என் மலர்
இந்தியா

நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ.97.79 கோடி சொத்து முடக்கம்- அமலாக்கத்துறை நடவடிக்கை
- நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்த்ரா மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு உள்ளது.
- அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை இன்று நடவடிக்கை எடுத்துள்ளது.
மும்பை:
நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ்குந்த்ரா மீது சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு உள்ளது. அமலாக்கத்துறை இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இந்நிலையில் சட்ட விரோத பண பரிவர்த்தனை வழக்கு தொடர்பாக ஷில்பா ஷெட்டி, ராஜ்குந்த்ராவின் ரூ.97.79 கோடி மதிப்புள்ள அசையும் மற்றும் அசையா சொத்துக்களை முடக்கி அமலாக்கத்துறை இன்று நடவடிக்கை எடுத்துள்ளது.
ஜுகுவில் ஷில்பா ஷெட்டி பெயரில் உள்ள வீடு, புனேயில் உள்ள பங்களா மற்றும் ராஜ்குந்த்ரா பெயரில் உள்ள பங்குகள் உள்ளிட்டவை முடக்கப்பட்டுள்ளன.
Next Story






