என் மலர்
கர்நாடகா
- தனது பெயரை வெளியிடாத அந்த தூய்மை பணியாளர் மங்களூரு கோர்ட்டில் ஆஜராகி நீதிபதி முன்பு விளக்கம் அளித்தார்.
- கடந்த 4-ந்தேதி பெல்தங்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
கர்நாடக மாநிலம் தட்சினகன்னடா மாவட்டம் பெல்தங்கடி தாலுகாவில் உள்ளது தர்மஸ்தலா. இங்கு பிரசித்திபெற்ற மஞ்சுநாதர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தினமும் அரசியல் பிரமுகர்கள், தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், விளையாட்டு வீரர்கள் என ஆயிரக்கணக்கானோர் வந்து செல்வது உண்டு.
இந்தநிலையில் அந்த கோவில் அருகே, கோவிலுக்கு சொந்தமான நிலத்தில் 100-க்கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகளின் உடல்கள் புதைக்கப்பட்டதாகவும், அவர்கள் அனைவரும் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாகவும் பகீர் தகவல்கள் வெளியாகி உள்ளன.
இவ்வாறு புதைக்கப்பட்ட பெண்களின் உடல்கள் நிர்வாண நிலையிலும், கொடூரமாக தாக்கப்பட்டு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதற்கான அடையாளங்கள் இருந்ததாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக தர்மஸ்தலா கோவில் நிர்வாகத்தின் கீழ் பணியாற்றிய தூய்மை பணியாளர் ஒருவர் கர்நாடக அரசுக்கு கடந்த மாதம்(ஜூன்) 3-ந்தேதி புகைப்பட ஆவணங்களுடன் புகார் கடிதம் அனுப்பினார்.
தனது பெயரை வெளியிடாத அந்த தூய்மை பணியாளர் மங்களூரு கோர்ட்டில் ஆஜராகி நீதிபதி முன்பு விளக்கம் அளித்தார். அப்போது அவர் தன்னுடன் சில எலும்புகளையும் கொண்டு வந்தார். அவர் கடந்த 1998-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரையிலான காலக்கட்டத்தில் 100-க் கும் மேற்பட்ட பெண்கள், மாணவிகள் கொடூரமாக தாக்கி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொல்லப்பட்டதாக பகீர் தகவலை வெளியிட்டார்.
குறிப்பாக இந்த கற்பழிப்பு மற்றும் கொலை வழக்கில் தர்மஸ்தலா மஞ்சுநாதர் கோவில் நிர்வாகத்தினருக்கும் தொடர்பு இருப்பதாக அவர் கூறி அதிர வைத்தார்.
இதன் பேரில் கடந்த 4-ந்தேதி பெல்தங்கடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். கடந்த 13-ந்தேதியன்று புகார்தாரர், பெல்தங்கடியில் உள்ள முதன்மை ஜுடீசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் மீண்டும் ஆஜராகி வாக்குமூலம் அளித்தார்.
கர்நாடக மாநில பெண்கள் மேம்பாட்டு ஆணைய தலைவி நாகலட்சுமி சவுத்ரி, கடந்த 14-ந்தேதி இச்சம்பவம் குறித்து தீவிர விசாரணை நடத்தும்படி முதல்-மந்திரி சித்தராமையாவுக்கு கடிதம் எழுதினார். புகார்தாரரின் வக்கீல்களுடன், மங்களூரு வக்கீல்கள் சங்கத்தினர் முதல்-மந்திரி சித்தராமையாவை பெங்களூருவில் நேரில் சந்தித்து இச்சம்பவம் குறித்து சிறப்பு புலனாய்வு குழு (எஸ்.ஐ.டி.) விசாரணைக்கு உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்தனர். உள்துறை மந்திரியிடமும் கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த விவகாரத்தில் வழக்கு விசாரணையை போலீசார் தாமதப்படுத்துவதாகவும், அதனால் கூடுதல் டி.ஜி.பி. தலைமையில் ஒரு சிறப்பு புலனாய்வு குழு, தடயவியல் குழு ஆகியவற்றை அமைத்து தீவிர விசாரணை நடத்த வேண்டும் என்றும், குற்றவாளிகளை உடனே கைது செய்து தண்டனை வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்தனர்.
