என் மலர்
மகாராஷ்டிரா
- இதுவரை கேண்டீன் ஊழியர்கள் இருவர் கைது.
- ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவின் பிம்ப்ரி-சின்ச்வாட் பகுதியில் உள்ள பிரபல தனியார் நிறுவனத்தின் கேண்டீனில் சமோசாவில் ஆணுறை, கற்கள், புகையிலை, குட்கா போன்ற பொருட்கள் அடைத்து விற்பனை செய்துவந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த மார்ச் 27-ம் தேதி இந்த சம்பவம் வெளிச்சத்திற்கு வந்ததை அடுத்து, காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதுவரை கேண்டீன் ஊழியர்களான பெரோஸ் ஷேக் மற்றும் விக்கி ஷேக் ஆகிய இருவர் கைது செய்யப்பட்ட நிலையில், ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக போலீசார் நடத்திய விசாரணையின்படி, ஒரு தொழிலதிபர் இந்த கொடூரமான செயலுக்கு மூளையாக செயல்பட்டதாக கூறப்படுகிறது.
குற்றம்சாட்டப்படும் தொழிலதிபரின் ஒப்பந்தம் நிறுத்தப்பட்டதை அடுத்து, நிறுவனத்துடனான கேட்டரிங் ஒப்பந்தத்தை நாசப்படுத்தும் முயற்சியில் அவர் ஈடுபட்டதாக தெரியவந்துள்ளது.
- மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2008-ம் ஆண்டு குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர்
- உடல்நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராக முடியவில்லை என பிரக்யா தாக்கூர் தரப்பு வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி, இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் (தற்போதைய பாஜக எம்பி), ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரிக்கப்பட்டு வருகிறது.
அண்மையில், மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்ந்து ஆஜராகாமல் இருக்கும், பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூருக்கு மும்பை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்தது.
உடல்நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராகமுடியவில்லை என பிரக்யா தாக்கூர் தரப்பு வழக்கறிஞர் பதிலளிக்க, போபால் என்.ஐ.ஏ அதிகாரிகள் பிரக்யா தாக்கூரின் உடல்நலன் குறித்து விசாரித்து அறிக்கையை ஏப்ரல் 9-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவிட்டார்.
இந்நிலையில், பாஜக எம்.பி. சாத்வி பிரக்யா, உடல்நலக் குறைவாக இருப்பதால், ஓய்வு தேவை என என்.ஐ.ஏ தாக்கல் செய்த பதிலை ஏற்காத சிறப்பு நீதிமன்றம், வரும் 22ம் தேதிக்குள் கட்டாயம் ஆஜராக வேண்டும் என உத்தரவிட்டுள்ளது.
உடல்நிலை காரணமாக இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற அவர், அடிக்கடி கிரிக்கெட் மற்றும் கூடைப்பந்து விளையாடுவதும், நடனமாடும் வீடியோக்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
- பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது.
- மகாராஷ்டிராவில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டது.
மும்பை:
பாராளுமன்ற தேர்தலில் பா.ஜ.க.வை வீழ்த்த இந்தியா கூட்டணி உருவாக்கப்பட்டது. இந்தியா கூட்டணியில் காங்கிரஸ், சரத்பவாரின் தேசியவாத காங்கிரஸ், உத்தவ் தாக்கரேவின் சிவசேனா, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, திமுக, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ளன.
இதற்கிடையே, மகாராஷ்டிராவில் பாராளுமன்ற தேர்தலுக்கான தொகுதி பங்கீட்டில் இந்தியா கூட்டணி கட்சிகளிடையே கருத்து வேறுபாடு எழுந்தது.
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் இந்தியா கூட்டணி கட்சிகள் இடையே தொகுதி உடன்பாடு ஏற்பட்டுள்ளது.
அதன்படி, உத்தவ் தாக்கரே சிவசேனா கட்சிக்கு 21 தொகுதிகளும், காங்கிரஸ் கட்சிக்கு 17 தொகுதிகளும், தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு 10 தொகுதிகளிலும் போட்டியிடுவது என உடன்பாடு எட்டப்பட்டது.
Shiv Sena Uddhav faction will contest elections on 21 seats in Maharashtra, NCP SCP will contest elections on 10 seats and Congress on 17 seats.#LokSabhaElections2024 pic.twitter.com/toM2Ijnz4A
— ANI (@ANI) April 9, 2024
- காங்கிரஸ் கட்சி தான் முக்கிய காரணம் என்று தெரிவித்தார்.
