரசுடனான 55 ஆண்டு உறவு முடிவுக்கு வருகிறது என குறிப்பிட்டுள்ளார்.
ராகுல் காந்தி பாரத் ஜோடோ யாத்திரையின் 2வது கட்டத்தை இன்று தொடங்கவுள்ள நிலையில், மிலிந்த் தியோரா விலகல்
அக்கட்சிக்கு மிகப்பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.