- நாராயண் பரமணி ஐபிஎஸ்-ஐ மேடையில் வைத்து அடிக்க கை ஓங்கினார்.
- தான் அவமானப்பட்டதாக கூறி சமீபத்தில் நாராயண் விருப்ப ஓய்வு கோரினார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா கடந்த ஏப்ரல் மாதம் நடந்த காங்கிரஸ் மாநாட்டில் உதவி காவல் கண்காணிப்பாளர் (ஏஎஸ்பி) நாராயண் பரமணி ஐபிஎஸ்-ஐ மேடையில் வைத்து அடிக்க கை ஓங்கினார்.
இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கிடையே தான் அவமானப்பட்டதாக கூறி சமீபத்தில் நாராயண் விருப்ப ஓய்வு கோரினார்.
ஆனால் முதல்வர் சித்தமையா மற்றும் பிற அதிகாரிகள் அவருடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரின் முடிவை மாற்றினர்.
இந்நிலையில் நாராயண் பரமணி நேற்று (வியாழக்கிழமை) பெலகாவி நகர துணை காவல் ஆணையராக (டிசிபி) நியமிக்கப்பட்டார்.
காவல் துறையில் 31 ஆண்டுகள் பணியாற்றியுள்ள நாராயண் ஓய்வு பெற இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளன.
- 75 வயதில் ஓய்வு பெற வேண்டும் என ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத் தெரிவித்திருந்தார்.
- வருகிற செப்டம்பர் மாதம் பிரதமர் மோடி 75 வயதை நிறைவு செய்வார்.
கர்நாடக மாநில பாஜக தலைவர் பி.ஒய். விஜயேந்திரா, பிற்படுத்தப்பட்டோர் மற்றும் எஸ்சி., எஸ்.டி.களுக்காக உறுதிபூண்டுள்ளதை நிரூபிக்கும் வகைகளில் காங்கிரஸ் கட்சி மல்லிகார்ஜூன கார்கேவை பிரதமர் வேட்பாளர் என அறிவிக்க தயாரா? என சவால் விட்டிருந்தார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், மோடியின் ஓய்வு குறித்த ஆர்எஸ்எஸ் தலைவரின் சிக்னல், தலித்தை அடுத்த பிரதமராக்க பாஜகவுக்கு கோல்டன் சான்ஸ் என கர்நாடக மாநில முதல்வர் சித்தராமையா பதில் அளித்துள்ளார்.
மேலும், "மல்லிகார்ஜூன கார்கே வெறும் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் மட்டுமல்ல, மரியாதைக்குரிய அரசியல்வாதியும் ஆவார். அவரது வளர்ச்சி தலித் கார்டை பயன்படுத்தி வந்ததல்ல. மாறாக பல தசாப்த கால அர்ப்பணிப்பு, நேர்மை மற்றும் பொது சேவையின் விளைவாகும். அவருக்கு ஒருபோதும் அரசியல் ஆதரவு தேவையில்லை. காங்கிரசில், நமது பிரதமர் வேட்பாளர் யார் என்பதை தீர்மானிப்பது நமது கட்சிதான், பாஜக அல்ல என்பதை நான் மிகவும் தெளிவாகக் கூற விரும்புகிறேன்.
ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், 75 வயதை நிறைவு செய்தவர்கள் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும் எனக் கூறியிருந்தார். அதன்படி வருகிற செப்டம்பர் மாதம் 17ஆம் தேதி பிரதமர் மோடி, 75 வயதை நிறைவு செய்வார். பாஜக-வின் விதிப்படி 75 வயதில் ஓய்வு பெற வேண்டும். ஆனால் மோடி பிரதமர் பதவியை 5 வருடம் நிறைவு செய்வார் என பாஜக கூறி வருகிறது.
- அரசு பஸ் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படாமல் உள்ளது.
- அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் 4 அரசு பஸ் போக்குவரத்து கழகங்கள் உள்ளன. அதாவது பெங்களூரு மாநகர போக்குவரத்து கழகம் , கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் உள்பட 4 போக்குவரத்து கழகங்கள் உள்ளன. மாநிலம் முழுவதும் 25 ஆயிரம் அரசு பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது. இதில் சுமார் 1½ லட்சம் டிரைவர்கள், கண்டக்டர்கள், ஊழியர்கள், டிக்கெட் பரிசோதகர்கள், அதிகாரிகள் வேலை பார்த்து வருகிறார்கள்.
இந்த நிலையில் அரசு பஸ் ஊழியர்களுக்கு சம்பளம் உயர்த்தப்படாமல் உள்ளது. இதையடுத்து, சம்பள உயர்வு உள்ளிட்ட பிற கோரிக்கைகளை நிறைவேற்றும்படி அரசுக்கு, போக்குவரத்து கழக ஊழியர்கள் வேண்டுகோள் விடுத்து வந்தனர். ஆனால் சம்பள உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை நிறைவேற்ற அரசு முன்வரவில்லை.
இதுபற்றி அரசு போக்குவரத்து கழக ஊழியர்கள் சங்கம் சார்பில் ஆலோசனை நடத்தப்பட்டது. இந்த கூட்டத்தில் அடுத்த மாதம்(ஆகஸ்டு) 5-ந் தேதி காலை 6 மணியில் இருந்து காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட போவதாக முடிவு எடுக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 14 கிலோ தங்கத்தை தனது உடலில் மறைத்து கடத்தி வந்த ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார்.
- ரன்யா ராவுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்று என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
மார்ச் 3 ஆம் தேதி பெங்களூரு கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில், 14 கிலோ தங்கத்தை தனது உடலில் மறைத்து கடத்தி வந்த ரன்யா ராவ் கைது செய்யப்பட்டார். பின்னர் அவரது வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் கணக்கில் வராத ரூ.2.67 கோடி பணம் மற்றும் ரூ.2.06 கோடி மதிப்புள்ள தங்க நகைகள் கைப்பற்றப்பட்டன.
தங்க கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்ட ரன்யா ராவ் தற்போது சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார்.
இந்நிலையில், ரன்யா ராவுக்கு சொந்தமான ரூ.34 கோடி மதிப்புடைய சொத்துக்களை அமலாக்கத்துறை முடங்கியுள்ளது. தங்க கடத்தல் வழக்கில் அமலாக்கத்துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
இந்நிலையில், தங்கக் கடத்தல் வழக்கில் நடிகை ரன்யா ராவுக்கு ஓராண்டு சிறை தண்டனை விதித்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் இந்த ஓராண்டு சிறை தண்டனை காலத்தில் ரன்யா ராவுக்கு ஜாமின் வழங்கக்கூடாது என்று என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
- டிக்கெட் கட்டணம் ரூ.200க்கு கட்டுப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்திருந்தார்.
- ஆட்சேபணை எதுவும் இருந்தால் 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என அறிவிப்பு.
கர்நாடக அரசு, மாநிலம் முழுவதும் உள்ள திரையரங்குகள் மற்றும் மல்டிபிளக்ஸ்களில் திரைப்பட டிக்கெட் கட்டணத்தை அதிகபட்சமாக ரூ.200 ஆக நிர்ணயித்து அரசாணை வெளியிட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்ட ஆணையில்; "அனைத்து மொழிப் படங்களுக்கான, மல்டிபிளக்ஸ் உள்ளிட் அனைத்து விதமான தியேட்டர்களும் பொழுதுபோக்கு வரி உட்பட ரூ.200க்கு மிகாமல் கட்டணத்தை வைக்க வேண்டும். இது குறித்த ஆட்சேபணை எதுவும் இருந்தால் 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும்" என தெரிவிக்கப்பட்டது.
சினிமா ரசிகர்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று டிக்கெட் கட்டணம் ரூ.200க்கு கட்டுப்படுத்தப்படும் என பட்ஜெட்டில் அம்மாநில முதலமைச்சர் சித்தராமையா அறிவித்திருந்தார்.