- கும்பாபிஷேகத்திற்கு அழைக்கவில்லை என குற்றம்சாட்டியது யார்?
பாராளுமன்ற தேர்தல் பிரசாராத்தில் தீவிரம் காட்டி வரும் பிரதமர் நரேந்திர மோடி காங்கிரஸ் கட்சியை கடுமையாக சாடியுள்ளார். நாட்டில் நடக்கும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காங்கிரஸ் கட்சி தான் முக்கிய காரணம் என்று அவர் தெரிவித்துள்ளார்.
பாகற்காயின் சுவை நெய்யில் பொறித்தாலும், சர்க்கரையுடன் கலந்தாலும் மாறாது. அதுபோல தான் காங்கிரஸ் கட்சியும் என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.
2024 பாராளுமன்ற தேர்தல் பிரசாராத்திற்காக முதல் முறையாக மகராஷ்டிரா மாநிலத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி, "நாட்டில் நடைபெறும் அனைத்து பிரச்சினைகளுக்கும் காங்கிரஸ் கட்சி தான் முக்கிய காரணம். நக்சல், காஷ்மீர் விவகாரம் என மதத்தின் பேரில் நாடு பிளவுபட காரணம் யார்? ராமர் கோவில் கட்டுமானத்தை எதிர்த்து, ராமர் வாழ்ந்தாரா என்று கேள்வி எழுப்பியது யார்? ராமர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அழைக்கவில்லை என குற்றம்சாட்டியது யார்?" என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர், "நாட்டில் பத்து ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்தது. எனினும், நாட்டில் நிலவிய எந்த பிரச்சினையையும் தீர்க்க முடியவில்லை. நக்சல் பிரச்சினை பெருமளவில் குறைந்துவிட்டது. வாக்கு வங்கி அரசியல் காரணமாக காங்கிரஸ் கட்சி தீவிரவாதத்தை எதிர்ப்பதில் பாகுபாடு காட்டியது. அவர்களது தேர்தல் அறிக்கையிலும் முஸ்லீம் லீக் தாக்கம் உள்ளது."
"அவர்கள் மக்களின் எதிர்காலத்துடன் விளையாடினர். புதிய விமான நிலையமோ அல்லது இதர திட்டப் பணிகளோ வளர்ச்சி திட்டங்களுக்கு கமிஷன் வசூலிப்பதும், கமிஷன் கிடைக்காத திட்டங்களை தடுத்து நிறுத்துவதையும் செய்து வந்தனர். அவர்களின் ஒரே குறிக்கோள் - கமிஷன் வசூலிப்பது அல்லது திட்டங்களை தடுத்து நிறுத்துவது மட்டும்தான்," என்று தெரிவித்தார்.
- மத்திய இணை மந்திரியான பக்கன்சிங் குலாஸ்தே புகைப்படம் இடம் பெற்று இருந்தது.
- பேனரின் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவியது.
மத்திய பிரதேச மாநிலம் மண்டலா தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஓம்கர்சிங்கை ஆதரிதது ராகுல்காந்தி இன்று பொதுக்கூட்டத்தில் பேச உள்ளார்.
இந்த நிலையில் பொதுக்கூட்ட மேடையின் பின்புறத்தில் வைக்கப்பட்டு இருந்த கங்கிரஸ் தலைவர்களின் புகைப்படத்தில் மத்தியில் பா.ஜனதாவின் மண்டலா வேட்பாளரும், மத்திய இணை மந்திரியான பக்கன்சிங் குலாஸ்தே புகைப்படம் இடம் பெற்று இருந்தது. அந்த பேனரின் புகைப்படம் இணையத்தில் வேகமாக பரவியது. இதையடுத்து தவறுதலாக அச்சடிக்கப்பட்ட பா.ஜனதா வேட்பாளரின் புகைப்படத்தை மறைத்து அதற்கு மேல் காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஹர்வன்ஷ்சிங் புகைப்படம் ஒட்டப்பட்டது.
- பொதுமக்களை போலவே வழக்கறிஞர்களுக்கும் சொந்த அரசியல் விருப்பங்களும் நம்பிக்கைகளும் இருக்கும்.