இந்நிலையில், திரையரங்குகள், மல்டிபிளக்ஸ்களில் திரைப்பட டிக்கெட் கட்டணத்தை கட்டுக்குள் கொண்டுவர கர்நாடக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மேலும் இந்த உத்தரவு, பொழுதுபோக்கு வரி உட்பட அனைத்து மொழி படங்களுக்கும், அனைத்து வகை திரையரங்குகளுக்கும் பொருந்தும். இது கர்நாடக சினிமா (ஒழுங்குமுறை) (திருத்த) விதிகள், 2025 இன் கீழ், கர்நாடக சினிமா (ஒழுங்குமுறை) சட்டம், 1964 இன் பிரிவு 19-ஐ பயன்படுத்தி உள்துறைத் துறையால் வெளியிடப்பட்டது.
மக்களுக்கு சினிமாவை மலிவு விலையில் கிடைக்கச் செய்வதுடன், கன்னட சினிமாவை ஊக்குவிப்பதும் இதன் நோக்கம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- சரோஜாதேவி உடலுக்கு திரை உலக பிரமுகர்கள், பொதுமக்கள் உள்பட பலர் அஞ்சலி செலுத்தினர்.
- பழம்பெரும் நடிகை சரோஜா தேவியின் உடல் அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் உள்ள மல்லேசுவரத்தில் வசித்து வந்த பழம்பெரும் நடிகையான சரோஜாதேவி நேற்று காலமானார். அவரது மரணம் திரை உலகில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது உடலுக்கு இந்திய திரை பிரபலங்கள் பலர் நேரில் அஞ்சலி செலுத்தினர்.
பெங்களூரு மல்லேசுவரம் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த அவரது உடலுக்கு திரை உலக பிரமுகர்கள், அரசியல் பிரபலங்கள். ரசிகர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கணக்கானோர் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.
இந்நிலையில், அவரது சொந்த ஊரான சென்னபட்டணா தாலுகா தசவாரா கிராமத்தில் ஒக்கலிகர் சமூக முறைப்படி இறுதிச்சடங்கு நடந்தது. சரோஜாதேவி தனது தாயார் ருத்ரம்மாவின் கல்லறை அருகே தனக்கு இறுதிச் சடங்கு செய்யப்பட வேண்டும் என கூறி இருந்தார். அவரது விருப்பத்திற்கிணங்க தாயார் கல்லறை அருகில் அரசு மரியாதையுடன் சரோஜாதேவியின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.
நடிகை சரோஜாதேவி தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு, இந்தி போன்ற பல்வேறு மொழிப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.
- காரில் இருந்த 3 பேர் வெளியே வந்து உணவு டெலிவரி ஊழியரை சரமாரியாக தாக்கினர்.
- இதனால் காயமடைந்து சாலையோரத்தில் ரத்தம் வழிந்தோடியடி டெலிவரி ஊழியர் நின்றார்
பெங்களூருவில் ஸ்விக்கி நிறுவனத்தில் பணிபுரியும் ஒரு டெலிவரி ஊழியர் நேற்று இரவு மருத்துவமனை சந்திப்புக்கு அருகில் உள்ள போக்குவரத்து சிக்னலில் நின்று கொண்டிருந்தார். அவருக்கு பின்னால் வந்த காரில் இருந்தவர்கள் சிக்னல் சிவப்பு நிறத்தில் இருந்தபோதிலும், ஹாரன் அடித்து, அவரை முன்னோக்கி நகர்த்துமாறு கோரினர்.
அதற்கு அந்த ஊழியர் போக்குவரத்து விதிகளை பின்பற்றுவதாக விளக்கியபோது, கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில் காரில் இருந்த 3 பேர் வெளியே வந்து உணவு டெலிவரி ஊழியரை சரமாரியாக தாக்கினர். அந்த நபர்கள், அவரை மீண்டும் மீண்டும் அடித்து உதைத்து வேகமாக ஓடிச் சென்று காரில் ஏறி தப்பி சென்று விட்டனர்.
இதனால் காயமடைந்து சாலையோரத்தில் ரத்தம் வழிந்தோடியடி டெலிவரி ஊழியர் நின்றார். இந்த காட்சி அங்குள்ள சி.சி.டி.வி. கேமராவில் பதிவாகியது. இந்த தாக்குதல் குறித்து அவர் பசவேஸ்வரா நகர் போலீஸ் நிலையத்தில் தன்மீது தாக்குதல் நடத்தியவர்கள் மது போதையில் இருந்ததாக கூறி புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை.
டெலிவரி ஊழியர் தாக்கப்பட்ட வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.
- அதிக பாதுகாப்பு கொண்ட சிறையில் செல்போனை விழுங்கிய கைதி.
- அரசு மருத்துவமனையில் அறுவை சிகிச்சை செய்து செல்போன் வெளியே எடுக்கப்பட்டது.
கர்நாடகா மாநிலம் ஷிவமோகாவில் உள்ள சிறைச்சாலையில், கைதி ஒருவர் செல்போனை விழுங்கிய நிலையில் அரசு மருத்துவமனையில் ஆபரேஷன் செய்து வெளியே எடுக்கப்பட்டு, விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
கர்நாடகா மாநிலத்தில் அதிக பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலை ஷிவமோகாவில் உள்ளது. இங்கு ஒரு கைது வயிற்று வலியால் துடிதுடித்துள்ளார். இதனால் சிறையில் உள்ள மருத்துவ ஸ்டாஃப்களிடம் அழைத்துச் சென்றுள்ளனர். அப்போது தான் செல்போனை விழுங்கியதாக கைது கூறியுள்ளார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஸ்டாஃப்கள் உடனடியாக அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு எக்ஸ்ரே எடுத்து பார்க்கும்போது, மருத்துவர்கள் வயிற்றில் செல்போன் இருப்பதை உறுதிப்படுத்தியுள்ளனர்.
அறுவை சிசிக்சை செய்துதான் செல்போனை எடுக்க முடியும் என மருத்துவர்கள் கூறியதால், கைதியின் சம்மதம் பெற்று அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு செல்போன் வெளியில் எடுக்கப்பட்டுள்ளது.
அதிக பாதுகாப்பு கொண்ட சிறைச்சாலையில் கைதிக்கு செல்போன் கிடைத்தது எப்படி? என்ற கேள்வி எழுந்துள்ளது. பாதுகாப்பு குறைபாடா? அல்லது கூட்டு சதியா? என்பதை கண்டறிய விசாரணைக்கு உததரவிடப்பட்டுள்ளது.
- தாயப்பா- சின்னி என்ற தம்பதியினர் கிருஷ்ணா நதிக்கரையில் சுற்றுலா வந்திருந்தனர்.
- தாயப்பா தண்ணீரில் விழுந்து உயிருக்கு போராடினார்.
செல்ஃபி எடுக்க வந்ததாக கூறி கிருஷ்ணா நதியில் கணவர் தள்ளிவிடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆற்றில் விழுந்த கணவரை கிராம மக்கள் சாமர்த்தியமாக மீட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
கர்நாடக மாநிலம் ராய்ச்சூர் மாவட்டம் கட்லூரில் தாயப்பா- சின்னி என்ற தம்பதியினர் கிருஷ்ணா நதி அருகே சுற்றுலா வந்திருந்தனர்.
இருவரும் செல்ஃபி எடுத்துக்கொண்டிருந்தபோது, மனைவி சின்னி திடீரென தனது கணவர் தாயப்பாவை ஆற்றில் தள்ளிவிட்டார்.
இந்த எதிர்பாராத சம்பவத்தால், தாயப்பா தண்ணீரில் விழுந்து உயிருக்கு போராடினார். இருப்பினும், அவர் நீரில் மூழ்குவதைக் கண்ட உள்ளூர்வாசிகள் உடனடியாக விரைந்து வந்து கயிறுகளின் உதவியுடன் அவரை பாதுகாப்பாக மீட்டனர்.
தன்னை கொல்ல திட்டமிட்டு ஆற்றில் தள்ளிவிட்டதாக தனது மனைவி சின்னி மீது தாயப்பா போலீசில் புகார் அளித்துள்ளார். இதுதொடர்பாக வழக்கு பதிவு செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தன் குழந்தைகளும் தியானம் செய்து வருவதாக அப்பெண் தெரிவித்தார்.