- வழக்கறிஞர்களின் உண்மையான விசுவாசம் நீதிமன்றங்களுக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும் - உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி
நாக்பூரின் உயர் நீதிமன்ற வழக்கறிஞர்கள் சங்கத்தின் நூற்றாண்டு விழாவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கலந்து கொண்டார்.
அந்நிகழ்வில் பேசிய தலைமை நீதிபதி சந்திரசூட், "வழக்கறிஞர்கள் நீதிமன்றத்தையும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தையும் தங்கள் "அரசியல் விருப்பங்கள் மற்றும் நம்பிக்கைகளுக்கு" மேலாக வைக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்குகள் மற்றும் நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து அண்மை காலங்களில் வழக்கறிஞர்கள் கருத்து தெரிவிக்கும் போக்கு கண்டு நான் மிகவும் கவலை அடைந்துள்ளேன்.
நீதிமன்றத் தீர்ப்புகள் குறித்து கருத்து தெரிவிக்கும் போது வழக்கறிஞர்கள் பொதுமக்களிடம் இருந்து தங்களை வேறுபடுத்திக் கொள்ள வேண்டிய அவசியம் உள்ளது.
பொதுமக்களை போலவே வழக்கறிஞர்களுக்கும் சொந்த அரசியல் விருப்பங்களும் நம்பிக்கைகளும் இருக்கும். ஆனால், அவர்கள் அதற்கு மேல் சிந்திக்க வேண்டும். அவர்களின் உண்மையான விசுவாசம் நீதிமன்றங்களுக்கும் இந்திய அரசியலமைப்பு சட்டத்திற்கு மட்டுமே இருக்க வேண்டும்.
செய்தித்தாள்கள், ஊடகங்கள் வழியாக நீதிமன்ற தீர்ப்புகள் பற்றிய விவரங்களை பொதுமக்களிடம் கொண்டு போய் சேர்க்க வேண்டிய கடமை வழக்கறிஞர்களுக்கு உள்ளது .
இந்த வகையில், நீதிமன்றத்திற்கும் பொதுமக்களுக்கும் இடையே பாலமாகச் செயல்படும் ஆற்றல் வழக்கறிஞர்களுக்கு உள்ளது. சிக்கலான சட்ட கருத்துக்கள் மற்றும் நடைமுறைகளை பொதுமக்களுக்கு புரியும் படி எடுத்து சொல்வதன் மூலம் தான் நமது புரிதலை நாம் மேம்படுத்த முடியும்.
எவ்வாறாயினும், நீதித்துறையின் சுதந்திரத்திற்கும் வழக்கறிஞர்களின் சுதந்திரத்திற்கும் இடையே நெருங்கிய தொடர்பு உள்ளது என்பதை நாம் மறந்துவிடக் கூடாது" என்று தலைமை நீதிபதி எச்சரித்தார்.
- நடிகை கங்கனா ரனாவத் பா.ஜ.க சார்பில் இமாச்சல பிரதேசம் மாண்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார்.
- தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அவரது தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
மும்பை:
பாராளுமன்ற தேர்தலில் நடிகை கங்கனா ரனாவத் பா.ஜ.க சார்பில் இமாச்சல பிரதேசம் மாண்டி தொகுதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். தேர்தல் தேதி நெருங்கி வரும் நிலையில் அவரது தொகுதியில் தீவிர பிரசாரம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற கங்கனா ரனாவத், அதில் சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என பேசி அதிர வைத்துள்ளார்.
சுதந்திரப் போராட்டத்தில் முக்கிய பங்காற்றிய தலைவர்களில் ஒருவர் சுபாஷ் சந்திரபோஸ். அவர் பிரதமராக பதவி வகித்ததில்லை. இந்திய தேசிய காங்கிரசில் பணியாற்றியபின் 1939 -ம் ஆண்டு அகில இந்திய பார்வார்டு பிளாக் கட்சியை தொடங்கினார்.
சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமர் ஜவகர்லால் நேரு. பள்ளிக் குழந்தைகளுக்குத் தெரிந்த இந்த விஷயம் கூட கங்கனாவுக்குத் தெரியவில்லையே என இணையத்தில் பலரும் இந்த காணொலியைப் பகிர்ந்து கேலி செய்கின்றனர்.