- ரஷியாவுக்கு திருப்பி அனுப்ப நடவ்டிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
கர்நாடகாவின் கோகர்ணாவில் பிரசித்தி பெற்ற ராமதீர்த்த மலை உள்ளது. இந்த மலையின் அபாயகரமான குகை ஒன்றில் 40 வயது மதிக்கத்தக்க ரஷிய பெண்ணும் அவரது 6 மற்றும் 4 வயது மகள்கள் கண்டுபிடிக்கப்பட்டனர்.
புதன்கிழமை மாலை, கோகர்ணா காவல்துறையினர் ராமதீர்த்தத்தில் ரோந்து சென்றபோது, தற்செயலாக அந்தப் பெண்ணையும் அவரது குழந்தைகளையும் கண்டனர்.
புனித யாத்திரைத் தலமான அங்கு தானும் தன் குழந்தைகளும் தியானம் செய்து வருவதாக அப்பெண் போலீசாரிடம் தெரிவித்தார்.
இந்த பகுதியில் கடந்த 2024 ஜூலையில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவு மற்றும் விஷப்பாம்புகள் அபாயம் உள்ள இங்கு அவர்கள் இருப்பது ஆபத்தானது என்று போலீசார் அப்பெண்ணிடம் விளக்கினர்.
விசாரணையில், அப்பெண் 2017 இல் வணிக விசாவில் இந்தியா வந்து, 2018 இல் நேபாளம் சென்று மீண்டும் திரும்பி வந்துள்ளார். எனவே விசா காலம் முடிந்தும் தற்போது வரை அவர் இந்தியாவில் தங்கியிருப்பது தெரியவந்தது.
தற்போது, தாய் மற்றும் குழந்தைகள் கர்வாரில் உள்ள பெண்கள் மையத்தில் வைக்கப்பட்டுன்னர். அவர்களை ரஷியாவுக்கு திருப்பி அனுப்ப நடவ்டிக்கை எடுத்து வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
- கடைக்கு 4 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்தபடி வந்தனர்.
- சம்பவ இடத்துக்கு போலீஸ் துப்பறியும் மோப்பநாய், மற்றும் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களும் விரைந்து வந்து ஆய்வு செய்தனர்.
பெங்களூரு:
கர்நாடக மாநிலம் கலபுரகி சரப்பஜார் பகுதியில் ஜெய்பவானி என்ற வணிக வளாகம் உள்ளது. இதன் முதல் தளத்தில் ஒரு நகை கடை செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு மதியம் 12 மணியளவில் 4 பேர் கொண்ட கும்பல் முகமூடி அணிந்தப்படி வந்தனர்.
பின்னர் அவர்கள் திடீரென நகை கடை உரிமையாளரின் தலையில் துப்பாக்கியை வைத்து மிரட்டி கடையில் இருந்து சுமார் 3 கிலோ தங்கத்தை கொள்ளையடித்து கொண்டு தப்பினர். இதையடுத்து கடையின் உரிமையாளர் போலீசாருக்கு தகவல் கொடுத்தார்.
அதன்அடிப்படையில் மாநகர போலீஸ் கமிஷனர் ஷரணப்பா மற்றும் போலீசார் கொள்ளை நடந்த நகை கடைக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது கொள்ளையர்கள் மதியம் 12 மணி முதல் 12.45 மணிவரை கடையில் இருந்தது தெரியவந்தது.
மேலும் அங்கிருந்து கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தபோது கொள்ளையர்கள் முகமூடி அணிந்து இருந்தது தெரியவந்தது. இதனால் அவர்களின் உருவம் கண்டுபிடிக்க முடியவில்லை. மேலும் கடையில் 1300 கிராம் தங்க நகைகள் மட்டுமே இருப்பது தெரியவந்தது.
இதையடுத்து சம்பவ இடத்துக்கு போலீஸ் துப்பறியும் மோப்பநாய், மற்றும் கைரேகை மற்றும் தடயவியல் நிபுணர்களும் விரைந்து வந்து ஆய்வு செய்தனர். பட்டப்பகலில் நகை கடையில் துப்பாக்கி முனையில் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் கர்நாடகாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த கொள்ளை சம்பவம் குறித்து பிரம்மபூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.