இன்னும் சிலர், 'கங்கனா பா.ஜ.க தலைவர்களையே விஞ்சிவிடுவார். அந்த அளவுக்கு அவர் புத்திசாலி' என வஞ்சப் புகழ்ச்சி செய்கின்றனர்.
தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த கங்கனா, இந்தியாவின் முதல் பிரதமர் சுபாஷ் சந்திரபோஸ் என பேசியது தற்போது வைரலாகி வருகிறது.
- தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் எம்.எல்.ஏ.-வாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தபின் பா.ஜனதாவில் இணை இருக்கிறார்.
சரத் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி பிரிவில் முக்கிய தலைவராக இருந்தவர் ஏக்நாத் கட்சே. முன்னாள் மந்திரியான இவர் பா.ஜனதாவில் சில நாட்களில் இணைய உள்ளார்.
கடந்த சில நாட்களாக பா.ஜனதா தலைமையுடன் ஏக்நாத் கட்சே பேச்சுவார்த்தை நடத்தி வந்தார். அதன்பின் அவர் சரத்பவார் அணியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர முடிவு செய்துள்ளார். இது சரத்பவாருக்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
தேசியவாத காங்கிரஸ் கட்சி சார்பில் சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் அவர், அந்த பதவியை ராஜினாமா செய்த பிறகு பா.ஜனாாவில் இணைய இருக்கிறார்.
- மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2008-ம் ஆண்டு குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர்
- உடல்நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராகமுடியவில்லை என பிரக்யா தாக்கூர் தரப்பு வழக்கறிஞர் பதில் அளித்துள்ளார்
மாலேகான் குண்டு வெடிப்பு வழக்கில் தொடர்ந்து ஆஜராகாமல் இருக்கும், பாஜக எம்.பி. பிரக்யா தாக்கூருக்கு மும்பை என்.ஐ.ஏ சிறப்பு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது.
உடல்நலக்குறைவால் நீதிமன்றத்தில் ஆஜராகமுடியவில்லை என பிரக்யா தாக்கூர் தரப்பு வழக்கறிஞர் பதிலளிக்க, போபால் என்.ஐ.ஏ அதிகாரிகள் பிரக்யா தாக்கூரின் உடல்நலன் குறித்து விசாரித்து அறிக்கையை ஏப்ரல் 9-ம் தேதிக்குள் தாக்கல் செய்ய நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
உடல்நிலை காரணமாக இந்த வழக்கில் ஜாமீன் பெற்ற அவர், அடிக்கடி கிரிக்கெட் மற்றும் கூடைப்பந்து விளையாடுவதும், நடனமாடும் வீடியோக்கள் வெளியாகியது குறிப்பிடத்தக்கது.
மகாராஷ்டிரா மாநிலம் நாசிக் மாவட்டத்தின் மாலேகான் பகுதியில் உள்ள மசூதி அருகே கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி, இருசக்கர வாகனத்தில் வைக்கப்பட்டிருந்த குண்டு வெடித்ததில் 6 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
இந்த குண்டுவெடிப்பு தொடர்பாக பெண் சாமியார் பிரக்யா சிங் தாகூர் (தற்போதைய பாஜக எம்பி), ஓய்வுபெற்ற ராணுவ மேஜர் ரமேஷ் உபாத்யாய் உள்பட 7 பேர் கைது செய்யப்பட்டனர். மும்பையில் உள்ள என்.ஐ.ஏ., சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு விசாரிக்கப்படுகிறது.
- மகாராஷ்டிராவில் ஏப்ரல் 19 முதல் மே 20 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது
- மகாராஷ்டிராவில், உத்தவ் தாக்ரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியில் உள்ளன
மகாராஷ்டிராவில் பா.ஜ.க எம்.பி உன்மேஷ் பாட்டீல், உத்தவ் தாக்கரே முன்னிலையில் அவரது கட்சியில் இணைந்துள்ளார்.
ஜல்கான் தொகுதி எம்.பி உன்மேஷ் பாட்டீலுக்கு மீண்டும் போட்டியிட பாஜக வாய்ப்பு மறுத்த நிலையில், அவர் உத்தவ் தாக்கரேவின் சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார்.
மகாராஷ்டிராவில், உத்தவ் தாக்ரேவின் சிவசேனா, சரத் பவாரின் தேசியவாத காங்கிரஸ் மற்றும் காங்கிரஸ் கட்சிகள் கூட்டணியில் உள்ளன. அதில், ஜல்கான் தொகுதி சிவசேனாவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. ஆகவே அந்த தொகுதியில் சிவசேனா சார்பில், உன்மேஷ் பாட்டீல் போட்டியிடலாம் என்று சொல்லப்படுகிறது.
மகாராஷ்டிராவில் ஏப்ரல் 19 முதல் மே 20 வரை 5 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.
- 2004-ல் காங்கிரஸ் கட்சி சார்பில் மக்களவை எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
- 2009-க்குப் பிறகு அரசியலில் இருந்து ஒதுங்கிக் கொண்டார். தற்போது சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார்.
பாலிவுட் நடிகர் கோவிந்தா 2004-ல் அரசியலில் களம் இறங்கினார். அப்போது பா.ஜனதாவின் முக்கிய தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த ராம் நாயக்கை தோற்கடித்து ஜெயன்ட் கில்லர்-ஆக திகழந்தார். காங்கிரஸ் கட்சி சார்பாக 2004-ல் மும்பை வடக்கு தொகுதியில் போட்டியிட்டு எம்.பி.யாக தேர்வு செய்யப்பட்டார்.
2009-ம் ஆண்டு வரை எம்.பி.யாக இருந்தார். அதன்பின் அரசியலில் இருந்து விலகினார். தற்போது சுமார் 14 ஆண்டுகள் கழித்து ஏக்நாத் ஷிண்டே தலைமையிலான சிவசேனா கட்சியில் இணைந்துள்ளார்.
சமுதாயத்தின் அனைத்து துறைகளிலும் பிரபல நபராக இருந்தவர் கோவிந்தா என ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
2004-2009 அரசியலுக்குப் பிறகு அதில் இருந்து ஒதுங்கிக் கொண்டேன். மீண்டும் அரசியலுக்கு திரும்புவேன் என்ற நினைத்து பார்க்கவில்லை. தற்போது 14 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் அரசியலுக்கு திரும்பியுள்ளேன். வாய்ப்பு வழங்கப்பட்டால் கலை மற்றும் கலாசாரம் துறையில் பணியாற்றுவேன் எனத் தெரிவித்துள்ளார்.
1980-ல் சினிமாத்துறையில் நுழைந்த கோவிந்தா, ஏராளமான குடும்ப பொழுதுபோக்கு படங்களில் நடித்துள்ளார்.
- பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன
- அதன்படி நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது
பாராளுமன்ற தேர்தல் தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி நாடு முழுவதும் மொத்தம் ஏழு கட்டங்களாக தேர்தல் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இதனையொட்டி நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதிகளைத் தேர்தல் ஆணையம் அமலுக்கு கொண்டு வந்துள்ளது.
இந்நிலையில் பாஜக கூட்டணியில் உள்ள அஜித் பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சிக்கு பாராமதி மக்களவைத் தொகுதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதனையடுத்து அந்த தொகுதியில் பாஜக கூட்டணி சார்பாக தேசியவாத காங்கிரஸ் தலைவர் அஜித்பவாரின் மனைவி சுனித்ரா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் அஜித்பவாரின் மனைவி சுனித்ராவை எதிர்த்து பாராமதி தொகுதியில் சுயேட்சையாக போட்டியிட உள்ளதாக ஏக்நாத் ஷிண்டே சிவசேனா நிர்வாகி விஜய் ஷிவதாரே பேசியுள்ளார். இதனால் மகாராஷ்டிரா பா.ஜ.க. கூட்டணியில் மோதல் போக்கு ஏற்பட்டுள்ளது.
கூட்டணியில் இருந்து கொண்டே போட்டி வேட்பாளராக களமிறங்கும் விஜய் ஷிவதாரேவை சிவசேனாவில் இருந்து நீக்காவிட்டால், பா.ஜ.க. கூட்டணியில் இருந்து வெளியேறப்போவதாக அஜித்பவார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மகாராஷ்டிரா மாநிலத்தில் முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் சிவசேனா மற்றும் பா.ஜ.க. மற்றும் அஜித்பவார் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது.
மகாராஷ்டிரா துணை முதலமைச்சராக அஜித் பவார் பதவி வகித்து வருகிறார். அவரது அணியைச் சேர்ந்த 8 பேர் அமைச்சர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.






